சொல் ஓவியம்-தாரணி ஜானகிராமன்

தாரணி ஜானகிராமன் பற்றிய ஒரு சிறு குறிப்பு: 

தாரணி ஜானகிராமன்யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் History of Art துறையில் இளம்கலைமானி படித்து விட்டு தற்பொழுது ஆசிரியராக கடமையாற்றி வருகின்றேன். சிறு பாராயத்திலிருந்தே ஓவியத்துறையில் மிகுந்த ஆர்வமுள்ளவள் நான். என்னுடைய பிரதான பொழுதுபோக்கு அம்சமாகவும் ஓவியம் வரைதல் உள்ளது. பல வித மனித உணர்வுகளை சிறந்த முறையில் வெளிப்படுத்தும் ஊடகமாக ஓவியங்களுள்ளன. எனது மகிழ்ச்சியான
வேதனையான தருணங்களில் ஓவியம் வரைதல் ஓவியங்களை இரசித்தல் போன்றவற்றிலேயே என்னை ஈடுபடுத்திக் கொள்கின்றேன்.

தாரணி ஜானகிராமன்-இலங்கை

0000000000000000000000000000

சொல் ஓவியம் 1

தாரணி ஜானகிராமன்

மனத்தின் செய்கைகள் குழந்தைக்கு ஒப்பானது , இன்றை சூழலில் மன அழுத்தத்தை வெல்வதற்கு பட்டாம் பூச்சியைத்திரத்தும் குழந்தைபோல மாறுவதே உகந்த வழி.

0000000000000000000000000000

சொல் ஓவியம் 2

தாரணி ஜானகிராமன்

தற்செயலான விபத்துக்கள் எப்போதும் நிரந்தர வடுக்களையே விட்டுச் செல்கின்றது. மேலும் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அபிவிருத்தியடைந்த நாடுகளில் அதிகரித்து வருகின்றன. உயிரைப்பறிக்கும் கோர விபத்துக்கள் தடுக்கப்பட வேண்டியவை.

0000000000000000000000000000

சொல் ஓவியம் 3

தாரணி ஜானகிராமன்

நவீன விளையாட்டுக்கள் ஒவ்வொரு நபரையும் தன்னகத்தே அடிமைப்படுத்துவதே ஒரேயொரு கொள்கையாகக் கொண்டுள்ளது. இது தனியுரிமைக் கோட்பாட்டின் வளர்ச்சியுடன் ஒன்றுபட்டுகிறது. பாரம்பரிய விளையாட்டுக்கள் பாராட்டுக்குரியவை. அவை தனிமனிதனினைச் சமூகத்துடன் ஒன்றினையச் செய்யும் முயற்சியைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

0000000000000000000000000000

சொல் ஓவியம் 4

தாரணி ஜானகிராமன்

வளச்சியடைறது வரும் சமூகத்திலும் கல்யாணம் சீதனம் பெண்களின் சுதந்திரத்திற்கு முட்டு கட்டையாகவே உள்ளது.

0000000000000000000000000000

சொல் ஓவியம் 5

தாரணி ஜானகிராமன்

பயணங்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் அறிவுத்தேடலையும் பலவித அனுபவங்களையும் அள்ளி வழங்குகிறது. அவை மனிதனின் சிந்தையில் நல்ல விளைவு தரக்கூடிய மாற்றங்களை ஏற்படுத்தி பட்டை திட்டுகிறது.

 

(Visited 224 times, 1 visits today)