அறியேன்-கவிதை-ஆதி பார்த்திபன்

அறியேன்

ஆதி பார்த்திபன்

 

இளமையில் உனது நெற்றியில் பிளக்கும்
யோனியே உனது ஞானம்
ஆக கொண்டாடு
புகையிலை சுருட்டின் எச்சில் ஊறிய
நூல்
மது மண்டியில் புதைந்திருக்கும்
மாங்காய் துண்டு
பக்கத்துக்கு வீட்டு பெண்ணின்
துவைத்து காயப்போடட மார்புக்கச்சை
கஞ்சா வைப்பதற்கு
கழற்றி கொட்டிய பீடியின் உள்ளீடு
வெற்றிலை கறை, துவைக்காத
சப்பாத்து,காலண்டரில் மியாகலிபா

ஆனால் என்னிடம் வந்து இளமை
எதுவரை என்று கேட்காதே
அது உனக்கே உனக்கானது.

000000000000000000

கடல்

ஆதி பார்த்திபன்

 

என்னை கடலென நினைத்தே வந்தாய் ,
வலித்த உடலில் ஒரு சிறு குருவி
என்ன செய்து விடுவாய் என்னை
தளர்வுடன் விழுகையில் பெருத்த
தனங்களில் நீர்ப் பரல்களாய்
என்னை அள்ளி எறிந்து
அணைத்துக் கொள்ளத்தானே வந்தாய் என்
அருளுடையாய்
மென் சொட்டு முத்தத்தினால் என்னை
வரளச்செய்துன்னுள் வளர
வைக்கத்தானே வந்தாய் அருளுடையாய்
கண்ணில் கணந்தோறும் சொட்டும்
பெருங்கருணையே
எனது மையத்தில் நீ தரை நிலமே
கூட்டம் தனித்த பறவை அமரும் தனிக்
காடே தெய்வதமே
என்னை ஒரு கடலென நீ
நம்பிவருகையில் நான் என்ன செய்வேன்
என்ன செய்வேன் சொல்

000000000000000

போனஸ்

கருணையே இல்லாத காதலிகள்
இந்த உலகத்தின் சாபங்கள்
எதற்கெல்லாம் கருணையுடன் இருக்க
வேண்டும்
காதலிப்பதற்கு.

ஆதி பார்த்திபன்-இலங்கை

ஆதி பார்த்திபன்

 377 total views,  1 views today

(Visited 140 times, 1 visits today)
 
ஆதி பார்த்திபன்

தொடரும் மழைக்காலத்தின் பாடல் – ஆதி பார்த்திபன்

மழைக்காலத்தின் நடுவில் குருதியை நாங்கள் பயிரிட்டபொழுது அது இத்தனை பெரிதாக வளருமென்று நாங்கள் நினைத்துக்கொண்டதில்லை ஒரு ஆற்றின் வளைவு அந்த குருதியில் இருந்தது, ஒரு கடலின் உவர்ப்பும் கூட, குருதியோ […]