சத்தம்-சிறுகதை-சிந்து ராஜேஸ்வரி (அறிமுகம்)

காலையில 4 மணிக்கு துர்க்கா கோவிலுல கும்பாபிஷேகம் , 2 மணிக்கெல்லாம் எழுந்தா ரேவகீர்த்தி, வீட்ல இருக்குற எல்லாரும் குளிக்கணும், அதனால எல்லாருக்கும் முன்னாடி எழுந்து அடுப்புல பால் போட்டுட்டு குளிக்க போனா. குளிச்சிட்டு ஒரு அழுக்கு நய்ட்டிய போட்டுக்கிட்டு, நேரா அடுப்பங்கரைக்கு உள்ளபோயி காபி போட்டு ஒரு தட்டுல வெச்சி எடுத்துக்கிட்டு, கால் ரெண்டையும் நீட்டிப்போட்டுக்கிட்டு அதுக்கு இடையில கதம்பத்த போட்டு பூ கட்டிக்கிட்டு இருந்த தன்னோட அம்மாவ திட்டிகிட்டே காபி குடுக்குறா, அம்மா தலையில கட்டி இருக்க துண்ட அவுருமா, நீர் கொத்துக்கும்னு, அப்பா அப்பானு கத்துறா, குளிச்சிட்டு இருக்கன், காப்பிய துணி தொவைக்கிற கல்லுமேல வச்சிட்டு போமா நா எடுத்துக்குறனு சொல்றாரு. வாசலுக்கு கோலம் போடலானு கோலமாவு யானதோட வந்தா, அங்க நான் நின்னுட்டு இருந்தன். நா பவானி ஜெகதீசன். அவ என்ன பார்த்த உடனே, சட்டுனு உள்ள போய்ட்டா! அரைமணி நேரம் ஆச்சு, அவ தம்பி, அண்ணா, தங்கச்சி எல்லாரும் வெளில வந்துட்டாங்க, நெய் விளக்கு போட எங்க அம்மா, பக்கத்துவீட்டு அத்தை, சித்தினு  எல்லாரும் கோவிலுக்கு போக வேண்டிய பொருள எடுத்துவெச்சிட்டு இருந்தாங்க. எல்லாரும் வந்துட்டாங்க . ஆனா அவ வரல.ரெண்டு நிமிஷத்துல வளையல் குலுங்குற சத்தம் கேட்டுது, அது அவ தாணு வாசலையே பார்த்துட்டுருதன்,கருப்பச்ச தாவணியில கையில கோலமாவு யானதோட வந்தா!!!

சிந்து ராஜேஸ்வரி
பிருந்தாஜினி பிரபாகரன்

உடனே எங்க அம்மா கேட்டாங்க? எப்படி இருக்க கீர்த்தி? என்ன? வந்துட்டு ஓடிட?  சிரிச்சிட்டே சொன்னா, நல்லா இருக்கன் அத்த. மாமா எங்கனு கேட்டா? வருவாரு கீர்த்தினு சொன்னாங்க. அதுக்குள்ள என் கீர்த்திவோட அம்மா, அஃதாவது என் அத்த வந்து, எல்லாம் எடுத்துவெச்சாச்சுள அண்ணி, அப்பறம் ஏன் வெளில நிக்குறீங்கனு, உள்ள வாங்கனு கூட்டிட்டு போய்ட்டாங்க. என் கீர்த்தி வந்து கோலம்போட்டா! நா கோலப்போடுற விரலையே! பார்த்துட்டு இருந்தன். நய்ட்டில இருந்ததுனால ஓடிட்டியானு? கேட்டன். அவ ஆமானு தலையாட்டுனா.பாவாட தாவணி நல்லா இருன்னு சொன்ன. சிரிச்சா, ஓடிட. எனக்கு மனசுக்குள்ள மழை. அன்றைக்கு முழு நேரமும் நா அவள பார்த்துட்டே இருந்தன். அவ எனக்கு பிரசாதம் குடுத்தா, கடவுளே! என் கீர்த்தி கையாள நா தினமும் சப்புடனும்னு வேண்டிகிட்டன். என் கீர்த்தி குடத்துல தண்ணி எடுத்துக்கிட்டு குலத்துலேந்து கோவிலுக்கு நடந்து வந்துட்டு இருந்தா! அப்போ என் அண்ணனு அவன் கூட்டாளிங்களும் வந்து கீர்த்திய வழிமறிச்சாங்க, நா கையில இருந்தா பிரசாதத்த தூக்கி போட்டுட்டு ஓடுன, அங்க போறதுக்குள்ள, எங்க அண்ணா, கீர்த்தி கழுத்துல தாலி கட்டிட்டான். கீர்த்தி என்ன பார்த்து அழுதா, என்னால எல்லார் முன்னாடியும் அழ முடியல, என் நெஞ்சில தீ பத்தி எரியுது. கீர்த்தி  சித்தி பார்த்துட்டு, கத்திகிட்டே போயி கீர்த்தி அம்மாவை கூப்பிட்டாங்க. கீர்த்தி அம்மா வந்து, எங்க அண்ணன அடிச்சாங்க, அழுதுகிட்டே, கீர்த்தி அவங்க அம்மா மேல சாஞ்சி அழுதுகிட்டே என்ன பார்த்தா, என் கண்ணுலேந்து தண்ணி கொட்டுன்னுது , அத பார்த்துட்டு அவ இன்னும் அழுதா. கோவில் மண்டபத்துல பெரியவங்களாம் சேந்து கூட்டம் போட்டாங்க, ஒரு பக்கம் கீர்த்தி அம்மா, இன்னொரு பக்கம் நாங்க, எங்க அம்மாவ பத்தி ஊருக்கே தெரியும். கீர்த்தி கழுத்துல தாலி கட்டுனது என் ரெண்டாவது அண்ணா. மூத்த அண்ணா மனைவி நெருப்புவெச்சிகிட்டு செத்துபோய்ட்டாங்க, எங்க அம்மா கொடும தாங்க முடியாம. அதனால கீர்த்தி அம்மா பயங்கரமா அழுதாங்க, தாலி தான அறுத்து விற்றுங்கனு கீர்த்தி அப்பா சொன்னாரு, அவரு வாத்தியாரு, அதுக்கு ஊரே சேந்து அவர திட்டுனாங்க. நீ என்னடா? தெருவுல நடந்து போன பொண்ண புடிச்சி தாலி கட்டியிருக்கனு கேட்டாங்க ஊரு பெரியவங்களாம், அதுக்கு எங்க அண்ணா, எனக்கு கீர்த்திய புடிக்கும். அதான் கட்டுனனு சொன்னான். கீர்த்திய கேட்டாங்க, நீயும் விருப்பட்டுத்தான் கல்யாணம் பன்னிகிடியானு? கீர்த்தி என்ன பார்த்தா, இல்லனு தலைய ஆட்டுனா.அப்பறம் எங்க அம்மாவ கூப்டு ஒழுங்கா இருக்கனுனும் கண்டிச்சி, எங்க வீட்டுக்கு கீர்த்திய அனுப்பி வெச்சிட்டாங்க.

கடவுள் கிட்ட சாப்பாடு அவ கையாள சப்புடனுனு கேக்காம இருந்துருக்காள்னு தோணுச்சு. அவள பார்த்துகிட்டே என்னால வாழமுடியாது. கீர்த்தி பயங்கரமா அழுதுகிட்டே நா போகமாட்டான் போகமாட்டானு அடம்புடிச்சா. ரெண்டு நாள் அப்பறம் வந்து கூட்டிட்டு போறேன்னு எங்க அம்மா சொல்லிட்டு வந்தாங்க. மறுநாள் அந்த கோவில் குளத்துக்கிட்ட நின்னு கீர்த்தி என்னவோ பண்ணிட்டு இருந்தா? தற்கொலை பணிக்க போராளோனு நா பயந்து, அவளுக்கு தெரியாமலேயே , அவள பார்த்துட்டு இருந்தன், கொஞ்ச நேரத்துல அங்கேந்து போய்ட்டா, நா அப்படி என்ன பண்ணிருப்பானு குளத்துக்கிட்ட போயி பார்த்தன். என்ன பன்னுனனு என்னால கண்டுபுடிக்க முடியல, நா வந்துட்டன். எங்க அம்மா போயி கீர்த்திய கூட்டிட்டு வந்தாங்க, எங்க அண்ணா, கீர்த்திய பார்த்துட்டே இருந்தான். கீர்த்தி அம்மா எங்க அம்மா கிட்ட, கொஞ்சம் பாத்துக்கோங்க. அண்ணினு சொல்லிட்டு அழுதாங்க. கீர்த்திய எங்க அம்மா காபி போடா சொன்னாங்க, கீர்த்தி காபி போட்டு எங்க எல்லாருக்கும் கொடுத்தா, என்னக்கு கொடுக்கும்போது துர்கை அம்மன் கோவில் மணி அடிச்சுது. எனக்கு காபி குடிக்கவே புடிக்கல. இன்னும் நாலுநாளுல எங்க அண்ணனுக்கும் கீர்த்திக்கும் சாந்திமுகூர்த்தம் வெச்சி இருந்தாங்க. எனக்கு நரகத்துல இருக்குற மாதிரி இருந்துச்சு, கீர்த்தி எங்க அண்ணா கிட்ட ஒரு வார்த்த கூட பேசல அது எனக்கு குற்ற உணர்ச்சியா இருந்துச்சு. அவ எனக்கு சாப்பாடு போடுறது எனக்கு சுத்தமா புடிக்கல. மீண்டுவரவேமுடியாத பள்ளதுலா விழுந்தமாதிரி இருந்துது. மூணாவது நாள் சாயங்காலம், நாங்க எல்லாம் வெளியில உக்கார்ந்து பேசிட்டு இருந்தோம்,கீர்த்தி என்ன பார்த்தா, எங்க வீட்டுக்கு வந்து இப்போதான் அவ என்ன நிமிந்து பாக்குறா. என் கண்ணு கலங்கிட்டு ஆனா அவ அழல, ரொம்ப தைரியமா இருந்தா. எங்க அண்ணா, கீர்த்தி என்ன பாக்குறத பார்த்துட்டே இருந்தான். அதனால நான் எழுந்து உள்ள போய்ட்டேன்.

மறுநாள் காலையில கீர்த்திய காணும். எங்கையோ போய்ட்டா, ஊருக்குள்ள எங்கெல்லாமோ தேடி பார்த்தோம், காணும். நா கோவில் குளத்துல போயி தேடுன அங்கையும் இல்ல. போய்ட்டா. நா போலன்னு இருந்தன் , ஆனா அவ போய்ட்டா.ரெண்டு நாள் ஆச்சு, எங்க அம்மா தான் ஏதோ பண்ணிட்டாங்கனு ஊரே திட்டிட்டு இருந்துது. போலீஸ்ல புகார் குடுக்குற அளவுக்கு போய்டுச்சு விஷயம். போலீஸ் விசாரணையில ஒரு பொண்ணு நேத்து ராத்திரி ரயிலுள்ள ஏறி போனதா, பக்கத்து ஊரு ஸ்டேஷன் மாஸ்டர் சொன்னாரு. அத வெச்சி கீர்த்தி சாகலனு புரிஞ்சிக்கிட்டோம். ரொம்பநாள் ஆச்சு கீர்த்தி பத்தின எந்த தகவலும் இல்ல. இரண்டு வருஷம் ஆச்சு எல்லாரும் கீர்த்தினு ஒருத்தி இருந்தானே மறந்துட்டாங்க. நான் மட்டும் தினமும் குலத்துக்கு போயி அப்படி என பண்ணி இருப்பான்னு பார்த்துட்டு வருவேன். கோவில் சுவற்றுல நிறைய எழுதி இருக்கும். அதுல கீர்த்தி ஏதாவது எழுதி இருந்தானா? அத எப்படி கண்டுபுடிக்கிறதுனு தெரியல.புவியியல் பக்கம் 86 னு பவானின்ற இந்த வரிய நா கொஞ்ச மாசமா பாக்குறேன். இதுல ஏதாவது இருக்குமோனு ஒரு சந்தேகம். கீர்த்தி வீட்டுல எங்க மேல கோவமா இருக்காங்க, இதுக்காக யோசிச்சே நாள் போய்டுச்சு, வேற யாரோ எழுதுனதாவே இருக்கட்டும், ஒரு தடவ முயற்சிபன்னி பார்ப்போம்னு தோணுச்சு, நானே கீர்த்தி வீட்டுக்கு போனேன். எங்க அத்த, எங்க அண்ணன பயங்கரமா திட்டினாங்க, அவங்கள சமாதான படுத்தி, என்னையும் கீர்த்தியும் பத்தி சொன்னேன், அத்த கொஞ்ச நேரம் பேசவே இல்ல, கீர்த்திபற்றி விசாரிக்கண்ணும் அத்த வெளியில, அதனால கொஞ்சம் உதவி பண்ணுங்கன்னு சொன்னேன். என்ன கட்டிபுடிச்சிகிட்டு அழுதாங்க கீர்த்தி அம்மா, எல்லாரும் மறந்துட்டாங்க பவானி, கீர்த்திய, உன்ன மேல ஆசைப்பட்டுட்டு, உங்க அண்ணா கூட எப்படி வாழுறதுனு, ஓடிபோய்ட்டா போல எங்கையோ!  நீயாவது கேட்டியேன்னு பொலம்பிட்டு, அப்பறம் அத்தையே உதவி பண்ணுனாங்க. நா கீர்த்தியோட எல்லா பொருகளையும், புத்தகங்களையும் தேடி பார்த்தேன், கிடைக்கல, மாமா வர நேரமாவுது, சீக்கரம் தேடுன்னு அடுத்த சொன்னாங்க, யாரோ யாருக்கோ எழுதுனதோனு தோணுச்சு, பச்சை நிற தாவணியா, தேடுமபோது பார்த்தேன் . என் கண்ணுக்குளேயே இருக்கு அந்த நிமிஷம், என் கீர்த்தி ஏவுளோ அம்சமா இருந்தானு, அந்த தாவணிய எடுத்து என் சட்டகுள்ள வெச்சிக்கிட்டு, நா அப்பறம் வரேன் அத்த ஏதும் கிடைக்கலன்னு சொல்லிட்டு, மாமா வரதுக்குள்ள அவசர அவசரமா கிளம்பிட்டன்.

வீட்டுக்கு போனா, எங்க அண்ணன மாப்புள வீடு பாக்க வந்துருக்காங்க. அவங்கள பாத்தாவே தெரிஞ்சிது ரொம்ப ஏழையான குடும்பம்னு, ஊருக்குள்ள யாரும் எங்க வீட்டுக்கு பொண்ணு தரள அதனால கடைசியா இந்த முடிவு. எங்க அண்ணா, அந்த பொண்ணையே கல்யாணம் பண்ணிகிட்டான்.இன்னும் ஒரு வாரத்துல கல்யாணம், கீர்த்தி வருவாளா? அவளை பக்கமுடியுமா திரும்பனு நெனச்சிட்டு இருந்தன். ஆனா இப்போ! இந்த ஒரு வார இடைவெளியுல கீர்த்தி திரும்ப வந்துடக்குடாதுனு வேண்டிக்குறன்.கீர்த்தியோட தாவணிய கையில வெச்சிக்கிட்டு உக்காந்திருந்தன், தாவணிய எலி கடிச்சமாதிரி கிளிஞ்சிருந்தது, எடுத்து விருச்சி பாத்தா!! ஒரு வடிவமா பிளேடு வைத்து வெட்டப்பட்டிருந்தது, சுவற்றுல படிச்சா புவியியல் ஞாபகம் வந்துச்சு, உடனே இந்திய வரைபடம் தேடி போயி அங்க இந்த தாவணியில் வெட்டப்பட்ட பகுதிய பொருத்தி பார்த்தேன். பஞ்சாப் மாநிலத்துல அது சரியா பொருந்தி வந்தது. உண்மையாவே கீர்த்தி குலத்து சுவற்றுல, எதுமே எழுதல, யாரோ யாருக்கோ எழுதினது, என்ன உங்கிட்ட அழைச்சிட்டு வரப்போகுது கீர்த்தின்னு நினைச்சிகிட்டன். ஒரு வாரம் முடியப்போகுது, நாளைக்கு எங்க அண்ணனுக்கு கல்யாணம், அதுக்குள்ள என் கீர்த்தி வந்துட கூடாதுனு. மனசு பட படனு இருந்துது. ஒருவழியா கல்யாணம் முடிஞ்சுது. நா கிளம்பிட்டன், என் கீர்த்திய தேடி, அதே ரயிலுள்ள, ரயில் எங்க போயி முடியுமோனு தெரியல, ஆனா எப்படியாவது பஞ்சாப் போகனுன்னு இருந்துது எனக்கு, ஆனா ரயில் நிக்கிற ஒருசில இடத்துல, அந்த ஊரு பெயர் பலகை ஓரத்துல பவனினு எழுதியிருந்தது இரும்பு கம்பியால. சில இடத்துல இல்ல, அதையும் நோக்கி நா பயனிச்சிட்டே இருந்தன் கடைசியா அது அமிர்தசரஸ்ன்ற ஊருல போயி நின்னுச்சு, இது பஞ்சாப் தானான்னு கேட்டுட்டு அந்த ரயிவே ஸ்டேஷன்ல இறங்குன.

ஏப்ரல் 1, 1919 நா ஏன் கீர்த்தியோட ஸ்வாசத்த தேடி போனேன். ரௌலட் சட்டம்  எதிரா மக்கள் கிளர்ச்சியில இருந்தா நேரம் அது, ஏன்னா? ரௌலட் சட்டம்  ஒரு கருப்பு சட்டம். ராமானந்த பாக்ன்ற உருள போயி நான் தங்கி இருந்தன், ஏன் கீர்த்தி இங்க இருபாலான்னு எனக்கு தெரியாது. ஏதோ மூடநம்பிக்கையில நா எங்க வர்ல, என் கீர்த்தி மேல இருக்குற காதல் என்ன இவுலோ தூரம் எடுத்துட்டு வந்துருக்கு. அமிர்தசரஸ் ஊற சுத்தியிருக்குற எல்லா இடத்துலயும் அவள போயி தேடனுனு முடிவு பண்ணுனேன். சீக்கியர்களோட புத்தாண்டு விழா, வைசாகி விழா, அந்த விழா நெருக்கத்துல இருக்குறதுனால அந்த ஊரு மக்கள் எல்லாம் பரபரப்பா இருந்தாங்க. மேலும் ரௌலட் சட்டத்துக்கு எதிரான பொலம்பல்களும் இருந்துது. பக்கத்துல துர்காகோவில் எங்கையாவது இருக்கானு தேடிட்டு இருந்தன், அப்போ துர்கியன் மந்திர்னு பதினாறாம் நூற்றாண்டுல கட்டுன ஒரு கோவில் பத்தி சொன்னாங்க, அங்க தான் என்னோட கீர்த்தி  இருபாங்குற  நம்பிக்கையில அந்த கோவிலுக்கு  நான் போனேன் . அங்க விசாரிச்சதுல, கீர்த்தினு ஒரு பொண்ணு வந்து கோவில் வேல பார்த்துட்டு போவானு சொன்னாங்க, அத கேட்ட அடுத்த நிமிஷம் அங்கையே உக்காந்து அழுதுட்டேன். இந்த மண்ணுல என் கீர்த்தி கால் பட்ருக்கானு, மன்ன எடுத்துபார்த்தேன்.

நா விசாரிச்சத கேள்வி பட்டு ஒரு அம்மா வந்து, கி துஸிம் bhavānī ஹோ? னு கேட்டாங்க, ஆமான்னு சொன்னேன், கீர்த்தி னு சொல்லிட்டு என்னமோ பஞ்சாபில சொன்னாங்க, ஒன்னுமே புரியல. பதான்கோட், ன்ற ஊரு பெரு மட்டும் தான் புரிஞ்சிது. அப்பறம் வைசாகி விழா னு சொன்னாங்க, எனக்கு இப்போதைக்கு கீர்த்தி இந்த ஊருல இல்லனு மட்டும் புரிஞ்சிது, ஒரு வேல அவ வந்தா வைசாகி விழாவுக்கு வருவான்னு நா காத்திருந்தான். என் கையில காசு இல்ல, அதனால நா ஒரு உணவகத்துல வேலைபார்த்துட்டு அங்கையே தங்கியிருந்தன், இருந்தாலும் தினமும் நா அந்த கோவிலுக்கு போயிடுவன் என் கீர்த்திய தேடி.

ஏப்ரல் 10 பயங்கரமான கலவரம் , டெல்லில வெச்சு காந்திஜி, சத்யபால், சைபுதீன் கிச்லு எல்லாரையும் கைது பண்ணிட்டாங்க. அமிர்தசரஸ்சே பதட்டமா இருந்துச்சு. கீர்த்தி பதான்கோட்  லெந்து வருவாளா? மாட்டாளா ? இல்ல நானா இதெல்லாம் நெனச்சிட்டு இருக்கனா? மொழி புரியாமனு கொழப்பத்துல இருந்தன். எனக்கே தெரியல, எந்த நம்பிக்கனு.

ஏப்ரல் 12 துர்கியன் மந்திர் கோவிலுக்கு போனேன், அந்த அம்மாவ தேடி. அவங்க அங்க பூ கட்டிக்கிட்டு உக்காந்திருந்தாங்க , அவங்கள்ட போயி கீர்த்தி எப்ப வருவான்னு சைகையில கேட்டன். நாளைக்குன்னு சைகையில் அவங்களும் பதில் சொன்னாங்க. நா அவங்க கால புடிச்சிட்டு கண் கலங்கிடன். ரெண்டு வருஷம் ஆச்சு என் கீர்த்தியை பாத்து, நாளைக்கு நா அவள பாக்க போறேன், இத என்னால நம்பவே முடியல, இரவெல்லாம் தூக்கம் வரல புரண்டு புரண்டு படுத்துட்டு இருந்தன். காலையில ஆறு மணிக்கெல்லாம் கோவிலுக்கு போய்ட்டன். யாருமே இல்ல ஒரு சில பூஜாரிங்களா தவற. அங்கையே உக்காந்திருந்தன்,கொஞ்ச நேரத்துல அவுளோ கூட்டம், அந்த அம்மாவ தேடுன, எங்கேயுமே இல்ல, மனசே உடைஞ்சிட்டு , வர கூட்டத்துல என் கீர்த்திய தேடி தேடி, ஏமாந்து போயி உக்காந்திருந்தன் ,ஆனா சலிச்சுபோகல.

மத்தியானம் இரண்டு மணிக்கு அந்த அம்மாவ பாத்தன், அம்மா கீர்த்தி எங்கன்னு சைகையில கேட்டன். ஜாலியன் பாகானு, சொன்னாங்க, விசாரிச்சிகிட்டு அங்க போனா, சுமார் ஆறரை ஏக்கர் பூங்கா அது, ஆயிரக்கணக்கான பேர் இருப்பாங்க, அவுளோ கூட்டம் , இதுல அவள எங்க கண்டுபுடிக்கிறதுனு எனக்கு தெரியல. மறுபடியும் கூட்டமா ? ஏன் கீர்த்தி என் காதல சோதிக்கிறியா? னு எனக்குள்ள கேட்டுகிட்டே தேடுன, வைசாகி விழா கொண்டாட பல மக்கள் அங்க வந்திருந்தாங்க, நிறைய மக்கள் கூடி உக்காந்து,ஊருக்கதை பேசிட்டு இருந்தாங்க, சில மக்கள் குழந்தைகள விளையாட கூட்டிட்டு வந்திருந்தாங்க. என் கீர்த்திய மட்டும் காணும் , கொஞ்ச தூரத்துல ரௌலட் சட்டத்த பற்றிய ஒரு அரசியல் பொது கூட்டம் அமைதியான முறையில நடந்துட்டு இருந்துச்சு, பவானி பவானினு  யாரோ கூப்ட சத்தம் கேக்குது, நா சுத்தி சுத்தி பாக்குறேன், ஒரு பதட்டத்துல என்னால எந்த திசையிலிருந்து சத்தம் வருதுன்னு கண்டுபுடிக்க முடியல, படபடப்பா இருந்துது, கீர்த்தி கீர்த்தினு கூபிட்டுப்பார்த்தன், கண்ணுகூட ஒழுங்கா தெரியாதமாதிரி இருந்துது. என் கைய யாரோ புடிச்சாங்க, திரும்பி பார்த்தா! சின்ன குழந்த , அந்த பொண்ணு பெரு பவானி போல, ஆனா சத்தம் என் கீர்த்தியோடது மாதிரி இருந்துச்சு,  நா நிமிந்து பார்த்தன், அது என் கீர்த்தியே தான், கீர்த்தி என்ன பார்த்துட்டா! அசையாம! உண்மையானு! புரியாம! அப்படியே நிக்குறா, அழுவுறா! நெஜமாவே நான் தானான்னு ஒரு குழப்பம், எனக்கும் வார்த்தையே இல்லா, பச்சைநிற தாவணிய எடுத்து காமிச்சன், ஆச்சிரியமா சிரிச்சா, அவளால என்ன பற்ற முடியல தவிக்குறானு தெரியுது.

அவளுக்கு ஒரு சந்தேகம் அண்ணனுக்காக வந்துருப்பானோன்னு, ஏன்னா? அவ கழுத்துல தாலி இல்ல, அப்போ நா சொன்ன, எனக்காக வந்துருகன், உன்ன தேடினு. உடனே வந்து எண்ண கட்டிபுடிச்சிகிட்டா. குழந்தைய தூக்கிகிட்டு ,கீர்த்தி வேலைபாக்குற வீட்டுகார அம்மாகிட்ட நடந்து போயிடு இருந்தோம், நடந்து போகுமபோது, கீர்த்தி, நீனா எனக்கு ரொம்ப புடிக்கும் கீர்த்தினு சொன்னேன், அதுக்கு என் கீர்த்தி, என் கைய இறுக்கமா புடிச்சிகிட்டா, சிரிச்சிகிட்டே வந்தா, வாழ்க்கையே திரும்ப என் கையில வந்தா மாதிரி அவுளோ ஒரு சந்தோஷம். கீர்த்தி என் கூட்டிகிட்டு போயி அந்த குழந்தையோட அம்மா கிட்ட, பாவானினு சொன்னா! உடனே அவங்க சிரிச்சிகிட்டே நிறைய பேசுனாங்க ஒன்னும் புரியல எனக்கு, ஆனா எண்ணப்பத்தி நிறைய சொல்லிருக்கானு மட்டும் புரிஞ்சிது. நாங்கெல்லாம் அந்த பூங்கால உக்காந்து  பேசிட்டு இருந்தோம்.

எங்களை மாதிரியே நிறைய மக்கள் வைசாகி விழா கொண்டாட வந்திருந்தாங்க, அப்போ பிரிகேடியர் ஜெனரல், ரெஜினால்டு டயர், துப்பாக்கி ஏந்திய சிப்பாய்களோட உள்ள வந்தாரு, வெளில கதவ சாத்த சொன்னாரு, காந்திஜி கைதுசெய்யப்பட்டதுலேந்தே, வெள்ளையர்கள் ரொம்ப கடுமையாதான் இருந்தாங்க, எனக்கு பயமா இருந்துது இரண்டு வருஷத்துக்கு அப்பறம் இப்ப தான் என் கீர்த்திய பாக்குறன். அதுக்குள்ள ஏதாவது நடந்துடுமோனு பயந்துட்டே இருந்தன். ரௌலட் சட்டத்துக்கு எதிரா நடந்த பொதுக்கூட்டத்த பார்த்து கோவப்பட்டாங்க, என்னமோ பேசிட்டு இருந்தாங்க, எல்லா தாய்மார்களும் தன்னோட குழந்தைய இருக்க புடிக்கிட்டே பார்த்துட்டு இருந்தாங்க, வைசாகி விழா கொண்டாட வந்துருந்தவங்கெல்லாம் , அதிர்ச்சியா நின்னாங்க, என் கீர்த்தி வந்து என் கைய புடிச்சுகிட்டு நின்னுட்டு இருந்தா, திடீருனு துப்பாக்கிய வெச்சு சுட ஆரமிச்சிட்டாங்க, சத்தம் காதகிளிக்குது. என்ன நடக்குதுனே எங்களுக்கு புரியல, எல்லா பொதுமக்களும் ஓட அரமிச்சிட்டாங்க, என்ன நடக்குதுனே புரியல நாங்க எல்லாம் ஓட ஆரமிச்சிட்டோம்,  சின்ன குழந்த பாவனியோட அம்மா ஓடும்போது  கீழ விழுந்துட்டாங்க, அவங்க மேல ஏறி நிறைய பெரு ஓடிட்டு இருந்தாங்க, கீர்த்தி ஓடிபோயி அவங்கள தூக்கி விட்டா, திரும்ப ஓட ஆரமிச்சோம், நிறையபேர் செத்து போய்ட்டாங்க, பாக்கவே கஷ்டமா இருந்துது, எங்க ஓடுறதுனே தெரியல, சுத்தி சுத்தி ஒரே இடத்துலையே ஓடிட்டு இருந்தோம். அப்போ ஒரு தோட்டா என் தோள்பட்டைய கிழிச்சிகிட்டு போய்டுச்சு, வலி தாங்கமுடியாம நா குழந்தைய, என் கீர்த்தி கிட்ட கொடுத்துடன். செத்துட போறோமோ?? வாழ ஆரமிக்கிறதுக்குள்ளையேனு மனசு வலிக்குது, இருந்தாலும் என் கீர்த்தி செத்துட்டா கூடாதுனு அவளை மறச்சு மறச்சு ஓடிட்டு இருந்தன், குண்டடி பட்டு செத்துட்டுருக்குறவங்கள பார்த்தாலே மரணபயம் நெஞ்சில கொதிக்குது, குண்டு பட பட பட னு வந்துட்டே இருந்துது, ஓட இடம் இல்ல, நா என் கீர்த்தியை அணைச்சிகிட்டேன். என் முதுகுல குண்டு பாஜிடுச்சு, கீர்த்தி அழுவுறா கதறி கதறி, ஒரு தடவ என்ன புடிக்கும்னு உன் வாயால சொல்லுன்னு கேக்குறான், பவானி. உன்ன தான் புடிக்கும், உன்ன தான் புடிக்கும்னு கத்துறா கீர்த்தி, இப்படியே கத்திகிட்டே அவளே துப்பாக்கி முன்னாடி போக போரா, வேணாம் கீர்த்தி வேணாம் கீர்த்தி போகாதான்னு கெஞ்சிரான் பவானி, உனக்காக பொறந்தவ நான், நீ இல்லாம ஒரு நிமிஷம் கூட வாழமுடியாது பவானி. மன்னிச்சுடுனு சொல்லிட்டு, நெஞ்சில தொட்டாவ சுமந்துக்கிட்டே வந்து பவானி மேல விழுந்தா, ரெண்டுபேரும் கைய கோர்த்துக்கிட்டு படுத்திருந்தாங்க, அவங்க மேல ஏறி மக்கள் ஓடிட்டே இருந்தாங்க,சந்தோசமா பேசி சிரிக்க கூட முடியலையே பாவனினு கீர்த்தி பாவானிய பார்த்தா! பவானி கீர்த்திய பார்த்தான். இரு மனங்களும் இயற்கை எய்தியது. குண்டு மழை ஓய்ந்தது. இறந்துபோனவங்க பெயர்பட்டியல்ல இவங்க பெரு வரல, அதனால என்றுமே கீர்த்தி அம்மா மனதில் காதலர்களாய் வாழ்ந்துகொண்டிருந்தனர் இருவரும்.

சிந்து ராஜேஸ்வரி-இந்தியா

சிந்து ராஜேஸ்வரி

(Visited 152 times, 1 visits today)