தோல் கையுறை-மொழிபெயர்ப்பு சிறுகதை-தேவகி கணேசு

தேவகி கணேசுமுன்னொரு காலத்தில் ஒரு வயோதிபர் அடர்ந்தகாட்டுவழியாக தனது நாயுடன் உலாவச் சென்றார். அது ஒரு பனிக்காலம் ஆகும். அக்காட்டின் வழியினுடாக செல்லும் பொழுது வயோதிபர் தனது ஒரு கையுறையினைத் தவறவிட்டுவிட்டார்.

பிற்பகல் நேரம் அங்கு திடீரென ஒரு எலிப்பிள்ளை விரைந்து வந்தது. அது தனது கண்ணில் பட்ட அந்தக்  கையுறைக்குள் புகுந்து கொண்டது. இது தான் எனது இரவு உறைவிடம் என்று எண்ணிக்கொண்டது.

சிறிது நேரத்தின் பின்னர் ஒரு தவளை அவ்வழியே வந்தது. உடனே தவளை தயக்கம் எதுவுமின்றி இக்கையுறையில் வசிப்பது யார் என்று கேட்டது?

நான் தான் எலிப்பிள்ளை. நீ யார்?

நான் தான் தவளைப்பிள்ளை. நான் உன்னுடன் வசிக்கலாமா? என்று வினவியது.

ஆமாம் உள்ளே வரவும்.

கதிரவன் மேற்கு திசையில் மறையும் அவ்வேளை ஒரு குட்டி முயல் ஒன்று துள்ளிக்கொண்டு வந்தது.  அது கையுறையின் முன் நின்று இக்கையுறையில் வசிப்பது யார் என்று வினவியது?

நாங்கள் தான் எலிப்பிள்ளையும் தவளைப்பிள்ளையும். நானும் உங்களுடன் வசிக்கலாமா?

ஆமாம் உள்ளே வரவும்.

இப்பொழுது கையுறையுள்  மூவர் வசித்தனர். அதனால் கையுறை மிகவும் சூடாக இருந்தது.

அப்போழுது வானில் விண்மீன்கள் உதயமாகும் நேரம். ஒரு நரியார் அவ்வழியே வந்தார்.

அது கையுறையின் முன் நின்று இக்கையுறையில் வசிப்பது யார் என்று வினவியது?

நாங்கள் தான் எலிப்பிள்ளையும் தவளைப்பிள்ளையும் குட்டி முயலும் என்றனர். நானும் உங்களுடன் வசிக்கலாமா?

ஆமாம் உள்ளே வரவும்.

இப்பொழுது கையுறையுள் நால்வர் வசித்தனர். நால்வரும் அக்கையுறையினுள் இருந்தபடியே வெளியில் பனிப்பொழிவை பார்த்து இரசித்துக் கொண்டு இருந்தனர்.

அப்பொழுது ஒரு ஓநாய் அவ்விடத்திற்கு வந்தது. கையுறையின் முன்னால் அமர்ந்தபடியே இக்கையுறையில் வசிப்பது யார் என்று வினவியது?

நாங்கள் தான் எலிப்பிள்ளையும் தவளைப்பிள்ளையும் குட்டி முயலும் நரியாரும் என்றனர். நானும் உங்களுடன் வசிக்கலாமா?

ஆமாம் உள்ளே வரவும்.

ஓநாய் கையுறையுனுள் சென்று அமர்ந்து கொண்டார். இப்பொழுது கையுறையுள் ஐவர் வசித்தனர்.

சிறிது சொற்ப நேரத்தில் அவ்விடத்திற்கு ஒரு காட்டுப்பன்றி  வந்தது.

இக்கையுறையில் வசிப்பது யார் என்று வினவியது? நாங்கள் தான் எலிப்பிள்ளையும் தவளைப்பிள்ளையும் குட்டி முயலும் நரியாரும் ஓநாயும் என்றனர். நானும் உங்களுடன் வசிக்கலாமா?

நீ சிறியவனாக இருந்தால் மட்டுமே முடியும். இல்லை இல்லை நான் சிறியவன் தான்.

ஆமாம் உள்ளே வரவும்.

இப்பொழுது கையுறையுள் அறுவர் வசித்தனர்.

ஆனால் இப்பொழுது கையுறையினுள் இருப்பது மிகவும் கடினமாக இருந்தது. ஒருவரும் அசைய முடியவில்லை.

அப்பொழுது ஒரு மரத்தில் இருந்து ஒரு கிளை முறிந்து விளுந்தது. மரக்கிளை விளுந்த இடத்தை நோக்கி கரடி ஒன்று வந்தது.

இக்கையுறையில் வசிப்பது யார் என்று வினவியது? நாங்கள் தான் எலிப்பிள்ளையும் தவளைப்பிள்ளையும் குட்டி முயலும் நரியாரும் ஓநாயும் காட்டுப்பன்றியும் என்றனர்.

நீ யார்?

நான் தான் கரடி. நானும் உங்களுடன் வசிக்கலாமா?

நாங்கள் உனக்கு இடம் தர முடியாது. இங்கு இடம் இல்லை. ஆனாலும் கரடி தனது நிலை பற்ரிக் கூறி உடன் இருக்க இடம் தரும் படி கேட்டது.

கரடியும் கையுறையினுள் மெதுவாக சென்று அமர்ந்து கொண்டது.

இப்பொழுது கையுறையுள் எழுவர் வசித்தனர்.

இப்படியாக ஒரு சில மணித்துளிகள் கழிந்த பின்னர் வயோதிபர் தனது ஒரு கையுறையினை தவறவிட்டதை உணர்ந்தார். இருவரும் சென்ற வழியே கையுறையை தேட ஆரம்பித்தனர். நாய் வாலை விசையாக ஆட்டிய வண்ணம் முன்னே சென்றது. அப்பொழுது பனியில் ஏதோ ஒன்று அசைவதை நாய் கண்டவுடன் நாய் வள் வள் என்று குரைத்துக் கொண்டு அதைப் பிடிப்பதற்கு துரத்திக்கொண்டு முன்னே சென்றது.

இதனால் அச்சமடைந்த மிருகங்கள் ஒருவரை ஒருவர் கவனிக்காமல் காட்டிற்குள் சிதறி ஓடின.

வயோதிபர் தனது கையுறையினை எடுத்துக் கொண்டு சென்றார்.

அவருக்கு விளங்கவில்லை !!! பனியில் இருந்த கையுறை ஏன் இவ்வளவு சூடாக இருக்கின்றது என்று எண்ணியபடியே தனது வீடு நோக்கி நடந்து சென்றார்.

தமிழில் : தேவகி கணேசு -நோர்வே

தேவகி கணேசு

00000000000000000000000000000000

சிறுகதையுடன் தொடர்புடைய புகைப்படங்கள் :

தேவகி கணேசு தேவகி கணேசு தேவகி கணேசு தேவகி கணேசு தேவகி கணேசு தேவகி கணேசு தேவகி கணேசு

 

(Visited 65 times, 1 visits today)