நேர்காணல்-மொழிபெயர்ப்பு-தேசிகன் ராஜகோபாலன்

                                                           “புனைவை அப்படியே எழுதாதே. ஒரு விவரணமாக எழுது”

                                                            ஜோர்ஜ் எட்வேர்ட்.”

லா அல்டிமா ஹெர்மனா (இறுதி சகோதரி, La última hermana ,The last sister) யை எழுத வேண்டும் என்ற எண்ணம் எப்படி உதித்தது?

கார்லோஸ் மோர்லாதான் இதற்குக் காரணம் என்று கூறலாம். அவர் இந்த நேர்காணல் இடம்பெற்ற மட்ரிட் நகரத்தில் மிகவும் பிரபல்யம்தான் வாய்ந்தவர். இந்த நகரத்தில் சிலிநாட்டின் ராஜதந்திரியாகக் அவர் கடமையாற்றிய வேளையில் உள்நாட்டுப் போர் காரணமாக ஆபத்தில் இருந்த ஏராளமான மக்களுக்கு புகலிடம் அளித்தார். ஃபெடெரிகோ பார்சியா லொர்காவின் ( Federico García Lorca ) நண்பராகத் திகழ்ந்தார். கார்லோசின் ஊடாக, நான் பல பிரெஞ்சு ஹிஸ்பனிஸ்ட்டுகளைச் சந்தித்தேன். அவர்களில் ஒருவர் எனது பெயரைக் கேள்விப்பட்டதும் நீங்கள் மரியா எட்வட்ஸின் உறவினரா என்று என்னிடம் கேட்டார். இது அறுபதுகளின் நடுப்பகுதியில் நிகழ்ந்தது. இதுவரையில் நான் அவரைப்பற்றி காதால் மட்டுமே கேள்விப்பட்டுள்ளேன். அவர் சாந்தியாகோவிலிருந்து வெளிவந்த எல் மெர்குரியோ (El Mercurio) செய்தித்தாளின் இறுதிச் சகோதரியாக இருந்தார் என்பதுடன் தனிப்பட்ட சூழ்நிலையின் காரணமாக அவர் தனது பிரெஞ்சு வாழ்க்கையை நிறைவு செய்திருந்தார்.

உங்களது கதாநாயகியான மரியாவின் காலப்பகுதியில் பாரிஸ் எவ்வாறு இருந்தது?

அது மென்மையான இதயம் கொண்டவர்கள் வாழ்ந்த ஒரு மகிழ்ச்சிகரமான,  கண்களுக்குக் குளிர்ச்சியான ஒரு நகரமாகத்தான் இருந்தது. இரண்டாம் உலகப் போர் தொடங்கியவுடன், இனி ஒருபோதும் பாலம் அமைக்கும் விளையாட்டை மேற்கொள்ளக்கூடாது என்று முடிவெடுத்தாள். ஒரு சமூக சேவகராக விரும்பி, ரோத்சைல்ட் (Rothschild Hospital) மருத்துவமனையில் தன்னார்வத் தொண்டராக சேவையில் ஈடுபட்டார். இந்த மருத்துவமனை யூதர் ஒருவரினால் நடத்தப்பட்டதால் அவரைப் போன்றவர்கள் பணியாற்றுவது ஆபத்தானதாக இருந்தது. நான் பாரிசில் சிலிநாட்டின் தூதுவராகக் கடமையாற்றிய வேளையில், நான் அங்கு சென்று பணிப்பாளருடன் உரையாற்றியிருந்தேன். அவர் எனக்கு மகப்பேற்று விடுதியைக் காண்பித்தார். இப்பொழுது அது நிர்வாகப் பிரிவுகளாக மாறியுள்ளது. மரியா வெளியில் செல்லும்போது குழந்தைகளை தனது பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்துவிட்டே செல்வது வழக்கம். சிறிது காலத்தின் பின்னர் அவர்கள் அதனைக் கண்டுபிடித்து விட்டதுடன் அவளை சித்திரவதை செய்தனர். இருப்பினும் அவள் ஒருபோதும் தனது நடவடிக்கையைக் கைவிடாததுடன் முன்னெப்பொழுதையும்விட கவனமாகச் செயற்பட்டாள்.

தான் காப்பாற்றிய குழந்தைகளுடன் அவர் எப்போதாவது தொடர்பு கொண்டாரா?

அந்த நாவலில், குழந்தைகளினால் பிரிவுபசார ஒன்றுகூடல் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர் அவர்களில் ஒருசிலரிடம் தொடர்புகொண்டிருந்தார் ஆனால் மிக முக்கியமாக, அதனூடாக அவர் அனைவருக்கும் ஆதரவை வழங்கியிருந்தார். அவர்களுள் இருவரை என்னால் நேர்காணல் செய்யக்கூடியதாக இருந்தது. ஒருவர் முக்கியமான வயலின் வித்துவான் மற்றவர் பாரிசின் புறநகர்ப் பகுதியில் வசிக்கும் ஒரு தையல்காரர். பாரிஸ் குறித்து அற்பத்தனமானதாகவும் மிகச் சாதாரணமாகவும் அளிக்கப்படும் விளக்கங்கள் உண்மையில் புனையப்பட்டவை இருப்பினும் அதில் உண்மையும் இருந்தது! ஜீன் கொக்டியொ, கொலெட்டி, வைஸ்நெட் ஹ_ய்டொப்ரொ உள்ளிட்ட ஏராளமான கலைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுடன் மரியா நட்புவட்டத்தை ஏற்படுத்தியிருந்தார் அவர்கள் அவரது வீட்டிற்குச் செல்வதுடன் அவர் அளிக்கும் விருந்துபசாரங்களிலும் பங்கேற்பார்கள்.

எப்படி இந்த சிரிய பெண் பாரிசில் நிலைகொண்டாள்?

நல்லது. நாவலில் ஏராளமான சுயசரிதை விடயங்கள் அடங்கியுள்ளன. அவர் குயிலிர்மொ எறாசுரிஸ் Guillermo Errázuriz என்னும் இராஜதந்திரியை திருமணம் செய்துகொள்கிறார். அவர் வடஅமெரிக்க நடிகையுடன் ஏற்பட்ட காதலின் காரணமாக 1922இல் தற்கொலை செய்துகொள்கிறார். மரியா நாடக ஆசிரியரான ஜோர்ஜ் ஃவெடியுவின் (Georges Feydeau) மகனை மறுமணம் செய்கிறார். இவர்களது மணவாழ்க்கை 1926இல் முடிவிற்கு வருகிறது இதனால் அவர் பாரிசில் தங்கிவிடுகிறார். அவருக்கு அங்கு ஒரு நெருங்கிய நண்பர் கிடைக்கிறார். மரியா செல்லுமிடமெல்லாம் அவரும் செல்வதால் நாவலில் அவர் பிரதான பாத்திரம் வகிக்கிறார். அவர்தான் ரெனெ நுநெஃ ஸ்க்வார்ட்ஸ் (René Núñez Schwartz) . இவர் ஸ்பானியார்ட்டின் செபார்டிக் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். இவர் ஸ்பெயினிலிருந்து தப்பிப்பதற்கு முயற்சி செய்து வந்திருந்தார். அவர் ஒரு கம்யூனிஸ்டாக இருந்தார். இருபாலினத்தவராக இருந்தார். அவளது வாழ்க்கை சீர்கெட்டதன் பின்னர் நான் ஏற்கனவே கூறியவாறு அவள் தான் காப்பாற்றிய ஒவ்வொரு பிள்ளைக்கும் தொடர்ந்தும் நிதியுதவி செய்ய வேண்டியிருந்தது அவள் பாரிசிலிருந்து சிலிக்குத் திரும்பியபோது அவரும் அவளுடன் கூட வந்தார். இந்த நாவலில், மரியா தான் சான்டியாகோவில் கைவிட்டுவந்த சிறிய மகளைக் குறித்து தொடர்ந்தும் பேசினார். அதுதான் மரியாவைக் குறித்து நாம் சொல்லக்கூடிய ஒருவகை முரண்பாடான சுவாரஸ்யமான பகுதி. அவருக்கு மிட்டா என்ற பெண்குழந்தை இருந்தது. அவள் அதனை சான்டியாகோவில் விட்டுவிட்டு வந்த பிறகு ஒருபோதும் பார்க்கவில்லை. அவள் ஏனையோரின் பிள்ளைகளைக் காப்பாற்றியுள்ள அதேவேளை தனது குழந்தையைப் பற்றி எதுவித அக்கறையும் அற்றவளாக இருந்தாள். மற்றொரு சுவரஸ்யமான பாத்திரம் புருனில்டா அவரது பணிப்பெண். எனது தரப்பில் முக்கிய பங்கேற்றிருக்கும் ஒரு கற்பனைப் பாத்திரம். மரியாவின் அன்றாட வாழ்க்கையைப் பற்றிய விபரம் அறியாமலேயே, சிலிநாட்டின் முழுமையான பிரஜையான அவர் மரியாவின் நண்பரானார். இதுவே நான் படைத்த பணிப்பெண் கதாபாத்திரம். புருண்pல்டாவிற்கு மெக்சிகோ தூதரகத்தில் ஓட்டுனராகப் பணிபுரிந்த ஒருவரைத் தெரிந்திருந்தது அவருடனான திருமணத்துடன் அது நிறைவு பெறுகிறது. ஏராளமான வாசகர்கள் அந்த கதாபத்திரம் குறித்து விமர்சித்திருந்தனர். ஓவியடோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியரான எடுவேர்டோ சான் ஜோஸ் (Eduardo San José ) தனது விமர்சனத்தில் நாவலின் முக்கியமான பகுதி குழந்தைகளைக் காப்பது பற்றி பேசாமல், பல்வேறு பாத்திரங்களைக் கொண்ட ஒரு குடும்பத்தைப் பற்றியதாக அமைந்துள்ளது என்று கூறுகிறார். மற்றொரு முக்கிய கதாபாத்திரம் அட்மிரல் கனாரிஸ் (Admiral Canaris) அவர் மரியா சித்திரவதை அனுபவித்துக்கொண்டிருந்தபொழுது அவளைக் காப்பாற்றியவர். இவர் பிரபல்யமானவர் என்பதுடன் யுத்தம் குறித்த வரலாற்று ஆய்வாளர்களின் அங்கீகாரத்தையும் பெற்றிருந்தார். கிரேக்கத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஜெர்மானியரான இவர், ஹிஸ்பானிக் உலகத்தைப் பற்றி நன்கறிந்திருந்தார். தென் சிலியின் ஜெர்மனிய சமூகத்தினரைக் கண்காணித்து அவர்களுக்கு உதவி செய்வதே இந்த கடற்படை அதிகாரியின் பணியாகும். இங்குதான் புதினம் தனது பங்கைச் செய்வதற்காக வருகிறது: எட்வர்டின் குடும்பத்தினர் செல்வாக்கு மிக்கவர்கள் என்றும் எல் மெர்குரியோவிற்குச் சொந்தக்காரர்கள் என்றும் அவர்களுக்கு மரியா எட்வர்ட்ஸைப் பற்றி அனைத்தும் தெரியும் என்றும் நான் கற்பனை செய்தேன். நாவலில் கடற்படை அதிகாரி பல்வேறு பெயர்களில் தோன்றுகிறார். நான் நாவலில் பயன்படுத்தியுள்ள வில்கெல்ம் சனரிஸ் (Wilhelm Canaris) என்னும் பெயர் உண்மையானது. அவர் றீட் ரோசாஸ் என்ற பெயரில் ஆங்கிலேயத்தைப் பூர்வீமாகக் கொண்ட சிலிய நாட்டவராக சிலி நாட்டின் சட்டவிரோத கடவுச்சீட்டைப் பயன்படுத்தி வருபவர். அதனை அண்மித்த காலப்பகுதியில் ஜெர்மனிய இராணுவம் அவரை சிலியிலிருந்து தப்பிச் சென்று தமக்கு உளவு பார்த்துச் சொல்லுமாறு பணித்தது. அவர் அன்டெஸ் மலைத்தொடரைக் கடந்து ஐரோப்பாவிற்குள் தடம்பதித்தார். அவர் ஜெனர்மனிய படையில் இணைந்துகொண்டார். அதன் பின்னர் அவர்கள் ரோஜா லக்ஸம்பர்க் படுகொலையில் அவர் பங்குபற்றியதாக அவர்மீது குற்றம் சாட்டினர். யுத்தத்திற்குப் பின்னர், அவர் ஸ்பெயினில் கடற்படையினருடன் இணைந்துகொண்டார். பிரான்சிஸ்கோ பிரான்கோவினால் ஹிட்லருடன் இணைந்து பணியாற்றக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டவர்களுள் அவரும் ஒருவர் என்று நம்பப்படுகிறது. தோல்விக்காக ஜெர்மனி கண்டனத்திற்குள்ளாவதாகவே அவர் நினைத்திருந்தார்.

உண்மையான வரலாற்றில் நீங்கள் எந்தளவிற்கு விசுவாசமாக இருக்க விரும்பினீர்கள்?

உண்மையில் உயிர்த்திருக்கக்கூடிய மக்களைப் பற்றிய விபரங்களை புனைவது எனக்கு ஒரு பிரச்சினையாக இருந்தது. உதாரணமாக,  கேனரியின் வீட்டில் அவர் கெஸ்டாபோவினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த வேளையில் நடைபெற்றவைகளை வெளிக்கொணர்வதில் பிரச்சினை இருந்தது. ஆக்கிரமிக்கப்பட்ட பாரிசில் ஜெர்மனியர்களின் யூத விரோதம் மிக விரைவாகத் தோன்றிவிட்டது என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டதால் எனது முதலாவது விவரணத்தில் ஒரு தவறு நேர்ந்துவிட்டது. பிரபல இத்தாலிய வரலாற்றாசிரியரும் எனது நண்பருமான மௌறிசியோ செர்ரா, “ஜெர்மனியார்கள் மெதுவாக தங்களை உணர்ந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர். ஆகவே அந்தப் பகுதியின்மீது துப்பாக்கியை நீட்டாதே” என்று கூறினார். இதன் விளைவாக, நான் உண்மையைத் தெரிந்துகொண்டு, அமெரிக்க இராஜதந்திரிகள் விச்சிக்குச் சென்று, பாரிசில் உள்ள தூதர்களை வெளியேற்றியதாக கதையை மாற்றியமைத்தேன். அவர்களில் ஒருவரே நான் நேரிடையாகச் சந்தித்த பிரபல சிலிய எழுத்தாளரான சால்வடோர் றெயிஸ் என்பவர்.

உங்களது நாவலுக்கான கரு கிடைத்துவிட்டதாக நீங்கள் எப்பொழுது உணர்ந்தீர்கள்?

நான் எழுதிய நாவல் போன்றவற்றிற்கு ஒரு உண்மைக் கதையை நான் ஏற்கனவே அறிந்திருந்ததன் விளைவாக எனக்கு ஏற்பட்ட அனுபவங்களே கருவாக அமைந்தன. மரியாவைப் பற்றி நான் நீண்டகாலமாகமே பேசிவருகிறேன். அது ஜோவாகினை எல் இன்டில் டி லா பமிலியா ( El inútil de la familia ) என்னும் நாவலில் வருகின்ற நாவலாசிரியரின் மாமாவான ஜோவாகின் எட்வரட்ஸ் பெல்லோ) போலவே அராஜகவாதத்தை எடுத்தியம்புவதற்கான கதைசொல்லியாக அவ்வப்போது வந்து செல்வதாக இருந்தது.

அதனைப் போன்றே உங்களது ஏனைய பாத்திரப்படைப்புக்களைப் போலவ, அவைகளும் வரலாற்று உண்மையை உறுதிசெய்யும் வகையிலான உண்மையான பாத்திரங்களை அடிப்படையாகக்

கொண்டிருந்தன. நாம் புதினங்களின் சுயசரிதைகளைப் பற்றிப் பேசுகிறோமா?

முற்றிலும் இல்லை, ஏனெனில் என்னிடத்திலும் ஏராளமான ஊகங்கள் உள்ளன. எனது படைப்புகள் புனைவையும் புனைவற்றவையையும் உள்ளடக்கிய கலப்பிலக்கியம் என்றே நான் நினைக்கிறேன். “புனைவை அப்படியே எழுதாதே. ஒரு விவரணமாக எழுது” என்று மரியோவர்காஸ் ல்லோசா ஒருமுறை என்னிடம் கூறினார்.

நீங்கள் எழுதுகையில், உண்மைக்குப் புறம்பான விடயங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் உங்கள் உள்ளுணர்வு எச்சரித்த அனுபவத்தைப் பெற்றுள்ளீர்களா?

உண்மைக்கும் புதினத்திற்கும் இடையில் ஊடாடுவதை நான் விரும்புகிறேன். ஆரம்பத்திலிருந்தே, அது நடைமுறையில் மனச்சாட்சி சார்ந்ததாகவே அமைந்துள்ளது. அது எனது இலக்கியப்பணியின் குணாம்சம்.

உங்களது எழுத்துப் பணி எவ்வாறு தொடங்கியது?

இறுதியில் அனைவரும் நான் ஒரு கவிஞனாகத் திகழ்வேன் என்றே எதிர்பார்த்தார்கள். நான் ஒரு ஜனாதிபதியாக, ஒரு தொழிலதிபராக, ஒரு சட்டத்தரணியாக வந்திருக்க வேண்டியவன். ஆனால், நான் இலக்கிய அளவுகோல் தொடர்பாக பேராசிரியர் எடுஆர்டோ சோலார் கோரியா விடம் இருந்த புத்தகத்தின் மூலம் நான் கவிதையைக் கண்டுகொண்டேன். பதினான்கு வரிகளைக் கொண்ட எதுகை மோனையைக் கொண்ட குறுங் கவிதைகளைத் தேடியபொழுது, நான் கவிஞர்களைக் கண்டுபிடித்தேன். நான் ஒரு மறைமுக கவிஞனாக உருவெடுத்தேன். சான் இக்னாசியோவில் உள்ள எனது நண்பர்களுக்கு கவிதையைப் படித்துக்காட்டுவேன். நான் ஒரு நல்ல கவிஞன் இல்லை என்பது எனக்குத் தெரியும் இருப்பினும் எனக்கு நல்ல காது இருக்கிறது. அதே நேரம், எது எவ்வாறிருப்பினும், கதைசொல்வதில் சான்டியாகோவின் வெவ்வேறு பகுதிகளில் சில சூழ்ச்சிகள் நடப்பதாக உணர்கிறேன். எனது தாயாரும் பாட்டனாரும் கதைசொல்வதில் நிபுணத்துவம் பெற்றிருந்தனர். நான் கதைகள் எழுதத் தொடங்கியபோது, கவிதை எழுதுவதைப் போன்று ஒன்றின் சாயலாக அல்லாத ஒன்று என்னுடன் ஒட்டி உறவாடுவதாக உணர்ந்தேன். எனக்கு நேர்ந்த சம்பவத்தைக் கொண்டோ அல்லது பிறர் அத்தகைய சம்பவங்களை என்குக் கூறியதையோ மையமாக வைத்தோ நான் கதைகளை எழுதுகிறேன்.

இப்பொழுது நீங்கள் பப்லோ நெருடாவில் குறிப்பிட்ட காலப்பகுதியில் வாழ்ந்தவரின் வாழ்க்கையை மையமாக வைத்து (His time as consul in Burma) பர்மாவில் தூதுவராகக் கடமையாற்றிய காலத்தில் என்னும் நாவலை செழுமைப் படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளீர்கள். அது குறித்து விளக்குங்களேன்.

நான் இந்த நாவலை நீண்டநாட்களுக்கு முன்னமேயே எழுத விரும்பினேன். அவரது பிரதிநிதியாகத் திகழ்ந்த ஜோசி பிளிஸின் அன்பைப் படம்பிடித்துக் காட்ட விரும்பினேன். உண்மையில் நான் பர்மா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்து விபரங்களைத் திரட்ட முடிவெடுத்திருந்தேன். நண்பருடனான ஒரு உரையாடல் என்னை சரியாக வழிநடத்தியது. “போக வேண்டாம்; அதற்குப் பதிலாக ஒரு பழைய புத்தகக் கடைக்குச் சென்று அந்த காலத்திற்குரிய புத்தகங்களைத் தேடு. எமிலியோ சல்காரி ஒருபோதும் றோமை விட்டு வெளியேறவில்லை என்பதை நினைவில் கொள்.”  அத்தகைய இடங்களைப் பற்றிய புத்தகங்களை வாங்கினேன். பின்னர் நெருடா அந்த காலப்பகுதி குறித்து எழுதிய விடயங்கள் அனைத்தையும் மீள்வாசிப்பு செய்தேன். அடிப்படையில், புவியில் ஒரு வாழிடம் மற்றும் எமக்குப் பரிச்சயமான அனைத்தும் : எஸ்ட்ராவாகரியோ, ஒரு குறிப்பேடும் அவரது நினைவுகளும் : இஸ்லா நெக்ரா ஆகியவற்றை மீள்வாசிப்பு செய்தேன். இவற்றுடன் நெருடா மீண்டும் வாசித்த ஜோசப் கொன்ராடின், தி நிக்கர் ஓவ் தி “நார்சிசஸ்,” பியரி லோடி, ஸோமர்செட் மௌஹமின் மை பிரதர் வைவ்ஸ் ஆகியவற்றையும் பெண்ணியம் என்ற சொல் தோன்றுவதற்கு முன்பாகவே நான் பர்மாவில் பெண்ணியத்திற்கு முக்கிய உதாரணமாகத் திகழும் ஜோசி பிலிஸ் என்னும் பெண்ணியவாதியை உருவாக்கியிருந்தேன். மேலும் புனைவில் யதார்த்தமும் எதிர்பாராத வகையில் இணைந்துவிடுகிறது என்று நான் நம்புகிறேன். ஏனெனில் இந்த பெண் ஒரே நேரத்தில் தேசியவாதியாகவும் பெண்ணியவாதியாகவும் செயற்படமுடியுமா என்பதில் குழப்பமடைந்திருந்தார். இதற்கு பர்மிய அரசியல்வாதியான அவுங் சான் ஸ_க்கி ஜோசி பிலிஸ்ஸின் தூரத்து வாரிசாக இருந்ததும் காரணமாக இருக்கலாம். அந்தப் பெண்மணி அவரது கவிதைகளிலும் நினைவுகளிலும் ஏதோ ஒருவகையில் ஆக்கிரமிப்பதால் அவர் இளம் நெருடாவில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தார். அந்தப் பெண்மணி அவரிடம் எத்தகைய ஆழமான உணர்வினை ஏற்படுத்தியிருந்தார் என்பதை “எல் டாங்கோ டெல் வியுடோ” என்னும் கவிதையிலும் பொதுவாக ரெசிடன்ஸ் ஓன் எர்த் மற்றும் இசாலா நெக்ராவின் எ நோட்புக்கிலும் கண்டுகொண்டேன். அத்தருணங்களில் அவர் எஸ்ட்ராவகாரியோவை எழுதும்போது, பிரித்தானிய ஆதிக்கத்திலிருந்த பிரதேசத்தில் இருந்த கொழும்பு மற்றும் ரங்கூன்…. ஆகிய பிரதேசங்களுக்கு மாட்டில்டியுடன் சென்றிருந்தார். அப்பொழுது ஒருவர் அடையாளம் கண்டுவிட்டார்: அவர் சிலிய நாட்டுத் தூதுவரான ரிச்சார்டோ ரெயிஸ். இது புனைவிலக்கிய வரலாற்றில் புதியது. ஆம் மிகச் சரி. இந்த நாவல் அவர் ஒரு தூதுவராகப் பெயரிடுவதிலிருந்தே தொடங்குகிறது. அது அவர் பர்மாவிலும் இலங்கையிலும் இருந்த காலத்தை விபரிக்கிறது. பின்னர் அவர் சிலிக்குத் திரும்புவதைப் பேசுகிறது. இருப்பினும் நான் ஜோசி பிலிஸ்-க்கும் இலங்கையில் அவர்கள் நிரந்தரமாகப் பிரிந்திருப்பதற்கும் இடையிலான விடயங்களையும் அதற்குப் பின்னர் நடந்த சில நிகழ்வுகளையும் விபரமாக எழுதியிருக்கிறேன்.

நெருடாவிற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து எழுத வேண்டும் என்று நீங்கள் நினைத்ததற்கான காரணம் என்ன?

நான் அன்டோனியோ ஸ்கார்மெடா அல்லது றொபட் அம்ப்யுரோ ஆகியோரின் புத்தகங்களைப் பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறேன். நெருடா பிரமிக்கத்தக்க வகையில் பலவிதமான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார். இந்தியாவில் தொடங்கி, ஸ்பெயின் நாட்டின் சிவில் யுத்தத்தில் ஈடுபட்டு, இரண்டாம் உலகப்போரின் ஆரம்பகட்டத்தையும் பார்த்தவர். இதற்கும் மேலாக அவர் பாத்திரப்படைப்புக்கு எளிமையானவராகவும் இருந்தார். ஜோசியைப் பொறுத்தவரை, அவர் அவரது கவிதைகளிலும் நினைவுகளிலும் எப்பொழுதும் நிறைந்திருந்தார்.

யார் அந்த பிலிஸ்?

அவர் அந்த நாட்களில் பகல் பொழுதில் பிரித்தானிய நிர்வாகத்தில் பணியாற்றிய ஒரு பர்மிய பெண். இரவில் அவருக்கு வேறுபெயர் இருந்தது, அவரது உண்மையான பர்மிய பெயரான நெருடா வழக்கொழிந்துபோயிற்று. அவரைப் பற்றி அறிந்துகொள்வது கடினம் ஏனெனில் அவரது நிழற்படங்களோ, வாழ்க்கைக் குறிப்புகளோ எதுவும் இல்லை. செவிவழிச் செய்திகளும் விளக்கங்களுமே கிடைத்தன. உங்களது சமீபத்திய நாவலில் மீண்டும் ஒரு பெண் கதாநாயகராக முன்னிலைப்படுத்தப்படுகிறார். கதை இலக்கியத்தில் நான் எப்பொழுதுமே பெண்ணியக் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் ஆர்வம் காட்டுகிறேன். எனது முதல் கதைகளிலிருந்தே அதாவது கன்னியாஸ்திரிகளினால் நிர்வகிக்கப்படுகின்ற பாடசாலையின் வளாகத்திலிருந்து ஒரு பெண் காணாமல் போனமையை மையமாக வைத்து எழுதிய எனது முதலாவது கதைப் புத்தகமான எல் பேசியோ (El Patio) விலிருந்தே நான் அதனைக் கடைப்பிடிக்கிறேன். சரி. நெருடா இந்தப் படைப்பில் துணைப்பாத்திரத்தை வகிக்கிறார். எனது படைப்புகளில் நான் ஏராளமான பெண் கதாநாயகர்களை முன்னிலைப்படுத்தியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். மரியா எட்வட்ஸ், ஜோசி பிளிஸ், இன்ஸ் வர்காஸ் எலிஸல்டே (María Edwards, Josie Bliss, Inés Vargas Elizalde)ஆகியோர் லா முஜெயிர் இமெஜிநாரியவில் (La mujer imaginaria) முன்நிலைப்படுத்தியுள்ளேன்.

ஏன்?

என்னால் உறுதியாகச் சொல்ல முடியும் என்று தோன்றவில்லை. நான் பெண்களை விபரித்த அல்லது பெண்களைக் கண்டுபிடித்த ஷேக்ஸ்பியரிலிருந்து ஃப்ளாபெர்ட், டோல்ஸ்டாய்வரையிலும் (Shakespeare to Flaubert and Tolstoy), சிலியிலிருந்து மரியா லுயிசா போம்பல் மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த வர்ஜினியா உல்ஃப் (María Luisa Bombal from Chile and Virginia Woolf from England)ஆகிய பெண் எழுத்தாளர்களின் படைப்புக்களை வாசித்துள்ளேன். பெண்கள் சக்தியின்மீதான கண்ணோட்டத்தை உள்வாங்கும் பழக்கம் வந்துவிட்டால் நீங்களும்கூட உங்களது படைப்புகளில் ஒரு அன்னியராகவோ அல்லது வேறுவழியிலோ உள்நுழைத்துவிடுவீர்கள். அது ஒருவகையான சூன்யத்தன்மையது.

ஆசிரியர் பற்றிய குறிப்பு :

A Conversation with Jorge Edwards Between Fiction and Reality Jorge Edwards (b. 1931, Santiago de Chile) has had one of the more extensive careers of Latin American writers today. A Chilean diplomat, he has delve into different genre—mainly short fiction, novels, essays, and chronicles—throughout his political career. He has received wide recognition for his literary standing, including the 1994 National Chilean Prize for Literature and the 1999 Spanish Cervantes Prize. His novels, such as El origen del mundo (1996), El inútil de la familia (2004), and, above all, his testimony as diplomat in Cuba, Persona non grata (1973), have brought him wide prestige as a writer and intellectual. His most recent novel, La última hermana (2016), is a lucid reflection about anonymous people who risked their lives during the Occupation of France during World War II in order to fight Nazism. In this case, the protagonist, María Edwards, who was a distant relative of the author’s, was a real person whom Edwards reconstructed based on testimonies, which he then fictionalized with great sobriety as excellent prose. Jorge Eduardo Benavides and César Ferreira.

00000000000000

ஜார்ஜ் எட்வட்ஸ் (டி. Santiago de Chile)இன்றைய இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள் மத்தியில் அதிக ஆளுமை படைத்தவர்களுள் ஒருவர். சிரியாவின் இராஜதந்திரியான இவர், தனது அரசியல் வாழ்க்கை முழுவதும் புனைகதை, புதினங்கள், கட்டுரைகள் மற்றும்  வரலாற்று ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறுவகையான விடயங்களின் மீது தனது ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். தனது இலக்கிய நிலைப்பாட்டிற்காக இலக்கியத்திற்கான 1994ஆம் ஆண்டின் சிலி தேசிய விருது (National Chilean Prize for Literature) மற்றும் 1999ஆம் ஆண்டின் ஸ்பெயின் சர்வென்ட்ஸ் பரிசு (Spanish Cervantes Prize) உள்ளிட்ட விருதுகளின் மூலம் பரந்துபட்ட அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார். எல் ஒரிஜன் டெல் மன்டோ 1996 ( El origen del mundo), எல் இனுடில் (El inútil de la familia 2004) ஆகிய நாவல்களும் இவற்றுக்கு மேலாக கியூபாவில் இராஜதந்திரியாகக் கடமையாற்றிய வேளையில், பர்சோனா நான் கிராடா 1973 (Persona non grata) என்ற நாவலும் இவரை ஒரு கௌரவமிக்க எழுத்தாளராகவும் புத்திஜீவியாகவும் நிலைநிறுத்தியது. அவரது அண்மைய நாவலான லா அல்டிமா ஹெர்மனா 2016 (La última hermana), இரண்டாம் உலகப்போரின்போது பிரான்சின் மீதான ஆக்கிரமிப்பை எதிர்த்து நாஜிக்களுக்கு எதிராக உயிரைப் பணயம் வைத்துப் போராடிய அநாமதேய மக்களின் சிந்தனையைத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. இந்த நாவலின் கதாநாயகரான மரியா எட்வட்ஸ் நாவலாசிரியரின் தூரத்து உறவினர். ஆசிரியர் அவரது உண்மையான சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டே நாவலை வடிவமைத்துள்ளார். உண்மையான சாட்சியம் சிறந்த உரைநடையாக வரவேண்டும் என்பதற்காக மிகுந்த நிதானத்துடன் தனது கற்பனையையும் கலந்து நாவலைப் படைத்துள்ளார்.

ஜோர்ஜ் எட்வர்டோ பினாவைட்ஸ் (Jorge Eduardo Benavides and César Ferreira.)

தமிழில் : தேசிகன் ராஜகோபாலன் -இலங்கை

தேசிகன் ராஜகோபால்

(Visited 66 times, 1 visits today)