புற எழுத்துகள் இதழ் 33 ஆவணி 2020-நடு குழுமம்

நூல் பற்றிய குறிப்பு :

போரில் ஈடுபாடு காட்டாத, போரில் போரிடும் இரு தரப்புகளுக்கும் அப்பால் உள்ள மக்களின் துயரங்களை இக்கதைகள் சொல்லுகின்றன. த.அகிலன் அவர்கள் ஈழப் போரின் போது பிறந்து வளர்ந்ததால், அவர் சொல்லும் நெருங்கிய உறவுகள், ஊர்க்காரர்கள், பள்ளி நண்பர்கள், இன்ன பிறரின் துயரங்கள், அலைகழிப்புகள், சித்ரவதைகள், ஊர்ஊராய் அலைந்தது, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அகதிகளானது, கடைசியில் மரணம் … நம்மை அதிரவைக்கிறது. இந்த மரணங்களின் வாசனை போர் நின்ற சனங்களின் கதை போரின் கொடூரத்தை நமக்கு உணர்த்துகிறது.

நூலின் பெயர் : மரணத்தின் வாசனை

ஆசிரியர் : த.அகிலன்

பகுப்பு : சிறுகதைகள்

வெளியீடு : வடலி

விலை : 125 இந்திய ரூபாய்

தொடர்பு :  வடலி

0000000000000000000000000000000

நூல் பற்றிய குறிப்பு :

அதிகாரத்தோடும் அரசியலோடும் நேரடித் தொடர்பு கொண்டிராதபோதும் ஒரு சமூகத்தினிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் தினசரி வாழ்க்கையினூடாக நவீனத்தைப் புகுத்துவதிலும்  இந்தப் பிரபஞ்சத்துக்கான பொதுவான உணர்வுகளை உருவாக்குவதிலும் கலைக்குப் பிரதான இடம் உண்டு. தற்காலச்சூழலில் அழகியல் தொடங்கி அமைதி வரை சகல துறைகளிலும் கலையின் பிரதிபலிப்புகளை நம்மால் இனங்காண முடிகிறது. குறிப்பாக முன்னெப்போதையும் விட அரசியலை கலையின் வழியே உரக்கப் பேசும் காலம் இது. கலைக்கென தனிப்பட்ட அரசியல் ஏதும் கிடையாது. மாறாக அது உலகம் சார்ந்த தனக்கான தனித்த பார்வையைக் கொண்டிருக்கிறது. அதையே நாம் அரசியல் என்றழைப்போமெனில் நியாயம் அன்பு அறம் மற்றும் மனிதநேயம் ஆகியவற்றை வலியுறுத்துவதாக  அது  இருக்கும். வெவ்வேறு தேசங்களின் கதைகளாக இருந்தாலும் அதிகாரத்தின் உக்கிரத்தை அது மனிதர்களிடையே உண்டாக்கும் துயரங்களை அதற்கு பதிலீடாக இருந்திருக்கக்கூடிய அன்பை விரிவாகப் பேசும் கதைகள் இந்தத் தொகுப்பிலுள்ளன.

நூலின் பெயர் : துண்டிக்கபட்ட தலையின் கதை

ஆசிரியர் : கார்திகைப் பாண்டியன்

பகுப்பு : உலக சிறுகதைகள் ( மொழிபெயர்ப்பு )

வெளியீடு : எதிர் பதிப்பகம்

விலை : 180 இந்திய ரூபாய்

தொடர்பு : எதிர் பதிப்பகம்

0000000000000000000000000000000

நூல் பற்றிய குறிப்பு :

ஒன்றிலிருந்து விடுபடுவதற்காகப் பிரிதொன்றை கெட்டியாகப் பிடித்துக்கொள்கிறோம். இதுவரை புனைவில் அரிதாகக் கையாளப்பட்ட பங்குச் சந்தை- இடபத்தின் களமாக இருப்பது சுவாரசியம். நுட்பமான யதார்த்தப் பதிவு. உத்திரவாதங்களற்ற இன்றைய காலகட்டத்தில் பணம் தரும் பாதுகாப்பானது உடைத்து சொல்லப் பட்டிருக்கிறது. எந்தப் பாத்திரத்திற்குள்ளும் புகுந்துகொண்டு தன்னையிழக்கத் தயாரில்லை-நாவலின் இளம் நாயகி.பால்சொம்பில் தலைநுழைத்த பூனையாகி விடுவோமோ என்கிற அச்சத்தில் சளைக்காது போராடுகிறாள். போலச் செய்வதில் விருப்பமற்ற அவள், வாழ்க்கையைத் தன் வசத்தில் வாழ விழைகிறாள். அவ்வளவே.

தேடலானது தரிசனத்திற்கேயன்றி உடமைப் படுத்துவதற்கில்லை. ஒன்றைக் கண்டடைந்த மனமானது, அடுத்ததைத் தேடித் தவிக்கிறது. அது கிடைத்ததும் – மற்றொன்று. இந்த முடிவிலாத் தேடலே வாழ்வின் உயிர். அழகிய பெங்களூரு நகரப் பின்னணியில்-இலகுவான தருணங்களிலும் மன அழுத்தங்களிலும் ரசமான நிகழ்வுகளிலும் புகுந்து தேடிக்கொண்டே இருக்கிறார், கண்மணி.

நூலின் பெயர் : இடபம்

ஆசிரியர் : பா. கண்மணி

பகுப்பு : புதினம்

வெளியீடு : எதிர் பதிப்பகம்

விலை : 220 இந்திய ரூபாய்

தொடர்பு : எதிர் பதிப்பகம்

0000000000000000000000000000000

நூல் பற்றிய குறிப்பு :

அந்த ஊர் இதற்கு முன்னால் இப்படி இருந்ததே இல்லை என்று கூறிவிட முடியாது என்றாலும் இதற்கான வேர்கள் அதன் மண்ணுக்குள்ளே புதைந்திருந்தன என்பதை யாரேனும் மறுக்க முடியுமா? இப்போது அவை ஆங்காங்கே பூதங்கள் போல் விஸ்வரூபம் எடுத்திருப்பதைத் தான் மறுக்க முடியுமா? எப்படிப் புரிந்து  கொள்வது இதையெல்லாம்? நுழைய முடியாத அடர்ந்த முள் காடு போலவும், இருண்ட தேசம் போலவும், இதில் தனித்தீவுகளாக யாருமே இல்லை என்பது போலவும் மிரட்சியை உண்டு பண்ணுகிறது.

நூலின் பெயர் : உயிர்

ஆசிரியர் : ப. சிவகாமி

பகுப்பு : புதினம்

வெளியீடு : அணங்கு பதிப்பகம்

விலை : 300 இந்திய ரூபாய்

தொடர்பு : அணங்கு பதிப்பகம்

0000000000000000000000000000000

நூல் பற்றிய குறிப்பு :

கவின்மலரின் கதைகள் புனைவுகளாக, அவர் பார்வையைத் துல்லியமாக வெளிப்படுத்துகின்றன. இவ்வளவு விரிந்த பூமிப் பந்தில் மனிதர்களின் இருப்பு, குறிப்பாகப் பெண்களின் இருப்பு ஏன் இத்தனை நெருக்குதலுக்கும், விளிம்பில் நிறுத்தப்படுவதற்கும் ஆன காரணம் பற்றிய கேள்விகள், அவர் கதைகள் எனலாம். இந்தியா போன்ற, பழம்பெரும் ஆனால், புதிய வாழ்க்கை முறையை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று ஒட்டாரம் பிடிக்கிற தேசத்துக்குள் மரபு என்கிற, வரையறுக்கப்பட்ட ஒழுக்கம் மற்றும் நடைமுறை மீறுகிற எவரையும் சகித்துக் கொள்ளாத மனோபாவம் பற்றிய கேள்விகளே இவர் கதைகளில் அடித்தளம் எனலாம்.

பிரபஞ்சன்

நூலின் பெயர் : நீளும் கனவு

ஆசிரியர் : கவின் மலர்

பகுப்பு : சிறுகதைகள்

வெளியீடு : எதிர் பதிப்பகம்

 விலை : 120 இந்திய ரூபாய்

தொடர்பு : எதிர் பதிப்பகம்

 

 

(Visited 110 times, 1 visits today)