கலைகூடம்- சிற்பம்-தா.பாலகணேசன்

தா.பாலகணேசன் அடிப்படையில் கவிஞர் சுபாஷ் என்றே பாரீஸ் இலக்கிய வெளியில் அறியப்பட்டவர். ஏறத்தாழ 90களில் இவரது கவிதைகள் உச்சம் பெற்று அவை வராத சஞ்சிகைள் இல்லையென்றே சொல்லலாம். கவிதைகளை ஏற்ற இறக்கத்துடன் உணர்ச்சிக்குரலில் சொல்வதில் இவர் வல்லவர். இவருக்கு இன்னுமொரு படைப்பாற்றலும் உண்டு என்பது எமக்கு காலந்தாழ்த்தியே தெரியவந்தது. சிற்பங்கள், ஓவியங்கள் வரைவதிலும் தனது ஆக்குதிறனை வெளிப்படுத்துகின்றார் பாலகணேசன். சிற்பங்களில் குறிப்பாக மண், மரம், கல் போன்றவற்றில் சிற்பம் வடிப்பதை முறையாகக் கற்றுத்தேர்ந்தார். இவரது கலைத்திறமைகளின் தள உயர்வுக்கு ஓவியர் வாசகன் பின்னணியில் இருந்தார் என்று குறிப்பிடும் தா.பாலகணேசன் தற்பொழுது பிரான்ஸின் நகர்களில் ஒன்றான முல்ஹவுஸ்-Mulhouse இல் ஒரு கிராமத்தில் வாழ்ந்து வருகின்றார். நடுவாசகர்களுக்காக நாம் இவரை அணுகிய பொழுது மகிழ்ச்சியுடன் எமக்கு பரிந்துரை செய்த பாலகணேசனின் சிற்பங்களும் ஓவியங்களும் நடு வாசகர்களுக்காக

நடு குழுமம்

0000000000000000000000000000

(Visited 94 times, 1 visits today)