இரண்டு சம்பவம்-கவிதை-ரோஷான் ஏ.ஜிப்ரி

இரண்டு சம்பவம்.

ரோஷான் ஏ.ஜிப்ரி
சமித்திரா ஸ்ரீரங்கநாதன்

சம்பவம்-01

எனது அறைக்குள்

பல்லிக்கொரு வீடு கட்டிவைத்தேன்

அந்த வீடானது

நாள்காட்டியுடன்

தொங்கும் கடிகாரம்

விளக்கு அணைந்தபோது

பிழைத்த கணக்கொன்றுடன்

நிரந்தரமாகிடுமோ இவ்விருளென

வியூகம் பொய்த்த சினத்தில்

அறையிலிருந்து அவசரமாக

வெளியேற வேண்டுமெனும் வேகத்தில் கதவிடுக்கில்

வாலை துண்டித்த வலியுடன்

தலைகீழாக இறங்கிவிட்டது பல்லி

பின் என்ன நாள்காட்டியையும்

கடிகாரத்தையும்

கழற்றி வீசிவிட்டேன்

இப்பொழுது பூச்சிகள் வாழ்கிறது!

சம்பவம்-02

இரவின் வாலை பிடித்துக்கொண்டு

நீண்ட நேரம் ஓடிக்கொண்டிருந்தது கடிகார முட்கள்

கடிகார முட்களையும் இரவையும்

இருவர் மாறி,மாறி

துரத்திக் கொண்டிருந்தார்கள்

இப்படி தினமும் ஓடுவதும் துரத்துவதும்

சங்கடமாக இருப்பதால்

ஓடுபவர்கள் ஓடட்டும்

துரத்தும் இருவரையும்

நிரந்தரமாக நிறுத்த

எலி மருந்தை தயார் செய்யலாமென  எண்ணியிருந்த நான்

பின் பூனைகளை நினைந்து

யோசனையை கைவிட்டேன்!

00000000000000000000000000000000

எட்டாவது கடல்!

இடப் பெயர்ச்சி,

இழப்பு

எதிலிப்பெயர்

உலர் வலயம்

சதுப்பு நிலம்

பெருங்காடு

ஏழு கடல்

எட்டாவதாய்

கண்ணீர் கரைதல் என..

மொழி பிரித்திருந்தது

அவனது வாழ்க்கை என்ற பிரதி

எட்டாவது கடலாய்!

ரோஷான் .ஜிப்ரிகட்டார் 

ரோஷான் ஏ.ஜிப்ரி

 

(Visited 97 times, 1 visits today)