இலக்கியத்தை ஆவணப்படுத்தல்-கட்டுரை-டினோஜா நவரட்ணராஜா-அறிமுகம்

ஆவணப்படுத்தல் என்று நோக்கும்போது எம்மாலோ அல்லது பிறிதொருவராலோ சந்திக்கப்பட்ட நிகழ்தலின் அனுபவங்களே சமகாலத்தில் அல்லது காலம் கடந்து ஆவணமயமாக்கப்படுகிறது உண்மையில் ஆவணப்படுத்தல் என்பது ஏன் அவசியம் என்று நோக்குகையில் சரியானவற்றையும் உண்மையான விடயங்களையும் உலகின் எதிர்கால தலைமுறையினருக்கும் கடத்த வேண்டியது கட்டாயமாகும். எதிர்காலம் ஒன்று சரிவர அமைய வேண்டுமெனில் அதற்கு இறந்த காலத்தை அறிந்து கொள்ளுதலும் நிகழ்காலத்தை செம்மைப்படுத்துதலும் இன்றியமையாதது. இதற்கு இலக்கியமானது மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றது.

டினோஜா நவரட்ணராஜாஇலக்கியங்களை எடுத்துக் கொண்டால் பரந்துபட்ட ரீதியல் பல்வேறுபட்ட வாழ்வியல் மற்றும் வாழ்வியல்சாரா அம்சங்களை புலப்படுத்துவதோடு குறிப்பிட்ட ஒரு பகுதியினருக்கு மட்டும் சொந்தமென நின்றுவிடாது பல்வேறுபட்ட மக்கள் குழுவினருக்கும் பொதுவான ஒரு ஊடகமாக திகழ்கிறது. முன்னைய காலம் தொட்டு இன்று வரையிலும் உயர்குடி மற்றும் தாழ்குடி என்ற பேதமில்லாமல் உண்மைகளை உலகிற்கு காட்டும் காலத்தின் கண்ணாடி இலக்கியங்களே என்பது திண்ணம்.

உதாரணமாக நமது நாட்டார் பாடல்களை எடுத்துக் கொண்டால் அவை வெறுமனே வாய் வழியாக தலைமுறைகளுக்கிடையில் கடத்தப்பட்டாலும் காதல், கலாச்சாரம், ஒழுக்கங்கள், பழக்க வழக்கங்கள் என பல்வேறுபட்ட வாழ்வியல் அம்சங்களையும் கூடவே கடத்தினர். ஆனால் இன்றளவில் நாட்டார்பாடல்கள் பரவலாக வழக்கொழிந்து போகும் சந்தர்ப்பங்களில் இவற்றை ஒலி வடிவிலோ எழுத்து வடிவிலோ காணொளி வடிவிலோ ஆவணப்படுத்துதல் பயன்மிக்கதாகும்.

இவை மட்டுமல்லாது நாடுகளுக்கு இடையிலான போரியல் சம்பவங்களை எடுத்துக்கொண்டால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாட்டு மக்களது அடிப்படை உணர்வுகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தொடர்பில் வரலாற்றுக்குறிப்புகள் பேசுவது அரிதே. ஆக இத்தகைய அம்சங்களை வெளிக்கொணர இலக்கியங்களே சிறந்த தளமாக அமையும். அத்தோடு கடந்த காலத்தோடு இன்றைய காலகட்டத்தை ஒப்பிட்டு நோக்கும்போது இலக்கிய ஆவணப்படுத்தல் ஆனது மேலும் விருத்தி அடைந்த நிலையில் இருக்கின்ற போதிலும் அது எத்தகைய அளவிற்கு மக்களை சென்றடைகிறது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

அத்துடன் எதனை ஆவண படுத்துகின்றோம்? ஒரு சாராருடைய இலக்கியங்களிற்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கப்படுகிறதா.. இல்லையெனில் பக்கச்சார்பில்லாமல் இலக்கிய ஆவணப்படுத்தல்கள் பரவலாக இடம்பெறுகின்றனவா என்பதும் கவனிக்கப்பட வேண்டியதொன்று. அத்தோடு இலக்கியங்களை ஆவணப்படுத்தும் போது அதன் நிலைத்திருகையும் மக்களை சென்றடைய வழிவகுத்தலும் இன்றியமையாதது. நூலகங்களில் புத்தகங்களையும் இணையதளங்களில் மின் வடிவில் ஆவணங்களையும் உள்ளடக்குவது மட்டுமல்லாமல் அவை பற்றிய தெளிவான விளக்கம் விழிப்புணர்வு தொடர்பான அம்சங்கள் மக்களிடையே சென்றடைய வழி செய்தல் நன்று.

இது தொடர்பான இன்றைய காலகட்டத்தை எடுத்துக்கொண்டால் சமூக வலைத்தளங்கள் மக்களிடையே பிரபல்யமான ஒரு ஊடகமாக இருக்கிறது. இத்தகைய சமூக வலைத்தளங்கள் மூலம் ஆவணப்படுத்தல் மற்றும் இலக்கியங்கள் தொடர்பான தகவல்களை எடுத்துச் செல்லுதல் மிகவும் நன்று. அதுமட்டுமல்லாமல் யாரெல்லாம் இலக்கிய ஆவணப்படுத்தல்களை செய்ய இயலும் என்று நோக்குகையில் ஆர்வம் உள்ள எவரும் செய்யலாம். ஆனால் ஆவணப்படுத்தப்படும் இலக்கியங்கள் மற்றும் ஏனைய ஆவணங்கள் உண்மையாகவும் உறுதியானதாகவும் இருத்தல் நன்று. இலக்கிய ஆவணங்களை ஒழுங்கமைத்தல் பாதுகாத்தலும் பகிர்தலும் என்பது எத்தகைய அளவுக்கு அவசியம் என்பதை உணர்ந்து ஆவணப்படுத்தலில் அறிவியல் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துதல் பயன்மிக்கதாகும்.

ஆவணப்படுத்தல் ஒன்றே எம்முடைய வரலாற்றையும் வாழ்வியலையும் அடுத்த தலைமுறைக்கு வழங்க வல்லது என்பதை உணர்ந்து எம்மாலான பங்களிப்பையும் இலக்கிய பணி ஆற்றுதல் சிறப்பாகும்.

டினோஜா நவரட்ணராஜா-இலங்கை

00000000000000000000000000

கட்டுரையாளர் பற்றிய சிறுகுறிப்பு:

டினோஜா நவரட்ணராஜாயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த டினோஜா நவரட்ணராஜா கவிதை ,கட்டுரை மற்றும் சிறுகதைகளை எழுதுகின்ற இளையதலைமுறையைச் சேர்ந்தவர். பஸ்த்துனரட்டை கல்வியியல் கல்லுரியில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் ஆசிரிய கற்றைநெறியைக் கற்ற இவர் தற்பொழுது ஆசிரியர் பயிற்சி நெறியினை பாணந்துறை மகளிர் கல்லுரியில் மேற்கொண்டு வருகின்றார்.

நடு குழுமம்

(Visited 103 times, 1 visits today)
 
டினோஜா நவரட்ணராஜா

இலக்குகளை நோக்கிய வாழ்வின் பெருநதி-கட்டுரை-டினோஜா நவரட்ணராஜா

இவ் உடலெனும் கூட்டின் பெரும் பயணம் பெருநீளம். எண்ணற்ற சவால்கள் ஏராளம் எதிர்பார்ப்புக்கள். விடை காணாத வினாக்கள் விடைதேடும் விழிகள், மனக்குகைக்குள் ரகசியங்கள், மண்டியிடும் மௌனங்கள், கொட்டித்தீர்த்த கோபங்கள் இதய […]