நஸீஹா முகைதீன் கவிதைகள்

நஸீஹா முகைதீன்

மிகச்சிறந்த கடவுள்
எழுப்பிய உருவத்தின்
உதடு குவிந்த மெல்லிய நுனியில் இருக்கும் நான் என்ற இனிப்பு
ஒன்றை தழுவும் அணைப்பின்
சூட்டினை போல குளிரை கதகதப்பாக்கிக் கொள்கிறது

புதினா ஊறிய தண்ணீரைக்
கொப்பளித்த ஈறுகள்
துழாவும் நாக்கின் காதல்
மிதமிஞ்சிய தேன் சுவையின்
தெவிட்டலே இருக்கிறது

ஊறுகாய் போக இடையிடையில் இணையும் சோற்றின் ருசி
வியர்வை காமத்தின் என்ற சட்டையாய்
துப்பாக்கியை முத்தமிடும்
பியானோ சுரக்கட்டைகளில்
வழிந்து புனிதமாகிறது

பாதியில் மங்கிப்போன
விலா எழும்பின்
வெண்மை நடந்து காதல்
ரட்சிப்பின் தேவையாய்
வைத்தியசாலைச் சுவர்களில்
செவிகள் அறுபடக் கேட்கிறது

ரட்சிப்பு எப்படி இருக்கும்?

மரணம் காயாத சிசுவின்
மரணத்தை உணரும் தாயின் பிறப்புறப்பைப் போலவா?

இல்லை, தீட்டு வாசனை படர்ந்த
கௌரவக் கொலைகள் போலவா?
மேற்சட்டையைக்
நடந்து ஒழுகும்
கடைசி மன்றாட்டத்தின் தோல்வியாய்
அது தூரத்தில் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது

000000000000000000000000

நான் உன்னை
முத்தமிட்ட போது
புத்தர் சிரித்து கொண்டிருந்தார்

வெண்ணிறக் கடல்
பாதியோடு நின்றிருக்க
புத்தி யசோதரா
விழித்திருக்கிறாள்

ஞானம் என்றால் என்ன ?
முத்தத்திலொரு
கேள்வி எழுப்புகிறேன்…
அது மிகச்சிறந்த கேள்வி

அது நள்ளிரவில்
காதல் என்ற நானும் மறுக்கப்பட்டது
புத்தனுக்கா
இல்லை ஞானமெனும் காதல் கிடைத்தது எனக்கு
“நான் புறப்பட்டிருந்தால்”

இதையே தாண்டி யசோதரா நினைத்திருப்பாள்
இதையே அந்த இள வயது
விலைமாதுவும் பெற்றிருந்தாள்
அவள் உடலெங்கும் குற்றங்களை
புண்களாகியிருந்தன

எதற்கு புத்தர் சிரித்தார்?
நானும் துறவு கொண்டேன்
விலைமாதுவும் அப்படித்தான்
அது அறத்தின் துறவு

ஓ… சித்தர்த்தனே
துறவு என்பது ஞானமல்ல

நானும் ஒரு பெண்
ஞானம் ஒரு காதல்
நானும் ஒரு முத்தம்
நீயும் திகைக்கலாம்
ஆமாம்
நானும் ஒரு முத்தம்

கொஞ்சம் முந்தி
தொப்புள் கொடியறுந்த
குழந்தையின் துடிக்கும்
உச்சியில் அது தொலைக்கும் நிகழ்வு

இல்லை முத்தம் என்பது செயல்
உன்னை நான் இறுகப் பற்றுவது
போல ஓரமாய் தேய்ந்து பிடிக்காமல்
பின் எப்படி துறவென்பது
நானும் எனப்படலாம்

கடவுள் கொன்றுவிட்டு
கடவுள் தேடுதல் தாண்டி
பிரார்த்தனை

இல்லையே நான்
இரத்தவாடை வெறுப்பவன்
என்றால்
என்ற யசோதரா
கொலை செய்யப்பட்டாள்
காதலெனும் தூக்கில்
நிலைகுலைக்கப்பட்டாள்

பின்பு சிரித்து
கொண்டிருக்கிறது
இன்னும் விடிந்திருக்கவில்லை
எதிர் எதிராக உதடுகள்
ஒன்றில் என்ற
இணைந்தும் பிரிந்துமாய்
நான் உன்னை முத்தமிடும்
போது புத்தர் சிரித்து கொண்டிருந்தார்
ஆமாம் யசோதராவை
தூரத்தில் இப்போது
பார்க்கமுடியவில்லை

நஸீஹா முகைதீன்- இலங்கை 

நஸீஹா முகைதீன்

(Visited 196 times, 1 visits today)