சொல் ஓவியம்- அ.பாலமனோகரன்

அன்னையர் இருவர்

அ பாலமனோகரன்

0000000000000000000000000

மூதூர் திருமலை பாதையில் ஒரு காட்சி

அ பாலமனோகரன்

0000000000000000000000000

தண்ணீரூற்று. தண்மையான நீர் கொண்ட ஊர்! இளநீர் போன்ற தண்ணீர் தரையில் எப்போதுமே ஊறிப்பாயும் இடம்! இது ஊற்றங்கரை எனப் பெயர் பெற்றது. இங்குள்ள பிள்ளையார் கோவில் இது. ஒரு சிறு கொட்டகையாக இருந்த கோயில் இன்று அழகிய ஆலயமாக ஆகியுள்ளது. ஊற்றெடுத்துப் பாயும் நீர் வயல்களை வளமாக்கி வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தை அரவணைத்து நந்திக் கடலில் கலப்பது பேரழகு!

அ பாலமனோகரன்

0000000000000000000000000

நந்திக்கடலோரம்

அ பாலமனோகரன்

0000000000000000000000000

புற்பூக்கள்

மல்லிகை, முல்லை, தாமரையென
மணந்தரு மலர்களைத்தான்
மனிதர் நாம் கொண்டாடுவதுண்டு.

புற்பூக்களை யாரும் பெரிதாகப்
பேசுவதாய்த் தெரியவில்லை.
அற்பமென்று அவற்றை நாம்
அலட்சியம் செய்வது சரிதானா?

அச் சின்னஞ்சிறு மலர்களின்
அற்புத அழகைத்தான் இயேசு
ராஜா சாலமன்கூட அவைபோல்
அழகாக உடுத்தியது இல்லை என்றாரே!

இந்த உலகில் உதித்தது எதற்குமே
உன்னத நோக்கம் உண்டுதான்!
இயற்கையின் படைப்பில்
எதுவுமே அற்பமில்லை!

பாறையையும் பிளந்து வெளிவரும்
புற்களைப் படைப்பது
இப் புற்பூக்கள் அல்லவா!

அற்பமென்று எவரையுமே எண்ணாதே
என்று எமக்குச் சொல்கின்றனவா
இந்தப் புற்பூக்கள்!

அ பாலமனோகரன்

0000000000000000000000000

நீர் வர்ணத்தில் இன்னுமோர் பயிற்சி! டென்மார்க்கில் நான் வாழும் பதியில் இந்த வானளந்த மரங்கள் நிறைந்த சோலை உண்டு. வசந்த காலத்தை இன்பமாகக் கழிக்க இந்த இடத்துக்கு மக்கள் வருவர். காலை வெய்யிலில் இதை என்றோ புகைப்படம் எடுத்தேன். இன்று கொரோனா காலத்தில் காலத்தைக் கழிக்க உதவிற்று!

அ பாலமனோகரன்

0000000000000000000000000

கனவிலும் மணக்கும் சொந்த மண்ணின் சுகந்தம்!

அ பாலமனோகரன்

0000000000000000000000000

மேலுமோர் நீரவர்ணப் பயிற்சி! காலை வெய்யிலில் கடற்குளியல்!

அ பாலமனோகரன்

0000000000000000000000000

இப்போது இருள்தான் இருப்பினும் இதுவும் கடந்து போகும்!

அ பாலமனோகரன்

0000000000000000000000000

கொரோனா விதித்த தனிமை எனினும் குடும்பமாய் திறந்த வெளியில் வாழ கொடுத்து வைத்த குடும்பம் இது!

அ பாலமனோகரன்

0000000000000000000000000

வீடு நோக்கி விரையும் புள்ளினம்! நாடு நாடி வரையும் விரல்கள்!

அ பாலமனோகரன்

0000000000000000000000000

அ.பாலமனோகரன்-டென்மார்க்

அ பாலமனோகரன்

(Visited 172 times, 1 visits today)