பொழிவு-சிறுகதை தொகுதி -நூல் விமர்சனம்

 

இதழ் 02 ஆடி ஆவணி புரட்டாசி 2016 - வாசிக சாலைஇச் சிறுகதை திரு. சட்டநாதன் எழுதிய சிறுகதைத் தொகுப்பான “பொழிவு” என்ற தொகுப்பிலிருந்து எடுக்கப்பபட்டது. இச் சிறுகதையானது, பொருளாதாரப் பற்றாக் குறையோடு வாழும் ஓர் இளைஞனும்,ஒர் இளம் யுவதியினதும் காதலோடு நகர்கின்றது. ரமணன், பிரணவி…ஆமாம் இவர்கள்தான் இக்கதையின் காதலர்கள்.

ரமணன் ,”தாரணி “ரெக்ஸ்ரைலில் வேலைபார்கின்றான். பிரணவி , “சிவாஸ்” மெடிக்கலில் வேலை பார்க்கின்றாள். இருவரும் வேலைக்கும், வீட்டுக்கும் பயணிக்கும் பஸ்சில் தினமும் சந்திக்கின்றார்கள். ஒருவர் பால் ஒருவரில் ஈர்ப்பு ஏற்பட்டு அது காதலாகின்றது. போதுமான வருமானம் இன்றி, அதுவும் வாடகை வீட்டில் வாழும் ஒரு இளைஞன்..அவனைச்சார்ந்தே அவன் குடும்பம் வாழுகின்றது எனும் நிலையில் அவன் ,தன் காதலுக்கும் பற்றாக் குறைக்கும் நடுவில் திண்டாடுவதை ஆசிரியர் மிக அழகாகத் தந்திருக்கின்றார்.

அதே போலவே கதையின் நாயகி பிரணவி…சொந்த வீட்டில் இருந்தாலும், பொறுப்பற்ற குடிகாரத் தந்தை, வீட்டில்மூத்தவள் எனும்தலையாய சுமையுடன் பொருளாதாரப் பற்றாக்குறை, இரு தங்கைகளின் படிப்பு…அவர்கள் எல்லோரதும் வாழ்வாதாரம் என இறக்கி வைக்க முடியாப் பாரத்துடன் தொடரும் அவள் வாழ்வில் ரமணனுடனான காதல் அச்சுமைகளினூடே அவளுள் ஒரு சுகத்தையும் இதத்தையும் மிளிரச் செய்கின்றது.

இச் சுமைகளோடு …வரும்,போகும் பயணங்களின் போதும், சுப்பிரமணியம் பூங்கா என இவர்கள் சந்திப்புத் தொடர்கின்றது. சந்திக்கும் பொழுதுகளில் இருவரும் தமது குடும்ப நிலமைகளையும், இயலாமைகளையும் மனம் விட்டுப் பேசுகின்றார்கள். அது தரும் சலிப்பையும் எண்ணி சிலாகிக்கின்றார்கள். அவர்கள் தங்கள் இருவரின் திருமணத்தை ஆலோசிக்கும் வேளையெல்லாம் இந்தப்பணமெனும் சாபம் அவர்களை ,வாழ்க்கையின் நம்பிக்யின்மையையும்..ஏக்கத்தையும் விலகா மூட்டமாக மூடித் தவிக்க வைக்கின்து. ஒரு அரைப்பவுணிலாவது தாலி செய்து, கட்டிக் கெளரவமாக வாழவேண்டும் என்று ஏங்குவதும், அவளின் ஏழும்….அவனகு எட்டும் சேர்த்து ஒரு பதின்னான்கு,பதினைந்து வரும் எனக் கூட்டிக் கழித்துப்பார்ப்துவும்….அட “இந்தத் தரித்திரங்களுக் அப்படியும் நடக்குமா “என சலிப்புக் கொள்வதும் நெஞ்சில்ப் பதியும் இடங்கள். இந்த இல்லாமயின் இயலாமையும், சலிப்புமே இவர்களை திருமணம் எனும் சம்பிரதாய செலவு இன்றி சேர்ந்து வாழத் தூண்டுகின்றது. அவர்கள் சந்தித்த கணமே தாலி,கூறை,மேளம் என்று பேசிப பேசிச் சலித்து….இவையெல்லாம் வேண்டுமா,வேண்டாமா என்று போராடி வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்தால்த்தான் எனும் ஆதங்கம்…..,ஒவ்வோரு ஞாயிறும் ரமணனும் ,பிரணவியும் பிரணவி வீட்டில் சேர்ந்து வாழ்வதாகக் கதை முடிகின்றது.

இக்கதையின் ஆரப்பத்தில் பிரணவன் கேட்கின்றான் ஏன் பேசவில்லை எனும் போது..” பத்து நாள்ப் பழக்கத்தில் பார்த்த முகத்துடன் எந்த யாழ்பாணத்துப் பெட்டை கதைப்பாள்” என நினைக்கும் பிரணவி..எப்படித் திருமணம் செய்யாது..தனது வீட்டில் சேர்ந்திருக்க அவனை அழைப்பாள்…? அது என்ன யாழ்ப்பாணப் பெண் மட்டுந்தான் அப்படி கவனமாக இரும்பாளோ..? இது ஆசியரின் குழப்பம். அடுத்து அவன் அவளின் வீட்டிற்குச் செல்லும் போது…அவளின் தந்தை கையில்க் கிளாசுடன் வருவது போல் எழுதியிருப்பது கொஞ்சம் ஓவர். பெருங்குடிகாரன் என்றால் கையில் கிளாசும் கையுமாகத்தான் இருப்பார் என்றில்லையே. அவளின் இல்லத்தில் பெற்றோர், தங்கைகள் இருக்கும் போதே அவர்கள் அறைக்குள் சென்று சல்லாபிப்பது போல் எழுதியது…என்னவோ ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தாலி, கூறை, யாழ்ப்பாணத்துப்பெட்டை இப்படியெல்லாம் புரட்டிவிட்டு……இப்படி எழுதியது….இங்கிதமாக இல்லை. அடுத்து…ஆசிரயரின் வர்ணிப்பு. இத்தொகுப்பில் வரும் இதர கதைகளிலும் வர்ணிப்புகள் ரசிக்கும்படியாக இல்லை. “சின்னச் செப்பு வாய், மணிக்குரல்,நேர்கோட்டு மூக்கு, மூக்கிற்கும் உதட்டிற்குமிடையில் சிறு பள்ளம், உதட்டில் மச்சம்” இப்படியான வர்ணனைகள்…ஆசிரியர் அக்கால வர்ணனைகளிலிருந்து இன்னும் மீளவில்லையோ என்பது போலுள்ளது. இச் சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகள் எல்லாமே..இக்கதையுட்பட ,மிக மெதுவாகவே நகர்வதால் விறுவிறுப்புக் குறைந்து வாசிப்பின் சுவாரஸ்யம் மந்த நிலையைத் தொடுகின்றது.

நவரட்ணராணி –பெரிய பிரித்தானியா

நவரட்ணராணி

(Visited 150 times, 1 visits today)