கவிதை -பாத்திமா மின்ஹா

பாத்திமா மின்ஹா

நிறுத்தி வைக்க
அவகாசமற்றுத் திணறுகின்றது
அகாலம்

கனவொன்றினைப் பிணைந்துள்ள விரல்களை மெதுவாகத் தளர்க்கின்றேன்

இமைகளுக்குள் புரளும்
அலைமடிப்புகள்
ஒன்றன்மேல் ஒன்றாகக்
குவிகின்றன

கண்களுக்கு வெளியே
பெருகுகின்றது
நீலக்கடல்

நீர்ச்சுனைகளாகப் பிரிந்து
வரிக்கு வரி
சொற்களில் சஞ்சரிக்கின்றது
தேக்கம்

விரல்களில் கசியும் படி
பனிமலைகள் உருக
அனல்வெம்மையில்
உதிக்கிறது ஞாயிறு

போதாமையின்
இறுதிக்கணங்களில் நின்று
போராடும் விரகம்
நிரம்பலும் இடைவெளியுமாய்
ஆர்ப்பரிக்கின்றன

மீன்களாய் நெகிழ்ந்து
அலைதலில் பிழைக்கின்றது
சஞ்சாரம்.

பாத்திமா மின்ஹா -இலங்கை

(Visited 61 times, 1 visits today)
 
பாத்திமா மின்ஹா

“பாத்திமா மின்ஹா”வின் கவிதைகள்

ரீங்காரம் உச்சிமுகர்ந்த இரவின் வாசனை பகல் சிந்திய அயர்ச்சியைக் களிப்புறச் செய்திருந்தது மங்கலுக்கு அடுத்த நிலை பிரகாசத்திலும் மிக குறைவு தனிமையின் திரியும் விளக்கின் ஒளியும் பேனா மைக்கிறுக்கலும் புயலென […]