புறவெழுத்துகள்- நடுகுழுமம்

நூல் பற்றிய குறிப்பு :

உடனிருப்பவன், இடைவெளி, நீலப்புடவை, கசப்பு போன்ற கதைகளில் சமூகவிழுமியங்கள் என சொல்லப்படுபவனவற்றை ஸ்மரணையின்றி சர்வசாதாரணமாகக் கடக்கிறார். Modern short stories writingன் அடிப்படையே இது தான். அடுத்தது, வேறு பெண்ணை கதாபாத்திரமாக்கும் போது தயக்கமில்லாது எழுதும் கை, என் மனைவி, என் அம்மா என்று வரும்போது சுயசரிதை என்று நினைத்துவிடுவார்களோ என்ற பயத்தில் பின்னுக்கு இழுத்துக் கொள்ளும். இவரின் பல சிக்கலான கதாபாத்திரங்கள் தன்னிலையிலேயே பேசுகின்றன.

நூலின் பெயர் : உடனிருப்பவன்

ஆசிரியர் : சுரேஷ் பிரதீப்

பகுப்பு : சிறுகதை

வெளியீடு : யாவரும் பப்ளிஷர்ஸ்

விலை : 150 இந்திய ரூபாய்

தொடர்பு :  யாவரும் பப்ளிஷர்ஸ்

000000000000000000000000000000000000

நூல் பற்றிய குறிப்பு :

1928ம் ஆண்டு ஹங்கேரியில் பிறந்த வீஸல் சிறுவனாக இருந்தபோதே  ஆஸ்விட்ச் வதைமுகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டு பின்னர் புச்சன் வால்ட் முகாமுக்கும்  அனுப்பப்பட்டார். பெற்றோர்களும் தங்கையும் முகாமிலேயே மாண்டனர்.

முகாம் அனுபவங்கள் அடிப்படையிலான அவரது முதல் சுயசரிதை ‘இரவு’.

நூலின் பெயர் : இரவு

ஆசிரியர் : எலி வீஸல். தமிழில்: ரவி. தி. இளங்கோவன்

பகுப்பு : புதினம்

வெளியீடு : எதிர் வெளியீடு

விலை : 220 இந்திய ரூபாய்

தொடர்பு :  எதிர் வெளியீடு

000000000000000000000000000000000000

நூல் பற்றிய குறிப்பு :

நூலின் பெயர் : அரூப நெருப்பு

ஆசிரியர் : கே என் செந்தில்

பகுப்பு : சிறுகதை

வெளியீடு : காலச்சுவடு

விலை : 135 இந்திய ரூபாய்

தொடர்பு :  காலச்சுவடு

000000000000000000000000000000000000

நூல் பற்றிய குறிப்பு :

கச்சிதம்.. கச்சிதம் என்று நாலாப்புறமும் ஜெபம் நடந்துகொண்டிருக்கும் காலத்தில், அளந்தெடுக்கப்பட்ட வாழ்வுக்கு மாறான கச்சிதமின்மையை அழகியலாக தன் நீர்ம வரிகளின் மூலம் வரித்துக் கொண்ட இக்கவிதைகளை  படைத்திருக்கிறார் சந்திரா.

நூலின் பெயர் : மிளகு

ஆசிரியர் : சந்திரா தங்கராஜ்

பகுப்பு : கவிதை

வெளியீடு : எதிர் வெளியீடு

விலை : 160 இந்திய ரூபாய்

தொடர்பு :  எதிர் வெளியீடு

000000000000000000000000000000000000

நூல் பற்றிய குறிப்பு :

மலையாளத்தில் வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்ற ஆடு ஜீவிதம் சிறந்த விற்பனைப் பட்டியலில் இடம்பெற்ற நாவல். மலையாள இலக்கியத்தின் அற்புதமான புதிய   எழுத்தாளர்களில் ஒருவரான பென்யாமின்,  நஜீபின் விசித்திரமானதும் அவலச்சுவை கொண்டதுமான பாலைவன வாழ்க்கையை நையாண்டியாகாவும் மென்மையாகவும் கூறி, தனிமை மற்றும் புறக்கணிப்பின் உலகளாவிய கதையாக இதை உருமாற்றுகிறார்.

நூலின் பெயர் : ஆடு ஜீவிதம்

ஆசிரியர் : பென்யாமின். தமிழில்: விலாசினி

பகுப்பு : புதினம்

வெளியீடு : எதிர் வெளியீடு

விலை : 240 இந்திய ரூபாய்

தொடர்பு :  எதிர் வெளியீடு

(Visited 64 times, 1 visits today)