என் அம்மா என்னைப் பெற்றெடுத்தபோது நாம் எமது நிலத்திலிருந்து எமது நிலத்திற்கே சென்றோம் – லூயிஸ் ஜே.ரொட்ரிகுயிஸ்-மொழிபெயர்புக் கட்டுரை- தமிழில் தேசிகன் ராஜகோபாலன்

‘ஒரு மனிதனாக இருக்க வேண்டும் என்ற புரிதலை வெகு வேகமாக இழந்துகொண்டிருக்கும் உலகை மனித விழுமியமிக்கதாக உருவாக்க முயற்சிக்கும் ஒரு சாதாரண மனிதன் நான்.’

ஜோன் ட்ரூடெல்

0000000000000000000000

2016-ஆம் ஆண்டு தேர்தல்கள் நிறைவுற்று ஒரு வாரம் கடந்த பின்னர், கலிபோர்னியாவின் சான் பிரண்டினோ பள்ளத்தாக்கு கல்லூரியின் (San Bernardino Valley College ) பெரிய அறையின் வெளிப்பக்கமாக முண்டா முழுவதும் பச்சை குத்தியிருந்த ஒரு வெள்ளைக்காரர், அந்தக் கல்லூரிக்குள் நுழைவதற்கு முயற்சித்திக் கொண்டிருந்த பெருமளவிலான கருப்புத் தோலையுடைய மாணவர்களை ஏசிக்கொண்டிருந்தார். அவர்கள் இந்த மண்ணிற்குச் சொந்தமானவர்கள் அல்லர். அவர்கள் குற்றவாளிகள் மற்றும் வேலையைத் திருடுபவர்கள் என்று கூறியபடியே சாட்டையைச் சுழற்றியவாறிருந்தார். மெக்சிகோவினருக்கு எதிரான உளுத்துப்போன கொந்தளிப்புகள் 2016ஆம் ஆண்டு ஜனாதிபதி ட்ரம்ப் மேற்கொண்ட பரப்புரையின் பின்னர் எண்ணிக்கையில் அதிகரித்துக் காணப்பட்டது.

ஜிகேனிக்ஸ் (மெக்சிகன்) மொழி பேசுகின்ற – சிறந்த பேச்சாளரான மேட் செடில்லோ( Matt Sedillo ) வையும் என்னையும் உரையாற்றுவதற்காகவும் கவிதை வாசிப்பதற்காகவும் அந்தக் கல்லூரியினர் அழைத்திருந்தனர்.  ஒரு சிலர் முன்பு உள்ளேவருவதற்கு தடையாக இருந்த வெள்ளைக்காரரை வெளியேற்ற விரும்பினர். பாதுகாப்பு உத்தியோகத்தர் ஏற்கனவே அழைக்கப்பட்டிருந்தார். அவர் உள்ளே வந்து உரையை செவிமடுப்பதையே நான் விரும்புகிறேன் என்று கூறினேன். அவர் தொடர்ந்தும் குழப்பம் விளைவிக்க விரும்பினால், நாம் அதனைக் கையாள்வோம். சுமார் நாநூறுபேர்வரை கலந்துகொண்டிருந்த அந்த அறையில் அவரும் ஒரு நாற்காலியில் அமர்ந்துகொண்டார். அவரது உடல் மட்டுமே அங்கிருந்தது. வேண்டா விருப்பாக அவர் அமர்ந்திருந்தார்.

நான் ஒரு மெக்சிகோவிலிருந்து வெளியேறியவனாக இருந்த போதிலும் நான் ஒரு குடியேற்றவாசி இல்லை என்று அங்கு குழுமியிருந்தவர்களிடம் கூறினேன். எனது அம்மாவிற்கு ராராமுரி என்று அழைக்கப்படும் மெக்சிகோவின் சிஹ_வாஹ_வா (  Chihuahua ) மாகாணத்தின் தாராஹ_வாமாரா ( Tarahumara ) மக்களுடனும் தாய்வழி உறவிருந்தது. இந்தப் பழங்குடியினருக்கு மொழிரீதியாகவும் இன்னபிற வழிகளிலும் ஹோபி, ஷோஷோன், பெயூட், டோஹோனோ ஓ ஓதாம், மற்றும் பியூப்லோ, மத்திய மெக்சிகோவின் மெக்சிகா, எல்சோல்வடாரைச் சேர்ந்த பிபில், மற்றும் நிக்கராகுவாவில வசிக்கின்ற நஹ_வாட் மொழி பேசும் பழங்குடியினருடனும் நெருக்கமான தொடர்பு இருந்தது. ( I told the group that even though I’m of Mexican descent I’m no immigrant. My mother had roots with the Tarahumara people from the state of Chihuahua, Mexico, also known as the Rarámuri. This tribe is associated linguistically, and in other ways, to the Hopi, Shoshone, Paiute, Tohono O’odham, and Pueblo, all the way down to the Mexica of central Mexico, the Pipil of El Salvador, and Nahuatl-speaking tribes in Nicaragua. In fact, they have ties in many ways with tribes throughout the hemisphere. The Rarámuri are also linked to the so-called Mogollon peoples of prehistoric times.) உண்மையில், அவர்கள் பல்வேறு வழிகளிலும் அமெரிக்காவின் அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த பழங்குடியினருடனும் உறவு வைத்pருந்தனர்.

நான் பிறப்பதற்கு சிறிது காலம் முன்னர், எனது அம்மா மெக்சிகோவில் அமைந்துள்ள சிஹ{வாஹ{வாவின் சியுடாடை ஜுயாரிஸ் சர்வதேச பாலத்தைக் கடந்து டெக்சாசின் எல் பாசோவிற்கு வந்திருந்தார். இது நடந்தது 1954ஆம் வருடம். ( my mother crossed an international bridge from Ciudad Juárez, Chihuahua, Mexico, to El Paso, Texas. The year was 1954. ) அப்பொழுது நான் இந்த உலகை எட்டிப்பார்க்கும் தருணத்தை எதிர்நோக்கியபடி  அம்மாவின் வயிற்றில் நங்கூரமிட்டிருந்த குழந்தை- அதனால்  என்ன.  ஐரோப்பாவிலிருந்து குடிபெயர்ந்தவர்களில் ஏராளமான கருவுற்ற பெண்களும் இருந்தனர். அவர்கள் எல்லிஸ் தீவில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்களில் சிலர் பிரசவிப்பதற்குத் தயாரான நிலையிலும் இருந்தனர். அதன் ஐம்பதாண்டுகால வரலாற்றில் முதன்முறையாக அங்கு 350 குழந்தைகள் பிறந்தனர். அமெரிக்காவின் சட்டத்தின்படி அமெரிக்காவில் பிறந்த குழந்தை அவர்களது பெற்றோருக்கு வதிவிட அனுமதியைப் பெறுவதற்கும் பின்னர் குடியுரிமையைக் கோருவதற்கும் உதவும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். இதற்காக ஒருவரை குற்றவாளியாக்குவதும் அல்லது தரக்குறைவாக நடத்துவதும் கீழ்த்தரமான செயல் என்பதுடன் மனிதகுலமே வெட்கித் தலைகுனியத்தக்க செயல்.

சிஹவாஹவா பாலைவனம் (  the Chihuahua desert cuts a large swath through the US Southwest and northern Mexico.) தென்கிழக்கு அமெரிக்கா மற்றும் வடக்கு மெக்சிகோ ஆகியவற்றை நீண்டதூரம் ஊடறுத்து செல்கிறது. சிஹ{ஹ{வா பாலைவனப் பிரதேசத்தில் ராராமுரி ( The Rarámuri ) மக்கள் அந்தப் பாலைவனத்தின் குறைந்த பட்ச வரலாறான எட்டாயிரம் ஆண்டுகளாக வசித்து வந்துள்ளனர். அதாவது ஸ்பானியர்கள், போர்த்துக்கேயர், ஆங்கிலேயர் அல்லது பிரான்ஸ் நாட்டவர்களுக்கு முன்னரே எல்லைகள் பிரிக்கப்படுவதற்கு முன்னரே “சட்டபூர்வ” ஆவணப்படுத்தலுக்கு முன்னரே ராராமுரி பழங்குடியினர் வசித்து வந்துள்ளனர். எல் பாசோ இந்தப் பாலைவனத்தின் எல்லைக்குள் அமைந்துள்ளதுடன், அது இரண்டு நாடுகளையும் பல மாநிலங்களையும் மேவிப்படர்ந்துள்ளது.

என் அம்மா என்னைப் பெற்றெடுத்தபோது நாம் எமது நிலத்திலிருந்து எமது நிலத்திற்கே சென்றோம்.

மாணவர்களை உள்ளே விடாமல் தடுத்து குழப்பம் விளைவித்த அந்த வெள்ளைக்காரன் எமது வாசிப்பின்போதும் உரையின்போதும் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. மெல்லச் சத்தமின்றி அந்த அறையைவிட்டு வெளியேறினான்.

நான் ஒரு உள்நாட்டுக் காரனாகவும் கவிஞனாகவும் எழுதுகிறேன். நான் உழைக்கும் வர்க்கத்தினரை அணிதிரட்டும் ஒரு புரட்சியாளனாகவும் வாழ்க்கைப் பயணங்களில் கற்பனை செய்துகூட பார்க்கமுடியாத அனுபவங்களையும், சறுக்கல்களையும், ஆபத்தான சூழ்நிலைகளையும், வெற்றிகளையும் கடந்துவந்துள்ள சிந்தனையாளனாகவும் எழுதுகிறேன்.

எனது பாதைகள் ஐக்கிய அமெரிக்கா நாடுகளில் பிரதானமாக தடம்பதித்திருந்த போதிலும் நாடுகளுக்கிடையிலும், கடல்கடந்தும், பல்வேறு மொழிகளை ஊடறுத்தும் வியாபித்திருந்தது. ஆத்மார்த்தமாகச் சொல்வதென்றால், நான் எல்லையற்றவன். இருப்பினும், செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள கடவுச்சீட்டுகள், எல்லைகள், இனம், சமூக கட்டமைப்புகள் என்பவற்றையும் நான் ஏற்றுக்கின்றேன். இந்த பூமியின் குறிப்பிட்ட பகுதிகளில் நான் வாழ்ந்திருக்கிறேன், எனது நெருங்கிய மூதாதையர்கள் நீண்ட காலமாக, இயற்கையின் நியதிகளுக்குக் கட்டுப்பட்டும் பின்னர் மனிதனால் உருவாக்கப்பட்ட சட்டத்திற்கும் கட்டுப்பட்டும் வாழ்ந்து வந்திருக்கின்றனர். அவற்றில் சில இயற்கையோடு ஒத்துப்போகின்றன, பெரும்பாலானவை ஒத்துப்போவதில்லை. எனக்கும் இது தெரியும் – நான் சர்வதேசத்தவன்.

தோல் என்ன நிறம் என்று பாராமல், பாலியல் நோக்குநிலையைக் கணக்கிலெடுக்காமல், ஆண், பெண் வேறுபாடின்றி அல்லது தனிப்பட்ட சமூகவியல் அதிர்ச்சிகளைப் பற்றி அக்கறைகொள்ளாத ஒருவனாக எனது காலடிகளை உலகின் எந்தெந்த பாகங்கள் ஏற்றுக்கொள்கிறதோ, எனது உதிரத்தை எந்த பகுதி வரவேற்கிறதோ, எனது கண்ணீரை எந்த நிலம் தாங்கிக்கொள்கிறதோ, எனது வருகையை எந்தப் பகுதி ஏற்கிறதோ அந்தப் பிரதேசம் எனதாகும். இது தாய்நிலம் அவ்வளவே. நாம் ஒவ்வொருவரும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அன்னையைப் பெற்றுள்ள அதேவேளை அவள் ஒவ்வொருவருக்கும் அன்னையாகத் திகழ்கிறாள். எனக்கு இதுவும் தெரியும்  நான் ஒரு சர்வதேசத்தவன்

நாடுகள் எல்லா இடங்களிலும் உள்ளன. ஆசீர்வதிக்கப்பட்ட தேசங்கள் அல்லது புனிதமானவை என்று யாராவது புகழ்ந்து வலியுறுத்துவாராயின், அதற்குள் வரலாற்றினூடாகவும், அரசியல் மற்றும் யுத்தத்தின் மூலமாகவும் ஏதோ மறைந்திருக்க வேண்டும். இதில் எதுவும் புனிதமானவை அல்ல. அதேபோல, உலகளாவிய முதலாளித்துவம்த்தின் பார்வையில் யுத்தம், வறுமை, வலுக்கட்டாய இடப்பெயர்வுகள், காலநிலை மாற்றம், மற்றும் இன்ன பிறகாரணிகளால் நாடுகள் கட்டுக்கோப்பின்றி ஆபத்தை விளைவிக்கக்கூடியதாகவும் ஆரோக்கியமற்றதாகவும் இருக்கின்றன.

நாம் எமது அன்னையை மீட்டெடுப்பதற்கான தருணம் வந்துவிட்டது. கடல் மற்றும் ஆகாயத்தில் தென்படும் நீலம், பூமியில் பரந்துவிரிந்திருக்கும் பச்சை ஆகிய சுற்றுச் சூழல்பற்றி நான் பேசிக்கொண்டிருக்கின்றேன். வான்வெளியில் இருந்து அனுப்பப்படும் நிழற்படங்களில் நாடு அல்லது தேசம் ஆகியவற்றிற்கான கோடுகள் இன்றி, அனேகமான பாடசாலை வரைபடங்களில் காணப்படுவதுபோலன்றி, ஒரு குறிப்பிட்ட மதத்தினரையோ அல்லது இனக்குழுமத்தையோ குறித்துக்காட்டும் பிரதேசங்களின்றி இருப்பதை உணர்த்துகின்றன. அதாவது பூமி பிளவின்றி எல்லைக்கோடுகளின்றி ஒரே பிரதேசமாக பரந்து விரிந்திருக்கின்றது. சில மதரீதியான கண்ணோட்டத்தில் கடவுளும் எம்மை அப்படியே பார்ப்பதாகச் சொல்லப்படுகிறது. யதார்த்தத்தில், இந்த முறைமையில் சூரிய ஒளியுடன் கூடிய தந்தை வானம், காற்று, மற்றும் மழை ஆகியவையும் அடங்கும். இவை அனைத்தும் எமக்கு நாம் அனைவரும் ஒரேவகையினர், எத்தனை வகையினராக இருந்தாலும் அனைத்து உயிருக்கும் சொந்தமானவர்கள் என்பதையும், இருப்பினும் ஒரே கோளின்மீது அமைந்துள்ள தாய்வீட்டில் எந்த ஒரு மனிதனோ, மனிதக் குழுக்களோ, நிறுவனங்களோ, அல்லது நாடுகளோ சொந்தம் கொண்டாடவோ அல்லது கட்டுப்படுத்தவோ கூடாது என்பதை எமக்கு நினைவூட்டுகின்றது. ஆட்சியாளர்கள் வரலாற்றில் அவ்வாறு முயற்சித்திருந்தாலும் அத்தகைய செயலில் ஈடுபடக்கூடாது என்பதையே சுட்டிநிற்கிறது.

துரதிர்ஷ்டவசமாக, இவை அனைத்திற்கும் மேலாக, நிலம், சொத்துடைமை மற்றும் அதிகாரத்திற்காக பந்தையக் குதிரை வீரராக அதிகார மோகங்கொண்டு செயற்படுவதால் ஏராளமான மக்கள் தமது உடைமைகள் முடிவிற்கு வருவதை உணர்கின்றனர். பல இலட்சக்கணக்கானோர் காணிகளிலிருந்து விரட்டியடிக்கப்படுவதுடன் தங்களது சொந்தக் கதையிலிருந்தும்  பாரம்பரிய வரலாற்றுபூர்வ அறிவிலிருந்தும் விரட்டியடிக்கப்படுகின்றனர். விரட்டியடிக்கப்பட்ட குடியேற்றவாசிகள் தாங்கள் இளைப்பாறுவதற்கும் மீண்டெழுவதற்கும் தம்மை யாராவது வரவேற்க மாட்டார்களா என்று உலகெங்கிலும் தேடித் தவிக்கின்றனர். மெக்சிகோ குடியேற்றவாசிகள் சொல்வதைப் போல, ( As Mexican migrants say, ni de aquí, ni de allá— neither from here nor from there.)  இங்கேயும் இல்லை அங்கேயும் இல்லை. இன்று ஒரு சொந்தமாக இருக்க வேண்டும் என்று பரவலான ஏக்கம் உள்ளது.

பெருமளவிலான அமெரிக்க வர்னணையாளர்கள், குறிப்பாக ஊடகத்தில் அது அரசாங்க ஊடாகமாக இருந்தாலும் அவர்கள் மத்தியில் உணர்வுபூர்வமாகவும், காலாதிகாலமாக மண்ணில் வேரூன்றி வாழ்ந்துவருபவர்களும் அரசியல் ரீதியில் முற்போக்கானவர்களுமான மெக்சிகர்கள் யார் என்பதற்கோ, ஜிகேனிக்ஸ் ( Xicanx ) யார் என்பதற்கோ எத்தகைய சான்றும் இல்லை. நாங்கள் “ஸ்பெயினிலிருந்து ஓடிவந்தவர்களாகவும்,” “வெளிநாட்டவராகவும்”, “வேற்றுக்கிரகவாசியாகவும்” அல்லது “சட்டவிரோதிகள்” என்று அழைக்கப்பட்டோம். இருப்பினும் சிலர் எமது வரலாற்றுக்கு முந்தைய பாரம்பரியத்தை அறிந்திருந்தனர், குறிப்பாகச் சொல்லப்போனால், அத்தகையவர்கள் இந்த நாட்டின் அத்தகைய கடந்தகாலத்திற்கு மீண்டும் சென்றனர். இதுவும் கூட கையில் “காகிதங்களை” வைத்துக்கொண்டிருப்பதனால் அல்ல. ஒருவரது மனிதாபிமானத்தை ஆவணங்களின் மூலம் தீர்மானிக்க முடியாது. ஆவணங்களுடன் இருப்பவர்களிலும் கூட, ஏராளமானவர்களை இரண்டாம்தரக் குடிகளாகவே தீர்மானிக்கின்றனர். காகிதங்கள் எத்தகைய உத்தரவாதத்தையும் அளிப்பதில்லை. அது முழுமையான அங்கீகாரத்தையும் மனிதனின் பிறப்புரிமையான சுயமரியாதையையும் பற்றியது.

கட்டமைக்கப்பட்ட முதல் நாடாகத் திகழும் அமெரிக்காவை அப்படியே அங்கீகரித்து அமெரிக்காவைத் தாயகமாகக்கொண்ட ஒருவரை அங்கீகரிக்க வேண்டும் என்பதை நான் உணர்ந்துள்ளேன். உருவாக்கப்பட்டுள்ள பூர்வீக தேசங்களுக்கு அது முக்கியமானது. ஏனெனில் அது இறையாண்மை சம்பந்தமானது. வரலாற்றில ஐநூறு ஆண்டுகளாக சோகங்களை அனுபவித்த பின்னர் அதிகரித்த அளவில் காலனித்துவ அடையாளங்களைப் பிரதிநிதித்துவப் படுத்துபவர்களாக மீளுருவாக்கம் செய்யப்பட்டவர்களே ஜிக்கனிக்ஸ் மக்கள். எனது பூர்வீக உறவுகளுடன் எனக்கு நேரடித் தொடர்பு இல்லாதபோதும், நான் அவர்கள் அனைவரிடமும் மீண்டும் சென்றுவிட்டேன். இப்பொழுதும்கூட, என்னை எது உள்நாட்டுக்காரனாக வைத்திருக்கிறது என்றால் எனது முன்னோர்களை அழைத்து அவர்களுடன் நிலத்தையும், நீரையும், கோளையும் பாதுகாப்பதுடன் மேலும் என்னை இயற்கையுடனும் ஆத்மாவுடனும் இணைக்கும் வழிகளையும் கடைப்பிடிக்க வேண்டும் என்ற உந்துதலே ஆகும்.

நான் உள்நாட்டவன் ஏனெனில் நான் உள்நாட்டின் விதிமுறைகளைக் பின்பற்றுகிறேன். நான் மொழி, மரபு மற்றும் உலககண்ணோட்டங்களை உள்ளடக்கிய மெக்சிகாஃராராமுரிஃ டைன் ஆகியவற்றை என்னால் முடிந்தவரை கற்கிறேன். ஆனால் ஜிகானிக்ஸாக இருப்பதால் “பழங்குடி” என்ற பட்டத்தையே என்னால் பெற முடிகிறது. நான் பழங்குடி என்ற சொல்லை இங்கொன்றும் அங்கொன்றுமாக பயன்படுத்துகின்ற போதிலும், அது உள்நாட்டவர்கள் தங்களது மொழியில் தம்மை அழைத்துக்கொள்வதைப் போன்றதல்ல. அவர்களுக்கான பெயர்கள் பெரும்பாலும் “அந்த மனிதன்” அல்லது “மானடன்” என்ற பொருளைக் கொண்டதாக இருந்தது. நானும்கூட அரசாங்க அங்கீகாரத்தை நாடவில்லை. தாயகபூமியை விட்டுக்கொடுக்காதவன் என்ற ஒரு அங்கீகாரம் மட்டுமே எனக்குத் தேவை – அவள் என்னை அங்கீகரிக்கிறாள், அனைத்து மக்களும், ஒவ்வொருநாளும் நான் நடக்கிறேன், சுவாசிக்கிறேன், நடனமாடுகிறேன.; நான் நினைத்தபடி வாழ்கிறேன். நான் சுதேசி. உண்மையான மனிதனாக வாழ்வதற்கு கலைஈ எழுத்து, பேச்சு, உதவுதல், மற்றும் ஒழுங்கமைப்பது ஆகியவற்றின் மூலம் எனது மருந்தை சுமந்து சென்று வழங்கி வருகிறேன்.

இதனை நான் எழுதும்போது, பல்லாயிரக்கணக்கான அகதிகள் அவர்களில் ஏராளமானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள். பெரும்பாலானவர்கள் எல்சால்வடோர், கௌதமாலா, மற்றும் ஹொன்டூராஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள் சிறை முகாம்களில், வார்த்தைகளால் வடிக்கமுடியாத மோசமான சூழ்நிலையில், மரணம்கூட சம்பவிக்கும் நிலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் பழுப்புத்தோலைக் கொண்ட “ஹிஸ்பனிக்ஸ்” ( “Hispanics,” ஸ்பெயின்மொழி பேசும் மக்கள் – ஸ்பெயின் நாட்டவர்கள்) அதாவது சுதேசியத்தையும் அதனுடன் ஆபிரிக்க அடியையும் கொண்டவர்கள் அல்லர். அவர்கள். கௌத்தமாலா அல்லது ஹோன்டூராஸிலிருந்தும், எல் சால்வடோரின் பிபைல்ஸ் (Pibiles , Mixtecos / Zapotecos ) மெக்ஸ்டீகோஸ் அல்லது ஸாபொடீகோஸ் அல்லது தென்மெக்சிகோவைச் சேர்ந்த மயான்கள் என்றழைக்கப்படுகின்ற அவர்கள் மத்தியில் தோன்றிய முதலாவது மனிதர்கள். அவர்களில் அனேகமானவர்கள் இன்றும் தங்களது சொந்த நாக்கினால் (மொழியில்) பேசுகின்றனர். பெரும்பான்மையினருக்கேகூட அவர்களது சுதேசிய பூர்வீகம் அறியாத நிலையிலும்கூட, அவர்கள் தமது முகங்களி;லும், கண்களிலும் தோலிலும் இதனைச் சுமந்து செல்கின்றனர்.

டிரம்ப் தனது பரப்புரையின் ஆரம்பம் தொட்டு இன்றுவரை இந்த மக்களை இலக்குவைத்துள்ளார். அவர்களை குற்றவாளிகளாகவும், பாலியல் வல்லுறவுபுரிபவர்களாகவும், அதற்கும் ஒருபடி மேலே சென்று மிருகங்கள் என்றும் கூறிவருகிறார். அது தவறானது – அவர்களில் பெரும்பாலானவர்கள் பல மாதங்களுக்கு முன்பே தங்களின் மோசமான பயணம் குறித்தும் தாங்கள் அரசியல் புகலிடக் கோரிக்கையாளர்கள் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளனர். அது அமெரிக்கா மற்றும் சர்வதேச சட்டங்களின்படி சட்டத்திற்குட்பட்டது. அத்தகைய தஞ்சக் கோரிக்கைக்கு தொடர்ந்தும் தடைகளை ஏற்படுத்தும் அமெரிக்காவே சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது.

மறுபடியும், ஏனையோரைப் போன்றே இந்த நாட்டில் நன்கு வேரூன்றிய மக்களை எப்படி அந்நியர்களாகக் கருத முடியும்? இது பட்டவர்த்தமான சந்தேகத்திற்கு இடமற்ற இனவெறி (இனவெறிக்கொள்கை எப்பொழுதும் வெளிப்படையாகவும் எளிமையாகவும் இருப்பதில்லை என்ற போதிலும்). கடந்தகால வரலாற்றைப் போலவே, இனவாதிகளும் அவர்களுடன் சேர்ந்து பொய்யுரைப்பவர்களும் தற்போது பழுப்புத் தோலையுடைய, பெருமளவில் உள்நாட்டைச் சேர்ந்த அந்த மண்ணின் மக்களை ஒன்றுமில்லாதவர்களாக்கிவிட்டு அவர்களின் தலையில் அனைத்தையும் சுமத்திவிட்டனர்.

எல்லைகள் மற்றும் நம்பிக்கைகள் ஆகிய இரண்டும் மனிதனால் உருவாக்கப்பட்ட ஒருவித மனநோய். பல நூற்றாண்டுகளாக இவையே கொள்கைகளை வகுத்துச் செயற்படுவதிலும் யுத்தங்களுக்கும், படையெடுப்புகளுக்கும் ஒடுக்குமுறைக்கும் பின்னணியில் இருக்கின்றன. இயற்கைக்காகவும் எமது அன்னைக்காகவும், எமது தொடர்புகளுக்காகவும் உறவுகளுக்காகவும் எது எமக்கு உண்மையான உயிரைக் கொடுத்ததோ அதற்காகவும் நாம் திரும்பப் பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதனாலேயே அது உண்மையானது: நாம் உரித்துடையவர்கள் ஏனெனில் இது எமக்குச் சொந்தமானது. எந்த மனிதனாலும் இதனை நிறுத்தவோ மட்டுப்படுத்தவோ முடியாது.

எமது தாய் பூமி, தந்தை வானம் இவற்றிற்கு இடையில் இருப்பவை அனைத்தும் எம் அனைவருக்கும் பொதுவானவை; நம் அனைவருக்கும் அத்தியாவசியமானவை; அவற்றை எவருமோ அல்லது எதுவுமோ ஒருபோதும் தமக்குச் சொந்தமாக்கிக்கொள்ளவோ கட்டுப்படுத்தவோ முடியாது.

மூலம் : தி வேர்ல்ட் லிட்ரேச்சர் ருடே

00000000000000000000000000

ஆசிரியர் குறிப்பு:

லுயிஸ் ஜே. ரொட்ரிகுயிஸ் கவிதை, புதினம், உண்மைகள் மற்றும் சிறுவர் இலக்கியங்கள் என பதினைந்து புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். அவர் டியா சுஹவா (Tia Chucha Press) அச்சகத்தின் நிறுவன ஆசிரியராகத் திகழ்வதுடன், co-founder of Tia Chucha’s Centro Cultural & Bookstore, and Los Angeles’s former Poet Laureate. Seven Stories Press will publish his latest book in early 2020.  ஏழு கதைகள் பதிப்பகம் இவரது புதிய புத்தகத்தை 2020ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் வெளியிட உள்ளது.

தமிழில் : தேசிகன் ராஜகோபாலன் – இலங்கை

(Visited 81 times, 1 visits today)