றாம் சந்தோஷ் கவிதைகள்

றாம் சந்தோஷ்

பூனை பற்றி ஒரு கவிதை எழுதவேண்டும்
எனினும் அது குறித்து பலர்
ஏற்கனவே எழுதிவிட்டனரென்பது
எனக்கோர் வாய்ப்புக்கேடு; இருந்தும்,
சும்மா அழைத்தவந்த பூனையைத்
சும்மா திருப்பி அனுப்புவதற்கில்லை
அதற்கேதேனும் தின்னக்கொடுத்தாக வேண்டும். என்றால்,
அது முன்புபோல் எலியைத் தின்னுமளவு நாகரீகமற்றதில்லை
அதற்குச் சாப்பிட ஒரு பல்லடுக்குக் கடை பிஸ்கோத்து வேண்டுமாம்.
பல்லடுக்கு கடை பிஸ்கோத்து வாங்க ஒரு பாதி நாள் கூலி வேணும்
ஒரு பாதி நாள் கூலி கிடைக்க ஒரு சிறு ஜோலியாச்சும் வேணும்
ஜோலியற்ற ஜோலியாய்தான் இக்கவிதை எழுத எத்தனித்தேன்
இனி ஜோலிக்குப் போய் கூலி வாங்கி
கூலியின் பாதி கொடுத்து பிஸ்கோத்து வாங்கிவாறேன்
அது வரைக்கும் சாகாமலிரு என் வார்த்தைப் பூனையே….

0000000000000000000

திடீரென பெருவெள்ளம் அதுமுடிய ஒரு பெரு நிலநாசம்
நிலநாசம் புறமிருக்க நிலவன்னைப் பரலோகம்
இது அகம் மாய்க்க; தாதித்தனம் கேடித்தனம் எனும் பேச்சு
அது பல கோடி மூளைகளைக் குழப்பியடிக்க – திடீர் நிசப்தம்.
நிசப்த நில ஊரில்தான் பாதிபேர் பெயரளவில்
மீதிபேர் அளவுப்பெயரில் இனி செய்வதற்கில்லை
கும்பிட்டு வளைந்துகொடுத்து நெடுஞ்சான்கிடையாய் விழுத்த பழகிவிட்டு
எழுந்து நடக்க – லாம் என்றால் என் முதுகு எங்கே? வயிறோ மண் தவழ…

றாம் சந்தோஷ் – இந்தியா 

றாம் சந்தோஷ்

 

(Visited 109 times, 1 visits today)
 
றாம் சந்தோஷ்

றாம் சந்தோஷ் கவிதைகள்

  உடலிலிருந்து தப்பிப்போக என்ன செய்யவேண்டும்? உடலிலிருந்து தப்பிப்போக என்ன செய்யவேண்டும்? உடலைத் திருடிக்கொண்டு தொலைந்தோட வேண்டும்; மேலும், கொஞ்சம் மறதியையும் பயிற்சி செய்யவேண்டும். கனவை இடைமறித்து அவன் கழுத்தை […]