பொறுப்பு துறத்தல் -கவிதை – சிந்துஜன் நமஷி

பொறுப்பு துறத்தல்

சிந்துஜன் நமஷி

 

பெரும் ஆடு
வேள்விக்கெண்டு வெள்ளையம்மாள்
வளத்த ஆடு

செவ்வரத்தம்பூவில
மாலை போட்டு
மலை நெடுக இழுத்து வந்து
அய்யனார் காலடில
கட்டிப்போட்டாள்

பித்தளை குடத்தில
தண்ணிநிறைச்சு
மஞ்சளும் , வேப்பங்குழையும்
கலந்து
தலைக்கு ஊத்த ,
விபரீதம்
தெரியாம ஒரு சிலிப்பு சிலுப்பிச்சி

அகண்ட நெஞ்செல்லாம் சந்தனம்
தடவி
அருவாள் முனையில எலுமிச்சை
குத்தி
நெடுஞ்சாண் நிழலொன்று
பக்கத்தில வந்து நிக்க
பாவம் !
ஆதரவெண்டு நினைச்சிருக்கும்

ஒரே பொடில தலை துண்டாக
கழுத்து நெரிச்சு ரத்தமெடுத்து
சாமி காலெல்லாம் பூசி விட்டு
” நீதான்யா என் குடும்பத்தை
காப்பதோணும் ”
எண்டு உருகி நிண்டாள்
வெள்ளையம்மாள்

விழுந்த தலை அய்யனாரை
முறைக்க
ஆட்டு மூஞ்சில முழிக்க
கூச்சப்பட்டு
மீசை தொங்கி நின்னாரு
அய்யனாரு

சிந்துஜன் நமஷி-இலங்கை 

சிந்துஜன் நமஷி

(Visited 175 times, 1 visits today)
 
சிந்துஜன் நமஷி

வெய்யிலின் மிடறு-கவிதை-சிந்துஜன் நமஷி

வெய்யிலின் மிடறு   அடிபட்டுக்கிடக்கும் செந்நாயின் பெருமூச்சு போல தகிக்கிறது சூரியன் பெருக்கமரத்தடியில் கூடும் குழந்தைகள் மணலை சமைத்து சோறு என்று பரிமாறுகிறார்கள் இடுப்பில் குடத்தோடு காய்ந்துபோன குளத்தின் கானல்நீர் […]

 325 total views