கவிதை-அப்பாத்துரை அர்விந்

பிருந்தாஜினி பிரபாகரன்

வெகு தூரத்தில் உறங்கிக் கொண்டிருக்கின்றன
கனவுகள் ……
பனிப்பிரதேசத்தில் பிறந்த குழந்தையொன்று
நடுப்பகலின் நரம்பிலிருந்து கடைந்தெடுத்த
நஞ்சுகலந்த போதையூட்டும் அமிர்தங்களை
நள்ளிரவை நோக்கி தவழ்ந்திடும் குழந்தையின்
கைகளில் இரட்சிக்கும் பரிசாக்கி கொடுத்துவிட
அதை தாங்கி கொண்டு ,மழலை தன்
மொழியோடு
வெகுதூரத்தில் உறங்கிக் கொண்டிருந்த கனவு
களின் கதவுகளை தட்டிப் பார்த்தது.

எங்கிருந்து வருகின்றாய்? எப்படி இங்கு வந்தாய்
என்று குரல்கள் ஒடுங்கிப் போயின
கனவுகள் கலங்கியபின்
இனி கனவுகளுக்கு சிறிதளவும் இடமே
இல்லாமல் போய் விடலாம்
அந்தத் தருணத்திலேயே உறங்கிய கண்கள்
என்ன செய்யலாம் என்ற கேள்வியுடன்
என்ன செய்வதென்று அறியாமல்
விழித்துக் கொண்டன

அப்பாத்துரை அர்விந்-பிரான்ஸ்

(Visited 56 times, 1 visits today)
 
அப்பாதுரை அர்விந்

சரியாலிச இலக்கியம் (surréaliste littérature)-ஒரு அறிமுகம்-கட்டுரை- அப்பாதுரை அர்விந்

  மனிதனின் பிரஞை,  புத்தி,சிந்தனை, சிந்தனையின்  லயம், பார்வை, பார்வையின் கூர்மை, இயற்ககையை அணுகும் முறை, மற்றவர்களின் உடனான உறவின் இயல்பு, பண்பு, இத்யாதி… இத்யாதி… பொதுவாக மனிதன் இயங்கவும், […]