புற எழுத்துகள்-நடு குழுமம்

நூல் பற்றிய அறிமுகம் :

கடந்த 30 வருடங்களாக இலங்கைத்தீவில் சுதந்திரத் தமிழ் ஈழத்திற்கான ஆயுத விடுதலைப் போராட்டம் நடந்து முடிந்திருக்கும் நிலையில், அந்தப் போராட்டத்தில் பார்த்த,கேட்ட,அறிந்த,நேரடியாகத் தொடர்புபட்ட  முக்கியமான பல விசயங்களை,1983-ம் ஆண்டு காலப் பகுதியை தொடக்கமாக வைத்து இந்த நாவலைப் படைத்திருக்கிறார் ஆசிரியர்.

நூலின் பெயர் :  ஆயுத எழுத்து ( இரண்டாம் பதிப்பு )

ஆசிரியர் :  சாத்திரி

பகுப்பு : நாவல்

வெளியீடு : புலம் பதிப்பகம்

விலை : 350 இந்திய ரூபாய்

தொடர்பு : புலம் பதிப்பகம்

000000000000000000000000000000000000

நூல் பற்றிய அறிமுகம் :

எழுதுவது எனக்கு உற்சாகத்தைத் தருகிறது. எனக்கு வடிகாலாகிறது. எனது திருப்திக்காகவும் எனது மகிழச்சிக்காகவுமே எழுதுகிறேன். அதேவேளை சமூகப் பிரச்சினைகளை என்னாலான சமூக அக்கறையோடு முன்னிறுத்துகிறேன். சலிப்பூட்டாத இலகுநடை எழுத்தையே விரும்புகிறேன். அதி தீவிர இலக்கிய வாசிப்புக்குட்பட்ட கதைகள் என் இலக்கு அல்ல. அவை என்னால் முடியாமலுமிருக்கலாம். எழுத்து வாசகர்களைச் சிந்திக்க வைக்குமானால் என் எழுத்து எனக்கு நிறைவைத்தரும்.

நூலின் பெயர் : கொரோனா வீடு

ஆசிரியர் : மனோ சின்னத்துரை

பகுப்பு : சிறுகதை

வெளியீடு : கருப்பு பிரதிகள்

விலை : 00:00

தொடர்பு : கருப்பு பிரதிகள்

000000000000000000000000000000000000

நூல் பற்றிய அறிமுகம் :

இலங்கை பருத்தித்துறையின் கீழைப் புலோலி கிராமத்தில் பிறந்து , கனடாவுக்குப் புலம் பெயர்ந்து சென்று, அந்நாட்டு சட்டத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்று , மூன்று தசாப்தங்களுக்கு மேலாக கனடாவில் வாழ்ந்து வரும் ராஜாஜி ராஜகோபாலன் எப்படி மணற்காடர் எனும் கவிஞராக உருத்திரிபு அடைகிறார்?

படிம தியானங்கள், உவமை உற்சவங்கள், உருவகச் சிற்பங்கள் என்று அலங்காரங்கள் எதுவும் எனக்கு வேண்டாம் போ என்று உதறித் தள்ளி, எனக்கு வாழ்க்கை தெரியும் அதை வைத்துப் பிழைத்துக் கொள்கிறேன் என்று சொல்கின்றன மணற்காடரின் கவிதைகள்.எளிய தமிழில் தோரணைகள் ஏதுமின்றி இயல்பாகக் கைவீசி நடக்கின்றன இவர் கவிதைகள்.

சுருக்கமாகச் சொல்வதெனில் மணற்காடர் எனும் மூத்த எழுத்தாளரின் இக்கவிதைகள் எந்தவித ஆடம்பரமும் இன்றி எளிமையாகப் பூத்து நுட்பமான கவித்துவ நறுமணத்தைக் காற்றில் விதைக்கும் காட்டுப் பூக்களைப் போல வாசகனை ஆச்சரியப்படுத்துகின்றன.

நூலின் பெயர் : ஒரு சிறு புள்ளின் இறகு

ஆசிரியர் : மணற்காடர் ( ராஜாஜி ராஜகோபாலன் )

பகுப்பு : கவிதை

வெளியீடு : ஓவியா பதிப்பகம்

விலை : 100 இந்திய ரூபாய்

தொடர்பு : ஓவியா பதிப்பகம்

000000000000000000000000000000000000

நூல் பற்றிய அறிமுகம் :

இந்தத் தொகுப்பில் உள்ள அனைத்துக் கதைகளும் வெவ்வேறு கதைக்களங்களின் வாயிலாக காட்டைச் சார்ந்த வாழ்க்கையின் நாம் பார்க்காத பக்கங்களைத் திறந்து காட்டுகிறது. புலிகள் காப்பகம் அமைப்பதாய்ச் சொல்லி பழங்குடி, ஆதிவாசி மக்கள் காட்டில் இருந்து விரட்டப்படுவது, அப்படி விரட்டப்பட்ட மக்களுக்கு செட்டில்மெண்ட் ஏரியா அமைத்து அதற்கு பட்டா கூடக் கொடுக்காமல் நிரந்தரமாகவே அந்த மக்களை காட்டில் இருந்து விரட்டி விட்டு தொழில்துறை நிறுவனங்களுக்கு காட்டைத் திறந்து விடும் அரசாங்கத்தின் செயல்பாடுகள், ஆபத்து மிக்க சுரங்கங்களில் சுரண்டப்படும் எளிய மக்களின் உழைப்பு, யானைகளின் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்படுவதால் ஊருக்குள் புகும் யானைகள், மலைவாழ் மக்களுக்கு இன்றளவும் போய்ச் சேராத அடிப்படைக் கல்வி, அதையும் மீறி அந்த மக்களின்பால் உண்மையான கரிசனத்துடன் இருக்கும் சில ஆசிரியர்கள் என காட்டைச் சார்ந்த வாழ்க்கையின் அத்தனை பரிணாமங்களையும், இன்மைகளையும் மிகத் துல்லியமாக தனது கதைகளின் வழியாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் பிரசாந்த்.

மு. குணசேகரன்

நூலின் பெயர் : காடர்

ஆசிரியர் : பிரசாந்த் வே

பகுப்பு : சிறுகதை

தொடர்பு : எதிர்

விலை : 130 இந்திய ரூபா

தொடர்பு : எதிர் வெளியீடு

000000000000000000000000000000000000

நூல் பற்றிய அறிமுகம் :

1947 ஆகஸ்டு 15 அன்று சரியாக நள்ளிரவில் – இந்தியாவின் சுதந்திரமடைந்த துல்லியமான கணத்தில் – பிறந்த குழந்தையான சலீம் சினாய் பத்திரிகைகளால் கொண்டாடப்படுகிறான், பிரதமர் நேருவினால் வரவேற்கப்படுகிறான். ஆனால் பிறப்பினால் விளைந்த இந்த ஒருங்கிணைவு, சலீம் ஏற்கத் தயாராயில்லாத பல விளைவுகளைக் கொண்டிருக்கிறது: அவனுடைய தொலைவிலுணரும் சக்தி ஆயிரம் ‘நள்ளிரவின் குழந்தைகளோடு’ தொடர்புறுத்துகிறது. அவர்கள் எல்லோருமே இந்தியா சுதந்திரமடைந்த முதல் மணியில் பிறந்தவர்கள். மற்றவர்களால் உணரஇயலாத அபாயங்களை மோப்பத்தினால் உணரும் விசித்திரமான முகர்திறனையும் அளிக்கிறது. தன் தேசத்தோடு பிரிக்கவியலாத தொடர்பினைக் கொண்ட சலீமின் தன்வரலாறு, நவீன இந்தியா தனது மிகச் சாத்தியமற்ற, மிகப் புகழ்வாளிணிந்த பாதையில் எதிர்கொண்ட பேரிடர்களையும் வெற்றிகளையும் உள்ளடக்கும் சுழற்காற்று.

நூலின் பெயர் : நள்ளிரவின் குழந்தைகள்

ஆசிரியர் : சல்மான் ருஷ்தீ – தமிழில்: பூர்ணச்சந்திரன்

பகுப்பு :  புதினம்

வெளியீடு : எதிர் வெளியீடு

விலை : 550 இந்திய ரூபா

தொடர்பு : எதிர் வெளியீடு

(Visited 76 times, 1 visits today)