ஏழாற்றுக்கடலில்-கவிதை-சுபாஷ்

ஏழாற்றுக்கடலில்

ஏழாற்றுக்கடலில் ஓடத்திலே ஓரு பனையளவுக்கு உயரும் அலை
மேலே
ஏலேலோ ஏலேலோ ஏலேலோ
கூப்பிட்டதொலைவில் கோபுர வெளிச்சம் அழுகுரல்
ஆற்றாதழுதன்னை அழுத்குரல் ஏழாற்றில் அலைகிறது
ஏலேலோ ஏலேலோ ஏலேலோ
ஏழாற்றுக்கடலில் ஏழாறும் பிரியும்
புள்ளியில்
உயிரை வைத்து ஊரை்உறவை உலகை நினைத்து
ஏலேலோ ஏலேலோ ஏலேலோ
எழாற்றைக் கடக்க எத்தனை மணித்துளிகள்
வேணும்
எழாற்றைக்
இனி கடந்தென்ன
ஏலேலோ ஏலேலோ ஏலேலோ
முப்பது கடல்மைல் தொலைவை முக்குளித்து நீந்தி எரிந்து
ஒளிர்ந்து
எத்தனை தரம் கடந்தீர்
ஏழாற்றுக்கடலில் நீர் விளையாட்டு
நெஞ்சு பொறுக்காதவன் நெருப்பை மூட்டினான்
குமுறும் குமுதினியின் குரலும் கேட்கிறதே
ஏலேலோ ஏலேலோ ஏலேலோ
குழந்தைகள் அலைகளுக்குள் மறைந்து திரிந்தனர்
அன்பு இரத்தம் சிந்திய கடல்
அப்பன் தோழில்
பிணம் சுமந்து சுமந்து நடந்த கடல்
ஒரு மீன் கூட இல்லை அந்தக் கடலில்
எத்தனை குண்டுகளை எப்படி எப்
படி எப்படி போட்டுத் தொலைச்சிருப்ப
ஏலேலோ ஏலேலோ்ஏலேலோ
துடுப்பாய் கைகள்
படகாய் உடல்
ஏலேலோ…

0000000000000000000000

காலதேவா என்ன செய்து கொண்டிருக்கிறாய்
உனது பழைய பாடல்களில் ஒழுகும் பிரிவை ஆற்றங்கரைகளின்
கீழ் படர்ந்த புல்வெளி மீட்டுகிறது
காலச்சுவட்டொலி
நீ எங்கெல்லாம் உனது கைவலிமையை வடியவிட்டிருக்கிறாய்
கலைத்தேவன் நீயடா
விண்ணிலும் மண்ணிலும் விழுதுகள் விட்டிறங்கிய்
ஒரு கலைத்தோப்பென சுற்றி வருகிறதுன் நினைவுகள்
கண்ணீர் ஆறாக பாய்ந்தது
எப்பொழுதும் நீ பேர்மோனத்துள் உறைந்திருப்பாய்
பாசிபடந்த படிக்கற்களில் உனது தொன்மையானகவிதையை வாசிக்கும் பொழுது
நாமென்ன கிழித்தோம்
பிறப்பு இறப்பு எனும் சக்கரத்தை சுற்றி வருவதற்கிடையில்
இறந்து இறந்து இறந்து இறந்து இறந்து
பிறந்த கதையை நீ அறிவாயாடா
காலதேவா எல்லோருக்குமாய் புதிய மானுட சங்கீதத்தை
எங்கனம் எழுதிச் செல்வாய்
புரட்டி புரட்டி உழுது உழுது உன் அயல் அதோ ஓளிவிதைப்போன்
அவன் வரைந்த ஒரு பூந்தோப்பில்
ஏட்டிக்கு போட்டியாக இசைவிழா
தனித்திருந்த்கணமதில் நீ தனித்தலையும் சுவட்டின் ஒலி
காலதேவா வாடா நிறைய்நேரம் உன்னைப்பிரியாதிருந்து
பேசுவம்
என்மீதும் ஏற்றப்பட்ட அனைத்து அடையாளங்களையும்
நீ காலாவதியாக்கிவிடு
களைத்துப் போனமடா
பிணக்கறு பகைகொல் பேதமற நட
இன்று இந்த மன்றாட்டை பரிவுடன் ஏற்றுக்கொள
காலதேவா வாழ்கைப்படகில் துடுப்பு வலித்துக்கொண்டு நீ
அருகில் துடித்துக்கொண்டுடிருக்கிறாய் நீ பெண்ணா ஆணா அலியா
காலா காலி கால

000000000000000000

அரைத்த மாவை அரைப்பது போலவே
அனைத்து நிகழ்வுகளும்
புதிது காண்
இன்று எனக்காகவேணும் ஒரு அன்பு சுடரும் சொல்லை எந்த
மொழியிலேனும் உச்சரித்துத் தொலை
சோறும் கறியுமா நெடுக
புதிதாக் ஏதேனும்
மாற்றமில்லாத
உப்புச் சப்பு இல்லாத கதையை விட்டிற்று
புதுக்கதை புனைவாயா
அந்த காற்றும் மரமும் போல உறவாடுதற்கும்
கற்றுக்கொள்ள
புலன்களை விரி
பறவைகளின் பாடலை மொழிபெயர்
கண்களில் ஞானச்சுடர் ஏற்று
போற போக்கைப் பார்
மொக்கையாக இருந்து என்ன கிழிக்கிற
துளிர்
வசந்த காலங்கள் குழந்தைகள் ஆடிக் களித்த பந்து போலும்
ஆங்கோர் மூலையில்
உடலை அணிகள் கொண்டு அறை மீண்டும்
கல் நிறைந்த பாதையில் நட
அரைத்த மாவை அரைப்பது போன்ற அபத்தம்
பக்கங்களை புரட்டி புரட்டி பல்லாயிரம் விளக்கம்
புதிய காலை ஒரு புதிய பக்கம்
திற அகத்தையும்
அரை படும் அரவம்
சாபத்தை நீக்கி விடு
மன்றாட்டு உனக்கு பரமதேவா

சுபாஷ்- பிரான்ஸ்

சுபாஷ்

(Visited 59 times, 1 visits today)