“முடியுமானவரை சமூகத்தை சமூகத்திற்காக ஆவணப்படுத்த முயல்கிறேன்”-கலைக்கூடம்-புகைப்படம்-சஞ்சேயன் நந்தகுமார்

சஞ்சேயன் நந்தகுமார்எனது பெயர் சஞ்சேயன் நந்தகுமார். நான் யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் வசித்துவருவதுடன் தனியார் நிறுவனம் ஒன்றில் Executive Technical Support ஆகவும் கடமைபுரிந்து வருகின்றேன். அதனுடன் புகைப்படங்கள் எடுத்தல், புதிய இடங்களை தேடிப் பயணித்தல், இணையத்தளங்களில் கட்டுரைகள், கதைகள் எழுதுதல், போன்றவற்றையும் இணைந்து செய்து வருகின்றேன். தொழிலை விட ஒரு கதைசொல்லியாக இருக்கும் நேரங்களையே அதிகம் விரும்புகிறேன். 2009ம் ஆண்டிலிருந்து பொழுதுபோக்குக்காக எழுத ஆரம்பித்து தற்போது முழுநிறைவுடன் எழுதிக்கொண்டிருக்கிறேன். அதே போல 2mp தொலைபேசியில் ஆரம்பித்த பயணம் இப்போது புகைப்பட கருவியுடன் பயணிக்கிறது.

எனக்கு புகைப்படம் எடுப்பதில் தனிப்பட்ட நிறைந்த ஆர்வம் உள்ளது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் சகோதரரின் புகைப்பட கருவி அல்லது நண்பரின் புகைப்பட கருவியுடன் சென்றுவிடுவேன். ஆரம்பத்தில் வெளியே செல்லும் போது மனதிற்கு பிடித்த இடங்கள், மனிதர்கள், சம்பவங்களை தொலைபேசியில் புகைப்படம் எடுக்கத் தொடங்கினேன். பின்னர் புகைப்படம் எடுப்பதன் மீதான ஆர்வம் அதிகமாக புகைப்படம் எடுப்பதற்காகவே சென்று புகைப்படங்களை எடுக்க ஆரம்பித்திருக்கின்றேன். அவற்றைக் கட்டுரைகளாகவும். அனுபவங்களை கதைகளாகவும் எழுதி எனது வலைப்பதிவிலும், சமூகவலைத்தளங்களிலும் பத்திரிகைகளிலும் பகிர்ந்து வருகின்றேன்.

மனிதர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் நிறைய கதைகள் இருக்கின்றது, ஆனால் அவர்களிடம் கதைகள் கேட்பதற்கோ வெளிக்கொணரவோ யாரும் முயற்சிப்பதில்லை. அத்தகைய கதைகளை வெளிக்கொணர எடுத்த முயற்சிதான் இந்த Human of Jaffna. எனக்கு கதை கேட்பதிலும் சொல்வதிலும் ஆர்வம் இருந்தது. அதனால் கேட்ட அல்லது சொல்லவேண்டிய கதைகளை படங்களினூடாக சொல்ல முனைகிறேன்.

எங்கள் சமூகத்தில் இருந்து இல்லாமல் போன தொழில்களை மையப்படுத்தி ‘கறுப்புக்கதைகள்’ என்ற தலைப்பில் படங்களுடன் ஆவணப்படுத்துவதுடன் வலைகளிலும் பதிவேற்றி வருகிறேன். (www.nsanjay.com)

முடியுமானவரை சமூகத்தை சமூகத்திற்காக ஆவணப்படுத்த முயல்கிறேன். அதில் வெற்றியடைவேன் என நம்புகிறேன்.

இவரது கனவு மெய்ப்பட நாங்களும் வாழ்த்துகின்றோம் .

நடு குழுமம்

00000000000000000000000000000

(Visited 56 times, 1 visits today)