இவர்கள் இப்படிச் சொல்கின்றார்கள் 08 – ஈழத்து நகைச்சுவை இரட்டையர்கள் டிங்கிரி சிவகுரு

 இவர்கள் இப்படிச் சொல்கின்றார்கள்1980களில் பல்வேறு கலைகளும் சிறந்து வளர்ந்திருந்த ஈழத்தமிழ் மண்ணில் பல கலைஞர்கள் எம் மண்ணில் வலம் வந்தார்கள். அப்படி மிளிர்ந்த சில கலைஞர்களில் நகைச்சுவைக் கலைஞர்கள் என்று பார்க்கும் பொழுது என்றும் மறக்கமுடியாதவர்கள் டிங்கிரி கனகரட்னம், மற்றும் சிவகுரு சிவபாலன் ஆகியோராவார்.
இவர்கள் ஈழத்தின் பலபாகங்களிலும், மேடைநிகழ்ச்சிகள் மூலமும், வானொலி மூலமும், இலங்கையில் தயாரான வாடைக்காற்று திரைப்படம், அதன்பின் ஒலி நாடாவினாலும், மக்களைச் சென்றடைந்து சிரிக்க வைத்தார்கள். இக்கலைஞர்களின் கலைவடிவங்கள் யுத்தம் என்ற காலவோட்டத்தில் இல்லாது போனது. இவர்களது நிகழ்ச்சி இசையும் நகைச்சுவையும் இணைந்தவொரு நிகழ்ச்சியாக இருக்கும். கணீரென்ற குரலில் நகைச்சுவையான பாடல்களையும் பாடிச்சிரிக்க வைத்த கலைஞர்கள் டிங்கிரி சிவகுரு இரட்டையர்கள். இக்கலைஞர்கள் காலவோட்டத்தில் மறைந்தாலும், ஒலிப்பதிவுகளில் அவர்கள் குரல் ஆங்காங்கே இன்றும் வாழ்கின்றது. அவர்களின் நகைச்சுவையை, அன்றையபொழுதுகளில் ஒலிநாடாவில் பதிந்து தந்தவர்கள், யாழ்ப்பாணம் நியூவிக்ரேஸ் நிறுவனத்தினர். இந்த நகைச்சுவை இரட்டயர்களை ஈழத்து இலக்கிய ஆளுமைகளில் நடு குழுமம் கௌரவப்படுத்துகின்றது.

000000000000000000000000000000

(Visited 120 times, 1 visits today)