புற எழுத்துகள் இதழ் 32 ஆடி 2020-நடு குழுமம்

காணக்கிடைக்காத சஞ்சிகைகள் :

புற எழுத்துகள் இதழ் 32 ஆடி  2020

000000000000000000000000000000000000

நூல் பற்றிய குறிப்பு :

வாய்ப்பாடி, சென்னிமலை, ஊத்துக்குளி, பெருந்துறை, விஜயமங்களம் ஆகிய ஊர்களைச் சுத்தியே என்னோட கதைக் களம் இருக்கும். எழுத்துங்கிறது புதுச உருவாக்கிற விஷயம் இல்லை. நம்ம மண் சார்ந்த மனிதர்களைப் பார்த்து, பழகி உள்வாங்குற விஷயம் தான் எழுத்தா வெளிப்படுது. மண்ணைப் பத்தியும் நாம பார்த்த மனுஷங்களைப் பத்தியும் எழுதுற கதைகள்தான் பேசப்படும். என் கதைகளும் அப்படித்தான்!

நூலின் பெயர் : 57 ஸ்நேகிதிகள் ஸ்னேகித்த புதினம்

வா.மு. கோமு

ஆசிரியர் : வா. மு. கோமு

பகுப்பு : புதினம்.

வெளியீடு : எதிர் பதிப்பகம்

விலை : 110 இந்திய ரூபாய்கள்

தொடர்பு : எதிர் பதிப்பகம்

0000000000000000000000000000000

நூல் பற்றிய குறிப்பு :

இவரது சிறுகதைகள் முடிவற்று தொடர்ந்து பயணிக்க வல்லவை. பரந்துபட்ட இவ்வெளியில் இன்பமும் துன்பமும் இரண்டறக் கலந்ததுதான் மானுடம் என்பதை இவரது சிறுகதைகள் சொல்ல முற்படுகின்றன. இன்றைய கொங்கு மக்களின் பேச்சு வழக்காற்றியலை தனக்கே உரிய எளிமையான நடையோடு சொல்லிச் செல்வதில் இவரது கதைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

நூலின் பெயர் : என்னை மரணத்தின் வருகை என்கிறார்கள்

வா. மு. கோமு

ஆசிரியர் : வா.மு. கோமு

பகுப்பு : சிறுகதைகள்

வெளியீடு : எதிர் பதிப்பகம்

விலை : 100 இந்திய ரூபாய்கள்

தொடர்பு : எதிர் பதிப்பகம்

0000000000000000000000000000000

நூல் பற்றிய குறிப்பு :

மொழிபெயர்ப்பும் கலையின் ஒரு அங்கமே. முயற்சிகளை மறுதலித்து சாத்தியப்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்கும் அசாத்தியமானதொரு சூழலில் சாகசக்காரனின் மனநிலையுடனேயே இருக்கிறான் மொழிபெயர்ப்பாளன். அந்நிய நிலப்பரப்புகள், கலாச்சாரங்கள், அவற்றினூடாக புலங்கும் மொழி மற்றும் உணர்வுகள் என யாவற்றையும் தமிழ் நிலத்தோடு பொருத்திப் பார்ப்பதே மொழிபெயர்ப்புகளின் இன்றைய தேவையாயிருக்கிறது. தமிழ்ச்சூழலில் அதிகம் பேசப்பட்டிராதவர்களையும் பெயர்களாக மட்டுமே அறிந்திருக்கும் மனிதர்களின் படைப்புகளையும் முன்வைத்து உரையாடுகின்றன இத்தொகுப்பிலுள்ள கதைகள்.

நூலின் பெயர் : எருது

கார்த்திகைப் பாண்டியன்

மொழியாக்கம் : கார்த்திகைப் பாண்டியன்

பகுப்பு : சிறுகதைகள்.

வெளியீடு :  எதிர் பதிப்பகம்

விலை : 120 இந்திய ரூபாய்கள்

தொடர்பு :  எதிர் பதிப்பகம்

0000000000000000000000000000000

நூலின் பெயர் : எதிரில் இருக்​கை காலியாக இல்​லை

மெளனம் இரமேசு

ஆசிரியர் : மெளனம் இரமேசு

பகுப்பு : கவிதைகள்

வெளியீடு : செந்தமிழ் வெளியீடு

விலை : 50 இந்திய ரூபாய்கள்

தொடர்பு : செந்தமிழ் வெளியீடு

0000000000000000000000000000000

நூல் பற்றிய குறிப்பு :

அமெரிக்காவில் உள்ள ஏழைகளின் எளிய வாழ்வு, எழுதும் கலை, குடி, பெண்களுடனான தொடர்பு, அடிமைத்தொழில் ஆகியவற்றை  புகோவ்ஸ்கி படைப்புகள் பேசுகின்றன. இவர்  ஆயிரக்கணக்கான கவிதைகள், நூற்றுக்கணக்கான சிறுகதைகள் மற்றும் ஆறு புதினங்கள் எழுதியுள்ளார். அவை அறுபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களாக வெளிவந்துள்ளன.

அமெரிக்க செய்தித்தாளான “ஓபன் சிட்டி”யில் இழிந்த கிழவனின் குறிப்புகள் என்ற பெயரில் பத்தி எழுதியதைத் தொடர்ந்து, அமெரிக்க உளவுத்துறையான எஃப்.பி.ஐ. அவருக்கென தனி கோப்பு தயாரித்து கண்காணித்து வந்தது. 1986ம் ஆண்டு “டைம்” பத்திரிக்கை புகோவ்ஸ்கியை ”அமெரிக்க கீழ்நிலை வாழ்வின் அரசவைக்கவிஞர்” என்று புகழாரம் சூட்டியது.

இப்புதினம் புனைவு என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், புகோவ்ஸ்கியின் சுயசரிதையாகவே கருதப்படுகின்றது. பால் சார்த்தர் இவரை அமெரிக்காவின் மிகச்சிறந்த கவிஞர் என புகழ்ந்துள்ளார்.

நூலின் பெயர் : அஞ்சல் நிலையம்

சார்லஸ் புக்கோவ்ஸ்கி

அஞ்சல் நிலையம்-

தமிழில் : பாலகுமார்  விஜயராமன்

பகுப்பு : புதினம்

வெளியீடு : எதிர் பதிப்பகம்

விலை : 200 இந்திய ரூபாய்கள்

தொடர்பு : எதிர் பதிப்பகம்

 

(Visited 67 times, 1 visits today)