நேர்காணல் மொழிபெயர்ப்பு-ஃபாடியா ஃபக்கீர்-தேசிகன் ராஜகோபாலன்

“நகர்ப்பகுதிகளில் இடம்பெறுகின்ற கலந்துரையாடல் அரேபியர்களை மனிதகுலத்திற்கு எதிரானவர்களாகவும் ‘ அசையாச் சொத்துக்களுக்கு’ அவர்கள் ஏற்படுத்துகின்ற அழிவுகளை நியாயப்படுத்தும் விதத்தில் அவர்களை மறைப்பதை நோக்கமாகக் கொண்டிருக்குமானால் கனவு புனைவுகளும் எழுத்தும் அரேபியர்களை மட்டுமன்றி, ஆங்கிலேயர், அமெரிக்கர்கள், இந்தியர்கள் மற்றும் ஏனையோரையும் மனிதர்களாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட உங்களுக்கு மிகவும் தெரிந்த ஒருவரை சுடுவது மிகவும் கொடூரமானது”.

ஃபாடியா ஃபக்கீர்

000000000000000000000000000000

அறிமுகம் :

தேசிகன் ராஜகோபாலன்இந்தக் நாவலை ஒரு மனித ஆளுமை வடிவமாக ஃபாடியா ஃபாக்கிர் நரகத்தின் வருகிறார், இலக்கியத்தின் மேலும் ஒரு சமூக மாற்றத்தை உருவாக்கும் தன்மையைப் பிரதிபலிக்கிறார். இலக்கியத்தின் அண்மைக்கால நெறிமுறைகளின் தானா அறிவுகூர்மையை இது பிரதிபலிக்கிறது, குறிப்புகள் நாவலானது குடியுரிமையுடன் மகள் நெருங்கிய தொடர்புடைய விடயங்களான “புரிந்துணர்வு மற்றும் அனுதாபம்” (“பொயடிக்” 10) என்பவற்றைக் கொண்டு இந்தக் புதினம் தயாரிக்கப்பட்டுள்ளது “ எனும் மார்தா நஸ்ஸ்பாம் கூற்றை எதிரொலிப்பதாக உள்ளது. ஃபாக்கிர் மூன்று நாவல்கள், எண்ணற்ற சிறு கதைகள் மற்றும் நாடகங்களைப் படைத்துள்ளார். அவள் விமர்சன கட்டுரைகளை எழுதுவதுடன், பல்வேறு படைப்புக்களை திருத்தியும் மொழிபெயர்த்தும் வழங்கியுள்ளார். அதிலும் குறிப்பாக  அரேபியபெண் எழுத்தாளர்கள் வரிசையில் ஒரு சிரேஷ்ட ஆசிரியராகத் திகழ்கிறார். ஜோர்டானில் பிறந்த ஃபாக்கிர்; 25 ஆண்டுகள் பிரிட்டனில் வாழ்ந்துள்ளார். அவரது  படைப்புக்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் இருந்தாலும், அதனை சர்வதேச மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. அவரது சமீபத்திய மை நேம் இஸ் சல்மா (2007), நாகரீக வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு திருமண பந்தத்திற்கு வெளியில் கர்ப்பம் தரித்த காரணத்தினால் அவளை அவளது குடும்பத்தினரே லெவண்ட்டில் வீட்டு விட்டு வெளியேறுகின்றனர். வந்த இவள் அரேபிய அபலைப் பெண்ணின் அனுபவத்தை ‘மை நேம் இஸ் சல்மா’விவரிக்கிறது, “மை நேம் இஸ் சல்மா”வின் தன் விவரம் பெரும்பாலும் பிரிட்டனில் அமைக்கப்பட்டு, கதாபாத்திரத்தின் கடந்தகால நிகழ்வுகளை அசைபோடுவதன் மேலும் வடிவமைக்கப்பட்டுள்ளது, ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்காக எக்ஸிடெட்டருக்கு வரும் முன்னர் சிறையில் ஒரு தற்காலிக அகதியாகவும், லெபனானில் ஒரு கான்வென்ட்டில் இருந்துகொண்டும் விவரிக்கிறார்,.

பின்வரும் நேர்காணலில் நான் இந்த நாவலைப் பற்றி ஃபாக்கிரிடம் கேட்கிறேன். இது அமெரிக்காவின் தி க்ரை ஆஃப் த டோவ் எனப் பிரசுரிக்கப்பட்டது.ஆரம்பத்தில் தலைப்பு மாற்றத்தை அவர் எவ்வாறு எதிர்த்தார் என்பதைப் பற்றி ஃபாகிர் விவரிக்கிறார், மேலும் புத்தகங்களின் அழகியல் தோற்றம் நாடுகளுக்கிடையில் வேறுபடுவதால் அவற்றின்மீதும் சிறிய கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கிறார். அரேபிய உலகத்தைப் பற்றிய ஒரே மாதிரியான தன்மைகளை தொடர்ந்தும் மொழிபெயர்த்தல், புத்தக வர்த்தகத்தில் நிலவும் கமிஷன் ஆகிய போக்குகளை அவர் கடுமையாக விமர்சித்து வருகிறார்,. ‘தெரிவு செய்தல் என்பது ஒரு வகையில் நீக்கும் செயலாகும்’ என்று அவர் குறிப்பிடுகிறார். ‘பலமொழிகள் பயன்பாட்டில் உள்ள ஒரு நாட்டில் ஆங்கிலம் பேசுபவர்களை இலக்காகக் கொண்டு வெளிவரும் அரேபிய பெண்களின் கதைகளை ஒரே மாதிரியான பிம்பங்களைப் பிரதிபலிப்பதிலேயே அதன் விநியோகம் தங்கியுள்ளது. இது அவர்களது விளக்கங்களுக்கு அப்பால் புத்தகங்களின் ஆயுள் பற்றிய கேள்விகளை எழுப்புகிறது. காலனியாதிக்கத்திற்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்குள் குறைபாடுகள் இருந்தன, இது பொருள்சார் நூல்களைப் பற்றிய முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது.  குறிப்பாக தற்போது ஊடகங்கள் மற்றும் அரசாங்க உரையாடல் தளங்களில் ‘இஸ்லாமியம்” மீது தொடர்ந்து கவனம் செலுத்துவதன் காரணமாக இது அவசியமாகின்றது. எட்வர்ட் செயத் என்பவர் கவரிங் இஸ்லாம் (1997) என்னும் கட்டுரையில் வலுவான விமர்சத்தை வைத்துள்ளார். செயத் ஆவணப்படுத்தியிருக்கும் மத அடிப்படைவாதப் பதிவில், ஒரே மாதிரியான உருவங்களை உருவாக்கி, உள்ளூர் சூழ்நிலைகளை அழித்து, நாம் பெறும் எழுத்துக்களுக்கு ஒப்புதலளிக்கிறது. விவரணங்களின் தன்மையில் பாரிய வேறுபாடுகள் இருக்கின்ற போதிலும் முக்காடிடப்பட்ட உருவங்கள், பாலைவனங்களில் தனிமைச்சிறையில் வாடுகின்ற பெண்கள் ஆகியவையே சமீபத்திய அரேபிய ஆங்கில இலக்கிய சந்தையை ஆக்கிரமித்துள்ளன.

லெயிலா அபுலிலா, அஹத்ஃப் சவுபி மற்றும் டயானா அபு-ஜபர் ஆகியோரின் வர்த்தகரீதியிலான புதினங்களின் படைப்பை மேலோட்டமாகவோ அல்லது ஆழமாகவோ அணுகினால், அவை அரேபிய அல்லது இஸ்லாமிய பெண்கள்படும் துன்பம் உண்மையானவை என்பதை உறுதிப்படுத்துகின்றன. ஃபாக்கர் இத்தகைய பிரதிநிதித்துவங்களை சவாலுக்குட்படுத்துவதில் தீவிரமாக இருக்கிறார். மேலும் தனது புதினங்களின் சந்தைப்படுத்தல் என்பது ‘முழுவதும் தனித்தன்மைவாய்ந்தது’ என்று விளக்கமளிக்கிறார். அவரது பதில் எமக்கு செயதின் விமர்சனத்தை பாதுகாத்து, விரிவுபடுத்துவதற்கான அவசரத்தை நினைவூட்டுகிறது. குறிப்பாக காலனியாதிக்கத்திற்குப் பின்னரான காலப்பகுதியின் கலை மற்றும் இலக்கியம் என்பவை நியூயார்க்கில் அமைந்துள்ள உலக வர்த்தக மையத்தின்மீது 2001ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பின்னர் அதன் ஆக்கம் மற்றும் வரவேற்பு ஆகியவற்றை வெளிக்கொணர்வதாக அமைகிறது. ஏராளமான விமர்சகர்கள் ‘அரபு’ ‘மத்திய கிழக்கு’ மற்றும் ‘இஸ்லாம்’ ஆகியவற்றின் கலை மற்றும் இலக்கியத்தில் இத்தகைய தாக்குதல்களின் பின்னர் உடனடியாக நிகழ்ந்துள்ள வளர்ச்சியை விமர்சித்துள்ளனர்.  நாகரிகங்கள் குறித்த வாய்த்தர்க்கத்தில் ஈடுபடுவதைவிட, இத்தகைய படைப்பு ‘இஸ்லாம்’, ‘அரேபியர்கள்’ ‘மத்திய கிழக்கு’ போன்ற சொற்பிரயோகங்களால் அரபு உலகத்தை சிறுமைப்படுத்தக்கூடிய நுகரத்தக்க தோற்றத்தை வழங்குகிறது. சாலி ஹோவெல் மற்றும் ஆண்ட்ரூ ஷிரோக் ஆகியோர் டெட்ரோய்ட்டில் உள்ள அரேபிய அமெரிக்கர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் மனோநிலையில் சடுதியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் அடைவு மட்டத்தில் நின்று மதிநுட்பத்துடன் இந்த விடயத்தை விபரிக்கின்றனர். 9/11 காலத்திற்குப் பின்னர்,அமெரிக்காவுடன்; தொடர்புடைய அரேபிய மற்றும் முஸ்லிம் நாடுகளுக்கான பன்னாட்டு உறவுகளில் அமெரிக்காவில் தங்களது உடைமைகளையும் சமூக மீளுருவாக்கத்தையும் வலுப்படுத்திக்கொள்வதற்கான இடங்களில் மட்டும் (‘இனச் சமூகங்கள்’ என்ற பெயரில்) (‘புலம்பெயர் நாடுகளைத் தகர்த்தல்’ 459) மேற்கொள்வது ஏற்புடையது. டெட்றோயிட்டில் வசிக்கும் சாதாரண குடிமக்களை ‘இஸ்லாம்’ மற்றும் ‘அரேபியர்’ என்ற போர்வையில் குடியேறியவுடனேயே இங்கு சமூகங்களுக்கிடையில் சிக்கலும் பகிரப்பட்ட வரலாறுகளும் பொறுப்புக்கூற வேண்டியவர்களாக மாற்றிவிடுகின்றன.

ஃபாக்கிரின் மை நேம் இஸ் சல்மா என்னும் நூலின் சந்தைப் படுத்தல் தொடர்பான விமர்சனத்தில் எவ்வாறு ஒரு உடல்ரீதியான புத்தகம் ஒரே மாதிரியாக செல்வாக்கு செலுத்த முடியும் என்பதை உணர்த்துகிறது. ஆகவே சர்வதேச அம்சங்கள் தேசிய கற்பிதங்களுடன் திரண்டு மோதுகின்றன, இவை புரிந்துகொள்ள முடியாத விரிவான வரலாற்று அரசியல் கேள்விகளாக உள்ளன. இவை உண்மைத்தன்மையைப் பிரதிபலித்து ஒரே கலாசாரத்தைப் பின்பற்றுபவர்களுக்கு இடையிலும் பல்வேறு கலாசாரங்களைப் பின்பற்றுபவர்களுக்கிடையிலும் தொடர்ச்சியான கலந்துரையாடலுடன் பிரதிபலிப்பதற்குப் பதிலாக கற்பனையில் உதித்த பாரிய கலாசாரங்களுக்கிடையிலான எல்லைகளை நிர்மாணிக்கின்றன என்பதை ஃபாகிரின் விவரணங்களில் பிரதிபலிக்கின்றன. காலனித்துவ ஆட்சியின் உரையாடல்கள், நேரடியாக ஃபாக்கர் மற்றும் ஜோர்டானில் உள்ள அவரது குடும்பத்தாரையும் நேரடியாக பாதித்திருந்ததுடன், அத்தகைய அச்சுறுத்தலான கலாசார பிம்பங்களின் அலங்காரங்களில் தங்கியிருக்கச் செய்திருந்ததுடன், சமூகங்களுடன் பின்னிப் பிணைந்த உண்மைகளை மறுத்தது. புத்தக வர்த்தகத்தைத் தொடர்ந்தும் குழப்புகின்ற இத்தகைய வடிவமைப்புகள் காலனியாதிக்கத்திற்குப் பின்னரான இன்றைய ஆய்வுகளின் தேவையின் அவசரத்தை உணர்த்துகின்றன.

ஆரம்பகாலத்தில் தோன்றிய நம்பிக்கையின் அடிப்படையிலான கூற்றுக்கள் காலனித்துவ காலத்திற்குப் பிந்திய ஆய்வுகளின்மீது விமர்சனத்தை முன்வைக்கின்றது. ஆனால் இதற்கு மாற்றாக ஃபாகிரினால் வெளியிடப்படும் கருத்துக்களை நோக்கியும் வரட்டுத்தனமானதும் முரண்பாடாதுமான கருத்துக்கள் எழுகின்றன. ஃபாகிரின் விமர்சன படைப்புக்கள் மற்றும் வர்ணனைகள் அவரது அரேபிய பெண்களின் படைப்பு மற்றும் உரிமைகளை பிரதிநிதித்துவப் படுத்துவதற்கான அவரது விருப்பை வெளிப்படுத்துவதுடன், அவரே தனது நேர்காணலின் மூலம் தன்னை ஒரு கலப்பு கலாசாரத்தைப் பின்பற்றுகின்ற பகுதியளவில் சிறந்த சர்வதேச எழுத்தாளர் என்றும் தனக்கென்று ஒரு தனியான கலாசாரம் அற்ற பல் கலாசார சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும் தன்னை அடையாளப்படுத்துகின்றார். இன்றிலிருந்து முப்பதாண்டுகளில் மொழிகளுக்கிடயிலான எல்லைகள் குழப்படைந்து, ஆங்கிலத்துடன் வேறுமொழி கலந்து ஏனைய மொழிகளின் அல்லது கலாசாரங்களின் எல்லை அல்லது அதன் பண்பு சுருங்கிவிடும் என்று ஃபாகிர் எதிர்வு கூறுகின்றார். அவரது அவதானமானது டிம் பெரினனின் பரந்தளவில் மேற்கோள் காட்டப்படும் உள்ளுர், மாகாணம் மற்றும் நாடு என்பதைக் கடந்தும் புதியனவற்றில் அதிசயிக்கத்தக்கதாகவும் உருவாக்கப்பட்ட இரண்டரக் கலந்ததும் வேறுபடுத்திப் பார்க்க முடியாதவாறு இணைந்தும் ஒரே பொருளாக உருவெடுத்துள்ளது.

எவ்வாறாயினும் கலாசாரங்களுக்கிடையில் கட்டியெழுப்பப்பட்டிருக்கும் நகரவாழ்க்கை எத்தகைய வெளித்தோற்றத்தைக் கொண்டிருக்கின்றது என்பதையும் யதார்த்தத்தில் அது சலுகை வழங்கப்பட்ட நிலையில் தங்கியிருக்கிறது என்பதையும் ஏற்கனவே பழக்கத்தில இருக்கும் கலாசாரத்திலிருந்தே அறிவுஜீவிகள் மற்றும் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த பயணிகள், ஆய்வாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் ஆகியோரால் அது துளிர்விடுகிறது என்பதை பெர்னன் தெளிவாகப் படம்பிடித்துக்காட்டுகிறார். சலுகையுடன் நன்கு போஷித்து வளர்க்கப்பட்ட காலனித்துவத்தின் பிரத்தியேக இடத்தை ஃபக்கிர் தனது நேர்காணலில் விமர்சிப்ப்பதுடன் சலுகைகள் வழங்கபட்ட பாத்திரங்களை தமது படைப்பில் அவர் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. ‘நான் மத்தியதர, பணக்கார அல்லது சலுகை வழங்கப்பட்ட எத்தகைய கதாபாத்திரத்தையும் கொண்டிருக்கவில்லை. சமூகத்தின் அத்தகைய பரிவானது ஒரு போதும் எனது கவனத்தை ஈர்க்கவில்லை.’ மறுதலையாக, எவ்வாறறிருப்பினும் பக்கிர் வெளிப்படையாகப் பேசுவதற்கு அத்தகைய சலுகை பெற்ற இடத்தை நிரப்ப வேண்டியிருந்தது.

நகரத்தில் வாழ்கின்ற குடிமக்கள் தங்களது சுயநலன்களுக்கு அப்பால் சென்று, சமூகக் கட்டமைப்பிலுள்ள ஏற்றத்தாழ்வுகள் குறித்து சுயவிமர்சனம் செய்துகொள்ள வேண்டும் என்று பென்னன் வேண்டுகோள் விடுக்கிறார். இந்த விமர்சனப்பார்வை இல்லத்திலிருந்தே தொடங்குகிறது என்றும் அதற்கு அதிகமான சகிப்புத்தன்மையும் புரிந்துணர்வும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்துகிறார். புரிந்துணர்வை வலியுறுத்தும் நுஸ்பாமுக்கும் அப்பால் சென்று ஃபக்கிர் இந்த நிலைகளுக்கிடையில் நிலவுகின்ற பதற்றத்தை விவாதிக்கின்ற அதேவேளை, வெளிப்படைத்தன்மையான சுய விமர்சனமும் அவசியம் என்பதையும் வலியுறுத்துகிறார். மேலும், அரபு உலகத்தை மாற்ற வேண்டும் என்னும் தனது உறுதியான விருப்பத்திற்காக ‘ஒவ்வொருநாளும் தான் ஒரு இறுக்கமான கயிறின்மீது’ நடப்பதாகவும் தான் ஏற்றுக்கொண்டு நுகர்கின்ற சர்வதேச கலாசாரத்திரத்தில் உள்ள முரண்பாடுகளையும் அவர் அனுபவிப்பதாகவும் கூறுகிறார்.  சர்வதேசக்கொள்கையானது உலக அரசாங்கம் மற்றும் உலக குடிமக்கள் என்னும் கோட்பாட்டை வலியுறுத்துகிறது. அதில் கலாசாரம் என்பதற்கான பொருள்கோடலானது அதன் அரசியலையும் ஒரு அங்கமாக்க வேண்டும் என்று பிரன்னன் அறிவுறுத்துகிறார். ஒரு இடப்பெயர்வை ஹோவெல் மற்றும் ஷ்றியோக் ஆகியோர் 9/11க்குப் பின்னரான நடவடிக்கைகளை கோடிட்டுக்காட்டுகின்றனர். ஃபக்கிர் அவற்றை பற்றிப்பிடித்தும் ஒதுக்கித் தள்ளியும் இரண்டையும் இணையாகப் பார்க்கிறார்.

காலனித்துவத்திற்குப் பின்னரான இலக்கியத்தில் கலாசாரத்திற்கு வழங்கப்படும் சிறப்புத்தன்மைக்கான வரவேற்பானது எளிதில் புரிந்துகொள்ள முடியாததும், கடினமான வரலாற்று மற்றும் அரசியல் கேள்விகளை உள்ளடக்கியும் இருக்கின்றன. மேலும், ஆசிரியரின் பாரம்பரிய கலாசாரத்தை முன்னிறுத்தி, கலாசாரம் குறித்த ஆய்வின் துல்லியத்தன்மைக்குச் சாதகமான இலக்கியப் பகுப்பாய்வுகளை ஓரம்கட்டிவிடும். அரேபிய பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் ஃபாக்கிரின் நாட்டமானது கலாசாரம் என்ற போர்வையில் அரேபிய பெண்களை ஒரேமாதிரியாகக் காட்ட முற்படுவதை எதிர்ப்பதிலும் தங்கியிருந்தது. இத்தகைய ஒரேமாதிரியான சித்திரிப்பை எதிர்க்க வேண்டும் என்றும் நாம் பார்ப்பதுபோல், சர்வதேச கலாசார மேலாண்மையை நிலைநாட்டுவதற்காக நாம் இதனைச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் ஃபாக்கிர் தான் அரேபிய பெண் எழுத்தாளர்களின் வரிசையில் இதனைத் தொடங்கியதாகவும் கூறுகிறார். அவரது விமர்சனப் படைப்புகள் அரேபியப் பெண்களை பாதிக்கப்பட்டவர்களாகக் காட்டும் வெற்று ஆரவாரத்தை வலிமையான சவாலுக்குட்படுத்துவதுடன், அவமதிப்புக்குள்ளாகும் அரேபியப் பெண்களே அவரது புதினத்தின் பிரதானமான கதாபாத்திரமாகவும் அமைகின்றன. உதாரணமாக, ‘மை நேம் இஸ் சல்மா’ என்னும் நாவல் கௌரவக் கொலையை விபரிக்கிறது. நான் ஃபக்கீரிடம் இதைப்பற்றிக் கேட்டபோது, கௌரவக் குற்றங்கள் ஒரு குறிப்பிட்ட கலாசாரங்களுக்கு மட்டும் பிரத்தியேகமானதல்ல என்றும் தனது விவரணம் முழுவதையும் கவனத்தில் எடுக்கும்படி தமது வாசகர்களை வேண்டுவதுடன், அத்தகைய கவனங்களின் பெரும்பான்மையானவை பிரித்தானியாவில் குடியேறியவர்கள் முகங்கொடுப்பவை என்ற உண்மையை பட்டியலிடுகிறார். இதற்கு மாறாக, லேவன்டில் நடக்கும் காட்சிகளையும் கௌரவக் கொலைகளையும் முதன்மைப்படுத்தி கற்பனையில் எழுதப்படும் புதினங்களே சந்தைப்படுத்தப்படுகின்றன. ஃபக்கீரின் படைப்பை அவரது பாரம்பரிய கலாசாரத்துடன் ஒப்பிட்டு ஆராய்கையில் ஒட்டுமொத்த கலாசாரத்தையும் ஒரு எதிரியின் கூட்டில் இருந்துகொண்டு கண்டனத்திற்குட்படுத்தும் ஒரு பெண் எவ்வாறு ஒரு குறிப்பிட்ட குடும்பச் சூழலை விமர்சிக்கிறார் என்ற குழப்பம் ஏற்படுகிறது. இந்த அணுகுமுறை ஏனைய பின்காலனித்துவ எழுத்தாளர்களின் அனுபவத்தைப் போன்றே ஃபக்கீரின் எழுத்துக்களும் அனைத்து அரபு எழுத்துகளும் திட்டங்களும் ஒரு சுமையையே பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றன.

ஃபக்கீர் வெளியிடும் கருத்துக்கள் இன்றைய பின்காலனிய எழுத்தாளர்கள் முகங்கொடுக்கும் சில குழப்பங்களை வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றன. படைப்புகளை விற்பனை செய்வதற்கு சந்தையும் அவசியமாக இருப்பதால் அது ஃபாக்கீர் போன்ற எழுத்தாளர்களிடமிருந்து சமரசப்போக்கை எதிர்பார்க்கிறது. ஃபக்கீர் குறிப்பிட்ட நிகழ்வுகளை முதன்மைப்படுத்தும் போக்கை கைவிட்டு அதற்கு மாறாக, தனது எழுத்தின் மூலம் தற்போதைய புத்தக வர்த்தகத்தின் போக்கை எதிர்ப்பதற்கான பொருத்தமான தருணத்தை எதிர்நோக்கியுள்ளார். அவர் அரேபிய பெண்களுக்கான படைப்புகளின் நம்பகத்தன்மைக்கான கோரிக்கையை ஏற்க மறுப்பதுடன் ஒரு சர்வதேச உணர்வினூடாக தற்போது நிலவும் அரேபிய எழுத்தாளர்களுக்கிடையிலான ஒற்றுமையைக் கட்டியெழுப்புவது அவசியம் என்று வலியுறுத்துகிறார். இந்த நிலையை ஆக்கிரமித்துள்ளதைப் பற்றிப் பேசுவதற்காக அவர் சிறப்புரிமைக்கு எதிராக எழுதுகிறார். தெளிவின்றிருக்கும் இந்த நிலைப்பாட்டின் எல்லையைக் கடந்து, முதலாளித்துவத்துடன் இணைந்துள்ள ஏகாதிபத்திய விஸ்தரிப்பு ஆபத்தை பகிரங்கமாக எதிர்ப்பதற்கான விவாதமும் அவசியம் என்று வலியுறுத்துகிறார்.  இந்த நேர்காணல் அத்தகைய பதற்றங்களையும் ஆழமான வடுக்களை ஏற்படுத்தும் குழப்பங்களையும் ஃபக்கீர் தனது புதினத்தின் ஊடாக தொடர்ச்சியாக விவாதிப்பதைப் போன்றே அவரது வாசகர்களும் அவரது வாழ்க்கையும் அவர் எழுத்துக்கும் மேலானது என்பதை வெளிப்படுத்துவதுடன், அன்பையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்துகிறது.

எனக்கும் ஃபக்கீருக்கும் இடையில் 2009ஆம் ஆண்டில் இடம்பெற்ற மாநாடுகளிலும் கருத்தரங்குகளிலும் நடைபெற்ற பல்வேறு சம்பாஷனைகளைத் தொடர்ந்து மின்னஞ்சல் தொடர்பின் மூலம் இந்த நேர்காணல் மேற்கொள்ளப்பட்டது.

றஷல்போவர் 

தேசிகன் ராஜகோபாலன்

000000000000000000000000000000000000

நீங்கள் பிறந்து வளர்ந்த உங்களது தாய்நாடான ஜோர்தானுக்கும் உங்களுக்கும் இடையிலான பௌதீக உறவைப்பற்றி கொஞ்சம் விபரிக்கவேண்டும். நீங்கள் பிரித்தானியாவில் 25ஆண்டுகளாக வசிக்கின்றீர்கள். மேலும், உங்களது படைப்புகள் பிரதனமாக ஆங்கிலத்தில் இருக்கின்றன. உங்களது புதினங்கள் மொழிபெயர்க்கப்பட்டு சர்வதேச அளவில் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக உங்களது மிக அண்மிய நாவலான மை நேம் ஈஸ் சல்மா 16 நாடுகளில் வெளியிடப்பட்டு 13மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஒருசர்வதேச எழுத்தாளரான நீங்கள் உங்களைப் பற்றி என்ன கருதுகிறீர்கள் என்பதையும் உங்களது நாவல் ஜோர்தானில் வாசிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்த உங்களது உணர்வையும் அறிய விரும்புகிறேன்.

நான் ஜோர்தானில் உள்ள ஏமானில் பிறந்து வளர்ந்தபோதும் நான் பௌதீகரீதியில் அங்கு வசிக்கவில்லை. ஜோர்தான் எனது மூளையில் பதிந்துள்ள ஒரு இடம். பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் பெற்ற ஆண்டில் ஒரு ஏழ்மையான ஆனால் உயிரோட்டமிக்க கிழக்கு ஏமானில் நான் பிறந்தேன். எனது கடந்தகால நினைவில் கோதுமையால் சூழப்பட்ட குன்றுகளும் அதன் அருகே முட்கம்பி வேலியிட்டு, நாய்களும் காவலர்களும் தோட்டமும் இருந்த ஒரு பெரிய ஆங்கில கிளப்பும் நிழலாடுகின்றன. அதற்குள் ஜோர்தான் குடிமக்கள் உட்செல்ல முடியாது. மேலும் அது அழகாகவும் கவர்ச்சியாகவும் புதிர்கள் நிறைந்ததாகவும் உருவாக்கப்பட்டிருந்தது. நாங்கள் எவ்வளவோமுறை அதனுள் செல்வதற்கு முயற்சித்தோம். ஆனால் காவலர்கள் எங்களைப் பிடித்துவிட்டனர். ஆண்பிள்ளைகளை தடியால் அடித்தனர். இந்த பிம்பமே என்னுடன் தனித்துவமான காலனித்துவத்தின் இடைவெளி எஞ்சி இருப்பதற்கும், அவை எனது எழுத்துக்களில் மீண்டும் தோன்றுவதற்கும் வசதியாக இருந்தது. நான் நாடோடி அரேபியர்களுடனும் வசித்துள்ளேன். அவர்கள் பின்னர் கால்நடை மேய்ப்பவர்களாகவும், பயிர்களை அறுவடை செய்பவர்களுமாகவும் கோதுமையை மாவாக அரைப்பதற்காக பயணிப்பவர்களுமாக அரைநாடோடிகளாக மாறினர். பில்லர்ஸ் ஓவ் சால்ட் (1966) என்னும் நாவல் மாஜிக் நிலஅமைப்பையும் அரேபிய நாடோடிகளின் புனிதமான வாழ்க்கைமுறை வேகமாக மறைந்துவருவதைத் தடுப்பதற்காகவும் எழுதப்பட்டது. ‘சர்வதேச எழுத்தாளர்’ என்னும் சொற்பதம் என்னைப் பொறுத்தவரை எனது உண்மையான எழுத்தில் அது ஓரளவிற்கே பொருந்துகிறது. இன்னமும்கூட எனது புதினத்தை 14மொழிபேசும் மக்கள் படிக்கின்றனர் என்பதை ஏற்றுக்கொள்வது கடினமாக உள்ளது. மேலும், என்னைப் பொறுத்தவரை அது ஜோர்தானில் வாசிக்கப்படுவது மிகவும் அவசியம். மை நேம் ஈஸ் சல்மா இப்பொழுது அரேபியமொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டு இப்பொழுது அங்கும் கிடைக்கிறது. அங்கு அது சிறப்பான வரவேற்பைப் பெற்று வாசிக்கப்படும் என்று நான் நம்புகிறேன்.

 

வெளியீட்டாளர்கள் அவ்வப்போது ஒரு குறிப்பிட்ட வகையான இலக்கிய அழகியல் படைப்புகளையே அரேபிய எழுத்தாளர்களிடமிருந்து கோருகிறார்கள் என்று முன்னர் கூறியிருந்தீர்கள். இந்நிலையில் எது உங்களைசுயசரிதையையும் பெண்களை பாதிக்கப்பட்டவர்களாகவும் சித்திரிக்கும் உண்மையான எழுத்துக்களை மொழிபெயர்ப்பதற்கும் எல் சாடவிEl Saadawi’s )   வுமன் அட் பொயின்ட் சீறோ ( Woman at Point Zero- 1975) என்னும் பிரசித்தி பெற்ற நாவலின் விற்பனையைப்போல் சந்தைப்படுத்த வேண்டும் என்றும் தோன்றியது. உங்களால் அரேபிய பெண்களுக்கான எழுத்தாளர்களின் எழுத்துக்களை இலக்கிய வடிவில் விமர்சிக்க முடியுமென்றால், இலக்கிய எழுத்துக்களில் அரசியல் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றை மனதில் கொண்டு உங்கள்மீது பதிப்பகத்தார் வரையறைகளை திணிப்பர் என்று நம்புகையில் உங்களால் எப்படி அவ்வாறு எழுத முடிகிறது என்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இலக்கிய நிறுவனங்கள் ஆங்கில வாசகர்கள் பெறுவதைப்போன்ற உண்மையான மொழிநடையையும் எழுத்துக்களையும் எந்த அளவிற்கு உள்வாங்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ?

அரேபிய பெண் எழுத்தாளர்கள் இன்று சமூக யதார்த்தம் தொடங்கி பின் நவீனத்துவம் வரையில் எண்ணற்ற வகையிலும் வடிவிலும் எழுதுகிறார்கள். இருப்பினும் அந்த எழுத்துக்கள் பெருமளவில் அரேபிய பெண்களை பாதிக்கப்பட்டவர்களாகவோ அல்லது ஒடுக்கப்பட்டவர்களாகவோ அல்லது அவ்வாறு அவைகள் சந்தைப்படுத்தப்படுவதாகவோ அமைகின்றன. அரேபியர்களால் எழுதப்படுகின்ற சிக்கலான எழுத்துக்களை ‘வாயில் காவலர்கள்’ தேர்ந்தெடுப்பதில்லை என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அரேபிய பெண் எழுத்தாளர்களின் வரிசைகளில், நான் திருத்தியவற்றில், பல்வேறு மொழிகள் புழக்கத்தில் உள்ள நாடுகளில் முக்கியமானதும் நூதனமானதுமான புதினங்கள் மேற்கத்திய ஆங்கில வாசகர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கான ஒரு முயற்சியாக இருந்தது. அது ‘அரேபிய புரோக்கர்’ மத்தியிலும் அரேபிய உலகில் அனேகமான புத்தகக் கண்காட்சியிலும் அண்மைக்காலங்களில் முன்னேற்றம் இருப்பதாக கூறுகிறது. மேற்குலகிலும் அரபு உலகிலும் வாழ்கின்ற அரேபிய எழுத்தாளர்களின் படைப்புகள் படிப்படியாக அதிக ஆழமாக வாசிக்கப்படுகிறது.

உங்களது மிகச் சமீபத்தில் வெளிவந்த நாவலான மை நேம் இஸ் சல்மா நாவலின்மீது கவனத்தை செலுத்தும்போது எனக்கு அதிசயமாக இருக்கிறது. அந்த நாவலின் முன் அட்டை அது வெளியிடப்பட்ட பல்வேறு நாடுகளுக்கிடையில் பாரிய அளவில் வேறுபடுகின்றது. பிரஞ்சுப் பதிப்பில் எளிமையாகவும், ரோமானிய பதிப்பில் பிரமிக்கத்தக்க கறுப்பு நிக்காபும் ஒரு புத்திகூர்மையுடைய பெண்ணின் படம் இந்தோனேசிய பதிப்பிலும் மட்டையை அலங்கரிக்கின்றன. வெவ்வேறு நாடுகளின் சூழமைவில் வித்தியாசமான பதிப்பகத்தாரினால் சந்தைப்படுத்தப்படுகின்ற இந்த புதினத்தைக் குறித்த உங்களது பார்வையை சொல்வீர்களா ? புத்தகத்தின் புறத்தோற்றமும் அதன் உள்ளடக்கமும் பல்வேறு வகையான நாடுகளின் சூழமைவில் இணைந்து வித்தியாசமாக பணியாற்றுகின்றன என்று நினைக்கிறீர்களா ? இத்தகைய ஏற்றத்தாழ்வுகள் குறிப்பிட்ட தேசத்தின் நிகழ்ச்சிநிரலுக்குத் துணைபுரிகின்றன என்று நீங்கள் கருதுகிறீர்களா?

 

சந்தையில் நிலவும் செயற்றிறன் மற்றும் மாற்றத்தைப் பொறுத்து அந்தந்த நாடுகளின் சூழலுக்கேற்ப அவர்கள் தாமே பொறிமுறைகளை வகுத்துச் செயற்படுகின்றனர். ஆனால் அரேபிய உலகம் மற்றும் அரேபிய பெண்கள் குறித்து சமரசம் செய்ய முடியாத எண்ணக்கருக்களும் வெளிப்படுகின்றன. எனது புதினத்தின் உள்ளடக்கத்திற்கும் அதன் முகப்பு அட்டைக்கும் இடையில் தொடர்பற்றிருப்பது உண்மைதான். இந்தோனேசியாவைத் தவிர பிரான்ஸ் மற்றும் இத்தாலி இன்னும் சொல்லப்போனால் சல்மா அந்த புத்தகத்தை எடுத்துச் சென்ற இடங்களிலும்கூட முகப்பில் சல்மாவிற்கு ஒரு முக்காடு இருந்தது. அந்த நாவல் ‘க்ரை ஓவ் தி டவ்’ என்னும் பெயரில் அமெரிக்காவில் வெளியிடப்பட்டதுடன், ஒரு மசூதியின் நீதிமன்ற வளாகத்தில் உடல் முழுவதையும் மறைத்த நிலையில் ஒரு பெண் அதன் முகப்பு அட்டையை அலங்கரித்தது. முழுமையான பிற்போக்குவாதிகள். 2005ஆம் ஆண்டு வெளிவந்த லைலா அபௌலீலாவின் மினாரெட்டை எடுத்துக்கொண்டால், ஆழமான எழுத்து, இஸ்லாமிய உலகம் மீதான எனது பார்வைக்கும் அப்பால் விரிந்து சென்று பிரச்சாரப்படுத்துகிறது. அந்த நாவல் சுருக்கமடைந்து, பாலுணர்வுடன், எரிச்சலூட்டுவதை நீங்கள் பார்க்கமுடியும். முகப்பு அட்டைமீது நான் ஓரளவு கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கிறேன் பெரும்பாலான சமயங்களில் அவை அச்சேறுவதற்கு முன்னரே அவைகளை நான் அங்கீகரிப்பதில்லை.

உங்களது நாவல் வேறுபெயரில் ஐக்கிய அமெரிக்காவில் வெளியிடப்பட்டமை குறித்து உங்களது மனோநிலை எவ்வாறிருந்தது ?

நாங்கள் பதினைந்து தலைப்புக்களை வழங்கியிருந்தோம். ஆனால் அதில் ஒன்றைக்கூட எனது பிரித்தானிய மற்றும் அமெரிக்க பதிப்பகத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை. எனக்கு இரண்டு தெரிவுகள் இருந்தன. ஒன்றில் அந்த தலைப்புகளை நிராகரிக்க வேண்டும் அல்லது அமெரிக்க பதிப்பகத்துடனான எனது ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ள வேண்டும். நான் அமெரிக்காவின் பிரசித்திபெற்ற பதிப்பகமான குரூவ் குழுமத்தின் பட்டியலில் நிலைத்திருக்க விரும்பியதால் வேறுவழியின்றி ஏற்றுக்கொண்டேன். அந்த முடிவு எனது வாழ்க்கையையும் இணையதளத்தையும் சிக்கலாக்கியது. இத்தகைய ஒன்றை இனி ஒருபோதும் நான் ஏற்கமாட்டேன்.

உலக அங்கீகாரம் பெற்ற பாலஸ்தீன கவிஞராகவும் எழுத்தாளராகவும் விவாதத்திற்குரியவராகவும் செல்வாக்கு செலுத்துவபராகவும் குறிப்பாக, அவரது அழகிய படைப்புகளின்மீதும் அரசியல் ஈடுபாட்டின்மீதும் நீங்கள் கொண்டிருந்த மதிப்பையும் புகழ்ந்து தலைசிறந்த கவிஞர் முகமது டார்விஷ்ஷைப் (Mahmoud Darwish) பற்றிய உங்களது அபிமானத்தை முன்பு கூறியிருந்தீர்கள். உங்களது புதினங்களில் உள்ள அரசியல் மற்றும் அழகியல் குறித்து நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் ? ஒரு அரேபிய எழுத்தாளராக அதனைபொறுப்புடன் கூடிய சுமை என்று உணர்கிறீர்களா ? உங்களது அரசியல் பற்றுறுதிகளே உங்களது நாவல்களுக்கு வடிவம் கொடுக்கின்றனவா ? ‘கலை கலைக்காகவே என்பதன் சாத்தியக்கூறுகள் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

அரசியல் கருத்துக்களை வெளியிட முடியாத மூர்க்கத்தனமான ஒடுக்குமுறைக்குட்பட்ட ஒற்றையாட்சியில் இலக்கியங்கள் அத்தகைய கருத்துக்களை வெளியிடுவதற்கான சாதனமாக அமைகின்றன. காலம் சென்ற பாலஸ்தீன எழுத்தாளரான எமில் ஹாபிபி மார்க்சிய பார்வைகளை தனது புதினங்களில் பிரச்சாரப்படுத்தினார். தனது பிற்காலப்பகுதியில் அந்த உண்மையை மறைத்தார். நீங்கள் ஒரு மோதல் நிலவும் பகுதியில் பிறந்தால், கலை கலைக்காகவே என்று எழுதுவது ஒரு நாகரீகமாகவே இருக்கும். இருப்பினும், எனது இலக்கியப் பயணம் அரசியல் புதின எழுத்துக்களும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை நிரூபித்துள்ளது. நான் 1987இல் நிசானிட்டில் எனது இதயத்தின் அழுகையில் பயணத்தைத் தொடங்கினேன். அது மெருகூட்டப்படாததாகவும், யதார்த்தத்துடன் நெருங்கியதாகவும் நூதனமற்றதாகவும் இருந்திருக்கலாம். பில்லேர்ஸ் ஒப் சோல்ட் (  In Pillars of Salt ) நாவலில் ஏகாதிபத்தியத்தையும் பாலியல் அரசியலையும் பேச்சு வழக்கையும் பயணக்கட்டுரை பாரம்பரியத்தையும் தோண்டி எடுப்பவராக மாறினேன். எனது மை நேம் ஈஸ் சல்மாவில் மனித நிலையில் காணப்படும் கட்டுப்பாடுகளைப் பற்றியும் குடிவரவு மற்றும் இனவாதம் ஆகியவற்றையும் அன்றாட வாழ்க்கையை முழுமையாகக் கட்டியெழுப்புவதற்காக கவிதை நயத்துடனான பாத்திரப்படைப்பையும் வீச்சையும் மேலும் நுனுக்கமான விளக்கங்களையும் தோண்டி எடுக்கத் தொடங்கினேன். எனது அனைத்து நாவல்களுமே சமூக-அரசியல் சார்ந்தவைகள்தான். இருப்பினும் அவை தொனி, பாணி மற்றும் கட்டமைப்புடன் உருவாகியுள்ளன என்றே நான் நம்புகிறேன். வேறுவார்த்தைகளில் சொல்வதானால், நாவல்கள் உலகின் ஜன்னல்கள். அவை மனிதத்தன்மை வாய்ந்தவை. அவை அநீதிகளை வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்வதுடன் கலாச்சாரப் பாலமாகவும் செயற்படுகின்றன. எனது மை நேம் ஈஸ் சல்மாவில் நல்லவைகள் கெட்டவைகள் என்று எதுவும் இல்லை. உண்மையில், அனைத்து கதாபாத்திரங்களுமே சோகம் நிறைந்தவைகள், வீட்டு உரிமையாளரான ஆங்கிலப் பெண்மணி எலிசபத்தும் கூட சல்மாவை அவமானப்படுத்துகிறார். எதற்காக எலிசபத் உயிருடன் வாழ்ந்தாரோ அதனைக் கண்டுபிடித்தவுடன் அவரது அதிருப்தியான செயலை நாம் மன்னிக்கிறோம். பெருநகர்ப் பகுதிகளில் அரேபியர்களின் தனிமனித சுதந்திரத்தை மறுப்பதை நோக்கமாகக் கொண்டும் அவர்களை அசையாச் சொத்துக்களுக்கான அழிவுக்கான காரணத்தை நியாயப்படுத்தும் வகையில் சொற்பொழிவுகள் இடம்பெறுமானால் எனது எழுத்துக்கள் அரேபியர்களை மட்டுமன்றி, ஆங்கிலேயர், அமெரிக்கர் மற்றும் இந்தியர்கள் உள்ளிட்ட ஏனையோரின் தனிமனித சுதந்திரத்தை வலியுறுத்துவதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. நீங்கள் நன்கறிந்த ஒருவரை சுடுவது கடினமானதாக இருக்கலாம். வாதத்தை மென்மையாகவும் இதமாகவும் கோபமின்றியும் சுயநீதியின்றியும் வைப்பது இங்கு முக்கியமானது,

அரேபிய மொழியில் எழுதப்பட்டுள்ள இலக்கிய படைப்புகளின் பக்கம் திரும்பும்போது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுகின்ற அரேபிய இலக்கியப் படைப்புக்களின்மீதான செல்நெறிப்போக்கை நீங்கள் அவதானித்ததை பட்டவர்த்தனமாக எப்படி உங்களால் விமர்சிக்க முடிகிறது என்று நான் வியந்திருக்கிறேன். மொழிபெயர்க்கப்பட்ட அத்தகைய படைப்பு சமகால அரேபிய மொழியில் எழுதப்படுகின்ற இலக்கிய பரப்பை பிரதிபலிக்கின்றதா ?

தேர்ந்தெடுத்தல் என்பதே வெளியேற்றுவதற்கான ஒரு செயற்பாடே. மிகச் சில அரேபிய புத்தகங்களே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுகின்றன என்பதுடன் அவை அரேபியர்களை ஒரேமாதிரியாகவே சித்திரிக்கின்றன என்பதை உறுதிசெய்கின்றன. அதனால்தான் நவீன அரேபிய இலக்கிய சஞ்சிகையான பானிபாலை அவர்கள் மேற்கொள்கின்ற செயலுக்காக விமர்சிக்க வேண்டியுள்ளது.

 

பில்லேர்ஸ் ஒப் சோல்ட் நாவலில் நீங்கள் வட்டார வழக்கைப் பயன்படுத்தியுள்ளதாகக் குறிப்பிடுகிறீர்கள். எந்த அளவிற்கு உங்களது படைப்பில் அரேபிய கலாசாரத்தின் வட்டார வழக்கும் அரேபிய இலக்கிய பாரம்பரியமும் செல்வாக்கு செலுத்துகின்றன ?

வட்டார வழக்கு என்பது எனது கலாசாரத்தின் எச்சசொச்சத்தின் ஒரு பகுதியாகும். பல்வேறு காரணங்களுக்காக நான் அதனை தாராளமாக பில்லேர்ஸ் ஒப் சோல்ட்- இல்  பயன்படுத்தியுள்ளேன். ஆணாதிக்கத்தை நியாயப்படுத்துவதற்கு எவ்வாறு பாரம்பரியங்கள் பயன்படுகின்றன என்பதை காட்ட விரும்பினேன். மேலும் கதைசொல்லியின் உரையாடல் பெண்ணின் உரையாடலுடன் முரண்படுகின்றது. வாய்வழிக் கதைகளில் ஆணுக்கும் பெண்ணிற்கும் இடையில் நிலவுகின்ற பாலியல் வேறுபாட்டைக் கோடிட்டுக் காட்டவும் நான் விரும்பினேன். அந்தக் கதைகளின் தந்திரோபாயமும், நுட்பமும் அதன் வெளிப்பாடும் குறிப்பிட்ட பாலினத்தை மையப்படுத்தியது. நான் கையாண்டுள்ள இலக்கிய பாரம்பரியங்கள் வித்தியாசமானவை. எனது மூளை ஆங்கிலத்தில் பேசுகிற அதேவேளை எனது இதயம் அரபியில் பேசுகிறது. நான் பகுதியளவில் அரேபிய நாடோடிகளுடன் வளர்ந்துள்ளேன். அவர்களது இனிமையானதும் புதுமையானதுமான வாழ்க்கைமுறை என்னை மீண்டும் அவர்களிடம் இழுத்துவந்துள்ளது. ஆயினும், நவீன மேற்கத்திய உலகில் நான் எவ்வாறு ஒரு நகரக் காட்டிற்குள் வாழவேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ளவேண்டியுள்ளது. நான் முதன் முதலில் பிரித்தானியாவை அடைந்தவுடன் நான் எனது உடமைகளையும் உணர்வுகளையும் மீண்டும் மீண்டும் சோதித்துக்கொண்டு கண்ணாடியை சரிசெய்துகொண்டதுடன் ஒரு புதிய வரைபடத்தை கண்டுபிடிப்பதற்காக கூட்டத்துடன் இணைந்தேன். இப்பொழுது நான் அத்தகைய தனிமனித உரிமைகளை நிராகிரிக்கின்ற விடயங்களை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. நான் ஒரு கலப்பு கலாசாரத்தைப் பின்பற்றுபவள், சர்வதேச அங்கீகாரம் பெற்ற சிறந்த எழுத்தாளர். நான் கண்மூடித்தனமான எல்லைகளையும் மொழிகளையும், கலாசாரங்களையும் இலக்கிய பாரம்பரியங்களையும் கண்சிமிட்டும் நேரத்தில் கடந்தவள். நான் வேரற்ற பன்மைகலாசார சமூகத்தைச் சேர்ந்தவள் ஈராக், அமெரிக்காவில் வெளியான புத்தகங்கள், பிரான்ஸின் தத்துவஞானிகள், ஏன் இலத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த நாவலாசிரியர்களும்கூட அதற்கு உரமூட்டியுள்ளனர். இந்த சமூகமே சிலவேளைகளில் எஞ்சியிருந்து கணினிவெளியில் தொடர்பாடலை மேற்கொள்ளக்கூடும். இந்த இடம் ஆபத்தாக இருந்தபோதிலும் அற்புதமானது.

ஆங்கிலம் உங்களது மூளையில் உள்ள மொழி என்று நீங்கள் சொல்வதைக் கேட்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. நீங்கள் முன்பு வித்தியாசமான குரல்களையும் கலாசாரத்தையும் சூழல்களையும் ஒன்றிணைப்பதற்கு ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதாகச் சொல்லியிருந்தீர்கள். ஏராளமான மொழிகளையும் கலாசாரங்களையும் ஒன்றிணைக்கின்றகலவையாகவும்சர்வதேச மொழியாகவும் ஆங்கிலம் ஒரு காத்திரமான பாத்திரத்தை வகிக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்களா ?

ஆங்கில மொழியிலும் கலவை செய்யப்படுகிறது. பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்தவர்கள் தங்களது தனித்துவமான கலாசார சுவைகளை வெளிக்கொணர்வதற்காக அதனைப் பயன்படுத்துகிறார்கள். அங்கு இப்பொழுது ‘இந்திய ஆங்கிலம்’ இருக்கிறது. விரைவில் அரேபிய ஆங்கிலம் இருக்கும். இன்றிலிருந்து முப்பது ஆண்டுகளில் மொழிகளுக்கிடையிலான எல்லைகள் குழப்பமடையும் என்று நான் நினைக்கிறேன். லெபனானில் பிறந்த எழுத்தாளரான றாவி ஹாகேயின் சமீபத்திய நாவலான கோக்ரோச் (2008) சில் அவர் ஆங்கிலம், அரபு மற்றும் பிரெஞ்சு மொழிகளைப் பயன்படுத்தியுள்ளார். வாசகரும் அதற்கு இசைவாக்கம் அடைந்துள்ளனர். ஆங்கிலம் ஒரு கட்டத்துக்குள் மட்டுப்படுத்தப்படும் அல்லது ஏனைய மொழிகளையும் கலாசாரங்களையும் காவுகின்றதாக சிலவேளைகளில் மாறலாம்.

 

லியனா பாடரின் தி ஓவ் தி மிர்ரர் (The Eye of the Mirror) என்னும் நாவலுக்கான முன்னுரையில், 1975-76ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருட்டடிப்பு செய்யப்பட்ட லெபனானில் உள்ள டால் எல் சாடெர் எனும் பாலஸ்தினிய அகதிகள் முகாமில் இடம்பெற்ற தொடர்ச்சியான படுகொலைகளை மையமாக வைத்துப் படைக்கப்பட்ட ஒரு நாவல் என்றும் பாடர் புதிய உரையாடல்களை உருவாக்கி மாற்று வரலாற்றை எழுதுவதற்காக ஏனைய பெண் படைப்பாளிகளால் அவருக்கென்று ஒதுக்கப்பட்ட உரையாடல் நூல்களைக் கொண்டு கரடுமுரடான பாதையினூடாக ஒரு அழகான ஆடையை நெய்திருக்கிறார் என்றும் எழுதியிருக்கிறீர்கள். பெருமளவிலானஉத்தியோகபூர்வ வர்ணனையாளர்களால் புதைக்கப்படும் வரலாற்றின் பகுதிகளை பாதுகாப்பதிலோ அல்லது மீளவும் வழங்குவதிலோ உங்களது வகிபாகத்தின் முக்கியத்துவத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் ? நான் உங்களது முதலாவது நாவலான நிசானிட்டை குறிப்பாக நினைத்துப்பார்க்கிற அதே நேரம் அதற்குப் பின்னரான உங்களது புதினம் மற்றும் ஆக்கங்களை ஏனைய அரேபிய பெண்கள் எழுத்தாளர்களின் வரிசையிலும் நினைத்துப்பார்க்கிறேன்.

உத்தியோகபூர்வமாக இருக்கின்ற வரலாற்றிற்கு மாற்றாக உண்மையைத் தோண்டி எடுப்பதற்கும், வெவ்வேறு அலைவரிசைகளில் பாடுகின்ற குரல்களைக் கேட்பதற்கேற்ப காதைச் சுத்தம் செய்யக்கூடிய மாற்று வரலாற்றை உருவாக்க வேண்டும் என்பதே எனது இலக்கு.  அரேபிய சூழலை கண்டுகொள்ளாமல் மேற்கத்தைய பின்னணியில் வெள்ளை மையால் எழுதியிருப்பதைக் குடைந்தெடுத்து அரேபிய வரலாற்றை மீட்டெடுப்பதற்கும் அது அவசியம். நான் அவர்களது எழுத்தைத் தேர்வு செய்கையில் அரேபிய பெண்கள் எழுத்தாளர்களின் வரிசையில் நன்கறிந்தவர்கள் ஒருவரும் இல்லை. அவர்கள் எனது றேடாரிலிருந்து மறைந்துவிட்டனர். நான் அவர்களின் எழுத்துக்களின்மீது தனிக்கவனம் செலுத்த விரும்புகிறேன்.

பாடரின் நாவலுக்கான முன்னுரையில், பெரும்பாலான அரேபிய நாடுகளில்பொதுவாகவே அரேபிய பெண்களை ஒரு சிறுபான்மையராகவே நடத்தப்படுகின்றனர் என்றும் நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். அவர்கள் கண்ணுக்குப் புலப்படாதவர்களாகவும் தவறாக பிரதிநிதித்துவப்படுபவர்களாகவும் பாலியல் மற்றும் கலாசாரம் ஆகிய இரண்டு வழிகளிலும் சிறுமைப்படுத்தப்படுவதாகவும் உணர்வதுடன், ஏராளமான மேற்கத்தியர்கள் அரேபிய பெண்கள் தங்களைவிட பின்தங்கியே இருக்கவேண்டும் என்ற பார்வையை உடையவர்களாக திகழ்கின்றனர். அரேபிய பெண்களை அவமதிப்பதும்கூட உங்களது நாவல்களில் பெருமளவில் பிரதானமாகப் படம்பிடித்துக் காட்டப்படுகிறது. இருப்பினும் அரேபிய பெண் எழுத்தாளர்கள் அணி அரேபிய கலாசாரத்திற்கும் மேற்குலகத்தினர் ஒரே மாதிரியாக அரேபியப் பெண்களின் வாழ்க்கையைச் சித்திரிப்பதையும், பெண்களை ஒடுக்குதல்கூட ஒரே மாதிரியான அரேபிய கலாசாரமாகவே சித்திரிக்கப்படுவதையும் எதிர்ப்பதற்கும் இடையில் நிலவுகின்ற தொடர்பாடல் இடைவெளியை ஈடுசெய்யும் நோக்கிலேயே உருவாக்கப்பட்டது. லைலா அபுலுக்ஹோட் போன்ற விமர்சகர்கள் இதனை துல்லியமாக சுட்டிக்காட்டியுள்ளனர். உதாரணம் : “உண்மையில் இஸ்லாமிய பெண்களுக்கு சேமிப்பு அவசியமா ?” கீழ்த்திசை நாடுகளின் மொழிகளைக் கற்றறிந்தவர் என்ற வகையில் நீங்கள் எவ்வாறு மீண்டும் மீண்டும் பிரஸ்தாபிக்கப்படுகின்ற அரேபியாவில் பெண்ணொடுக்குமுறைக்கு விசேடமாக கௌரவக் கொலையை பற்றிப் பேசுகின்ற மை நேம் ஈஸ் சல்மா தொடர்பில் பதிலளிக்கப்போகிறீர்கள் (அது அவ்வப்போது கீழைத்தேயர்களின் கற்பனையில் சிதைக்கப்பட்டதாகவே இருக்கிறது) ?

கௌரவக் குற்றங்கள் ஏராளமான நாடுகளில் இடம்பெறுகின்றன அவற்றை அரபு உலகத்துடன் மட்டும் தொடர்புபடுத்துவது அழகல்ல. அவற்றை ஆவணப்படுத்துவதற்காகவும் எதிராகப் போராடுவதற்காகவும் ஜோர்தானை தண்டிக்கக்கூடாது – அதனை உற்சாகப்படுத்த வேண்டும். எனது மாணவர்கள் கௌரவக் குற்றங்கள் தொடர்பான சம்பவங்களை அவதானித்துள்ளனர். அவை ஸ்வீடன், ஐக்கிய இராச்சியம், போர்ச்சுகல், கிரீஸ், துருக்கி மற்றும் இன்னபிற நாடுகளிலும் நடப்பதாக அவர்கள் கண்டறிந்துள்ளனர். ஆகவே அந்தப் பிரச்சினையை ஒரு அரேபிய இஸ்லாமியரின் பிரச்சினை என்று ஒதுக்கித்தள்ளிவிட முடியாது. கிறிஸ்தவப் பெண்ணும் கூட கௌரவ குற்றங்கள் என்றழைக்கப்படுகின்ற முறையில் கொல்லப்பட்டுள்ளார். ஆகவே நான் ஒரு விவாதத்தைத் தொடங்கி அதை பரந்தளவில் விரிவுபடுத்த விரும்பினேன். அது சுயவிமர்சனமாக இருக்க வேண்டும் என்பது மிகவும் அவசியம். அது இல்லாமல் எத்தகைய சீர்திருத்தமும் சாத்தியமாகாது. இருப்பினும் பிரச்சினைகளைக் கையாளும் முறையும் முக்கியமானது. நான் ஒரு கீழைத்தேயவாதியோ அல்லது மூர்க்கத்தனமான இஸ்லாமியரோ அல்ல. நான் அரேபிய உலகைப்பற்றி எழுதுகிறேன் ஏனெனில் நான் அதை விரும்புகிறேன் ஏனெனில் அதை சிறப்பாக மாற்ற வேண்டும் என்ற ஆழமான ஆசை எனக்கு இருக்கிறது. அது ஒரு தூண்டுதலாகக்கூட இருக்கலாம்.

நீங்கள் அராபியர்களை தவறான முறையில் தவறாக சித்திரித்துக் கொண்டிருக்கிறீர்களா அல்லது மாற்றத்திற்கான விருப்பத்தால் உந்தப்பட்டிருக்கிறீர்களா ?

 

நான் குழப்பங்களை அறிந்திருக்கிறேன், ஒவ்வொரு நாளும் அந்த இறுக்கமான கயிற்றில் நடக்கிறேன்.

மை நேம் ஈஸ் சல்மா பகுதியளவிலேயே கௌரவக் குற்றங்களைப் பற்றி விவாதிக்கிறது. அது பிரதானமாக பிரித்தானியாவில் குடியேறியிருப்பவர்களின் இன்றைய அபவத்தைப் பற்றியே பேசுகிறது. சல்மா தனது கடந்தகால, சுவாரஸ்யமான கிராம வாழ்க்கைக்கும், இங்கிலாந்தில் வசிக்கும் தற்போதைய நிலைக்கும் இடையில், அரேபிய மற்றும் ஆங்கில கலாசாரத்திற்கு இடையில் கிழிபடுகிறாள். நாவலின் வடிவம் சல்மாவின் முரண்பாட்டை பிரதிபலிக்கிறது. அவள் தனிமையிலும் மொழியியல்சார்ந்தும் கலாசாரம் சார்ந்தும் மேற்குலகைச் சமாளிப்பதற்கு அவர் தயாராகவில்லை. அவளைப் பின்னோக்கி இழுப்பதற்கான பெரிய மரபு உள்ளது. இரண்டு கலாசாரங்களையும் விரும்புவதற்கும் எதிர்ப்பதற்கும் ஏராளமான காரணங்கள் உள்ளன. நாவல் நம்பிக்கையுடன் அரேபிய மற்றும் பிரித்தானிய சமுதாயங்களை கண்ணாடியில் பிரதிபலிப்பதுடன் அவைகளை சமமாக விமர்சிக்கின்றது.

நீங்கள் செய்தித்தாள்களுக்கும் இலக்கிய பதிப்புகளுக்கும் ஏராளமான விமர்சனக் கட்டுரைகள் எழுதியிருக்கிறீர்கள். மேலும் ஏராளமான படைப்புகளை திருத்தியும் மொழிபெயர்த்தும் உள்ளீர்கள். நீங்கள் மனித உரிமைகள் செயற்பாட்டிலும் ஆர்வமாக ஈடுபடுகின்றீர்கள். உங்களது விமர்சனப் படைப்பிற்கும் ஆக்கபூர்வமான படைப்பிற்கும் இடையிலான தொடர்பு குறித்து விளக்க முடியுமா ?

யதார்த்தத்தில் எனது ஆக்கபூர்வமான எழுத்துக்களே எனது கல்விசார் பணிகளுக்கு தீனிபோடுகிறது. நான் கௌரவக் குற்றங்கள் தொடரபிலும், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பிலும் விரிவாக எழுதியுள்ளேன். பெரும்பாலான கருக்கள் நாவலுக்கான தனது வழியைத் தேர்ந்துகொண்டன. மனவளம் குன்றியவரிடத்திலும் பால்சமத்துவம் மற்றும் இழிவு படுத்தல் போன்ற மனித உரிமை மீறலானது பில்லர் ஓவ் சால்ட்டிற்கு வழிவகுத்தது. கௌரவக் குற்றங்களும் ஊடகங்களில் சிதைக்கப்பட்ட அரேபியர்களின் பிம்பங்கள் மை நேம் ஈஸ் சல்வா உதயமாவதற்குக் காரணமாயிற்று. எனது இலக்கியப்படைப்பிலும் விமர்சனப் படைப்பிலும் எழுகின்ற கேள்விகள் ஒன்றாகவே இருக்கிறது.

உங்களது பெரும்பாலான இலக்கிய படைப்புகளில் சிறைத்தண்டனை ஒரு கருவாக இடம்பெறுவதுடன், அது தேசிய சூழலுடன் மட்டுப்படுத்தப்படவில்லை. உதாரணமாக பில்லேர்ஸ் ஒப் சோல்ட்  என்னும் நாவலில் இரண்டு பெண்கள் ஜோர்தானில் உள்ள ஒரு மனநல காப்பக நிறுவனத்தில் பிரித்தானிய ஆணையின்போதும் அதன் பின்னரும் அடைக்கப்படுகின்ற அதே சமயம் மை நேம் ஈஸ் சல்மா சல்மா மற்றும் ஏனைய பெண்கள் பிரித்தானிய துறைமுக தடுப்பு நிலையமான லெவந்தில் (லெவந் என்பது கிழக்கு மத்திய தரைக்கடல் கடலோரப் பகுதிகளான ஆசியா மைனர் மற்றும் பெனிகியா (நவீன துருக்கி, சிரியா மற்றும் லெபனான்) ஆகியவற்றிற்கு பரவலாக பயன்படுத்தப்படுகிறது) சிறைவைக்கப்பட்டதை விவரிக்கிறது. நீங்கள் பெண்கள் சிறைவைக்கப்படுவதை கலாசார மாற்றம், பூலோகப் பிரச்சினை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கிறீர்களா? அவை உங்களது ஆக்கங்களில் அதன் பிரசன்னம் குறிப்பிடத்தக்க அளவில் இருப்பதைப் பற்றி கூறுவீர்களா ?

என்னுடைய குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியை நான் சிறையில் கழித்ததாகவே உணர்கிறேன். மேலும் எனது மணவாழ்க்கையும் அத்தகைய உணர்வையே ஏற்படுத்தியது. எனது தந்தையின் அரசியல் பார்வைகளும் மாற்றத்தை விரும்பிய செயலும் அவரை 1969ஆம் ஆண்டு சிறையிலடைத்தது. சிறைவாசம் என்பது ஒரு குறியீடாகவும் உண்மையானதாகவும் எனது ஆக்கத்தில் நீக்கமற விரவிக்கிடப்பதை நீங்கள் பார்க்கலாம். எனது தந்தையின் கதையை நான் பகுதியளவில் கண்மூடித்தனமாக அடிப்படையாகக் கொண்டிருக்கின்றேன். எனது தாயார் எங்களை ஒருபோதும் சிறைக்குச் சென்று எனது தந்தையைப் பார்ப்பதற்கு அனுமதித்தில்லை ஏனெனில் அவர் நாங்கள் அத்தகைய அனுபவத்தைப் பெற்றுக்கொள்வதற்கு அவர் விரும்பவில்லை. ஆனால் நான் அந்த இடத்தை கற்பனை செய்திருந்தேன், அது எனது மனப்பதிவில் ஒரு பகுதியாகத் தொற்றிக்கொண்டுவிட்டது.

உண்மையில், ஒவ்வொரு மனிதரும் அவர் எந்த பாலினத்தைச் சேர்ந்தவர் என்ற பாகுபாடின்றி ஏதோவொரு வகையில் அதிகாரமற்றவர்களாக இருப்பதை என்னால் அவதானிக்க முடிந்தது. அது எப்போதும் சவாலானது மற்றும் அது எப்பொழுதும் ஏதோவொருவகையில் உங்களைத் தடுத்துநிறுத்துகிறது. எனது கதாபாத்திரங்கள் ஒரு கட்டமைப்பையோ அல்லது வலைதளத்தையோ பிடிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. கதாபாத்திரங்கள் வரலாறு, புவியியல் மற்றும் அரசியல் ஆகியவற்றில் உள்ள மனநோயாளிகளினால் பாதிக்கப்பட்டவர்கள். எனது மை நேம் இஸ் சல்மாவில், சல்மா தனது இயல்புக்கு இசைவானதாக இருந்தபோதும் தான் செய்யக்கூடாத ஏதோ ஒன்றைச் செய்துவிட்டார். அவர் கடுமையான சட்டங்களைக் கொண்ட ஒரு கிராமத்தில் தற்செயலாகப் பிறந்துவிட்டார், அதனால் அவர் தண்டிக்கப்படவேண்டியவர். அதே நாவலில் உலாவரும் லிஸ் என்னும் பாத்திரம் ஆங்கிலேயர், மீண்டும் பாதிப்புக்குள்ளான நீண்ட வரலாற்றைக் கொண்டவர், அவர் தான் காதலித்த இந்தியரை திருமணம் செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. இந்த விடயத்தில் மற்றொரு அதிகாரக் கட்டமைப்பு நிலவுகிறது – அது வர்க்கக் கட்டமைப்பு. லிஸ் ஒரு அதிகார வர்க்கத்தின் படிமுறை அமைவிடமாகும். அது அவளது விருப்பத்திற்கு அவளே செயல்வடிவம் கொடுக்க முடியாமல் தடுக்கிறது. எனது கதாபாத்திரங்கள் எப்பொழுதும் மானுட சூழலால் பாதிக்கப்பட்டவர்கள் – எப்பொழுதும் ஒடுக்கப்படுபவர்கள்.

இறுதியாக, நீங்கள் தற்பொழுது ஈடுபட்டிருக்கும் படைப்பு பற்றியோ அல்லது உங்களது படைப்புடன் நீங்கள் எங்கு செல்ல திட்டமிட்டுள்ளீர்கள் என்பது பற்றியோ சுருக்கமாகச் சொல்ல முடியுமா ?

எனது புதிய நாவல் அல்-கொய்தாவின் சமையலறை ஆகும். இப்பொழுதுதான் எழுதி முடித்தேன் வெபர் ஆய்வு ஸ்டடிஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அது தற்பொழுது இணையத்திலும் கிடைக்கிறது அதற்கு டொக்டர் நீலியா சி. சேஷாச்சாரி அவர்களின் 2009ஆம் ஆண்டிற்கான நாவலுக்கான விருதும் கிடைத்திருக்கிறது. இந்த நாவல் லண்டனில் அடுக்குமாடித் தொடர் வீட்டுத் தொகுதியில் வசிக்கின்ற மக்கள் குழுவை மையமாகக் கொண்டு நகர்கிறது. முழுக்கதையும் செய்தித்தாளில் வெளிவந்த ஒரு கட்டுரையிலிருந்து தொடங்குகிறது. அந்தக் கட்டுரை ஹாமர்ஸ்மித்தில் உள்ள சபை வீட்டில் வசித்த அபு ஹம்ஸா என்பவரைப் பற்றியது. நான் எனது கணவரிடம், “நான் அந்த வீட்டைக் கண்டுபிடிக்க வேண்டும்” என்று கூறினேன். நாங்கள் நாட்கள் கணக்கில் வீதிகளில் அலைந்துதிரிந்து ஒருவழியாக அதைக் கண்டுபிடித்தோம். அதன் பிறகு நான் மற்றொரு கட்டடத்தைக் கண்டேன் அது முழுவதும் குடியேற்றவாசிகளால் நிரம்பிவழிந்தது. நான் அவற்றைப் படம்பிடித்துக்கொண்டேன். நான் ஆலா அல் அஸ்வானியின் யாகோபின் கட்டடம் மற்றும் மனில் சூரியின் விஷ்ணுவின் மரணம் ஆகியவற்றை அப்பொழுதுதான் படித்திருந்தேன் அவையே எனது நாவல் பிறப்பதற்கும் காரணமாக அமைந்தது. அந்த கட்டடத்தில் இருந்த குடிபெயர்ந்த அரேபியக்குழுவின் வாழ்கை முறையை காலனித்துவத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் பல்வேறு கலாசாரங்களைக் கொண்ட லண்டனில் அவர்களது வரலாறுகள் மற்றும் தொடர்பாடல்களை கற்பனை செய்ய விரும்பினேன். சமூக அளவில் அவர்களது குணாம்சங்கள் மிகவும் பின்தங்கியிருந்தன – குறைவானதாகவும் அதற்கும் வெளியிலும் இருந்தன. மத்தியதர வகுப்பைச் சேர்ந்தவரையோ, பணக்காரரையோ அல்லது சிறப்புரிமை பெற்றவரையோ நான் காணவில்லை. சமுதாயத்தின் அந்த அடுக்கு அல்லது பிரிவு எனது கவனத்தை எள்ளளவும் ஈர்க்கவில்லை.அல்-கொய்தா கிச்சனில், குடியேற்றவாசிகள் குழுவினர் ஒருவேளை உணவிற்காக நாள்முழுவதும் பணிசெய்கின்றனர். மேலும் அவர்களுக்குப் பின்னால் இருள்படிந்த ஒரு இரகசியம் ஒளிந்திருந்தது. அவர்கள் இலண்டன் மாநகரின் மத்திய பகுதியில் வசிக்கின்ற பாதிக்கப்பட்டவர்கள். இரண்டாவது வீட்டில் ஒளிந்திருந்த நபரை யார் குத்திக் கொலைசெய்தது ?

அந்த நாவல் காதல், வன்முறை, சுயவெறுப்பு மற்றும் குற்றவுணர்வு, மீட்பதற்கான தேடல், அழகு, நகைச்சுவை மற்றும் மன்னித்தல் போன்ற குணாதிசயங்களைப் படம்பிடித்துக்காட்டியது. அதில் அல்-கொய்தாவிற்கான ஆட்சேர்ப்பும் காத்திரமாக இடம்பெற்றது. அவர்கள் எதிர்பார்த்தவாறு விடயங்கள் இருக்கவில்லை. மேலும், அவர்களின் வழித்தடத்தில் ஏராளமான அதிசயங்களும் உள்ளன. பல்வகைக் கலாசாரத்தின் அடையாளமாகத்திகழும் பிரித்தானியாவின் மறுதலையாக விளங்கும் கட்டடம் மாக இருக்கலாம். இந்த நாவலை எழுதும்போது, அல்கொய்தாவில் அவர்கள் இணைவதற்குக் காரணமாக இருந்த ஆழமான தூண்டுதல்கள் குறித்து அரேபிய குடியேற்றவாசிகளான இரண்டு இளைஞர்களின் வர்ணனை முழுமையடையாமல் இருந்ததை நான் உணர்ந்துகொண்டேன். அதுவும் அரேபிய இனத்தவர்கள் முதலாவதாக தாலிபான் குழுவில் இணைந்து ரஷ்யாவிற்கு எதிராக அவர்களது பிரச்சாரத்தை மேற்கொண்டதற்கும் பின்னர் அல்கொய்தாவில் இணைந்து கொண்டதற்கும் அரேபிய ஆப்கானியர்களின் வரலாற்றை ஆய்வு செய்து எழுதுவதற்கு அவசியமாக இருந்தது. இவ்வாறாக எனது ஐந்தாவது நாவலான எனது தந்தை அடிப்படைவாதி (மை ஃபாதர் தி ஃபண்டமன்டலிஸ்ட்) க்கான கரு உருவானது.

இந்தநாவலை ஒடுக்குமுறைக்கு எதிரான எனது தந்தையை புரிந்துகொள்வதற்கும் மன்னிப்பதற்குமான முயற்சியாக எழுதுவேன். அவர் என்னால் எப்பொழுதும் புரிந்துகொள்ளமுடியாத தடைசெய்யப்பட்ட ஹிஸ்புல் தாஹிர் அமைப்பின் முன்னோடி உறுப்பினராகத் திகழ்ந்தார். எனது தந்தை அவரது நோக்கம் நிறைவேறுவதற்கான போராட்டத்தில் ஓய்வொழிச்சல் இன்றி ஈடுபட்டிருந்தார் மேலும் அவர் எனது பிள்ளைப்பிராயத்திலும் இளம்பருவத்திலும் எமது வாழ்க்கையை வழிநடத்தும் கட்டுபாட்டைக் கொண்டிருக்கவில்லை அதுவே எனது எட்டு சகோதர சகோதரிகளின் வாழ்க்கை தடைபடுவதற்குக் காரணமாக அமைந்தது. எனது தந்தையின் முதுமையானது அவரது முடிவுகளைத் தோண்டி எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டியதுடன் அவரைப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற அவாவும் வலிமைபெற்றது.  நான் மை நேம் இஸ் சல்மாவில் பயன்படுத்தியதைப் போன்று கதாபாத்திரங்களுடன் நெருக்கமாகப் பின்தொடர்ந்து ஆப்கானிஸ்தான் போரின் பிரதான காரணிகளையும் அந்த யுத்தத்தின் வரலாற்றையும் அந்த யுத்தம் யு.கேயில் ஏற்படுத்தியுள்ள அச்சுறுத்தலையும் முதற்தர தகவல்களைத் தொகுத்துக் கொடுப்பதற்காக நான் தன்மைப் பாத்திரத்தை மீண்டும் கைக்கொள்ளப்போகிறேன். ‘நாகரிகங்களுக்கான போர்’ என்று அழைக்கப்படும் புறையோடிப்போன புண்ணிற்கு சூழமைவு அடிப்படையிலும் வரலாற்று அடிப்படையிலும் பயங்கரவாதத்தைப் பற்றி விளக்கமளிப்பதுடன் பிரித்தானியா அதற்கு எவ்வாறு பதிலளிக்கிறது என்பதையும் விளக்கி மருந்திடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஆங்கிலத்தில் : றஷெல் பவ்வேர்

தமிழில் : தேசிகன் ராஜகோபாலன் – இலங்கை

தேசிகன் ராஜகோபால்

(Visited 56 times, 1 visits today)