வெறுமை-கவிதை-மதுசுதன் ராஜ்கமல்

வெறுமை

மதுசுதன் ராஜ்கமல்

முன்பு தொலைத்த இரவுகளின்
அடையாளம் வார்த்தைகளுக்குள்ளாக
ஒளிந்துகிடக்கிறது

வானளாவிய பிரபஞ்சத்தையும்
இருளின்வழி விழுங்கி செறித்த
இரவுகளின் மீள் புனைவுகளவை

உணர்வுகளால் உந்தப்பட்ட வலியை
வேதனையை சந்தோஷத்தை
ஆனந்த களிப்பை இருளுக்குள்ளாக
பொத்திவைக்க நினைத்த
சுவடுகள்யாவும் பருத்து
பெருத்து விம்முகின்றது

ஓசைகள் சிறையிலிடப்பட்ட
வனாந்திரந்தின் மயானப் பேரமைதி
உள்ளுக்குள்ளாக பேரச்சத்தை
படரவிடுகிறது

பார்த்தவையும் பார்க்காதவையும்
நேர்பட்டு அச்சுறுத்தும் வேளை
நீங்காத அந்த வரிகள் மீண்டும்
நினைவுக்குள் வந்து அந்த புத்தகத்தின்
தாள்களை மிகவேகமாகத் புரட்டுகிறது
ஒசையின்ற மென்றுமுழுங்கிய
வார்த்தைகள் மீண்டும்
அந்த வனாந்திரத்திற்குள்
சிறைபுகுந்தது.

மதுசுதன் ராஜ்கமல் – இந்தியா

(Visited 202 times, 1 visits today)