சட்டென்று மறைய மாட்டோம்!-கவிதை-அ.அபிராமி

சட்டென்று மறைய மாட்டோம்!

அ.அபிராமி

ஈழத் தாயின் மடி தழை என் தாயின்
கருவறையில் நான் துயில் கொண்டபோது
தாயவனின் அணைப்பில்
நான் சதைப் பிண்டமாய் கிடந்தேன் உயிரோடு

உருப்பெற்று நான் உலகை கண்டபோது
என் உடலை மாறி உணர்வே ஓடியது
நான் புவிப்பூவின் மகரந்தமாய் சிறகெடுத்து
பறக்க எத்தனித்தேன் ….

பாழாய் போன சமுதாயம் பால் என்ற
நீட்டிக்கொண்டு என் சிறகொடித்து தள்ளியது
என் உடலோடு ஒட்டாமல் ஓடிய என்
“ஆண்மையை” அடையாளங்காட்டி என்னை
புறமுதுகிட்டு குறி சுட்டனர்

ஒ….வேதனை! வேதனை! சோதனை
என் மனம் தூரக் கிடந்த பெண்மையைத் துரத்தி
பிடிக்க பாய்ந்தது ! சமுதாயத்தின் ஏளனப்
பார்வை பாய்ந்த என்னை பட்டென்று வீழ்த்தி
மண்டியிட வைத்து சிக்கித் தவித்து _
சின்னா பின்னமானது ! என் வாழ்வு !

ஆகாயம் பூமியில் ஆதவனும் திங்களும்
ஆண் பெண் என்றால்
எங்கள் கொடிய பூமியில் நாம்
வானவில்லாய் முளைத்தோம்!
சட்டென்று மறைய மாட்டோம்!
நிலைத்து நிற்கும் எம் ஆசை அடையாளத்துடன்

அ.அபிராமி-இலங்கை

(Visited 110 times, 1 visits today)