இஸ்மாயில் காதரே எப்படி அடக்குமுறையிலிருந்து தப்பித்தார் என்பதும் அவர் தழுவிய பாணி அவருக்குப் புகட்டிய பாடமும் – பீட்டர் கொன்ஸ்டான்டைன்- தமிழில் தேசிகன் ராஜகோபாலன்

தேசிகன் ராஜகோபாலன் இஸ்மாயில் காதரே கதை சொல்வதில் தனக்கென ஒரு பாணியை வகுத்துச் செயற்படுபவர். ஒரு பெரிய விடயத்தையும் இயல்பாகச் சொல்லும் வகையில் அவரது சொல்லாடல் அமைந்திருக்கும். அவை மறைமுகமாகவும் குறிப்பால் பொருள் உணர்த்துபவையாகவும் இருக்கும். பீட்டர் கான்ஸ்டன்டைன் காதரேவின் படைப்புகளை பால்கன்குடாநாடுகளின் நீண்ட வரலாற்றுப் பாரம்பரியமிக்க தணிக்கைக் கட்டுப்பாடுகள் நிறைந்த காலப்பகுதியுடன் பொருத்திப் பார்க்கிறார்.

அன்டென் செக்கோவ், 1883இல் எழுதிய கேலிச்சித்திர சிறுகதையான “தி க்ராஸ்”( The Cross)-ல் மாஸ்கோவில் அமைந்துள்ள மேட்டுக்குடியினருக்கான சிகை அழகு நிலையத்தினை நிகழிடமாகக் கொண்டு காட்சி வடிவமைத்திருக்கிறார். அங்கு மாஸ்கோவைச் சேர்ந்த மேட்டுக்குடி கூட்டம் ஒன்று அண்மையில்; தனது படைப்பிற்கான பதக்கத்தைப் பெற்ற ஒரு கவிஞரைச் சூழ்ந்துகொள்கிறது. அவரது சமீபத்திய கவிதை புத்தகத்தின் வீரம் ஒரு ஸ்டானிஸ்லாவ் கிராஸ்? இம்பீரியல் ரஷ்யாவின் சேவையில் அந்த பதக்கம் ஸ்டெனிஸ்லெவ் கிராஸ் என்னும் வீரமிக்க அவரது புதிய கவிதைப் புத்தகத்திற்கா? அல்லது ரஷ்யாவின் எதேச்சாதிகார ஆட்சியில் தேசபக்தி சரணங்களுக்கு செயிண்ட் அண்ணா கிராஸிற்கான உத்தரவா? கவிஞர் தனது புத்தகத்தை உயர்த்திக் காண்பிக்கும்வரை விருந்தினர்கள் மத்தியில் பதட்டம் நிலவியது. ஜார் அரசின் தணிக்கைசபையினால் சிவப்பு வண்ணத்தில் பெரிய சிலுவைக்கோடு இடப்பட்டிருந்ததை அவர்கள் கண்டனர். கவிஞரின் சமீபத்திய கவிதைத் தொகுப்பு தடைசெய்யப்பட்டிருந்தது. ஏகாதிபத்தியத்தின் தணிக்கைக்கண் மோசமானதாக இருந்ததுடன் இவான் கொன்சராவ் போன்றவர்கள் சில தணிக்கையாளர்களின் கண்களுக்கு இலக்கிய பிரபல்யங்களாகத் தெரிந்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் ரஷ்ய இலக்கிய பரப்பில் பயணித்த புகழ்மிக்க எழுத்தாளர்களான புஷ்கின், டொஸ்டோவ்ஸ்கி, கோகோல், செக்கவ் உள்ளிட்ட அனைவரும் தமது பேனாவை காகிதத்தின் மீது வைக்கும்போது தணிக்கைக்குழுவின் செஞ்சிலுவையைக் குறியைத் தவிர்ப்பதற்காகவும் அதனைத் தொடர்ந்து வரக்கூடிய பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்காகவும் மிகவும் கவனமாகச் செயற்பட வேண்டியிருந்தது. அவர்கள் ஒவ்வொருவரும் சுய தணிக்கை செய்துகொண்டு எழுதுவதற்கான தனிவழியை உருவாக்கியிருந்தனர். தாம் சொல்ல வேண்டிய கருத்தை நேரடியாகச் சொல்லாமல், அவ்வப்போது எல்லைக்கோட்டை மீறியபோதிலும் தணிக்கையாளர்களின் கண்களில் பட்டுவிடாமல் இலைமறைகாயாகச் சொல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

ரஷ்யாவில் முடியாட்சி நிலவிய காலத்தில் எழுத்தாளர்கள் ஜார் மன்னனின் தணிக்கைக்கு முன்பாக நடுங்கினர் என்றால், போல்ஷிவிக் புரட்சி முடிவடைந்து ஒரு தசாப்தத்தின் பின்னரான ஸ்டாலினின் ஆட்சி; தணிக்கைக்கு துன்புறுத்தல், சிறைவாசம், பல வருட கடூழிய சிறை மற்றும் மரணதண்டனை ஆகிய எச்சரிக்கை மற்றும் அச்சுறுத்தலுடனான புதிய பரிமாணத்தைக் கொண்டு வந்தது.

தேசிகன் ராஜகோபாலன் சோவியத் யூனியனில் ஸ்டாலின் எதைத் தொடங்கினாரோ அதனையே 1941 முதல் 1985 வரை அல்பேனியாவின் ஸ்ராலினிச சர்வாதிகாரியான என்வர் ஹோக்ஷா,( Enver Hoxha ) இன்னும் நேர்த்தியாக்கி அல்பேனிய எழுத்தாளர்கள் வரம்பு மீறி செயற்படுபர்களாகப் பார்த்து அவர்களை தணிக்கை செய்வதற்கும் தண்டிப்பதற்கும் கொடூரமான உத்திகளை வளர்த்துக் கொண்டார். ஸ்டாலின் எதிர்கொண்ட தடையை ஹோக்ஷா எதிர்கொள்ளவில்லை. ஸ்டாலின் பூமியின் நிலப்பரப்பில் ஆறில் ஒரு பகுதியைக் கட்டுப்படுத்தினார், அதே நேரத்தில் அல்பேனியாவின் மக்கள் சோசலிச குடியரசு பதினொன்றாயிரம் சதுர மைல்களுக்கு சற்று கூடுதலாக இருந்தது, இது அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தின் அளவின் கால் பகுதியிலும் குறைவானதாகும். இதன் விளைவாக, ஒவ்வொரு கருத்து வெளிப்பாட்டையும் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் ஸ்டாலினை விட ஹோக்ஷாவிற்கு எளிதாகஇருந்தது. அல்பேனிய எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை தடை செய்வதற்கான உத்தரவு எந்த திசையில் இருந்து வரும் என்பதே அறியாதவர்களாக இருந்தனர். வெளியிடப்பட்ட அனைத்து புத்தகங்களும் அல்பேனியாவின் அரசு வெளியீட்டு நிறுவனங்களின் தலைமை ஆசிரியர்களால் (சுயாதீனமான அல்லது தனியார் அச்சகங்கள் என்று எதுவும் இல்லை) எந்தவொரு உண்மையான அல்லது உணரப்பட்ட கருத்தியல் முறைகேடுகளுக்காக கவனமாக ஸ்கேன் செய்யப்பட்டிருந்தாலும், வெளியிடப்பட்ட புத்தகங்களும் தன்னிச்சையான தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன அல்லது கருத்தியல் பிரிவினூடாக தடை செய்யப்பட்டன. மத்திய குழு, கல்வி அமைச்சு மற்றும் தேசிய பாதுகாப்பு இயக்குநரகம் கூட இலக்கிய நுட்பம்குறித்து அறிந்திருக்கவில்லை.

1953இல் ஸ்டாலின் மறைந்த அடுத்த சில ஆண்டுகளில்  அல்பேனியாவில் என்வர் ஹொக்சா ஸ்டாலினின் நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்துச் செல்லத் தொடங்கிய ஆரம்பகட்டத்தில் இஸ்மாயில் காதரே இளமைப்பருவம் அடைகிறார். அவரது முதலாவது கவிதைத் தொகுப்பான ஃப்ரைமிஜைம் டிஜலோஷேர் (Frymëzime djaloshare) (Boyish inspiration)- இளமைத்துடிப்பு) அவரது பதினெட்டாவது வயதில் 1954இல் வெளிவந்ததுடன் வந்த மாத்திரத்திலேயே அவரை ஒரு முக்கியமான இலக்கிய குரலாகவும் நிலைநிறுத்தியது. அதனைத் தொடர்ந்த இரண்டு தசாப்த காலம் அல்பேனியா உலகில் மிகவும் மோசமாக தனிமைப்படுத்தப்பட்ட நாடாக உருவெடுத்ததுடன், சோவியத் யூனியனும் மக்கள் சீனமும் தனது பார்வையில் தாராளவாதத்தைக் கடைப்பதாகக் கருதி ஹொக்சா தனது நாட்டின் எல்லைகளை மூடினார். இத்தகைய தீவிர சர்வாதிகார தணிக்கை சூழ்நிலைகளில், தணிக்கைக்குள் சிக்கிவிடாமல், விடயத்தை நேரடியாகச் சொல்லாமல் மழுப்பலாகவும் அதே நேரத்தில் சொல்ல வேண்டிய விடயத்தை குறிப்பிட்டுக் காட்டக்கூடிய வகையிலும் கதரே தனக்கென தனித்துவமான மொழிநடையை உருவாக்கிக்கொண்டார். கதரேவின் அசாதாரண திறனை பீட்டர் மோர்கன் திறம்பட சுருக்கமாகக் கூறினார்:

தேசிகன் ராஜகோபாலன் கதரே சோசலிச கிழக்கு ஐரோப்பாவிலிருந்து வெளிவருவதற்கான மிக அற்புதமான மற்றும் புரட்சிகரமான சில படைப்புகளைத் தயாரித்தார். இவரது படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் வெளியிடப்பட்டதுடன் அவர் அல்பேனிய எழுத்தாளர்கள் சங்கம் மற்றும் கட்சியின் பிரபல்யமான உறுப்பினராகவும் திகழ்ந்தார். அவர் மக்கள் பேரவையின் துணைவராக நியமிக்கப்பட்டதால் அவர் வெளிநாடு செல்ல முடிந்தது. இதனால் அவரால் சிறைத்தண்டனை, கடூழிய முகாம்கள் அல்லது பிற வகையான தண்டனைகளை தவிர்க்க முடிந்தது.

1990 களின் பிற்பகுதியில் நானும் இஸ்மாயில் கதரேயின் படைப்புகளை மொழிபெயர்ப்பவர்களில் ஒருவரானேன். அல்பேனியாவின் சோசலிச சர்வாதிகாரம் வீழ்ச்சியடைந்தது. இந்த காலத்தில் இஸ்மாயில் கதரே பிரான்சில் வசித்து வந்தார், என்வர் ஹோக்ஷாவின் தணிக்கையின் ஆபத்துகளிலிருந்து விடுபட்டு, அவர் ஒரு புதிய படைப்புக் காலத்திற்குள் பிரவேசிக்கத் தொடங்;கினார். 1990 களில் அவரது படைப்புகள் இரண்டு விடயங்களின்மீது கரிசனை செலுத்துவதை மையமாகக் கொண்டிருந்தன. ஒன்று அல்பேனியாவின் சர்வாதிகாரம், அதைப் பற்றி அவர் இப்போது மழுப்பலின்றி தண்டனையிலிருந்து விலக்குபெற்றவராக எழுத முடிந்தது, மற்றொன்று கொசோவோ நெருக்கடி 1989 முதல் செர்பியா சட்டமன்றத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த கொசோவோ தன்னாட்சியுடையதாக மாற்றமடைந்தது. யுகொஸ்லாவியாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமான அது அதிகளவிலான அல்பேனிய இனத்தவர்களைக் கொண்டதாகவும் திகழ்ந்தது. 1998 காலப்பகுதியில் கொசோவோ நெருக்கடி ஒரு முழுமையான போராக உருவெடுத்தது.

கதரே வெளிநாடு சென்ற ஒருசில ஆண்டுகளில் படைத்த தி பிரமிட், ஸ்பிரிடஸ், தி ஈகில் மற்றும் எலிகி ஃபார் கொசோவா (கொசோவாவிற்கான இரங்கற்பா) (The Pyramid, Spiritus, The Eagle, and Elegy for Kosovo)ஆகியவை அவர் சர்வாதிகார ஆட்சியின் பிடியிலிருந்த காலத்தில் எழுதி அவருக்கு முதலில் உலகப் புகழைப் பெற்றுக்கொடுத்த படைப்புகளைவிடவும் நேரடியாகவும் ஒளிவுமறைவின்றியும் இருந்தன.  இந்த புதிய படைப்புகள் இது கதரேயின் கதைசொல்லலில் உயரிய கையாளல் யுக்தி (இது கதரேயின் பாணி) என்று குறிப்பிட்டுக் கூறும்படியாக இருந்ததுடன், அவை மிகவும் தெளிவாகவும், மழுப்பலாகவும், சரிந்தும் உவமான உவமேயங்கள் கொண்டதாகவும் இருந்தன.

தேசிகன் ராஜகோபாலன் கதரேயின் குறுநாவல்களில் நான் 1999 ஆம் ஆண்டு; மொழிபெயர்த்த கொசோவோவின் எலிஜிம் ( Elegy for Kosovo )  ஒன்று, அது அளவில் சிறியதாக இருந்தபோதிலும் (120 பக்கங்கள்), கொசோவோவுடன் தொடர்புடைய பைசண்டைன் பேரரசு, பின்னர் செர்பிய பேரரசு, பின்னர் ஒட்டோமன்கள காலத்தின் மோதல் குறித்த ஆழமானதும் நுணுக்கமானதுமான இலக்கிய ஆய்வு ஆகும். கொசோவாவின் இன்றைய இனமோதலுக்கான  வேர்களைப் பற்றிய ஆழமான புரிதலுக்கான திறவுகோலை இது வழங்குகிறது. ஸ்டெண்டலின் கூற்றுப்படி, “ஒரு நாவலில் அரசியல் இடம்பெறுவதானது ஒரு கச்சேரியின் போது பிஸ்டலை எடுத்து சுடுவதைப் போன்றது, இது ஒரு கரடுமுரடான விஷயம்.”  இது ஒரு அரசியல் நாவலாக இருந்தபோதிலும், அதில் அரசியல் இல்லை, முரட்டுத்தனமும் இல்லை. நாவலின் நடுப்பகுதியில் 1389 ஆம் ஆண்டின் கொசோவோ போர் குறித்து பேசுகிறது, இது பல நூற்றாண்டுகளாக பால்கன் தீபகற்பம் முழுவதும் இருந்த வீர புருஷர்கள் குறித்த. வரலாற்றின் தொகுப்பாக இருந்தது. யுத்தம் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ஒரு பேரழிவுகரமானது: பால்கன் துருப்புக்களின் கூட்டமைப்பு சுல்தான் முதலாம் முராத் தலைமையில் படையெடுத்து வந்த ஒட்டோமான் இராணுவத்தை எதிர்கொண்டது. வரலாற்று கண்ணோட்டத்தில் பார்க்கையில் இரு தரப்பினரும் வெற்றி பெறவில்லை. பால்கன் படைகளின் தளபதியான இளவரசர் லாசரைப் போலவே ஒட்டோமான் சுல்தானும் கொல்லப்பட்டார், ஆனால் இந்தப் போர் பத்தொன்பதாம் நூற்றாண்டு முழுவதும் நீடித்திருந்த பால்கனை ஆக்கிரமித்திருந்த ஓட்டோமானுக்கெதிரான யுத்தத்திற்கு மூலகாரணமாக அமைந்தது.

இந்த யுத்தத்தைப் பற்றி அறிந்துகொள்வதற்கான குறிப்பிடத்தக்க சான்றாக பதப்படுத்தப்பட்ட செர்பிய வீரபுருஷர்களின் உடல்கள் திகழ்கின்றன. இத்தகைய யுத்த கதாநாயகர்களைப் பற்றி அறிந்துகொள்வதற்கு கவிதை, பாடல்கள் மற்றும் நாட்டுப்புறப்பாடல்கள் ஆகியவை  நாட்டைக் கட்டியெழுப்பும் செர்பியவின் சமகால முயற்சிகளுக்கு குறிப்பிடதக்க பங்களிப்பை வழங்கியுள்ளன. கொசோவோவுக்கான இரங்கற்பா (Elegy for Kosovo) நடைபெற்ற யுத்தம் முற்றிலும் செர்பிய மற்றும் ஒட்டோமானுக்கு இடையிலானது என்ற கருத்தை மறுக்கிறது, மேலும் இந்த யுத்தத்தில் செர்பிய இராணுவத்தினர் மட்டும் ஈடுபடவில்லை மாறாக செர்பியர்கள், அல்பேனியர்கள், போஸ்னியர்கள், ருமேனியர்கள், குரோஷியர்கள் மற்றும் ஹங்கேரியர்களின் பட்டாலியன்களுடன் கூடிய துருப்புக்களின் கூட்டமைப்பை கொண்ட பால்கன் இராணுவம் என்று செர்பிய இராணுவத்தின் மிக நுண்ணிய வேறுபாட்டை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. ஒரு புதிய அரசியல் ஒழுங்கை உருவாக்கி கொசோவோவை ஆக்கிரமிப்பதற்கான வேலைத்திட்டத்தையும் நியாயப்படுத்துவதற்காக யுத்தத்தையும் தேசியவாத கொள்கையையும் புதினத்தின் கதையோட்டத்தில் செர்பிய தலைவர்களையும் பயன்படுத்திய செர்பியாவின் கபடத்தனத்தை கதரே சவாலுக்குட்படுத்துகிறார்.

பால்கன் காவியப் பாடல்கள் பலவற்றில் குறிப்பிட்டுள்ளது போலவே இந்த பிராந்தியத்தின் அல்பேனிய மற்றும் செர்பிய மொழிகளிலும் – நாவலின் கதை போரின் முந்திய நாளில் இளவரசர்கள் குடிப்பதற்காக ஒன்று கூடுவதோடு தொடங்குகிறது. போரின் பின்விளைவுகள் சீர்கேடானதும் அழிவை ஏற்படுத்தக்கூடியதுமாகும். மேலும்; நாவலின் இரண்டு பிரதான பாத்திரங்கள் நாடோடிப் பாடகர்களாக சித்திரிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் யுத்தகளத்திலிருந்து வெளியேறி வடக்கு நோக்கி நகர்ந்து தமது மரபுக் காவியத்தை வீடுகளின் கூடங்களிலும் அரண்மனைகளிலும் பாடியபடி செலகின்றனர். அவர்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பற்ற தோழர்கள், ஒருவழிபோக்கு பாடகர் செர்பியர், மற்றவர் அல்பேனியர், ஒவ்வொருவரும் தங்கள் மக்களை மகிமைப்படுத்தும் பழைய காவியங்களைப் பாடுவதற்கும், தங்கள் இளவரசர்களின் மங்காத புகழை உயர்த்திப்பிடிப்பதற்கா புதிய பாடல்களை இசையமைப்பதற்கும் இயற்றுவதற்கும் போர்க்களத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அந்த நாடோடிப் பாடகர்கள் இருவரும் தோழர்களாகவும் நண்பர்களாகவும் இருந்தபோதிலும், ஐரோப்பிய பிரபுக்களுக்கு முன்பாக அவர்கள் தொடர்ந்து பாடும் பாடல்கள் பழைய பகைமையை நிலைநிறுத்துகின்றன.

One after the other, in the heavy silence, they sang their songs, ancient and cold as stone, each in his own language: “A great fog is covering the Field of the Blackbirds! Rise, O Serbs, the Albanians are taking Kosovo.” “A black fog has descended—Albanians, to arms, Kosovo is falling to the damned Serb.”

ஒன்றன் பின் ஒன்றாக, மிகவும் அமைதியான தருணத்தில், அவர்கள் இருவரும் தத்தமது தாய்மொழியில் பாடினார்கள். அவை பழமையானதாகவும் பனிசூழ்ந்த கல்லைப்போல குளிர்ச்சியாகவும் இருந்தன:

கருப்பு பறவைகளின் நிலத்தை பாரிய பனிமூட்டம் சூழ்ந்துள்ளது! செர்பியர்களே கிளர்ந்தெழுங்கள், அல்பெனியர்கள் கொசோவாவை கைப்பற்றுகிறார்கள்ஒரு கருப்பு பனிமூட்டம்  அல்பேனியாவை பிளவுபடுத்துகிறது, கொசாவோ மோசமான செர்பியர்களின் கைகளில் சிக்கப்போகிறது அல்பேனியர்களே ஆயுதங்களை எடுங்கள்

கதரேயின் கண்ணோட்டத்தில்; இந்த குரோத பகைமையே தொடர்ந்துகொண்டிருக்கும் பால்கனின் துயரத்திற்குக் காரணமாகும்.

வடக்கு ஐரோப்பிய பிரபுக்கள் முதலில் குரலற்றவர்களாகவும் பின்னர் கோபக்காரர்களாகவும் மாறினர். பால்கன் நிலங்கள் ஒட்டோமான்களால் ஆளப்படும், இப்பொழுதுவரை எதிரிநாட்டுக் குடிமக்களான இவர்கள் ஒட்டோமானின் அடிமைகளாக வாழ வேணடியிருந்தது, இதனால் அவர்கள் தமது பாரம்பரிய பகையுணர்வை உயிர்ப்புடன் வைத்திருந்தனர். அவர்களுக்குள் முடங்கிக் கிடந்த போர்க்குணம் அவர்களது பாடல்களில் தொடர்ந்திருந்தது. அவர்களால் தமது போர்க்குணமிக்க மரபுகளின் பிடிகளிலிருந்து விடுபட முடியவில்லை. கதரே இந்த காட்சிகளை மனக்கண்முன் கொண்டுவருகின்றபோதிலும் அவர் தனது கருத்தை நேரடியாகத் தெரிவிக்கவில்லை. இது பால்கன் மக்களைப் பாதிக்கும் தீராத கொடிய நோய் என்பதை வாசகரிடம் சொல்லாமல், அவர்கள் ஊகித்து அறியக்கூடிய வகையில் சொல்லியிருக்கிறார். ஆயினும், நாடோடிப் பாடகர்களிடம் அவர்களின் நாட்டைச் சேர்ந்த பழமைவாய்ந்த தலைவர்கள் பற்றி பாட வேண்டாம் கதையாகச் சொல்லுங்கள் என்று கேட்கப்பட்டபோது – இந்த தலைவர்கள் வரலாற்று நாயகர்களாக மாறி சொல்லத் தொடங்கினர்: “அவை ஒரே மாதிரியான வைர தூளாகவும் ஒரே விதையாகவும் இருந்ததுடன்… , பண்டையகாலதது கதைகளில் கூறுவதுபோல வானத்திலிருந்து விழுந்த கிரீடத்தின் துண்டுகள் போனறு அதிர்ந்தன.”  பழைய மூர்க்கமான பகையுணர்வு மறைந்துபோனது.

From Kadare’s perspective, this crude hostility is the continuing tragedy of the Balkans. The spirit and the epic history of its peoples reach back to a Homeric Bronze Age, but the medieval epic songs and ballads that have sprung from the prelude and aftermath of the Battle of Kosovo have perpetuated their deadly enmity. Northern Europe, in its dark age of medieval war and plague, has lost all links to its past; the Balkans are the only conduit to that ancient time.

கதரேவின் பார்வையில், இந்த குரூர விரோதமே; பால்கன்களின் தீராத சோகத்திற்குக் காரணம். மக்களின் மனோவலிமையும் கவர்ச்சிகரமான வரலாறும் மீண்டும் ஒரு உலோககால கதாநாயகர் யுகத்தை அடைகிறது. ஆனால் கொசோவோ போரின் தொடக்கத்திலும் அதன் பின்னரும் தோன்றிய பாடல்களும் காவியப்பாடல்களும் அவர்களின் கொடிய பகைமையை தொடரச்செய்துள்ளன. வடக்கு ஐரோப்பா, அதன் இடைக்கால போர் மற்றும் கொடிய நோயின் இருண்ட யுகத்தில், அதன் கடந்த காலத்துக்கான அனைத்து தொடர்புகளையும் இழந்துவிட்டது; அந்த பழங்காலத்திற்கான ஒரே வழியாக பால்கன் மட்டுமே எஞ்சியுள்ளது.

கனக்டிகட் பல்கலைக்கழகம்

Neustadt International Prize for Literature Ismail Kadare Censorship Albania

இலக்கியத்திற்கான நியூஸ்டாட் சர்வதேச பரிசு இஸ்மாயில் கதரே அல்பேனியாவில் தணிக்கை

Peter Morgan, Ismail Kadare: The Writer and the Dictatorship, 1957–1990 (Routledge, 2020),

பீட்டர் மோர்கன் விருது, இஸ்மாயில் கதரே, எழுத்தாளரும் சர்வாதிகாரமும், 1957-1990 (ரௌட்லெட்ஜ், 2020)

The novels Spiritus, Shkaba (The eagle), and Ra Ky Mort e u Pamë: Ditar për Kosovën (Death came upon us and we met: Kosovo diary) have not yet been translated into English.

ஸ்பிரிடஸ், ஷ்காபா (தி ஈகிள்), ரா கி மோர்ட் இ யு பேம்: டிட்டார் பெர் கொசோவன் (மரணம் எம்மை நோக்கி வந்தது நாம் அதனை எதிர்கொண்டோம்: கொசோவா டயரி) இன்னமும் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்படவில்லை.

Stendhal, La Chartreuse de Parme (M. Lévy Freres, 1864), 366 (my translation).

Ismail Kadare, Elegy for Kosovo: A Novel, trans. Peter Constantine (Arcade, 2000), 52.

Kadare, Elegy for Kosovo, 100.

பீட்டர் கொன்ஸ்டான்டைன் பற்றிய சிறுகுறிப்பு:

தேசிகன் ராஜகோபாலன் Peter Constantine’s recent translations include works by Augustine, Rousseau, Machiavelli, and Tolstoy; he is a Guggenheim Fellow and was awarded the PEN Translation Prize for Six Early Stories, by Thomas Mann, and the National Translation Award for The Undiscovered Chekhov. He is Professor of Translation Studies at the University of Connecticut.

பீட்டர் கான்ஸ்டன்டைனின் சமீபத்திய மொழிபெயர்ப்புகளில் அகஸ்டின், ரூசோ, மச்சியாவெல்லி மற்றும் டால்ஸ்டாய் ஆகியோரின் படைப்புகள் அடங்கும்; அவர் ஒரு குகன்ஹெய்ம் உறுப்பினர் ஆவார், மேலும் ஆறு பழைய கதைகளுக்கான தாமஸ் மான் மற்றும் தி அன்ஸ்கிவர்டு செக்கோவிற்கான தேசிய மொழிபெயர்ப்பு விருதான PEN மொழிபெயர்ப்பு பரிசு பெற்றவர். கனெக்டிகட் பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்பு ஆய்வுகளுக்கான பேராசிரியராகப் பணிபுரிகிறார்.

ஆசிரியர் குறிப்பு:

தேசிகன் ராஜகோபாலன்Born in 1936, Ismail Kadare is Albania’s best-known poet and novelist. In 2005 he was awarded the inaugural Man Booker International Prize for “a body of work written by an author who has had a truly global impact.” He also received the 2009 Prince of Asturias Prize in Spain, and he won the Jerusalem Prize for the Freedom of the Individual in Society in 2015. WLT published “The Blinding Order,” an excerpt from Agamemnon’s Daughter, in 2006 and has been reviewing Kadare’s work since the publication of Le général de l’armée morte in 1970.

1936ஆம் ஆண்டு பிறந்த இஸ்மாயில் கதரே அல்பேனியாவின் சிறந்த கவிஞர் மற்றும் நாவலாசிரியர் ஆவார். 2005 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட மேன் புக்கர் சர்வதேச பரிசு அவருக்கு “உண்மையாக உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு எழுத்தாளரால் எழுதப்பட்ட ஒரு படைப்பு”க்காக வழங்கப்பட்டது,  அவர் ஸ்பெயினில் 2009 ஆம் ஆண்டின் இளவரசர் அஸ்டூரியாஸ் பரிசையும் பெற்றார், மேலும் அவர் 2015 இல் சமூகத்தில் தனிநபரின் சுதந்திரத்திற்கான ஜெருசலேம் பரிசையும் வென்றார். டபிள்யு எல் வ “தி பிளைன்டிங் ஆர்டரை” பதிப்பித்தது இதில் கதரே 2006ஆம் ஆண்டு எழுதிய அகாமெம்நான்ஸ் டாட்டர் இதிலிருந்து சில பகுதிகள் எடுத்தாளப்பட்டதுடன் 1970 இல் லு ஜெனரல் டி எல் ஆர்மி மோர்டே வெளிவந்த கதரேயின் படைப்புகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

Kadare is a champion of international democracy and in 1990 went into political asylum in France. He has written, “I became familiar with literature before I knew freedom, so that it was literature that led me to liberty, not the other way around. Faith in literature and in the creative process brings protection. It generates antibodies that allow you to struggle against state terror.” Kadare lives in Paris and Tirana.

கதரே சர்வதேச ஜனநாயகத்தின் சாம்பியன் ஆவார், 1990 ல் பிரான்சில் அரசியல் தஞ்சம் புகுந்தார். “நான் சுதந்திரத்தை அறிந்து கொள்வதற்கு முன்பேஇலக்கியத்தை நன்கு அறிவேன், ஆகவே இலக்கியமே என்னை சுதந்திரத்திற்கு இட்டுச் சென்றதே தவிர, வேறு எந்த வழியுமில்லை. இலக்கியத்தின் மீதான நம்பிக்கையும் படைக்கும் செயன்முறையும் பாதுகாப்பைக் கொண்டுவருகிறது. இது அரச பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதற்கு உங்களுக்கு நோயெதிர்ப்பு சக்தியை வழங்குகிறது” என்று அவர் எழுதியுள்ளார். கடரே பாரிஸ் மற்றும் டிரானாவில் வசிக்கிறார்.

பெப்ரவரி 18, 2021

மூலம் : https://www.worldliteraturetoday.org/blog/essay/whats-left-unsaid-how-ismail-kadare-escaped-suppression-embraced-style-it-taught-him

தேசிகன் ராஜகோபாலன் -இலங்கை

தேசிகன் ராஜகோபாலன்

(Visited 38 times, 1 visits today)