யார் மீட்பார்-கவிதை-ப.பார்தீ

கலைக்கூடம்-ஓவியம்-புகழேந்தி

வழமைபோல் நாய்கள் ஊளையிட்டுக்கொண்டேஇருந்தன
சாவுக்கருகில் நாங்கள்
இருப்பை உணர்த்திக்கொள்ள
அணைத்துக்கொண்டோம்
எனக்கு நீயும்
உனக்கு நானும்
முன்னெப்போதுமில்லாதவாறு
உயிர்களின் பயணம்
காற்றையும் கறுப்பாக்கியிருந்தது
புழுதியடங்கி
செம்மண் சேறாகியிருந்தது
குருதியில்
நீ சொல்கிறாய்
செத்தால் தெரியப்போவதில்லையே
இதெல்லாமென்று
இருவரும் அழமுயற்சிசெய்தோம்
முடியாமல்
அணைப்பை இறுக்கிக் கொண்டோம்
உன் அணைப்பு வழுகியது
இழுத்துப்பிடித்தேன்
இரவை அறுத்துவந்த காலன்
உன்னையுமந்தான் அறுத்தான்
அழுத்துகொண்டே உன்னை அந்தரத்தில் விட்டுவந்தேன்
நான்
அகதியாய் சிங்களத்தின் கையில்
மீண்டும்
யார் மீட்பார் உன்னைப்போல்
என்னை?

00000000000000000000

பொதுக்கழிப்பறை

பொதுக்கழிப்பறை என்ற

இடத்தில்

இந்து

முஸ்லீம்

கிறிஸ்தவர்

என்று

எல்லோரும்

வருசையாக நின்றார்கள்

ஒண்டுக்கோ

இரண்டுக்கோ

ஒருவன் பின்

மற்றயவன் போகவேண்டும் என்ற நிபந்தனையில்

ஐம்பது சென்டிம் அறவிடப்படுக்கொண்டிருந்தது

திடீர் என்று பொறுப்பாளர்

சேவை சில நிமிடம் நிறுத்தம்

என்ற

பதாதை வைத்தார்

நின்றவர்கள் திகைத்துப்போனார்கள்

அவரவர் தெய்வங்களை அழைத்தார்கள்

ஒருவன் வந்தான்

அடைப்பெடுத்தான்

சேவை தொடர்ந்தது

அனைவரும்

ஆண்டாவா காப்பாற்றி விட்டாய்

எங்கள் மானத்தை

என்றார்கள்

அடைப்பெடுத்தவன்

இதுவும் கடந்துபோகும் என்று

அடுத்த கழிப்பறைக்கு கடவுளானான்.

ப.பார்தீ – பிரான்ஸ்

 

(Visited 50 times, 1 visits today)