ஆசிரியர் குறிப்பு

வணக்கம் வாசகர்களே !

இதழ் 50 JPG
ஓவியம் : எஸ் நளீம்

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நடுவின் 50 ஆவது இதழில் உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம். ஒரு இணைய சஞ்சிகை 50 ஆவது இதழை எட்டுகின்றது என்றால் அது கடந்து வந்த பாதை அதற்கு அவ்வளவு சுலபமாக இருக்க முடியாது. இதற்குள் பலரது நேரங்களும் உழைப்புகளும் ஆழ வேரோடிப்போய் இருக்கின்றன. நாம் இன்று இவ்வளவு தூரம் கடந்து வந்ததிற்கு ஆரம்பத்தில் எமக்கு கிடைத்த புறக்கணிப்புகளும் நிராகரிப்புகளுமே எம்மை ஓயாது இயங்கச்செய்த ஊக்கிகளாகும். அவர்களே எமது கொண்டாட்டத்துக்கு உரியவர்கள் ஆகின்றனர். இந்த வருடத்தில் நாங்கள் ஒரு சில இறுக்கமான முடிவுகளை எடுத்திருக்கின்றோம்.

01 வருடத்தின் ஆரம்பத்திலும் இறுதியிலும் நடுவை அச்சுப்பதிப்பாக கொண்டுவருதல்.

02 நடு ஆரம்ப நிலையில் செயல்பட்டது போல இனி வருங்காலங்களில் காலாண்டு இதழாகவே வெளியாகும். இதன்முலம் எமது நேரத்தையும் எழுத்தாளர்களது நேரத்தையும் மிச்சப்படுத்தலாம் என எண்ணுகின்றோம். அத்துடன் சஞ்சிகையின் தரம் மேலும் உயர்வடையும் எனவும் எண்ணுகின்றோம்.

03 நடு வெளியீட்டின் மூலம் நாங்கள் முக்கியமாக கருதுகின்ற எழுத்தாளர்களது நூல்களை எமது சக்திக்கு உட்பட்ட வகையில் நூலுருவாக்கம் செய்வது.

அதற்கு முன்னோடியாக 50 ஆவது இதழை அச்சுப்பதிப்பில் கொண்டுவந்திருக்கின்றோம். இதற்கு நீங்கள் வழங்குகின்ற ஆதரவே வருங்காலங்களில் நடுவை அச்சுப்பதிப்பாக கொண்டுவருவது தொடர்பான இறுக்கமான முடிவுகளை எடுப்பதற்கு துணை நிற்கும். அச்சுப்பதிப்பு எக்காரணம் கொண்டும் இணைய சஞ்சிகையாக தரவேற்றம் செய்யப்பட மாட்டாது. முதலாவது அச்சுப்பதிப்பிற்காக இதுவரை காலமும் பொறுத்தருளிய வாசகர்களுக்கும் எழுத்தாளப்பெருந்தகைகளுக்கும் எமது ஆழ்ந்த வருத்தங்களையும் மன்னிப்பினையும் கோருகின்றோம். வருங்காலங்களில் குறித்த நேரத்தில் நடு இரண்டு தளங்களிலும் பயணிக்கும் என்ற உறுதி மொழியினை உங்களுக்கு தருகின்றோம் . இந்த அச்சுப்பதிப்பில் கலந்து கொண்ட எழுத்தாளர்களுக்கும், அட்டை ஓவியத்தையும் வடிவமைப்பினையும் செய்த எஸ் நளீமிற்கும், நூல் முன்னோட்டத்தை காணொளியாக வழங்கிய தோழர் வெண்மணிக்கும், நடு அச்சுருவாக்கம் பெறுவதில் தோளோடு தோள் நின்ற தோழர் சிராஜ் முஹைதீன்-க்கும் எமது நன்றிகள்.

நடு சஞ்சிகையை பெற்றுக்கொள்ள :

01 இந்தியா

சஞ்சிகையின் விலை: 50 ரூபாய் ( தபாற்செலவு நீங்கலாக )

பாரதி புத்தகாலயம்

சிராஜ் முஹைதீன்

தொலைபேசி இலக்கம் : +919443066449

000

02 இலங்கை

சஞ்சிகையின் விலை: 100 ரூபாய் ( தபாற்செலவு நீங்கலாக )

Fathima Book Center
219, AKM.Road, Eravur 03
Sri Lanka

முஹமட் சப்ரி

தொலைபேசி இலக்கம் : +94 77 080 7787

000

03 சர்வதேசம்

சஞ்சிகையின் விலை: 5 யூரோ ( தபாற்செலவு நீங்கலாக )

கோமகன்

தொலைபேசி இலக்கம் : +33623666554

மின்னஞ்சல் : editornadu@gmail.com

கோமகன்

பிரதம ஆசிரியர்

நடு குழுமம்

நடு லோகோ 01

(Visited 297 times, 1 visits today)
 

2 thoughts on “ஆசிரியர் குறிப்பு”

Comments are closed.