நியான்(NEON)-கவிதை-டோனி ப்ரஸ்லர்( அறிமுகம் )

நியான்(NEON)

டோனி ப்ரஸ்லர்

நுதல் சுனை கனியும்
அலர்களுக்கு
புத்தியென்பது
ப்ரியம்

பால்மடி நனவாய்
காம்பில் சுளை கேட்ட
உவப்பின்
புத்தியென்ன புதிது
துகள்களா புதிது

புத்தியென்றால்
புத்தனுமாவாய் அலரே
அலரும் புதிதே
கடலென் வெப்பமே
நுரை உய்ய உய்யடா உய்

000000000000000000000

இறை

இறகொன்றை விழியில் குத்தி பச்சையொழுக மட்டுகளில்
மீன் நீந்த நீர்ப்பிடியுள் திட்டைகளென கலைவது நிலம்

நகரும் இறகின் ரேகையென்பது ஆழ்மடை அலையிசைய
இசைக்கும் இலைக்காலம்

நிரம்புவதோ
வைகறை நிறம்
நிறைவதோர்
வலசை வயம்

வால்களில் வகையிருக்கு
இறகினை பிடித்திடாதே

குமிழியில் இன்னமும்
சிறகுதிர்கும் எழுத்தே

நினையாழமறியாச் செதிலில்
மின்னவே பிறக்கின்றாய்

டோனி ப்ரஸ்லர்- இந்தியா

டோனி ப்ரஸ்லர்

(Visited 127 times, 1 visits today)
 
டோனி ப்ரஸ்லர்

ஆரோகணம்-கவிதை-டோனி ப்ரஸ்லர்

ஆரோகணம் எப்பொருள் நுரையாடுமாடும் விரலில் நூலருந்த கூர்நிண மழுவட்டையின் துச்சிக்கும் முயங்கியல்பின்னிய சொல்லிடை பறப்போமென கூட்டிலிருந்து வெளியும் ஆகாயப்பனையும் அணையாய் திராணிக்குழியது முன்சுனை ஆப்பிளின் கத்திபடும் தன் வசந்தமதை அநாதரவாக […]

 

2 thoughts on “நியான்(NEON)-கவிதை-டோனி ப்ரஸ்லர்( அறிமுகம் )”

Comments are closed.