போரில் துளிர்த்த காதல்-மொழிபெயர்ப்புக் கவிதை- லக்ஷான்த அதுகோரல-தமிழில்: இரா

போரில் துளிர்த்த காதல்

உண்மை ராஜிகா……..
எனக்கு எதுவும் விளங்காமளில்லை,
இருந்தும்
விதியின் பெருஞ் சூறாவளியில்
நாம் அல்லலுற்றோம்,
காதல் வலையின் வளைவுகளில்
இருகினோம்,,,

அந்நாட்களில் ஏதோ மயக்கம்,
மாய வலைக்குள் சிக்கினோம்…
ஆறு மாதமாகியும்
நான் வீடு செல்லவில்லை…!

நீ என் விடுமுறை..!

குளிர்ந்த பனங் கள்ளை போன்று
இதயத்துள் நுழைந்து
நீ என்னை சூடேற்றினாய்,,,

நடந்து திரிந்த கிரவல் பாதைகள்,
தங்கியிருந்த சிறு விடுதிகள்,
தொலைதூர மேகங்களாய்
மறைந்து செல்கிறது,,,,,

ஆமாம்,
ஜெகன்கள் சுடாததும்
உன்னால் தான்…..!

இருந்தாலும்,
இலங்கை சுழன்றது….
வடக்கு கிழக்காகி-கிழக்கு தெற்காகி
கொழும்பின் வயிறு
உலகத்தின் பக்கமாய் திரும்பியுள்ளது…

போரில் துளிர்த்த காதல்,
போரின் பின்
பெரு யுத்தமடி,,,,,ராஜிகா

உன்னிடம் சொல்வதற்கென்ன
பிரச்சனைகள் மலையாய்
என் முன் நின்றது,,,,,

அப்பாவின் மருந்துகளுக்கு
காணி,விட்டை விற்றேன்,
அம்மாவும்,தங்கையும் பட்டினியில்,,,

கண்ணீரையும்,துக்கத்தையும்,
கூடவே வயிற்றையும
சுமந்தபடி சந்திமா,
மச்சான் தான்
எனக்கு சிறுநீரகம் கொடுத்தான்,,,!

இதனால்-இங்கே
வாழ்க்கையில் சிக்குண்டு நிற்கிறேன்,,,

உன்னோடு பேசிக்கொணடிருக்க
நேரமில்லை,
உன் கன்னத்தையும்,உதடுகளையும்
கனவுகளில் முத்தமிடுகிறேன்,,,
கொழும்பு பஸ் தரிப்பிடம்
செல்லும் போதெல்லாம்,
நினைவுகளில் வந்து போகிறது
யாழ்ப்பாணம்,,,,

தினந்தோறும்
நினைவுகள் வெடித்தபடி,
பயமாகவிருக்கிறது கூடவே வேதனையும்,,,
நினைவுகள்
கிரணைட் போன்றது………ராஜிகா…!

சிங்கள மூலம்: லக்ஷான்த அதுகோரல
தமிழில்: இரா

(Visited 123 times, 1 visits today)