உன்னிடம் சொல்வதற்கு ஒன்றுமில்லை-கவிதை-ரோஷான் ஏ.ஜிப்ரி

உன்னிடம் சொல்வதற்கு ஒன்றுமில்லை

ரோஷான் ஏ.ஜிப்ரி

வன்மத்தில் செதுக்கப்படும்
வார்த்தைகளால்
என் கணப் பொழுதுகளை
நகர்த்தி விடுவதில்
தேர்ந்து விடுகின்றன உன் வியூகம்

எத்தனைமுறை வெளுத்தாலும்
சலவையாக்க முடியாத சான்றாய்
வண்ணாத்திக் குறியை
குத்தி விட்டாய் என் நெஞ்சில்

என்னிடமிருக்கும் மனசுபற்றி
மாதத்திற்கொருதடவை ஏனும்
மானி வாசிப்பது போலாவது
விளையாட்டுக்கேனும் நீ
விசாரித்ததுண்டா?

என் பொறுமையின்
அதி உச்சத்திற்கு அழைத்து வந்து
மிக ஆழத்தில் தள்ளி விட்டன
பொறுப்பற்ற உன் பொடுபோக்கு

உன்னோடான சமரில் தொற்று
வெளியேகியதால்
வேலிகளுக்கு வெளியே என்விதி தனிமையோடு பெரும் வனமேகி
மலைகளை கடந்து கொண்டிருக்கிறேன்

இன்றென் பூஞ்சிறகுள் வானம்
உன் பள்ளத்தாக்குகளில் இனி
தரையிறங்க நான்
தயாரில்லை
எந்த கேள்வி கணக்குகளுக்கும்
உனக்கென்று தனியாய்
பதில்களும் இல்லை

எனக்கென்றான எந்த நன்மைகளிலும்
உட்படாத உன்னிடம்
எதை நான் சொல்லவேண்டியிருக்கிறது?

ரோஷான் ஏ.ஜிப்ரி

ரோஷான் ஏ.ஜிப்ரி

(Visited 266 times, 1 visits today)