நிறமிகளை காப்பாற்றுங்கள்-கவிதை-சப்னாஸ் ஹாசிம்

நிறமிகளை காப்பாற்றுங்கள்

சப்னாஸ் ஹாசிம்
பிருந்தாஜினி பிரபாகரன்

நிறமிப்பாதங்கள் வழுவும்.
அதன் ஒவ்வொரு நிறச் சிறகிலும்
புதிதாக ஒரு பெண் முகம்.
கடைவீதியில்
புதிதாய் ஓட விட்ட பஸ்ஸில்
தொங்கும் மின்சார ரயிலில்
வியர்வை நெடியோடு
பழக்கப்பட்ட ஒரு முகம்.

குட்டையாக கத்தரித்ததாய்
கறுப்பு உதடுகளாய்
உயர்ந்த ஹீல்ஸ்களில் குத்தியதாய்
நிறமிகள் சுற்றி வரும்.
நிறமிப்பாதங்கள் அழும்போது
அதன் நிறத்தின் ரேகை
சிதையும் போது
பழக்கப்பட்ட ஏதோவொரு
நிறமி முகஸ்துதிக்காய்
அந்த ரேகையின் நிறங்களை
நண்பனே,
கடைக்காரரே,
நிறமிகளைச் சூழும்
எல்லா அவன்’களே
காப்பாற்றுங்கள்.

00000000000000000000000000000

இரவுகள்

இரவுகள் பிறழ்வன.
இருளுக்கு பின்
ஒளிக்கு முன் என
ஒரு கூர்வாதையின் கவிச்சை.

தென்னம் வண்டுகளின்
முதுகிலும் கரியாய் நீலச்சுடர்
நிலவுப் பொட்டிலும்
அறுப்புக்கு காத்திருக்கும் ஆடுகள் போல
உயிர்க்குரலின் தாகம்.
இருளும் ஒளியும்
எதையும் செய்ய முடியாத நெருக்கடி.

00000000000000000000000000000

சாட்சி அல்லது புலம்பல்

நனிமேகங்கள்,
உரியும் கடல்,
பாதி மென்ற சாக்லேட்( அல்லது ரொட்டி, [தெளிவில்லை]),
அவள்;
இதற்கு முன்பும் ஒரு சாட்சி இப்படி எழுதப்பட்டிருந்தது. வழக்கெல்லாம் இல்லை. புலம்பல்; பெரும்பாலும் ஆண்கவிஞனாயிருக்க வேண்டும்.

000000000000000000000000000004

மூச்சு; மௌனம்

ஒரு சொல்
அல்லது முன் மூச்சில்
பெருத்த மௌனம்.

முன்பிருந்தே எல்லா சொல்லுதலுக்கும் முன் பின்னாய்
அதே மௌனம்.
அதே மூச்சு.
விபரிக்க முடியாத
நுளைந்து விரிகிற
கசிந்து நமைக்கிற அதே மௌனம்.
அதே மூச்சு.

சப்னாஸ் ஹாசிம்-இலங்கை

சப்னாஸ் ஹாசிம்

(Visited 123 times, 1 visits today)