ஆரோகணம்-கவிதை-டோனி ப்ரஸ்லர்

ஆரோகணம்

டோனி ப்ரஸ்லர்
சமித்திரா ஸ்ரீரங்கநாதன்

எப்பொருள் நுரையாடுமாடும்
விரலில் நூலருந்த
கூர்நிண மழுவட்டையின் துச்சிக்கும் முயங்கியல்பின்னிய
சொல்லிடை பறப்போமென கூட்டிலிருந்து வெளியும் ஆகாயப்பனையும் அணையாய் திராணிக்குழியது
முன்சுனை ஆப்பிளின்
கத்திபடும் தன் வசந்தமதை
அநாதரவாக புதைந்த பறவைகளின் தலைமேலாய் கொலை வாங்கிய பிஞ்சு
மச்சபறவைகள் இல்லாத வீட்டில்
இன்னொருமுறை
பாழ் தொனி
வாடையும்
பசைமண்
இழைநீவும்
காற்றோடு கலந்த
சுருளுரு கத்தியின் மஞ்சள்
காலம் அகாலமாக

000000000000000000000000000

ஓயா மாரி

எதிர் நிற்கும் எவரும் கலைவதற்கில்லை
இருந்தும் கனவை மீட்டது போல் கலைந்து விழுகிற
நதி தீர செரிக்கும்
நினைவை ததும்பிய ஒலியை இசைக்க செய்வதுமான
புனைவின் அலைவுறு வாலால் இன்னொரு கடலை கடைந்தால் உள்ளெழுவோர்க்கும் பிறகும் கரை நிமித்தம் மீந்து விக்கும்
அலகிலதில் மூவேறு
யோசனைக்குள் பலவாகி
வார்ப்பின்னல்
அணங்கும் விளிம்விடாத விசும்பின் பொய்மான் சரட்டும் கவிதையை எழுதுவது

000000000000000000000000000

பாபேல்

பிம்பங்களின் அலைச்சலென
காற்றின் கோடுகள் காணாத இலையில் கொலைவாளுடன் உறங்குகிறது நிழல். இன்மையும் இருப்பின் சகல காரணங்களை எழுப்புவதால் வெக்கையில் ஊற்றெடுக்கிற தன்னிலையில் விரிகிற பிரபஞ்சத்தின் இருளும் ஒளியும் வேறு வேறல்ல. அவை அறிந்ததுமில்லாத கண்டதுமில்லாத வாழ் தோற்றத்திற்கு முந்தைய சூல் வெற்றிடம். ஆம் பாலையிலே பிறக்கிறது சுனை.

டோனி ப்ரஸ்லர்-இந்தியா

டோனி ப்ரஸ்லர்

(Visited 149 times, 1 visits today)
 
டோனி ப்ரஸ்லர்

நியான்(NEON)-கவிதை-டோனி ப்ரஸ்லர்( அறிமுகம் )

நியான்(NEON) நுதல் சுனை கனியும் அலர்களுக்கு புத்தியென்பது ப்ரியம் பால்மடி நனவாய் காம்பில் சுளை கேட்ட உவப்பின் புத்தியென்ன புதிது துகள்களா புதிது புத்தியென்றால் புத்தனுமாவாய் அலரே அலரும் புதிதே […]