புற எழுத்துகள்

நூல் பற்றிய குறிப்பு :

இந்தச் சிறுகதைகளின் தொகுப்பிற்கு நண்பர் கரீம் ‘இருண்டகாலக் கதைகள்’ எனத் தலைப்பிட்டுள்ளார். இதில் இடம்பெற்றுள்ள அனைத்தும் சமகாலத்தைப் பேசும் கதைகள். சம காலத்தில் நாம் எல்லோரும் எதிர்கொண்டுள்ள எதார்த்தங்களைச் சொல்லும் கதைகள். இளங்கோ கிருஷ்ணனின் “படை” யும் கூட முகமது பின் துக்ளக் காலத்தைப் பேசினாலும் துக்ளக்குகள் இன்றும் உள்ளனர் எனச் சொல்லும் படைப்புத்தான். அந்த வகையில் நாம் வாழும் இக் காலம் ஓர் இருண்ட காலம் என்றாகிறது.. இதற்கெல்லாம் என்ன முடிவு, நாம் எங்கு போய்க் கொண்டுள்ளோம் என நம் யாருக்கும் புரியவில்லை என்பதைத்தான் இந்தப் படைப்புகள் நமக்குச் சுட்டிக் காட்டுகின்றன. மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டுள்ளோம். இந்தச் சூழலை பதினேழு சமகால எழுத்தாளர்கள் எவ்வாறு காண்கின்றனர் என்கிற வகையில் இத் தொகுப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

அ. மார்க்ஸ்

நூலின் பெயர் : இருண்ட காலக் கதைகள்

ஆசிரியர் : அ. கரீம்

பகுப்பு : சிறுகதைகள்

வெளியீடு : எதிர் வெளியீடு

விலை : 190.00 இந்திய ரூபாய்

தொடர்பு :  எதிர் வெளியீடு

000000000000000000000000000000000000

நூல் பற்றிய குறிப்பு :

நூறாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஃப்ரான்ஸ் காஃப்கா ஆஸ்த்திரிய நாட்டு சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர். சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவர். மனிதச் சீரழிவையும், வாழ்வின் கொடூரங்களையும் படம்பிடித்துக் காட்டியவர். அவருடைய படைப்புகளின் தாக்கத்தைப் பல நாவலாசிரியர்களிடம் காணலாம். காப்ரியேல் கார்சியா மார்க்விஸ், “காஃப்காவின் உருமாற்றத்தைப் படித்தது எனக்கு எழுத வேறு வழிகள் இருக்கின்றன என்பதைக் காட்டியது,” என்று குறிப்பிடுகிறார்.

நூலின் பெயர் : உருமாற்றம்

ஆசிரியர் : ஃப்ரான்ஸ் காஃப்கா

தமிழில் : பேரா. ச.வின்சென்ட்

பகுப்பு : சிறுகதைகள்

வெளியீடு : எதிர் வெளியீடு

விலை : 299 இந்திய ரூபாய்

தொடர்பு :  எதிர் வெளியீடு

000000000000000000000000000000000000

நூல் பற்றிய குறிப்பு :

கடப்பது என்பதை ஒரு புள்ளியிலிருந்து தொடங்கி இன்னொரு புள்ளியை அடையும் புறச்செயல் என்னும் தளத்தைத்தாண்டி, எதார்த்தத்தின் அலுப்பைக் கடப்பது, காமத்தின் அழுத்தத்தைக் கடப்பது, கனவில் நீளும் பாதைகளைக் கடப்பது,

நூலின் பெயர் : கடக்க முடியாத இரவு

ஆசிரியர் : காலபைரவன்

பகுப்பு : புதினம்

வெளியீடு : எதிர் வெளியீடு

விலை : 200  இந்திய ரூபாய்

தொடர்பு :  எதிர் வெளியீடு

000000000000000000000000000000000000

நூல் பற்றிய குறிப்பு :

பணியிடப் பிரச்சனைகள் பற்றிய, சமூக, சூழ்நிலைப் பற்றிய ஆழமானப் பார்வை இல்லாது மக்கிப்போகின்ற சமூகத்திலிருந்து வேறுபட்டு, வேர்விட்டுக் கிளம்பும் ஒருத்தியின் கதை.

நூலின் பெயர் : கரும்பலகை

ஆசிரியர் : எஸ்.அர்ஷியா

பகுப்பு : புதினம்

வெளியீடு : எதிர் வெளியீடு

விலை : 180 இந்திய ரூபாய்

தொடர்பு :  எதிர் வெளியீடு

 000000000000000000000000000000000000

நூல் பற்றிய குறிப்பு :

பதினைந்து ஆண்டுகளுக்குமுன் கல்லூரி மலரில் ஸ்மிருதி ஒருகதை எழுதினாள். இறந்துபோன பெண்ணைக் காதலிக்கும் சில ஆண்கள் முதல்முறையாக நேருக்குநேர் சந்தித்துக்கொள்வது பற்றியது அந்தக்கதை. கதையின் தலைப்பு ஸ்மிருதிக்குக் கூட மறந்துவிட்டது, ஆனால் அந்தக்கதையின் மையப்புள்ளி மட்டும் என்நினைவில் பதிந்துவிட்டது. ஒரு பெண்ணுக்குப் பல காதலர்கள் என்ற அந்தக்கதை பற்றி நான் யோசித்துப் பார்ப்பதுண்டு, குலாப் எழுத அதுதான் என்னைத் தூண்டியது.

நூலின் பெயர் : குலாப்

ஆசிரியர் : ஆனிஜைதி

தமிழில் :பிரேம்

பகுப்பு : புதினம்

வெளியீடு : எதிர் வெளியீடு

விலை : 125 இந்திய ரூபாய்

தொடர்பு :  எதிர் வெளியீடு

 

 

(Visited 97 times, 1 visits today)