பிரபஞ்ச மனிதன்-கவிதை-ஏ.நஸ்புள்ளாஹ்

 

ஏ.நஸ்புள்ளாஹ்

என் மனநிலத்திலிருந்து
அவன் பிரபஞ்சத்தில்
குதித்துப் பாய்ந்தான்
அவனிடம்
சில கட்டளைகளையும்
சில ஒப்பந்தங்களையும் செய்தேன்

நீ மொழியினால் வேறுபடுவதையோ
நீ சாதியினால் வேறுபடுவதையோ
நான் வெறுக்கிறேன்
நீ உனது பாதையைத் தெர்வு செய்யும் போது
அதில் நிறங்களும்
அதில் மதங்களும்
அதன் நிழல்களும் உன்னை பிரித்து விடாமல்
மிக கவனமாக
அவைகளை கடந்து செல்
என்பதாகவே இருக்கிறது

சில சூரியன்கள்
தூங்கியெழுந்திருக்க வேண்டும்
அவன் பிரபஞ்ச அனுபவங்களை
முதிகில் மூட்டை மூட்டையாய்
சுமந்தபடி மீண்டும்
என்னை வந்து சந்தித்தான்
அவனிடம் கொத்துக் கொத்தாய்
கோபங்களிருந்தன
பிரபஞ்சம் அவனை
மிருக நிலை மனிதனாய்
மாற்றியிருந்தது
பிரதான பாத்திரமேற்ற
அவன் இப்போதெல்லாம்
பட்சிகளுடன்  பேசுகிறான்
மிருகங்களுடன் தூங்குகிறான்.

ஏ.நஸ்புள்ளாஹ்-இலங்கை 

ஏ.நஸ்புள்ளாஹ்

(Visited 163 times, 1 visits today)