நினைவின் நிச்சயமற்ற பகுதி – சிலி எழுத்தாளர் றோபெர்டோ பிரோட்ஸ்கியுடனான கலந்துரையாடல்-தமிழில் தேசிகன் ராஜகோபாலன்

 

நினைவு: நிகழ்காலத்தை வஞ்சகம் குறைந்ததாக உருவாக்குதல்

லிசா டிகியோவன்னி : கடந்த தசாப்தத்தில் பரபரப்பை ஏற்படுத்திய தலையங்கங்களையும் திரைப்படங்களையும் கடந்த காலத்தில் சிலியில் நடைபெற்ற சர்வாதிகார ஆட்சியைப் பற்றிய சம்பவங்களை வெளிக்கொணரும் வகையிலான புதினங்களையும் கண்டிருக்கிறோம். அதே நேரம் அலேன்டேயின் ஆட்சிக்காலத்தை நினைவூட்டக்கூடிய மகிழ்ச்சி துன்பம் ஆகிய இரண்டும் கலந்த உணர்வுகளை கொண்ட அதீத ஆர்வத்தைத் தூண்டக்கூடிய சம்பவங்களும் நடந்தேறின. இத்தகைய “நினைவு வரத்தை”ப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? தலைப்பைச் சுரண்டுவதாக நீங்கள் கருதுகிறீர்களா? ஞாபகத்தைவிடவும் மேலதிகமாக ஏதேனும் இருக்கிறதா?

றொபெர்ட்டோ பிராட்ஸ்கி : நல்லது. ஒரு அதிர்ச்சிகரமான காலத்தின் பின்னர் சமூகங்கள் அவ்வப்போது ஆரம்பத்தில் கடந்தகால நினைவுகளை தாமே அழித்துவிட விரும்புகின்றன என்று நான் நினைக்கிறேன். பின்னர் மீள்கட்டுமானம் மற்றும் பிரதிநிதித்துவத்திற்கான காலம் தொடங்குகிறது. உற்பத்தி அல்லது மிகை உற்பத்தி என்னும் சூழலுக்குள்ளேயே நினைவு குறித்த பதிவுகளும் கலாசார உற்பத்திகளும் இருப்பது இயல்பானது அதுவே எதிர்பார்க்கப்படுவதாகவும் எனக்குப் தோன்றுகிறது. கலாசார உற்பத்தியில் உள்ள வேறுபாடே சுவாரஸ்யமானது என்பதை நான் கண்டு கண்டுகொண்டேன். ஒருபுறத்தில் போராட்டங்கள் நடைபெற்ற இடங்களை நினைவுச்சின்னங்களாக மாற்றுவதும் அப்பொழுது நாம் எப்படி இருந்தோம் என்பதை மீட்டிப்பார்ப்பது என்பது கலாசார உற்பத்தியின் ஒருவகை. மறுபுறத்தில் ஒரு சமூகம் எப்படி இருந்தது என்பதையும் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் பற்றியும் தற்போது அவற்றின் விளைவுகள் எத்தகையது என்ற உணர்வை பிரதிநிதித்துவப்படுத்துவது கலாசார உற்பத்தியின் இரண்டாவது வகை. இந்த இரண்டாவது வகையே எம்மைக் கட்டாயப்படுத்துகிறது என நான் கருதுகிறேன். ஏனெனில் அது “இலத்தீன் அமெரிக்காவின் பேரனர்த்தம்” என்று எம்மால் அழைக்கப்படுகின்ற விடயங்களைக் கையாள்கிறது. அது 1970களிலும் 80களிலும் இடம்பெற்ற அபரிமிதமான அரசியல் வளர்ச்சிகளையும் பாரிய வீழ்ச்சிகளையும்

இருட்டறைகளையும் உள்ளடக்குகிறது. இலத்தீன் அமெரிக்க சமூகங்கள் ஏதோவொரு வகையில் மூர்க்கத்தனமானவர்களாக மாறினர் அல்லது வீழ்ச்சியடைந்தனர். பின்னர் அதிலிருந்து அவர்கள் மீண்டெழவேண்டியிருந்தது. அனர்த்தங்களுக்குப் பின்னரான தற்போதைய சூழலில் அனர்த்தத்திற்கான சூழலை நினைவுபடுத்துவதற்கான தேடல் எழுந்துள்ளது. அந்தத் தேடலிலேயே மறைத்து வைக்கப்பட்டுள்ள பல விடயங்களை வெளிக்கொணர முடியும். அந்த வெளிப்படுத்தல்கள் எதிர்காலத்துடன் தொடர்புபட்டவை. அவை முற்போக்குச் சிந்தனையுடையவை. அது வெறுமனே நினைவுச்சின்னங்களை உருவாக்குவதுடனோ அல்லது வகைப்படுத்திப் பாதுகாப்பதுடனோ மட்டுப்படுத்தப்பட முடியாதது. அவற்றிற்கு மேலாக அதற்கு அரசியல் நோக்கம் அல்லது ஒரு பாதுகாப்பு முயற்சி அல்லது எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது என நான் கருதுகிறேன். ஆகவே கலாசார உற்பத்தி இரு வகைப்படும். ஒன்று: மரபுரீதியான நினைவுகளுடன் தொடர்புடையது அது அந்த காலத்தில் நிகழ்ந்தவைக்கான காரணத்தையும் நோக்கத்தையும் பாதுகாத்து வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கும். மற்றையது: நினைத்துப்பாரக்க முடியாத கண்டுபிடிப்புகளை நோக்கி முன்னேறி நாளை நடக்கப்போவதைப் பற்றிக்கூடச் சிந்திக்கும் வகையில் கடந்தகாலத்தை ஆய்வு செய்யும்.

எல்டிஜி: நினைவகத்தினால் நிகழ்காலத்திற்கும் குறிப்பிடக்கூடிய சில பயன்கள் உள்ளன என்று நாம் சொல்லலாமா?

றொபட்: ஆம். ஆனால் நிகழ்காலத்தைக் கட்டியெழுப்புவதில் நினைவுகள் அதிகளவில் செல்வாக்கு செலுத்துவதனால் அது என்னைக் கவர்கிறது. அதனை நாம் காலத்தில் ஏற்படுகின்ற மாற்றங்களில் பார்க்க முடிகின்றது. பிரதிநிதித்துவப் படுத்துதலில் நிகழ்கின்ற நீள்வட்டவடிவ ஏற்ற இறக்கங்கள் தன்னெழுச்சியான நினைவுகூர்தல்களின் தாக்குதல்கள் எத்தகைய தீர்மானமுமின்றி ஒருவர் உரையாற்றும் தருணங்களினால் ஏற்படுகின்ற இடையூறு தீர்க்கப்படாத அல்லது திடீரென்று தோன்றும் விபரிக்க முடியாத பிம்பங்கள் ஆகியவை நிகழ்காலத்தை உருவாக்குவதில் நம்பிக்கையிழக்கச் செய்கின்றன. அதுதான் சரியான காரணம் என்று நான் நினைக்கிறேன். ஆகவே நினைவகம் என்பது மறைப்பதற்குப் பதிலாக மீண்டும் மீண்டும் கடந்தகாலத்தை நினைவுபடுத்துவதாகவே இருக்கிறது. இதுவே நிகழ்காலத்தைக் கட்டியெழுப்புவதற்குத் தடையாக உள்ளது. மிகவும் பாரம்பரியமான கலாசார உற்பத்திவகை எம்மைக் காக்கின்ற கவசமாகத் திகழ்கிறது எம்மிடம் உள்ள பரிசுப் பொருள் என்ன என்பதைப் பார்க்காமலேயே நாம் அதில் லயித்திருப்பதற்கும் அனுமதிக்கிறது என்ற போர்வையில் அந்தப் பரிசிற்குள் என்ன இருக்கிறது என்பதை ஆராயாமலேயே நேற்று நடந்தவற்றின்மீது அது ஒளியைப் பாய்ச்சுகிறது.

பெட்ரோ கார்சியா-கேரோ: நாம் முகங்கொடுக்க விரும்புகின்ற எண்ணக்கருக்களில் ஒன்றின்மீது உங்களது பார்வையும் இணைகிறது. அதாவது கடந்தகாலத்தில் நடந்தவைகளைநினைவுச் சின்னங்களாக்குவதனூடாக பொதுமக்கள் நினைவில் வைத்துக்கொள்வதற்கான இடைவெளியை உருவாக்குவது அது ஒரு குறிப்பிட்ட எல்லைவரை சிலியின் கலாசார உற்பத்தியிலும் இடம்பிடித்திருந்தது. கடந்த காலங்களுடனும் நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி இந்த எதிர்கால கருத்திட்டங்களைத் திறந்துவிடாத அதிர்ச்சியிலும் இந்த முயற்சியின் விளைவு எந்த அளவிற்கு இருக்கிறது? இடைநிறுத்தமின்றி பிரதிபலிப்பின்றி ஒருவர் கடந்தகாலத்தை நினைவு படுத்த முடியுமா?

றோபட்: நினைவுச்சின்னம் அமைத்தலில் உள்ள பிரச்சினை என்னவென்றால் பிற்காலத்தில் அதனை மறக்கக்கூடிய வகையில் அந்த இடத்தில் வேறு ஒன்றை வைப்பதுதான். ஒன்றை மறப்பதற்கும் அதில் பொதிந்திருக்கும் மேலதிக சக்தியையும் அதன் குறியையும் மறப்பதற்கும் சிறந்த வழி அதனை நினைவுச்சின்னமாக்குவதே. அது எமது நினைவைப் பிரதிபலிக்கக்கூடிய குறியீடான ஒரு கட்டிடத்தை நிர்மாணிப்பதாகவோ, ஒரு சிலையை வைப்பதாகவோ, ஒரு நினைவுச்சின்னத்தை அமைப்பதாகவோ நினைவலையின் சோகத்தை அல்லது காவியத்தை எதிர்ப்பை அல்லது ஏதோவொன்றை வெளிப்படுத்துவதாகவோ இருக்கலாம். அதன் விரிவாக்கததின்போது அது மறக்கடிக்கப்பட்டு புதிய தளத்தை உருவாக்குகிறது. ஆனால் மறுபுறத்தில் கடந்தகாலத்தை நினைவில் வைத்திருப்பதற்கும் பல்வேறு பிரதிநிதித்துவங்களை நினைவில்கொள்வதற்கும் ஒரு இடத்தை உருவாக்குவது அவசியம் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் அவர்கள் தம்மை

ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்கு ஒரு இடைவெளி தேவை. அது எப்படிப்பட்ட இடமாக இருக்க வேண்டும்? அதுதான் கேள்வி. எந்த இடம்? நினைவுச் சின்னங்களுக்குள்ளேயா? நிறுவனங்களுக்குள்ளேயா? சிவில் சமூகத்திலா? அடிமட்ட குழுக்களிலா? அல்லது கலைக்குள்ளேயேவா? அதுதான் கேள்வி என்று நான் நினைக்கிறேன். இருப்பினும் அது எந்த இடம் என்பது எனக்கு உண்மையாகவே தெரியாது. எனக்கு எனது இடத்தைப் பற்றி தெரியும் அல்லது நாவலில் அதற்கான இடத்தை ஒதுக்கும் சாத்தியம் இருக்கிறது அந்த உணர்விலேயே நாம் விவாதித்தபடி ஒருவிதமான நினைவை தொடர்ச்சியாக ஒவ்வொருநாளும் மீண்டும் மீண்டும் நாவல்களில் செயற்றிறனுடன் பிரதிநிதித்துவப்படுத்த முடிகிறது. என்னைப் பொறுத்தவரை நாவல் சாத்தியமான இடத்தில் நினைவை விவாதிப்பதற்கும் நிகழ்காலத்தில் கடந்தகால நிகழ்வுகளின்மீது நேர்மையுடன் பார்வையைச் செலுத்துவதற்கும் நாவல் இடமளிப்பதாகவே கருதுகிறேன். புனைகதைகளில் கடந்தகாலத்தில் நிகழ்ந்த எதிர்ப்பு குறித்த நினைவுகளைச் சுமந்த காவிய புராணங்களையும் அவற்றை தற்போது தொகுக்க வேண்டியதன் அவசியத்திற்காகவும் நாம் குரல் கொடுக்க முடியும். நாம் ஒவ்வொருவரும் நமக்கான வழிகளைத் தெரிவு செய்கிறோம். சமூகக் கண்ணோட்டத்தில் பார்க்கின்றபோது நீங்கள் குறிப்பிடுகின்ற ஒருவகை நினைவுச் சின்னம் அவசியம் என்பதைப் புரிந்துகொள்கிறேன். இருப்பினும் நினைவுச்சின்னமைத்தல் என்பது கடந்தகாலத்தைக் கீழ்நோக்கி இழுத்து அதனை மறக்கச் செய்யும் என்றே நான் நினைக்கிறேன்.

வியாக்கியானப்படுத்தல்: சட்டியை சுரண்டுதல்

பெட்ரோ கார்சியா-கேரோ: மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் முழு தலைமுறையினரும் இந்த வகை நினைவாற்றல் திட்டத்திற்கு அர்ப்பணித்துள்ளனர். இது நினைவகத்தை துடைத்தெறிவதுடன்புதிய தாராளமயத்தின் வருகை மற்றும் சந்தையின் சர்வாதிகாரம் குறித்து விழிப்புடன் இருக்க அனுமதிக்காது. அது யதார்த்தம் மறைந்துவிட்டதைப் போன்றும் நீங்கள் ஒரு இருட்டறையில் அறையில் இருந்ததைப் போன்றும் இருட்டிற்குப் பழக்கப்பட்ட நீங்கள் அதிலிருந்து வெளியில் வந்து தொடர்பாடல்களை ஆரம்பிப்பதற்காக நீங்களே உங்களைத் தாக்கிக்கொண்டு பின்னர் விழித்தெழுந்தவராக “ஆ……….. இது கால், இது காது, இது ஒரு தலைமுடி” என்று கூறுவதைப் போன்றது.

றோபேட்: நிகழ்காலத்திலிருந்து ஒருவரை நீக்குவது பயற்கரமானது என்று நான் நினைக்கிறேன். நிகழ்காலத்தைப் புறக்கணிக்காமல் இருப்பதில் நாம் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். ஒருவர் நிகழ்காலத்தில் பிரசன்னமாகாமல் நினைவைக் காப்பதற்காகப் பின்னோக்கி நகர்ந்து கிட்டத்தட்ட ஒரு தொல்பொருளைப் போன்று தங்களை ஒளித்துக்கொண்டால் அல்லது நினைவகத்தைப் பாதுகாக்க பின்வாங்கினால் அந்த நினைவுகூரப்பட்ட உண்மைகள் அடங்கிய முழு பகுதியையும் அவர்கள் காணத் தவறிவிடுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். யாரும் நிகழ்காலத்திலிருந்து தப்பவோ அல்லது மீளப்பெறவோ முடியாது ஏனெனில் அத்தகைய நிகழ்வுகள் நிகழ்காலத்திற்குச் சொந்தமானவை. அவை எப்பொழுதும் கட்டியெழுப்பப்படுபவை. நிகழ்காலத்தில் என்ன நடக்கிறது என்பதை அறியாதவராக எவரும் மாறிவிடக்கூடாது. நினைவு என்பது தற்கால விடயங்களையும் முக்கியமாக உள்ளடக்கியது அவை கடந்தகால விடயத்தையும் தற்காலத்தில் உடனடியாகத் தோன்றி எதிர்பாராத வகையில் நிகழ்காலத்தை ஊடுருவிச் செல்லும் விடயத்தையும் தொடர்புபடுத்துகிறது. எனவே கடந்தகாலத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கான தொல்பொருள் அணுகுமுறை பிரச்சினை மிகுந்தது என்று நான் நினைக்கிறேன். அதனைச் செய்யும் மக்கள் இருக்கிறார்கள் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அது ஆபத்தானது. ஏனெனில் இது ஒருவரின் கைப்பற்றும் திறனை அச்சுறுத்துவதுடன் நிகழ்காலத்தில் அம்பலப்படுத்தப்படும் முக்கியமான சமிக்ஞைகளை விமர்சன ரீதியாக பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

எல்டிஜி: நெருக்கடி நிலைகுறித்து பேசுகின்றபோது உங்களின் படைப்பில் வரலாற்று ரீதியாக பலமான முரண்பாடு காணப்படுகிறதே. உங்களது நாவல்களின் பாத்திரங்களும் திரைக்கதைகளும் சுயவிமர்சனப் பாதையில் பயணிக்கிறது சுய பிரதிபலிப்பை வெளிப்படுத்துகிறது. அந்த வகையில் நீங்கள் சில கூட்டுப்பொறுப்புக்களை வலியுறுத்துவதுடன் செயற்பாட்டியலின் கற்பனை விவரணத்தை மறுதலிக்கின்றீர்கள்.

றோபேட்: நன்று. லத்தீன் அமெரிக்காவில் 1970 கள் மற்றும் 80களில் வகைப்படுத்தப்பட்ட அந்த பகிரப்பட்ட கலாசார சூழ்நிலையின் இழப்பு எனக்கு மிகவும் ஆழமானது. “பகிரப்பட்ட சூழல்” என்று நான் சொல்லுகின்றபோது நான் பொதுவான தளத்தைக் குறிப்பிடுகின்றேன் அதாவது ஒருவர் “ஒ” என்று சொல்வதை மற்றவர் “ஒ”ஆகவே புரிந்துகொண்டார். ஒரு கட்டத்தில் அது உடைந்துவிட்டது. அந்த விரிசலின் விளைவாக இலத்தீன் அமெரிக்காவில் யதார்தத்தை உணரவோ அல்லது அந்த யதார்த்த சூழலைப் புரிந்துகொள்ளவோ, பிரச்சினையின் இதயப்பகுதியில் உங்களை ஈடுபடுத்தாமல் அதைப் பிரதிநிதித்துவப்படுத்தவோ முடியாமல் போனது.

எனது புனைகதைகள் அனைத்தும் தன்மை நிலையில் இருந்து விவரிக்கப்பட்டுள்ளன. சில கற்பனையானதாகவோ அல்லது சான்றுகளாகவோ இருக்கலாம். ஆனால் கதை எப்போதும் தன்மை நிலையிலிருந்தே உருவாகிறது. ஏனென்றால் அந்த கண்ணோட்டமே உண்மையான ஒரு உதாரணத்தைக் குறிக்கிறது. “அது நிலைத்திருக்கிறது. அதுதான் நான் என்னில் அது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை நான் கண்டறிய வேண்டும். நடந்தவற்றோடு நான் எப்படி முரண்படுகிறேன்” என்று விபரிக்கும் எனது ஆளுமை அதற்குள்ளேயே தங்கியிருக்கிறது. சில விடயங்கள் உயிர்த்திருப்பதை உறுதி செய்துகொள்வதும் சில விஷயங்களின் இருப்பின்மீது பார்வையைச் செலுத்துவதும் அவசியமானது என்று நான் நினைக்கிறேன். எனது நோக்கம் புத்திசாலித்தனமாக இருக்கவேண்டுமென்பதல்ல. ஆனால் அந்த சுய-பிரதிபலிப்பு உறுப்பு எனது கதை பிரதிநிதித்துவங்களின் ஒரு அடிப்படை பகுதியாகும். ஏனென்றால் அந்த நிலைப்பாட்டிலிருந்தே நீங்கள் உண்மையான யதார்த்தத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று நினைக்கிறேன். அதாவது யதார்த்தம் மறைந்துவிட்டதாக நினைத்து நீங்கள் ஒரு இருண்ட அறையில் இருந்ததைப் போன்றது. மேலும் தொடர்பு கொள்ளத் தொடங்குவதற்காக நீங்களே உங்களைத் தாக்கி “ஆ………..இது கால், இது காது, ஒரு முடி” என்றும் கூறி இருட்டில் வாழப் பழக்கப்பட்ட பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கண்களைத் திறக்க ஆரம்பிக்கிறீர்கள். படிப்படியாக மீண்டும் பார்வையைப் பெறத்தொடங்கி சிலவற்றை அடையாளம் காண்கிறீர்கள். என்னைப் பொறுத்தவரை பிரதிநிதித்துவத்தையும் விழுமியத்தையும் மீட்டெடுப்பதற்கான சிந்தனையைத் தொடங்குவதற்கு அதுவே வழி. அந்த எச்சமே ஒருவரை புதிய கதையைச் சொல்லத் தொடங்குவதற்கு இறைஞ்சுகிறது. எனது புனைவுகளில்ரூபவ் கதைசொல்லியை அல்லது கதையை ஒரு முழுமையான விமர்சன மோதலிலும் நிச்சயமற்ற நிலையிலும் வைக்க முயற்சிக்கிறேன்.

“அவர் எழுந்தாரா என்று பார்ப்போம். அவர் உயிர்பிழைத்திருந்தால் அவர் விழித்திருக்கிறாரா என்று பார்ப்போம். நீங்கள் காப்பாற்றப்பட்டுள்ளீர்கள். ஏன் நீங்கள் காப்பாற்றப்பட்டீர்கள்?” என்று நான் கேட்கிறேன். இந்த கதைகளின் நோக்கம் அவை உயிர் பிழைத்த கதைகளைச் சொல்வதல்ல மாறாக நியாயம் கற்பிக்காமல் வெளிப்படுத்தும் கதைகள்”

“நான் காப்பாற்றப்பட்டேன். தற்போது நான் இங்கே இருக்கிறேன்? ஏனெனில் நான் தப்பிப்பிழைத்தவன்.” ஆகவே நீங்கள் உயிர் பிழைத்தவரின் பார்வையில் இருந்து விவரிக்கவில்லை என்றாலும், அதாவது பலவீனம் அல்லது பலவீனத்தை விட சில விஷயங்களைப் பற்றிய அறிவின் நிலைப்பாட்டில் இருந்து நீங்கள் விவரிக்கிறீர்கள் என்றால் விவரிப்பவர் தானும் தப்பிப்பிழைத்தவர்தான் என்று தன்னை அங்கீகரிக்க வேண்டும். குறியீட்டு மற்றும் பிரதிநிதித்துவத்தின் அழிவில் ஒரு எச்சம் இருப்பது போல் தோன்றுகிறது. அந்த எச்சத்திலிருந்தே அவர்கள் புதிதாக கதையைச் சொல்லத் தொடங்குகிறார்கள்.

நான் எழுதுவதற்காக அத்தகைய சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தேன். இதற்கு உதாரணம் மச்சுகாவில், கோன்சலோவின் பாத்திரத்தை சொல்லலாம். அவர் சொல்கிறார்:

“நான் இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவன் அல்ல, நான் நலமாக இருக்கிறேன்.” இங்கு இரட்சிப்பு இல்லை என்பதுதான் சிறப்பம்சம். இரட்சிப்பு ஏனையோருக்குத்தான். அவரது இரட்சிப்பு வேறோரிடத்தில் என்பது அவருக்குத் தெரியும். அவரது இரட்சிப்பு பின்னர் கதையை மீட்டெடுப்பதிலேயே உள்ளது. ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் நாங்கள் மட்டுமே லத்தீன் அமெரிக்காவில் எஞ்சியிருந்தோம் என்று நினைக்கிறேன். நாங்கள் பானையைச் சுரண்டத் தொடங்கினோம், அந்த இடத்திலிருந்தே நாங்கள் மீண்டும் கதை சொல்லத் தொடங்கினோம். எங்கள் பழைய புராணங்கள் திவாலானதாகத் தோன்றும் ஒரு கட்டத்தை நாங்கள் அடைந்தோம்; கண்டத்தின் எதிர்கால கற்பனாவாதங்களைப் பற்றி நாங்கள் ஒரு முறை கூறிய கதைகள், நிகழ்ச்சிகள் மற்றும் வாக்குறுதிகள் வெறுமையாக இருந்தன. அந்த விவரிப்புகள் ஒருபோதும் மக்களை உற்சாகத்தில் நிரப்பவில்லை அவை நொறுங்கின, அனைத்தும் எவ்வளவு மோசமானதாக இருக்குமோ அந்த அளவிற்கு மோசமான கண்ணோட்டத்தைப் பற்றிப்பிடித்தது. ஏமாற்றம் மகத்தானது. பானையைச் சுரண்டி அதில் ஏதேனும் மிச்சம் மீதி ஒட்டியிருக்கிறதா என்று தேடினோம். எஞ்சியிருந்தது என்ன? உண்மையின் எஞ்சிய பகுதியில் அடங்கிய பாரிய நிகழ்ச்சிகளின் தொகுப்பில் கடவுளின் கோபத்தினால் ஏற்படக்கூடிய அனர்த்தத்தை எச்சரித்து அதிலிருந்து எம்மை மீட்டெடுப்பதற்கான கனவாக இருக்குமோ? அவை அனைத்திலும் எஞ்சியிருப்பது என்ன? நாம் அந்தப் புள்ளியை நெருங்கிவிட்டோம். அந்த இடத்தை எட்டிய எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் நியாயமான எண்ணிக்கையில் உள்ளனர், அவர்கள் எஞ்சியிருப்பதைக் காப்பாற்றத் தொடங்கியுள்ளனர். அங்கிருந்தே அவர்கள் கதையைச் சொல்லத் தொடங்குகின்றனர்.

எல்டிஜி: விமர்சனப் பார்வையுடன் விடயங்களை காப்பாற்றுதல்…………?

றொபேட்: மிகவும் சரி. ஒருவர் உலகத்தை அறிந்துகொள்வதற்கு ஒரு குறிப்பிட்ட தொலைநோக்கு பார்வை உள்ளது. (ஆல்பர்டோ) மென்டெஸ்ஸில் சொல்லப்பட்டதுபோல ஒரு தோல்வியை நீண்டநாட்களாக வெளிப்படுத்துவது அல்லது அந்த நம்பிக்கையால் மட்டும் எதையும் புரிந்துகொள்ள முடியாது. அதேவேளை தோல்வி முற்றிலும் தீர்க்க முடியாததும் அல்ல. இது தோல்வியின் பரிமாணங்களைப் புரிந்துகொள்வதற்கான ஒரு கேள்வி. தோல்வியின் அளவு உங்களுக்குத் தெரிந்தால், புராணங்கள், சொற்பொழிவுகள் மற்றும் உங்களைப் பற்றியும் உங்கள் சூழல் மற்றும் உங்கள் கடந்த காலத்தைப் பற்றியும் நீங்கள் கட்டமைக்கும் புராணக் கதைகளின் வாக்குறுதிகள் மற்றும் பிரதிநிதித்துவங்கள் குறித்து நீங்கள் மிகவும் கவனமாக இருக்கிறீர்கள். ஒருவர் மிகவும் புத்திசாலியாக இருக்கிறார்.

எல் டிசென்கேன்டோ – மயக்கம்

பிஜிசி: பானையின் தோற்றமும், வெற்றுப்பானையைச் சுரண்டுவதும் பின்நவீனத்தின் வெறுப்புணர்வு எண்ணக்கருவுடனும் கற்பனாவாதத்துடனும் அதிருப்தி உணர்வுடனும் இணைகிறது. ஆனால் நீங்கள் பரிந்துரைப்பது பின்நவீனத்தின் வேறுபட்ட பார்வையாகும். அது மேலெழும்புவதிலும், மேற்கோளிலும், பகடியிலும், எழுத்திலும் அத்துடன் பின்நவீனத்துவத்தின் கிழிந்துபோன தோற்றத்திலும் வேறுபடுகின்றது. பிரமாண்டமான திட்டங்கள், அல்லது நவீனத்துவவாதி, அல்லது ஸ்ராலினிசம் இல்லாமல், நீங்கள் மிகவும் யதார்த்தமான ஒன்றைப் பற்றி பேசுகிறீர்கள், மாறாக மீண்டும் மீண்டும் கட்டியெழுப்புவதற்கான முயற்சியைக் காட்டிலும், சிறிது சிறிதாக, சகவாழ்வின் ஒரு புதிய திட்டத்தைப் பற்றியும் பேசுகிறீர்கள். ஒரு தலைமுறை ஏமாற்றப்பட்டுள்ளதாக நாங்கள் கருதுவது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன? புனைகதைப் படைப்பை ஒருவர் படிக்கும்போது, அவர்கள் எதைத் தேடுகிறார்கள்? எப்படியாவது, ஒருவர் ஒரு நுண்ணறிவு, ஒரு அனுபவம் மற்றும் ஒரு உலகின் கதை, அல்லது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ அடையாளம் காணக்கூடிய மற்றொரு உலகத்தைப் பற்றிய ஒரு பார்வையைத் தேடுகிறார், இது எல்லாவற்றையும் கைப்பற்ற வேண்டியதில்லை, ஆனால் நமக்கு ஏதாவது வழங்கக்கூடும். நாம் அதை ஒதுக்கித் தள்ளுகிறோம் அல்லது விழுங்குவோம். எனவே, அது அர்த்தமற்றதாக இருக்க முடியாது…….. ?

றொபேட் : ஆம். மிகவும் சரி. நன்றாகச் சொன்னீர்கள். பின்நவீனத்துவம் அலங்கார உடை மேலும் பொய்களைப் பற்றி உற்சாகமடைவதற்கும் கதைகளுடன் தத்துவங்கள் மற்றும் சான்றுகள் உள்ளிட்ட எதுவாக இருந்தாலும் அவற்றை உண்மைகளுடன் கலப்பதற்கும் திறமை வாய்ந்தது. என்னைப் பொறுத்தவரை, இது மற்றவர்கள் செய்யும் ஒன்று, ஆனால் உங்கள் திட்டம் பொய்களைச் சொல்வதல்ல, மாறாக அவதானித்து “உண்மையானது” என்று வாழ முயற்சித்தால் அது உண்மையில் செயலற்றுப்போகும். பொய்களால் உற்சாகமடையக்கூடாது. அது உங்களை சத்தியத்தின் தீர்க்கதரிசியாக மாற்றவும் இல்லை, ஏனென்றால் அதற்குள் ஒரு பொறி உள்ளது. ஜுவான் ஜோஸ் சாயரின் சிந்தனைகளை மேற்கோள் காட்டி, இது பொய்களின் உற்சாகத்திற்கும் சத்தியத்தின் தீர்க்கதரிசனத்திற்கும் இடையில் அந்த இடத்திலேயே உங்களைப் பாதுகாத்துக் கொள்வது பற்றியும், உங்களை விழுங்க விரும்பும் அந்த இரண்டு பெரிய ஆர்வலர்களிடையே மிக மெல்லிய கோட்டைக் கொண்டு செல்வதும் ஆகும். அவை உங்களைக் கட்டிப்போடுவதுடன் உங்களது வேறுபடுத்திப் பார்க்கும் அனைத்து திறமைகளையும் அடக்கிவிடும். அது மிகக் கடினமான சவால், உண்மையில் தோல்வியுடன் கற்பதே சிறந்தது. அதுவே புரிந்துகொள்ளும் ஆற்றலைக் கொடுக்கவல்லது. புரிந்துணர்வின் அடிப்படையிலும், விமர்சன அடிப்படையிலும் உலகின் கடந்த ஆண்டையும் அதே நேரம் உலகின் இப்பகுதியில் இப்பொழுது நடைபெறுவதை நுகர்ந்து பராமரிப்பதையும் குறிக்கும் மீளக்கட்டியெழுப்புவதுடன் தொடர்புடையது.

நான் யாரையும் விமர்சிக்கவோ அல்லது சில படைப்புகளைப் பற்றி எதிர்மறையாக பேசவோ விரும்பவில்லை, ஆனால் சில நாவல்கள் உள்ளன, அவை காலாவதியான அல்லது உக்கித் தூளாகிப்போன பாணியை மீண்டும் உருவாக்குவது மட்டுமல்லாமல், பயனற்ற யதார்த்தத்தின்மீது அவர்கள் பந்தயம் கட்டுவதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவற்றால் எந்த நன்மையும் கிடைப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அத்தகைய புதினம் வெறுமனே அலங்காரத்திற்கு மட்டுமே சேவை செய்கின்றது. அது அரசிற்கு உதவி செய்கிறது. ஆகவே எம்மில் சிலர் பின்நவீனத்திலிருந்து விலகியிருக்க நிர்ப்பந்திக்கப்படுவதாக உணர்கிறோம் அத்துடன் யதார்த்தமான பொறுப்புக்கூறலில், யதார்த்தமானது உண்மையைத் தேடி அலைகிறது. என்னைப் பொறுத்தவரையில், நான் எழுத வேண்டுமாக இருந்தால் நான் நிச்சயமற்ற நிலையில் இருப்பதை உணர வேண்டும். இந்த உணர்வு ஒருவேளை கடினமான காலங்களிலிருந்து நான் கற்றுக்கொண்டதனால் ஏற்பட்டிருக்கலாம்.

சந்தேகத்திற்கிடமானவற்றை அல்லது குழப்பமானவற்றை தெளிவாகக் கண்டறிவதற்கு நான் உயிர்த்திருக்க வேண்டும். அதனால்தானோ என்னவோ மிகுந்த நேர்மையான வழியில் பார்வையைச் செலுத்துவதற்கும் விடயங்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் நான் வந்திருக்கக்கூடும். புதினங்களை உள்ளுணர்வாக எழுதுவது மிகவும் சவாலானது மற்றும் அரிதானது என்று நான் நினைக்கிறேன். எனவே, அதை உயிர்ப்புடன் வைத்திருக்க ஒருவர் செயற்படுபவராக இருக்க வேண்டும், அது எரிந்துபோக அனுமதிக்கக்கூடாது. அத்தகைய காரணங்களுக்காகவே நான் பின்நவீனத்துவ உரையாடல்களுடன் வசிதியாகக் கைகோர்த்திருக்கும் கருத்திட்டங்களிலிருந்து ஒதுங்கியிருக்க வேண்டும் என்று உணர்கிறேன். அதாவது போபோல்வுவை எம்ஓஎம்ஏவில் ஒரு கண்காட்சியையும் அதில் எகிப்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஒரு பிளாசாவில் கடையுடன் எரிவதையும் இணைக்கிறது…. சின்னங்கள் தங்களுக்கிடையில் மாறக்கூடியவை, அவற்றை உயிர்த்துடிப்புடன் வைத்திருப்பதால் உங்கள் மதிப்பு உயரப்போவதில்லை. இதனை நான் ஏற்கவில்லை. நாம் சில விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் புனைகதைக்கு ஒரு குறிப்பிட்ட ஒழுங்கு இருக்க வேண்டும் என்றும் நினைக்கிறேன்.

திரைப்படத்தை எடுக்கின்றபோது ஒருவர் நிழற்படக் கருவியை இங்கும் அங்குமாக நகர்த்தி ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைப்பார். புனைகதையும் ஒரு விடயத்தை அல்லது மற்ற விடயத்தை மையமாக வைத்து தொடங்குகிறது. அவை அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டுமென்பதில்லை. நீங்கள் முதலாவதாகவும் இரண்டாவதாகவும் எதை இணைத்துக்கொள்கிறீர்கள் என்பதே கருத்தில் கொள்ளப்படவேண்டியவை. விடயங்கள் குறிப்பிட்ட தொடர்ச்சியைக் கொண்டுள்ளன. நாம் தற்போதைய வேலைப்பளுவில் மூழ்கிப்போகின்ற வாழ்க்கையிலும் சடுதியில் நிகழும் நிகழ்வுகளிலும் ஒரே நேரத்தில் வாழ நேரிடலாம் இருப்பினும், ஒருவர் எதையாவது பிரதிநிதித்துவப்படுத்தும் போது ஒரு குறிப்பிட்ட மோதலை உருவாக்குவதற்கு, உண்மையில் என்ன நடக்கிறது என்பதை முன்வைப்பதற்கு அவர் அல்லது அவள் முதலில் ஒரு விஷயத்தை அங்கீகரிக்க வேண்டும், அதன் பின்னர் மற்றது …..

பிஜிசி: அப்படியானால் நீங்கள் ஒரு மோதல் உருவாவதை முன்மொழிகிறீர்கள் அது மற்றொரு “பெரிய கதை”யாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்று எடுத்துக்கொள்ளலாமா?

றொபேட்: மிகச்சரி, எமக்குப் பெரிய கதைகள் அவசியமில்லை. நாம் செய்ய வேண்டிய பணி அவதானிப்பதே, அது பரந்தளவிலானதாகவும் அல்லது நுண்ணிய அளவிலானதான விவரணமாகவும் இருககலாம். அனைத்திற்கும் மேலாக, நாம் பார்வையைச் செலுத்தவேண்டும். ஒருவர் ஒரு புதினத்தை வாசிக்கிறார் என்றால், அவர்கள் அதில் எதனை எதிர்பார்க்கிறார்கள்? அவர் ஏதோவொருவகையில், ஒரு நுண்ணறிவு, ஒரு அனுபவம் மற்றும் ஒரு உலகின் கதை, அல்லது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ அடையாளம் காணக்கூடிய மற்றொரு உலகத்தைப் பற்றிய ஒரு பார்வையைத் தேடுகிறார், அது அவை அனைத்தையும் உள்ளடக்க வேண்டும் என்ற அவசியமில்லை ஆனாலும் அது நமக்கு எதையாவது வழங்கக்கூடும். நாம் அதை ஒதுக்கித் தள்ளலாம் அல்லது தூக்கிவைத்துக் கொண்டாடலாம். எனவே, அது அர்த்தமற்றதாக இருக்க முடியாது அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். காப்பியடித்தல் கட்டுப்பாடுகளிலிருந்து அல்லது ஒழுங்குமுறையிலிருந்து அல்லது தர்க்கரீதியான பிணைப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட ஒரு இளைய தலைமுறை இருக்கக்கூடும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். இருப்பினும் என் விஷயத்தில், அத்தகைய பிணைப்புளால் நான் கட்டுண்டுள்ளதாகவோ அல்லது அடிமைப்படுத்தபட்டிருப்பதாகவோ நான் உணரவில்லை. மாறாக, உணரக்கூடிய திறனை கட்டுப்பாடின்றி பயன்படுத்தவும், அந்த தளத்தில் நகர்ந்து செல்லவும் இந்த கட்டமைப்புகள் எனக்கு அவசியம்.

எல்டிஜி : பிரதிநிதித்துப்படுத்துவதில் உள்ள சிரமங்களைக் கூறினீர்கள். “செயல்திறன்” என்ற கருத்தைப் பற்றி நான் உங்களிடம் கேட்க விரும்புகிறேன். உங்கள் நாவலான ஆல்டிமோஸ்டியாஸ் டி லா ஹிஸ்டோரியா (2001; வரலாற்றின் கடைசி நாட்கள்)வில் சர்வாதிகாரம் மற்றும் சர்வாதிகாரத்திற்குப் பின் ஆகியவற்றுக்கு இடையிலான “செயல்திறன்”, உறவை நீங்கள் ஆராய்கிறீர்கள். இந்த சூழல்களில் செயல்திறன் என்ற கருத்துக்கு உங்களை ஈர்த்தது எது? நீங்கள் நாவலை எழுதியபோது உங்கள் செயல்திறன் பற்றிய கருத்தை விரிவாகக் கூற முடியுமா?

றொபட்: ஆமாம், கருத்து மிகவும் உறுதியானது மற்றும் சுருக்கமானது: உடல் பொய் சொல்ல முடியாத ஒன்று. பொய்கள் மற்றும் ஏமாற்றங்களால் வகைப்படுத்தப்பட்ட ஒரு சூழலில், உதாரணமாக சாண்டியாகோவில் உள்ள இரவு விடுதி ஒன்றில் இயல்புக்கு மாறான மனிதர்களால் நிரம்பிவழிவதைப் போன்றது. அங்கு அனைத்துமே செயற்கையானவை,  உண்மையை நேசிக்கும் ஒருவரால் அங்கிருக்க முடியாது. அந்த சூழல் அவரைக் கீழே தள்ளிவிட்டு தனது முகத்தை வெளிப்படுத்திக் கொண்டு கதையைச் சொல்கிறது. இது சிலியின் நிலைமாறுகால சூழல் – எல்லோரும் இணைந்து வாழவேண்டும் என்ற நோக்கத்தில் பொய்களின்மீது மேலதிக பொய்கள் மேவி மூடிமறைத்து ஒரு பொதுவான புனைகதையை வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட சூழல். அது ஜனநாயகத்திற்கான ஒரு நிலைமாறுகாலம். மேலும் செயற்திறன் என்ற சொற்றொடரை அப்பட்டமாகத் தோலுரித்துக்காட்டி அதனுள் மறுக்க முடியாத உண்மையைப் புகுத்தும் சூழல். நிச்சயமாக, அந்த அலங்காரமற்ற உண்மைக்கு இடமிருக்காது, ஏனெனில் அது முற்றிலும் செயற்கை சூழலில் வழங்கப்படுகிறது. பார்வையாளர்கள் செயற்கையானவர்கள், மேலும் கலைஞரும் தனது செய்தியை வெளிப்படுத்த தந்திரங்களைப் பயன்படுத்துகிறார்.

எல்டிஜி: உண்மையில் அந்த புதினத்தில் அவரது செய்தியை ஒருவராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் மனச்சோர்வடைந்தவராகவே முடிக்கிறார்.

றொபட்: (சிரிக்கிறார்) நிலைமாறுகாலத்தில் அவர் ஒரு கோமாளி ஆர்வக்கோளாறான வரலாற்றாசிரியர் ஒருவர் இரவு விடுதியில் தரையை மூடியபடி பாபுலர் யுனிட்டி அரசாங்கத்தின் கதையைச் சொல்வதுபோல் சொல்கிறார். அங்கு மக்கள் எதற்காகப் போகிறார்கள்? எவ்வித முகமூடியும் அணியாத போர்வைகள் போர்த்திக்கொள்ளாத ஒருமனிதனை, மூக்குமுட்ட மது அருந்திவிட்டு தன்னிலை மறந்து நேரத்தை மகிழ்ச்சியாகக் கழிப்பவனைப் பார்ப்பதற்குத்தானே போகிறார்கள். மறுபுறத்தில் அவர், உண்மையின்மீது வெறிகொண்டவராகத் திகழ்கிறார். அந்தக்கதை இதுதான் – ஒரு தீவிரமான மற்றும் உணர்ச்சிமிக்க தனிநபருக்கும் அலட்சியமான சூழலுக்கும் இடையிலான சந்திப்பு, பொதுமகன் ஒருவர் ஒரு கணம் அவரை நுகர்ந்துவிட்டு மறுகணமே அவரை மறந்துவிடுகிறார் – அந்த பரிதாபகரமான ஸ்திரமற்ற பரிமாற்றத்திலேயே அவரை ஏற்றுக்கொண்டு பின்னர் மறந்து விடுங்கள். ஆனால் திடீரென்று அந்த நபர் தனது பழைய நண்பரை அந்த பொதுமனிதருக்குள் பார்க்கிறார், அங்கு ஏதோ நடக்கிறது. அந்த நிகழ்ச்சியின்; உண்மையை அவரது நண்பர் புரிந்துகொள்கிறார். அதன் பொருள் என்ன? ஆற்றுகைக்குள் (pநசகழசஅயnஉந) ஒரு செய்தி இருக்கிறது அதுவே சாட்சியின் சாட்சியாகவும் இருக்கிறது. இப்பொழுது ஒரு சாத்தியமற்ற சூழல் உருவாகிறது: அதாவது இருவரும் கடந்த காலத்திற்கு முகங்கொடுக்க வேண்டியவர்கள். எது சரி? எது தவறு? தங்களது பதின்மவயதுப் பருவத்தில் அவர்களது அனுபவம் எப்படி இருந்தது? அவர்கள் எத்தகைய உணர்ச்சியைப் பெற்றிருந்தனர்? அவர்கள் உண்மையிலேயே புரட்சிகர நோக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டிருந்தனரா அல்லது பாலியல் சிந்தனையின்பால் ஈர்க்கப்பட்டிருந்தனரா? அதன் பின்னர் அவர்களுக்கு உண்மையில் நடந்தது என்ன? நாவலில், அந்தக் காலத்திற்கும், கதாபாத்திரங்கள் உருவான காலத்திற்கும், வயது வந்த அந்த சகாப்தத்திற்கும் ஒரு தொடர்ச்சியான பிரதிபலிப்பு தென்படுகிறது. என்னைப் பொறுத்தவரை, நாவலை இயக்குவதே அந்த நினைவக கட்டமைப்புதான். தர்க்கரீதியான ஒத்திசைவு மற்றும் தொடர்ச்சியின்மையானது அவ்வப்போது முரண்பாட்டு நோக்கங்களை வெளிப்படுத்துகிறது. நினைவகத்திற்கு ஒத்த ஒன்றை மீளுருவாக்கம் செய்ய இயந்திரம் செயல்படுகிறது. அது முற்றிலும் கற்பனையானது மேலும் நினைவகத்தை வெளிப்படைத்தன்மையுடன் மீட்டெடுப்பதற்காக மேற்கொள்ளும் கதைசொல்லும் முறையை தடைசெய்யும். இது உலக சூழலில் ஒரு உறுதியான தளத்தை இடைவெளியின்றியும் மடிப்புகளின்றியும் உருவாக்குவதற்கான முன்முயற்சியைத் தடுக்கும். தடையை ஏற்படு வெளிப்படையான நினைவக நினைவாற்றலை வெளிப்படுத்த முயற்சிக்கும் ஒரு கதை சாதனத்தின் கேலிக்கூத்தாகக் காணலாம், இடைவெளிகளை அல்லது மடிப்புகள் இல்லாமல், திடமான தரையில் உலகத்தை நிலைநிறுத்த முன்மொழிகிறது. இயந்திரம் அந்த செயல்பாட்டைக் கொண்டுள்ளது.

எல்டிஜி: இருப்பினும் அந்த இயந்திரம் பாலியல் இயக்கத்தையும் கொண்டிருக்கிறதே அந்தத் தொடர்பு குறித்து சற்று விரிவாக விளக்க முடியுமா?

றொபட்: ஆமாம், இது ஒரு பாலியல் செயல்பாட்டைக் கொண்டுள்ளது, ஏனெனில் இது முக்கிய கதாபாத்திரத்தை செயற்கை உடலுறுப்பைக் கொண்டவராகச் சித்திரிக்கிறது. முக்கிய கதாபாத்திரம் மூலையில் இருக்கும் ஆசைக்கேற்ப செயற்பட உடலுறுப்பு இல்லாதவரைப் போல பலீனப்படுத்தப்பட்டு, துண்டிக்கப்பட்டுள்ளது. அல்லது அவரது உடல்பாகங்கள் வெட்டியெடுக்கப்பட்டு அவரால் தனது ஆசைகளை உணரமுடியாமல் போயுள்ளது. உண்மையில் அந்த இயந்திரமே ஒருவிதத்தில் செயற்கை உடலுறுப்பாக இருந்து, அவைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அனுமதிக்கின்றது. இது அவருக்கு மூர்க்கத்தனமான பிம்பங்களையும் தருகிறது. அதிலிருந்து பலூன்களும் விசித்திரமான திரவங்களும் அதிலிருந்து வெளியேறும். அவை அனைத்தும் மிகவும் ஆபாசமானவை, மேலும் பாலியல் உணர்ச்சி மிகுதியினால் மீறப்படும் ஒழுக்க விழுமியங்களுக்கும் நினைவகத்திற்கும் ஒருவித தொடர்பு இருப்பதாக நான் நினைக்கிறேன்.

பிஜிசி : இது ஒருவரின் மரணத்திற்குப் பிந்தைய தருணம், மனிதனையும் றோபாவையும் இணைத்து உருவாக்கப்பட்ட கற்பனையினூடாக சிலியின் கடந்தகால நினைவகத்தை உருவாக்கும் தருணம். இது துண்டு துண்டுகளாகச் சிதறிப்போனதும் இனப்பெருக்கத்திற்கு உதவாததுமான உடல் தன்னைத்தானே பொதுவெளியில் வெளிப்படுத்திக்கொள்வதுடன் தொடர்புடைய, ஆல்டிமோஸ்டியாஸ் நாவலில் உங்கள் பிரதான கதாபாத்திரத்திற்கும் உண்மையான “நிகழ்வுகள்” கலை நிறுவல்களுக்கும் இடையிலான உறவு குறித்தும் மேலும் “கோலெக்டிவோ டி அக்ஷியோனஸ் , [சி ஏ டி ஏ,  “Colectivo de Acciones de Arte” CADA) ]. கலைஞர்களின் அவாண்ட்-கார்ட் குழுவின் தெரு நிகழ்ச்சிகள் குறித்தும் நாங்கள் உங்களிடம் கேட்க விரும்பினோம். அவர்களின் கலை செயற்பாடுகள் கலைநயத்துடன் நேரடியாக தணிக்கையையும் பினோசே ஆட்சியின் வெற்றிவாத  உரையாடல்களையும் சவாலுக்குட்படுத்தியது., தொலைக்காட்சி பிரச்சாரம் மற்றும் பிற வகையான வெகுஜன ஊடகங்களையும் சவாலுக்குட்படுத்தியது. எல்டிட், சூரிட்டா, பால்செல்ஸ் மற்றும் பிறரின் கலைப் படைப்புகள் குறித்த உங்கள் உறவை அல்லது உங்கள் கருத்தை எவ்வாறு விவரிப்பீர்கள்? உங்களது கதைப்படைப்பு எந்தவகையில் அந்த சகாப்தத்தின் காப்பகமாகத் திகழகிறது? எஸ்ட்ரெல்லா டிஸ்டனேட்டில் உள்ளதுபோல் அந்த சகாப்தத்தின் போலானோவின் உருவப்படத்துடன் (Bolaño’s portrait ) ஒப்பிட முடியுமா?

றொபட் : இது மிகவும் சுவாரஸ்யமானதும் சரியானதுமான கேள்வி. CADA மீதான எனது நிலைப்பாடு, அந்த நேரத்தில் நடப்பவைகளை அவதானிக்கின்ற கிட்டத்தட்ட ஒரு பார்வையாளர், வேறுவிதமாகச் சொன்னால் நான் ஒரு சுற்றுலாப்பயணியைப் போல் இருந்தேன். அவர்கள் என்னை விட சற்று வயதில் மூத்தவர்களாக இருந்தனர், பொது வெளியைச் சுற்றிலும் அவர்களின் கலை தலையீடுகளை ஒரு வகையில் பிரதிநிதித்துவத்தின் மறுமுனையாகவே நான் பார்த்தேன். பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு அங்கு எதுவும் இல்லை, உங்களை அதற்குள் நுழைத்துக்கொள்வதைத் தவிர உங்களால் எதுவும் செய்ய முடியாது. நீங்கள் தரையைத் தேய்க்கலாம், எதன்மீதாவது வண்ணத்தை ஊற்றலாம் பெண்களைப் போன்று உடையணிந்து உங்கள் பால்நிலையை மாற்றிக்கொள்ளலாம்,  “go out into the street like “Las yeguas del apocalipsis” போல் உலாவலாம். ஸரிதா அவன்மீது அமிலத்தை வீசினாள். அது ஒடுக்குமுறையைக் கைக்கொண்டு நாட்டை இருட்டில் வைத்திருக்கும் அரசைக் கையாள்வதற்கு உரையாடும் சக்தியிழந்த நிலையில் கலையைப் பயன்படுத்துவதற்கான நேரடி வழி. இது அரசின் எதேச்சாதிகாரக் கட்டமைப்பை உடைப்பதற்கான ஒரு வழி எனவே இது ஒரு அரசியல் தலையீடாகும். அதனை நான் மிகுந்த ஆர்வத்துடன் ரசித்தேன், அப்பொழுது எனக்கும் சொந்தமான ஒரு நாடகக் குழு இருந்தது, அது வேறொரு பாத்திரத்தைக் கொண்டிருந்தது. இருந்தது -அது முற்போக்கு சிந்தனைகொண்ட (அவாண்ட்-கார்ட்) குழுவோ அல்லது போஸ்ட்வாங்கார்டோ அல்ல, மாறாக பாத்திரத்தில் குறும்பு, குழுவுக்குறியுடனான நகைச்சுவையைப் பயன்படுத்துவதுடன் அந்தநேரத்தில் நிலவிய பொது பாதுகாப்பின்மைகளை மறைமுகமாக வெளிபப்டுத்தி ஒருகுறிப்பிட்ட எல்லைவரை பார்வையாளர்களையும் பங்களிக்கச் செய்வதாக இருந்தது.

சிஎடிஎ மக்கள் பங்களிப்பை விரும்பவில்லை. அவர்களின் கலை நடவடிக்கைகள் பார்வையாளர்கள் கலைவடிவத்தை மட்டுமே கொண்டதாக இருந்தது; அவர்களின் பொதுமக்கள் இடம்பெறவில்லை அவர்கள் காணாமல்போய்விட்டனர். அந்தக் காலகட்டத்தில் எனது அனுபவத்தில், பார்வையாளர்கள் உயிர்ப்புடன் இருந்தார்கள், எமக்கும் குறிப்பிட்ட ஒரு எல்லைவரை அவர்களைப் பங்களிக்க வைத்து அதனூடாக உரையாடலையும் ஒற்றுமையையும் மீளக்கட்டியெழுப்புவதற்கு நகைச்சுவை மற்றும் ஒருவரை அங்கீகரித்து நாம் உயிருடன் இருக்கிறோம், நாங்கள் விடாமுயற்சியுடன் இருப்போம், முன்னால் உள்ள சுரங்கப்பாதை இன்னும் நீளமாக இருந்தது, ஆனாலும் நாங்கள் அதை ஒன்றாக இணைந்து அதனுள் பயணித்துக் கொண்டிருந்தோம் என்பதைச் சொல்வதற்கு அவர்களை நெருங்க வேண்டிய தேவையிருந்தது. எமது உரையாடல் பதவிநிலைகளை மூடுவதை வலியுறுத்தியது. ஆகவேதான் நான் சிஎடிஎ வேறொரு கண்ணோட்டமுடையது என்று கூறினேன் வேறுவகையில் கூறினால்; பிரதிநிதித்துவத்தை நான் வித்தியாசமான கோணத்தில் பார்த்தேன். மறுபுறத்தில், சிஎடிஎயினர் தங்களது சொந்த கலை நடவடிக்கைகளை மீட்டிப்பார்த்து விவாதிக்கத் தொடங்கி பிரதிபலிக்கும் நிலையினூடாகச் சென்றனர். கடைசி நாட்கள் (Últimos días ) அந்தக்குழுவிற்கும் முரட்டுத்தனத்திற்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்துகிறது என நான் நினைக்கிறேன். வரலாற்றாசிரியர், தனது குகைக்குள் தனது கலையுடன் தன்னைப் பூட்டிக் கொண்டு, பின்னர் தனது நடிப்பிற்காக இரவுநேர களியாட்ட விடுதியில் தனது ஆற்றலை வெளிப்படுத்துவதற்காக தன்னை மறைத்துக்கொள்கிறார் – அந்த ஆற்றுகை அருவருக்கத்தக்கதும் வன்முறையானதுமாகும். குறிப்பாக ஏனையோரின் உரிமைகளுக்கு மதிப்பளிக்காததுடன் நீதிக்கும் புறம்பானதாகும். அவரது கதைநகர்த்தல் முழுவதிலும் அவர் தன்னை வெளிக்கொணர்வதற்காகவும், அனைத்தையும் வெளிப்படுத்துவதற்கும் அதுவே முழுமை என்பதைத் தெரிவிப்பதற்காகவும் ஒருவித வன்முறை அவரால் திட்டமிட்டு புகுத்தப்பட்டுள்ளது.

நான் அப்படி இல்லை. என்னிடம் இருந்ததை நான் மேசையின்மீது வைத்தேன். அத்தருணத்தில் எனக்கு வந்ததை நான் முன்வைத்தேன், அது நாவலாக வெளிவந்தது. அந்த படைப்பு ஒரு சீட்டாட்டத்தைப்போன்றது அது முன்கூட்டியே திட்டமிடப்படவுமில்லை அது என் மண்டையில் உதித்த விடயமுமில்லை. அது ஏறக்குறைய ஒரு வெடிப்பு போன்றது.

அதனையொத்த ஒன்றே உண்மையில் நடைபெற்றது என்று நான் நினைக்கிறேன். அதுதான் சர்வாதிகார ஆட்சியையும் கடந்து, சிஎடிஎவிற்கான உண்மையான பார்வையாளராகத் திகழ்ந்தது ஒடுக்குமுறை (dictatorship) அரசாங்கம் தொடர்ந்தும் மரபுரீதியான கௌரவத்தை மீறி வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது குறிப்பாக பகிரங்கமாகவே பாலியல் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது. சிஎடிஎயின் கலை நடவடிக்கைகள் அவற்றை வெளிக்கொணர்ந்த போதிலும் அரசின் சர்வாதிகாரத் தன்மையை வெளிப்படுத்தவில்லை, அது அவர்களது நேரடி சான்றாதாரமாக இருந்தது. ஒரு வகையில், வேண்டுமென்றே இல்லாவிட்டாலும் உள்ளுணர்வின் படியாவது, சர்வாதிகார ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த வன்முறையினை ஒரு வரலாற்று ஆய்வாளரின் கண்ணோட்டத்தில் வெளிப்படுத்தி முழுவதையும் நினைவுகூர்ந்து எமது சக்தியை கட்டியெழுப்ப முடியும் என்று நான் நினைக்கிறேன். வரலாறு ஒரு தேவதை அது அழிவின் மறுபக்கத்தை திரும்பிப் பார்க்கும், பென்ஜமினியன் தேவதை, அந்த நாவலின் மையப்பாத்திரம். எனவே, அவரது முழு கருத்திட்டமும் இரவு களியாட்ட விடுதியில் மறைத்து வைக்கப்பட்டது மேலும் அங்குதான் அவர் இயந்திரத்திற்கான நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு ஒரு பொறிமுறையை வகுக்கிறார், அது அவரது தனிப்பட்ட விருப்பங்களைப் பூர்த்திசெயவதற்கான செயற்கை உறுப்பாகும். ஒருபார்வையாளரும் இல்லாததால் பார்வையாளர்களை வசீகரிக்கமுடியாத ஒரு வன்முறையான சூழலில் அவர் சிக்குண்டிருக்கிறார். திடீரென்று சற்றும் எதிர்பாராமல் அங்கு வந்த அவரது பழைய நண்பரே ஒரேயொரு பார்வையாளர் அவருடன் சில பியர் போத்தல்களை அருந்தியவாரே என்ன நடந்திருக்கும் என்ன நடந்திருக்காது என்பதை மீட்டிப்பார்த்தனர்.

அத்தகைய முக்கிய குறிப்புகளுடன் அந்த நாவல் நகர்த்தப்படுவதாக நான் நினைக்கிறேன். அதனை எழுதுகையில், நான் ஏராளமான அட்டைகளை சபையில் வைத்தேன் சபை எத்தகையது என்பதுபற்றியெல்லாம் நான் அக்கறை கொள்ளவில்லை, அது நீலமா, பச்சையா, சிவப்பா அல்லது கருப்பா என்று எத்தகைய நிறத்தையும் மனதளவில் தீர்மானிக்கவுமில்லை. என்னிடம் இருந்ததை நான் சபையில் வைத்தேன் எனது மூளையில் அந்த நேரத்தில் உதித்தவைகளை கிடத்தினேன், இறுதியில் அது நாவலாக உருப்பெற்றது. அது ஒரு சீட்டாட்டத்தைப் போன்று உருவானது. அது திட்டமிடப்படவுமில்லை எனது மூளையில் உதித்த விடயமுமல்ல. அது ஒரு வெடிப்புச் சம்பவம் போன்றது. அதனால்தான், நாவலின் மாறுபட்ட அங்கங்கள் அதன் தோற்றத்தையும் முடிவையும் வாசகரே தீர்மானிக்கும் வகையில் ஸ்திரத்தன்மையற்றதாக இருக்கின்றன. உண்மையில் கண்ணை மூடிக்கொண்டு அடித்தேனே தவிர, இப்படித்தான் அடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு அடிக்கவில்லை. ஒரு நாவலுக்கான சிந்தனையை தெளிவாக வெளிப்படும்படி கட்டமைத்தேனே தவிர, அது தர்க்கரீதியில் ஒழுங்கமைக்கப்பட வேண்டும் என்றோ கதைசொல்லியை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் கதையைத் தொய்வின்றி உருவாக்கவேண்டுமென்றோ அல்லது வரலாற்றை மீண்டும் வலுவூட்டுவதுபற்றியோ அல்லது நினைவகத்தை இணையற்ற கதாநாயகனாக உருவாக்குவது பற்றியோ நான் முயற்சிக்கவே இல்லை. ஒருபோதும் இல்லை.

எல்டிஜி : அந்தவகையில் உங்களது நிகழ்ச்சித்திட்டம் சர்வாதிகாரத்தைப் பற்றி உள்ளடக்கத்திலும் முறையிலும் தொய்வின்றி கதைசொல்வதற்கு எதிராக இருக்கிறது. தர்க்கத்திற்கும் தற்செயல் நிகழ்விற்கும் ஒருவித சவால் இருக்கிறது.

றொபட்: இது முற்றிலும் பொருத்தமற்ற ஒத்திசைவு போன்றது. இதுவும் ஒரு வகையான பொருளற்ற தன்மை, எதிர்ப்பிற்கும் தப்பிப் பிழைப்பதற்கும் உயிர்வாழ்வதற்கும் அது தானாக எடுத்துக்கொள்ளும் வடிவம். எனக்குத் தெரியாது, ஆனால் அந்தச் சிந்தனையின்மீதே நாவல் கட்டியெழுப்பப்படுகிறது.

பிஜிசி : ஒரு கதைசொல்லி எதிர்கொள்ளும் எதிர்கொள்ளும் கட்டுப்பாடானது சர்வாதிகாரத்திலேNயே முடியும் என்பதை எடுத்துச் சொல்வதற்காக கதைசொல்லியினால் மேற்கொள்ளப்படும் கிளைக்கதைகள் அவை. . . .

றொபட்: மிகச்சரி, ஒரு நாட்டை ஆட்சி செய்பவர், ஆட்புலத்தை கட்டுப்படுத்தும் ஒருவர். அல்டிமோஸ்டியாஸில், பெரும்பாலான பாலியல் காட்சிகளில் நடைபெறுவதைப்போல் பார்வையாளர் பகுதியிலிருந்து ஒருவர் கதைசொல்பவரை அவமானப்படுத்துகிறார், மக்கள் அவர்மீது கோபம் கொண்டு கூச்சலிடுகின்றனர். பார்வையாளர்கள் தாங்கள் விரும்பியவாறு பங்கெடுக்கின்றனர். அந்த இடைவெளியில்கூட நிலைமாற்றத்திற்கான மூர்க்கத்தனம் இருப்பதாக நான் நினைக்கிறேன். அந்தக் காலத்தில் உச்சரிக்கப்பட்டதைப் போன்று, “நாடு” மூர்க்கத்தனமாக மாறிவிட்டது என்ற சொல் திரும்பத்திரும்ப உச்சரிக்கப்பட்டது. ஏனெனில் பயங்கரமான சர்வாதிகார ஆட்சிக்குப் பின்னரான காலப்பகுதியில் நிலைமாற்றத்திற்கான சில விபரங்களை நாம் இடைவிடாமல் வழங்க வேண்டியிருந்தது. இதனால்தான் எமது செவிகளில் “நாடு” என்ற சொற்பதம் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருந்தது. நாவலில் வரலாற்றாசிரியர் என்று குறிப்பிடப்படும் நபர், தனது பாலியல் காட்சியை நிகழ்த்துவதற்காக அவரது ஆண்குறியில் தானே இயந்திரத்தின் உதவியோடு ஒரு தடியைப் பொருத்திக்கொண்டு அது தனது உடலுறுப்பின் நீட்சி என்று கூறியதனூடாக 1973ஆம் ஆண்டின் பிரதிக்ஞைகள்  தர்க்கரீதியான கதைசொல்லும் முறையை சவாலுக்குட்படுத்தி சீர்குலைக்கும் மாதிரியாகும் என்ற கருத்தை முன்வைக்கிறார்.

பிஜிசி : தேசியத்திற்குப்பின்னர் தோன்றிய ஒருவகையான நையாண்டி என்று அந்த எழுத்தை நாம் வரையறுக்கலாமா?

றொபட்: ஆம், அது உண்மையில், பார்வையாளர்களைக் கொண்டிராத பின்தேசிய நையாண்டி அல்லது பகடி என்று நான் நினைக்கிறேன். சிலியின் நிலைமாறுகாலத்திலும் அதுவே நடந்தது. நிலைமாற்றம் மக்களை மறைந்துபோகச் செய்தது. அது ஆர்வமிக்கது, சர்வாதிகார ஆட்சியின்கீழ், சிஎடிஎ கலைஞர்கள் மற்றும் எம் அனைவரையும் பொறுத்தவரை நாங்கள் எதேச்சாதிகாரத்திற்கு எதிராகச் செயற்பட்டதுடன் எமது கலை முயற்சிகளும்கூட அத்தகைய அரசுக்கு எதிராகவே திரும்பியிருந்தது. பின்னர், சர்வாதிகாரம் வீழ்ச்சியுற்ற வேளையில், நிலைமாற்றம் என்ற பெயரில் புதுவகையான பொதுமக்கள் தோன்றினர். அந்த நேரத்தில், முன்னர் ஏற்படுத்தப்பட்டிருந்த தொடர்புகள் அறுபட்டதுடன், கட்டியெழுப்பப்பட்ட ஒத்துழைப்பும் கைவிடப்பட்டிருந்தது. முற்போக்கு இயக்கத்திலிருந்து மிகவும் மரபைக் கட்டிக்காக்க நினைத்ததால் ஒரு பார்வையாளர்கூட இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டோம். சுவாரஸ்யமாக, அந்தக் காலகட்டத்தில், ஒரு புதினமாகத் திகழ்ந்த “புதிய சிலி நாவல்” ஒரு புதிய பொது மக்களை அணிதிரட்டுவதற்காகவும் முழுவதும் இயற்கைத்தன்மை கொண்ட தர்க்கரீதியான கதை வடிவத்தைப் பெறுவதற்கான முயற்சியாக படைக்கப்பட்டது.

எல்டிஜி: அந்த நாவலுக்குள் சிஎடிஎவைப் பற்றி நேரடியாக நையாண்டி செய்யப்பட்டுள்ளதாக நீங்கள் சொல்லவில்லை அப்படித்தானே? பொலனோவின் கதைசொல்லும் போக்கில் நையாண்டி மிகத் தெளிவாகத் தெரிகிறதே?

றொபட்: இல்லை, எத்தகைய உள்நோக்கத்துடனும் இல்லை. உண்மையைச் சொல்வதானால், நான் அடிக்கடி “கலைச் செயல்களை” பார்த்து சிரிப்பேன், அல்லது இப்பொழுது பார்த்ததைவிடவும் இன்னும் ஆழமான பார்வையைச் செலுத்தக்கூடிய நிறைய சித்தாந்தங்கள் அவர்களிடம் இருப்பதாக நான் நினைத்தேன். அதுதான் எனது பிரச்சினையே. தலையீடுகளில் அரசியலின் முக்கியத்துவத்தை நான் உணர்ந்தேன், ஆனாலும் அவை கொள்கை அடிப்படையில் குறைவானதாகவும் அதுவே என்னை செயலிழக்கச் செய்ததுடன் சந்தேகம் கொள்ளவும் செய்தது. அவர்கள் ஒரு வலையிலிருந்து விடுபட்டு மற்றொரு வலைக்குள் சிக்குதாகத் தெரிகிறது. அல்டிமோஸ்டியாஸ் கதையில் இறுதிப்பகுதியில் கருவுடன் தொடர்பில்லாத, ஒடுக்குமுறை சூழலுக்கு எதிரான கொள்கையை வேண்டா வெறுப்பாக ஒரு பகுதியாகச் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

பிஜிசி : நீங்கள் குறிப்பிட்டதைப் போன்று, அதன் சொந்த நிபந்தனைகளுடனான உரையாடலுக்குள் பிரவேசிக்கின்ற அதாவது ஒரு குறிப்பிட்ட கொள்கைக்குப் பதிலாக நாம் அனுபவிக்கும் சர்வாதிகார ஆட்சி குறித்த உரையாடலின்மீது கவனத்தைச் செலுத்துவதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

றொபட் : ஒரே வார்த்தையில் சொல்வதானால் சரி. சிஎடிஎவினால் உண்மையில் அத்தகைய சூழல்களில் எத்தகைய முயற்சியை மேற்கொண்டிருக்க முடியும்? முதலாவதாக, அவர்கள் (சிஎடிஎ) செய்தித்தாள்களில் தலைப்புச் செய்தியாக வரவேண்டும் என்பதில் கவனமாய் இருந்தனர். ஆனால், உண்மையில், அவர்கள் (அரசு) அவர்களது செயல்களை கண்டுகொள்ளவில்லை. அத்தகைய செயற்பாடுகள் நிகழ்ந்த அனைத்து இடங்களுமே அதற்கான அங்கீகாரத்தைச் சீர்குலைப்பதாகவே இருந்தன. நீங்கள் ஊடாடுவதற்காகப் பிடித்திருந்த கை ஏற்கனவே உங்களுக்கு எதிராக இருந்தது. அனைத்தும் உச்சபட்ச தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததுடன் கட்டுப்படுத்தப்பட்டுமிருந்தது. சர்வாதிகாரத்தின் பிடிக்குள் சிஎடிஎ தனக்கான அங்கீகாரத்தைத் தேடியதா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவர்களது கலை செயற்பாட்டில் பொருள் பொதிந்திருந்தது, அது ஒரு வலுவான கருத்தியல் கூறு இருந்தது, அது அந்த நேரத்திற்கு அவசியமான ஒரு கூறு, என்பது எனக்குத் தெரியும், ஏனென்றால் நான் அதைப் பார்த்தேன், ஆனால் இவை அனைத்திற்கும் அப்பால் அது காலத்திற்கு ஒவ்வாததாக இருந்ததையும் நான் அவதானித்தேன். அவர்களது கருத்தியலானது சர்வாதிகாரம் வன்முறைக்கும் அப்பாற்பட்டது என்பதை வெளிப்படுத்துவதை இலக்காகக் கொண்டிருந்ததாகவே எனக்குத் தோன்றியது. எனக்கு சில சந்தேகங்கள் இருக்கின்றன; நான் எங்கு வேறுபடுகிறேன் என்பதும் எனக்குத் தெரியும். அவர்கள் தங்கள் முகத்தைத் தாங்களே மூடிக்கொண்டார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன், இதனால் உயிர்;த்திருக்க வேண்டிய மிகவும் பொருத்தமான சாத்தியக்கூறுகளும் மூடப்பட்டது.

எல்டிஜி: அதுவே றொபர்ட்டோ பொலநோ குறித்த அடுத்த கேள்விக்கும் வழிசமைத்திருக்கலாம். நாம் அவருடனான உங்களது நட்பு குறித்து கேட்க விரும்புகிறோம். நீங்கள் அவரது படைப்பிற்கு அதிக மதிப்பளிப்பவர் என்பது எனக்குத் தெரியும். அவரை ஒரு மனிதராகவும் அவருடைய படைப்புகள் பற்றியும் எங்களுக்குக் கூறுவீர்களா? இது பின்னர் நாம் ஏதிலிகள் பற்றியும் இன்னபிற கண்ணோட்டங்களின் கரு பற்றியும் விவாதிக்க உதவக்கூடும்.

றொபட்: போலானோ தனது சொந்த நாட்டிற்குத் திரும்புவதற்காக பவுலா பத்திரிகையின் ஆலோசனைக் குழு உறுப்பினர் பதவியை எனக்கு வழங்குவதற்காக அவர் என்னை சிலிக்கு அழைத்த வேளையில் நான் அவரை 1999 ஆம் ஆண்;டு சந்தித்தேன். அந்த பத்திரிகையில் பணியாற்றியவர்களை நான் அறிந்திருந்ததால் போகிறபோக்கில் அவரையும் சந்தித்தேன். எங்களது சந்திப்பு எல் பியோர் லாஸ் ஹீரோஸ் (El peor de los héroes (1999; The worst of the heroes) கதாநாயகர்களின் மோசமான பக்கம் என்னும் எனது நாவல் வெளியீட்டுடன் தற்செயலாக நிகழ்ந்தது, ஒரு பிரதியை அவரிடம் கொடுத்தேன். அந்த நாவலின் வாசிப்பினைத் தொடர்ந்து, நாங்கள் எங்களுக்குள் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டோம் அவர் எனக்கு எழுதிய கடிதத்தில் அந்த நாவல் தன்னை மிகவும் கவர்ந்துவிட்டதாகவும் என்னை பிலேன்சுக்கு அழைக்க விரும்பவதாகவும் எழுதியிருந்தார். நான் பொலனோவை அவரது நாவலான எஸ்டெரில்லா டிஸ்டன்டே Estrella distante (1996; Eng. Distant Star, 2004) தொலைதூர நட்சத்திரம் என்பதனூடாக கண்டுபிடித்திருந்தேன். அந்த நாவலை நான் ஒருவருடத்திற்கு முன்னர் படித்திருந்தேன், அது எனக்கு ஒரு மாபெரும் சாதனையாகத் தெரிந்தது அந்த நாவல் அந்த நேரத்தில் சிலிமொழி இலக்கியப் பரப்பு பின்பற்றிவந்த வழக்கத்திலிருந்து முற்றிலும் வேறுதிசையில் மாறியிருந்தது. நான் 1999ஆம் ஆண்டு ஐரோப்பாவிற்குப் பயணிக்கத் திட்டமிருந்தேன், அங்குதான் நான் பிலேன்ஸில் வைத்து பொலனோவைச் சந்தித்தேன் அப்பொழுதிலிருந்தே நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள், பொலனாவின் நட்பைப் பெறுவது அவ்வளவு எளிதல்ல என்று கூறி (சிரித்தார்). நான் பிலேன்ஸில் தங்கியிருந்து அவர் பணியாற்றும் இடத்தைப் பார்வையிடடதுடன் அவரது மனைவி மற்றும் குழந்தைகளையும் சந்தித்தேன், எங்களது நட்பு ஆழமாக வேரூன்றிவிட்டது. அதன் பின்னர், அவருக்கு ரோமுலோ கேலிகோஸ் விருது வழங்கப்பட்டது அதற்கான விழாவில் அவரை அறிமுகம் செய்வதற்கான உரையை நிகழ்த்துவதற்காக என்னை அழைத்திருந்தார். ஆகவே எம்மிருவருக்கிடையில் குறிப்பிடத்தக்க வகையில் ஏற்கனவே தொடர்பு ஏற்பட்டுவிட்டது அதன் பின்னர் நாங்கள் இன்னமும் நெருங்கினோம். நாங்கள் சிலிக்கு இரண்டாம் முறை சென்ற வேளையில், அவர் ஏற்கனவே சிலியின் சமூகச் சூழலில் போராடிக்கொண்டிருந்தார், நான் அவரைப் பார்க்கவில்லை ஆனால் பின்னர் நான் பிலென்சுக்குத் திரும்பிய பின்னர் எமக்கிடையிலான நட்பு மிகவும் உறுதியடைந்தது.

அவருடனான எனது நட்புக்கும் அப்பால், சிலியின்மீதான அவரது அணுகுமுறை மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. பொலனோ சிலியில் பரவலான அங்கீகாரத்தைப் பெற்றிருந்ததுடன் இலக்கிய சமூகத்தின் எழுத்தாளர்களினால் தங்களது அவையில் பங்கெடுத்துக்கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டது. இருந்தபோதிலும் அவர் “இல்லை. எனக்கு அதில் விருப்பமில்லை. நான் வேறொரு அவையில் இருக்கப் போகிறேன், அது எனது சொந்த மேடை, நான் யாரை விரும்புகிறேனோ அவர்களை அந்த மேசைக்கு அழைக்கவிருக்கிறேன்” என்று கூறினார். அது பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது என்னவோ உண்மைதான். இது மிகவும் சுவாரஸ்யமான நகர்வாக இருந்தது, அவர் அடிக்கடிக் கூறிய, “நான் யாருடனும் கொடுக்கல் வாங்கலை ஏற்படுத்திக்கொள்ளவில்லை. ஏனையோரைப் போன்று நான் சர்வாதிகார சூழலிலோ அல்லது நிலைமாறுகாலப் பகுதியிலோ வசிக்கவில்லை, எனக்கு அதில் பங்குபற்றுவதற்கான எத்தகைய காரணமும் இல்லை. நான் எனது சொந்த வட்டத்தை உருவாக்கப்போகிறேன்” என்பதை மெய்ப்பிக்கும் வகையில் அவரது நிராகரிப்பு இருந்தது. அந்த வட்டத்தில் இணையுமாறு அவர் லேம்பெல்லையும் நான் உட்பட இன்னும் பலரையும் அழைத்திருந்தார். அந்தக்குழுவுடன்தான் அவர் சிலியில் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். இதனால் பாரிய அளவிலான விமர்சனமும் நிராகரிப்பும் ஏற்பட்டது என்பது சொல்லாமலே விளங்கும். ஆரம்பத்தில், போலானோ சொற் போரில் சிக்குண்டு பதிலுககுப் பதில் தாக்கினார்,; பின்னர், புயல் தீர்ந்தது, அவர் மிகவும் அமைதியானவராக மாறினார், மேலும் தனது நாட்கள் எண்ணப்படுவதை நன்கு அறிந்த அவர், தனது வேலையில் மட்டுமே முழுமையாக கவனம் செலுத்தினார்.

இலத்தீன் அமெரிக்காவின் அழிவிற்கு வடிவம் கொடுத்ததைத் தவிர பொலனோ வேறுஎதையும் செய்யவில்லை என்று அவர் கருதினார். அது பொலனாவிற்கு முன்னர் ஒருபோதும் இருந்ததில்லை. பிக்லியாவின் படைப்புகளிலும் வர்காஸ் லோசாவின் சில பகுதிகளிலும், சில வேளை ரெய்னால்டோ அரங்கிலும் சிதறல்களாக ஆங்காங்கே காணப்பட்டது.

சிலியுடனான பொலனோவின் உறவை அதுவே மோசமடையச் செய்தது என்று நான் நினைக்கிறேன். அவரது படைப்பைப் பற்றிப் பேசுவதற்கு ஏராளமான விடயங்கள் இருக்கின்றன என்பது உண்மைதான். அவரது படைப்பு பெருமைப்படக்கூடியது, ஆக்கபூர்வமானது, அவசியமானதும்கூட. மறுபுறம், எவ்வாறாயினும், அத்தகைய படைப்பே சிவந்த சூட்டை உருவாக்கும் நெருப்பைப் பற்ற வைக்கிறது என்றும் திடீரென்று தோன்றும் புத்திசாலித்தனமான ஒளி ஒன்று ஒளிவெள்ளத்தைப் பாய்ச்சுகிறது பின்னர் அது தலைமுறை கடந்தும் கொழுந்துவிட்டு எரிகின்றது பின்னது இரண்டாவது முறையும் தோன்றி மீண்டும் மறைகிறது என்று அவரே ஒரு பந்தியில் லாஸ் புலனாய்வாளர்கள் பற்றி குறிப்பிடுகிறார். Los detectives salvajes (1998; Eng. The Savage Detectives, 2007). இது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் நான் கவனத்தில் எடுத்த ஒரு விடயம், ஆனால் இது இத்தருணம்வரை நான் கூறுவதுடன் தொடர்புபட்டதல்ல.

பொலனோவின் படைப்பை அதன் குணத்தைவைத்து முற்போக்கானது என்று கருதப்படலாம், குறிப்பாக கவிதையைப் பொறுத்வரை, அது வரலாற்று நிகழ்வுகளை ஒத்ததாக இருக்கிறது. அத்தகைய கண்ணோட்டத்திலிருந்து, பொலனோவின் படைப்பானது சிஎடிஎவுக்கு எதிரான கத்திமுனையாகத் திகழ்வதுடன், சிலியில் அந்த காலகட்டத்தில் நடந்தவைகளைப் பற்றிப் பேசுகிறது இருப்பினும் எல்லா முன்னணிப் போராளிகளையும் போலவே அவரது படைப்பும் அவர் தோன்றிய சிறிது நேரத்திலியே மெல்ல மெல்ல காட்சியிலிருந்து மறைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது அதாவது அவரை மையமாக வைத்தே கதை பின்னப்பட்டுள்ளது. பொலானோவைப் பற்றி அவ்வளவுதான் சொல்லலாம். ஒரு போராளி வித்தியாசமாகச் சிந்திப்பவர். அவரது கவிதை ஓயாத அலையைப் போன்றது, இலத்தீன் அமெரிக்க வரலாற்றைக் கூறும்போது அவரது படைப்பும் முடிவின்றி தோன்றி மறைகிறது. அந்த வகையில், அவரது படைப்பில் (ஆல்பர்டோ) மாண்டெசின் சாயல் தெரிகிறது. இருப்பினும் உண்மையில் பிரமாண்டமானது மேலும் ஆழத்திலும் அகலத்திலும் கற்பனை நிறைந்தது மரபை சவாலுக்குட்படுத்துவதிலும் நிபுணத்துவத்தை வெளிப்படுத்துவதிலும் எண்ணற்ற வியாக்கியானங்களை முன்வைத்துள்ளார் என்பதையும் ஆனாலும் அது இலத்தீன் அமெரிக்காவின் சீரழிவையே மையப்படுத்துகிறது என்பதையும் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. பொலானொ செய்ததெல்லாம் இலத்தீன் அமெரிக்காவின் அழிவிற்கு வடிவம் கொடுத்ததுதான். அவரே அது வேறெதுவும் செய்யவில்லை என்று கூறியுள்ளார். பொலனொ வெளிவருவதற்கு முன் அப்படி இருக்கவில்லை. அது பிக்லியாவின் படைப்பில் கூறுகளாகவும் வர்காஸ் லோசாவின் படைப்பிலும் ரெயினால்டோ ஏரினாசின் படைப்பிலும் துண்டுகளாகவும் இருந்தது. ஆனாலும் இலத்தீன் அமெரிக்காவின் வரலாற்றிற்குள் ஒருவர் முழுமையாக நுழைந்து வாழ்க்கையை சுவாசித்திருப்பாரேயானால் அது ஒரு பாரிய அழிவாக இருந்திருக்கும். அந்த உணர்வைத்தான் பொலானோ ஏற்படுத்தியது.

பிசிஜி: மறுதலையாக, லத்தீன் அமெரிக்காவின்மீதான பார்வைதான் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு ஏராளமான விருதுகளைப் பெற்று, பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, நாடுகடந்த பத்திரிகைகளில் ஆசிரியர் தலையங்கத்திலும் இடம் பிடித்து கௌரவிக்கப் பட்டிருந்தது. இந்த நிகழ்வுகளை நாம் எவ்வாறு மீளக்கட்டியெழுப்ப (சநஉழnஉடைந) முடியும்?

றொபட்: போலானோவின் படைப்பில் வெளிப்படுகின்ற குணாதிசயங்களைப் போன்றே பெருமளவான லத்தீன் அமெரிக்கர்களால் பொதுமக்கள் தோற்கடிக்கப்பட்டார்கள் என்று பொலானோ குறிப்பிடுகிறது. இதுதான் மிகப்பெரிய முரண். அது எப்படி சாத்தியம்? பகுதியளவு வேண்டுமானால் சாத்தியமாகலாம். நாம் ஏற்கனவே விவாதித்ததைப் போன்று, அந்த துண்டுகளை இடிபாடுகளுக்குள்ளும் மீட்டெடுக்கும் திறனை போலானோவின் படைப்பு கொண்டுள்ளது. அவரால் வினைதிறனுடன் பானையைச் சுரண்ட முடிந்தது. அவர் நினைவகத்துடனும் தற்காலத்தில் அதன் ஆக்கபூர்வமான இடம் குறித்தும் கரிசனை கொண்டிருந்தார். அதற்காக, அவர் கற்பனைக்கு எட்டாத கதாபாத்திரங்களையும் கதைகளையும் உருவாக்குகிறார், அமுலெட்டோவை எடுத்துக்கொண்டால் (case of Amuleto (1999; Eng. Amuleto, 2006) மெக்ஸிகோ பல்கலைக்கழகத்தின் குளியலறை ஒன்றில் வைத்து தான் பூட்டப்பட்டிருப்பதை உணர்ந்துகொண்ட ஒரு பெண்ணை மையமாகக் கொண்டது.

இராணுவத்தினர் பல்கலைக்கழக வளாகத்திலோ அல்லது வானத்திலோ தேடுதலில் ஈடுபட்டிருக்கையில் இராணுவ சிப்பாயின்  கொடூரமான வில்லனைக் கண்முன் நிறுத்கிறார் அவாண்ட்-கார்டின் கவிஞர். அவர் அதனை அப்படியே ஏற்று நியாயப்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை, ஆனால் அதற்கு மாறாக அதில் எஞ்சியிருந்ததில் மட்டும் கவனம் செலுத்துகிறார். அந்த வகையில், லத்தீன் அமெரிக்கப் பேரழிவு அவரது படைப்புக்கு உயிரூட்டுகிறது, இறுதியில் அது சாத்தியமற்றதாக இருந்தாலும் உண்மையில் அது அவருக்கு சாதிப்பதற்கான ஒரு வாய்ப்பை அளிக்கிறது. இதில் சுவாரஸ்யம் என்ன வென்றால் அவர் உயிருடன் இருக்கும்போதும் சரி அதற்குப் பின்னரும்சரி அவரது கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதுதான். அவரது மரணத்தின்போதுதான் அவரது பணியும் அதன் பாதையும் முக்கியத்துவம் பெற்றன. இதற்குப் பல காரணங்கள் இருந்தன. அவற்றில் சில பொலனோவின் படைப்பில் சொல்லபட்டவைகளிலிருந்து முற்றிலும் தவறாகவும் முரணானதாகவும் இருக்கின்றன. பொலானொவின் படைப்பை முழுவதும் மீளாய்வு செய்ய வேண்டும் என்ற விடயமே அதில் தெளிவாக எஞ்சியுள்ளது. நீங்கள் துப்பறியும் காடை ஊன்றிப் படித்தால் அதிலும் குறிப்பாக இரண்டாம் பகுதியில் வருகின்ற ‘வருகின்றார்கள் போகின்றார்கள்’ என்பதில் இஸ்ரேலிலும், ஆபிரிகாவிலும் பார்சிலோனாவிலும் அத்தகைய கதாபாத்திரங்கள் முன்பின் தெரியாத கஃபேக்களில் நிகழ்த்தும் – ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்த உரையாடல்கள் அனைத்தும் தடங்கள் அல்லது அந்த கதாபாத்திரங்களின் சிறிய தடயங்களை விட்டுச் சென்று, தங்களை நியாயப்படுத்துவதற்கான வாய்ப்பை அளித்து இறுதியில் அவை அங்கீகரிக்கப்பட்டு கவனத்தில் எடுக்கச் செய்கின்றன இவை அனைத்தும் வீணாகவில்லை என்று கூறுகின்றன. நான் அதனை அவ்வாறுதான் பார்க்கிறேன். நீங்கள் அவர் காரகாஸில் ரோமுலோ கால்லிகோஸ் விருதைப் பெறுகையில் அவர் ஆற்றிய உரையைப் படிக்கும்போது அதற்குள்ளேயும் அவரது நோக்கங்களையும் அவரது மரணத்திற்குப் பிறகு தொடரும் வெற்றியைப் புரிந்துகொள்வதற்கான இரகசியங்கள் பொதிந்திருப்பதைப் புரிந்துகொள்ள முடியும். மீண்டும் ஒருமுறை அவரது படைப்பில் உருவான அவன்ட் கார்ட் பாத்திரம் அவரது பண்பை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது; அதாவது படைப்பாளிக்கான அங்கீகாரம் என்பது அவரது மரணத்தின் பின்னாலும் அவரது மறைவிலும் இழுபட்டுச் செல்கிறது.

பிஜிசி: முந்தைய உரையாடலில் நீங்கள் எங்களிடம் குறிப்பிட்ட “தேசியவாதத்துடன் தொடர்புடைய அனைத்தும் என்னை அரசுக்கெதிராக மாற்றியது.” என்னும் சொற்றொடரை நீங்கள் விரிவுபடுத்த முனையலாம்: அந்த கருத்திற்கே நான் திரும்பி வந்து, தேசத்திற்கான வரையறை குறித்தும், ஒரு வெளிநாட்டவராக நீங்கள் அது குறித்து எத்தகைய தீர்மானத்திற்கு வருகிறீர்கள் என்பது குறித்தும் தேசியவாதம் குறித்த ஆழமான கலந்துரையாடல்களிலிருந்து நீங்கள் ஒதுங்கியிருப்பதற்கான காரணத்தையும் அறிய விரும்புகிறேன்.

றொபட்: தேசியவாதம் என்பது ஒடுக்குமுறையின் வடிவம். சிலி நாட்டவராக இருப்பதற்கும் அல்லது சிலி நாட்டின் குடிமகன் என்ற அந்தஸ்தை துறப்பதற்கு நிர்ப்பந்திப்பதற்கும் அது தேவைப்படுகிறது. சிலி எனக்கு என்ன செய்தது? நான் ஏன் அவற்றில் ஈடுபடவேண்டும்? நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் காணப்படுகின்ற சிரமம் அல்லது சாத்தியமற்ற நிலைமை பற்றிப் பேசும்போது, சிலி ஒரு நாடாகவோ அல்லது ஒரு சமூகமாகவோ தன்னை தானே பார்க்கிறதா இல்லையா என்பது ஒரு தவறான பிரதிபலிப்பைக் காண்பதிலும் அல்லது இருட்டில் மறைந்திருக்கும் உண்மையைக் காண்பதிலும் அதன் சொந்த திறமையிலேயே தங்கியுள்ளது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். தேசத்துடன் ஒருவருக்கிருக்கும் உறவு குறித்து கவனம் செலுத்துகையில் அங்கு ஒரு முரண்பாடு நிலவுகிறது. வரலாற்றுக்குள் நுழைவதற்கான முயற்சியை ஒருவர் மேற்கொள்வதனூடாகவும், அத்தகைய வரலாற்றில் ஏற்படும் புயலால் பெற்றுக்கொண்ட அனுபவங்களினூடாகவும், மீளுருவாக்கும் எதிர்பார்ப்புடன் தேசியம் தொடர்பான ஒருவரது புதினங்களின் ஊடாகவும் அது உருவாகின்றது. அதனால்தான் நான் சொல்கிறேன், “தேசியம் என்றால் என்ன என்பதில் கவனமாக இருங்கள்.” அது எனது நாவலாக இருக்கலாம் அல்லது எமது அன்றாட வாழ்க்கையாக இருக்கலாம், தேசம் என்ற வார்த்தையுடன் நான் தொடர்ந்தும் போராடி வருகின்றேன். அதுகுறித்த விவாதம் எப்பொழுதும் அவிழ்க்கப்படாத முடிச்சாகவே இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட எல்லையில் அந்த முரண்பாடு தீர்விற்காக காத்திருக்கிறது. ஏன்? ஏனெனில் அது தான் ஈவிரக்கமற்ற சிந்தனைகளுக்கான மிகப்பெரிய தூண்டுகோல். தேசம் கசப்பான நிலையைத் தோற்றுவிப்பதுடன் அந்த நிலைக்கான சரியான உதாரணமாகவும் திகழ்கிறது மேலும் அந்த கோபத்திற்கு நேரடியாக பதிலளிக்க முயற்சிப்பது தவறு. அந்த வெறுப்பிற்கு என்ன பொருள், தேசம் என்பதன் பொருள் என்ன என்பதை ஒருவர் அதற்குள் ஆட்பட்டுவிடாமல் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். இலத்தீன் அமெரிக்காவில் எமக்கிருக்கும் மிகப் பெரும் பிரச்சினையே அந்த கசப்புணர்வுதான். அதே நேரத்தில் அதுவே விபரிக்க முடியாத பிரச்சினையாகவும் உள்ளது. லத்தீன் அமெரிக்க சமூக கட்டுமானம் ஒரு அழுத்தமான மனக்கசப்பை உருவாக்கியுள்ளது, அது மிகப் பெரியது, அதில் ஒருவர் அகப்பட்டுக்கொண்டால், வெளிவர முடியாது.

ஒரு எழுத்தாளராக நான் சொல்வதெல்லாம், அதிலிருந்து சற்றே விலகி, அந்தக் கோப உணர்விற்கு எதிர்வினையாற்றுவதைவிட, அதற்கான பதில்களைக் கண்டுபிடிப்பதிலும், அதற்குப் பதிலளிப்பதிலும் ஈடுபடவேண்டும் என்பதே. தேசம் அல்லது நாடு என்ன செய்தது, என்ன சொல்லியது என்ற அடிப்படையில் போர்ப்பிரகடனம் செய்வதற்குப் பதிலாக, குறிப்பிட்ட எல்லைவரை சம இடைவெளியைப் பேணவேண்டும். இது எனது உணர்களில் அரிய உள்ளுணர்வு நான் என்னைப் பாதுகாத்துக்கொள்ள அந்த உள்ளுணர்வின் வழியையே பின்பற்றுகிறேன். தேசம் குறித்த உறுதியற்ற நிலையையும் சமஇடைவெளியையும் பேணும் நிலையை நான் பாதுகாக்க வேண்டும் என்பதும் அதில் சக்தி வாய்ந்த நஞ்சு இருப்பதும் எனக்குத் தெரியும். ஒரு எழுத்தாளர் என்ற அடிப்படையில், நான் என்னை அந்த நஞ்சிலிருந்து குறிப்பாக இலத்தீன் அமெரிக்காவில் வலிமை பெற்றுள்ள அதன் வீரியத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அமேசானைப் போன்று அது மிகப் பெரிய நதி. என்னைப் பொறுத்தவரை, அந்தத் துடிப்பில் எப்பொழுதும் விரலை வைத்திருப்பது அவசியம், தேசியத்தையும் வெறுக்கத்தக்க கோபத்தை அளப்பதற்கும் அதேவேளை

என்னைப் பொறுத்தவரை, தேசிய மற்றும் கசப்பான கோபத்தை அளவிடுவது, அதே நேரத்தில் அந்த வேதனையில் பங்கேற்று எஞ்சியுள்ளவற்றைப் பார்ப்பதற்கும் அந்த விஷத்தை குடித்து, அது என்னை ஆட்கொள்வதற்கான வாய்ப்புள்ளதா என்பதையும் அறிந்துகொள்வதற்காக அந்த துடிப்பில் என் விரலை வைத்திருப்பது எப்போதுமே முக்கியம். என்னைப் பொறுத்தவரை அதுவே விரிக்கப்படும் வலை.

மூலம்: ஸ்பெயின் மொழி

தமிழில் : தேசிகன் ராஜகோபாலன்-இலங்கை

தேசிகன் ராஜகோபாலன்

ஆங்கில மொழிபெயர்ப்பு: லிசா டிகியோவன்னியினால் – Lisa DiGiovanni

0000000000000000000000000000000

ஆசிரியர் பற்றிய குறிப்பு :

றோபெர்டோ பிராட்ஸ்கி 1957இல் பிறந்தவர். இவர் சால்வடாரில் அலெண்டேவின் பாப்புலர் யுனிட்டி அரசாங்கத்தினால் 1970–73 காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட புரட்சிகர நடவடிக்கையின் காரணமாக சாண்டியாகோ டி சிலியில் குடியேறியவர். 20ஆம் நூற்றாண்டின் முதல் தசாப்தங்களில் படுகொலைகளில் இருந்து தப்பிய உக்ரேனிய யூத குடியேற்றவாசிகளுக்கு மகனாகப் பிறந்த ப்ராட்ஸ்கி இடதுசாரி அரசியல் மற்றும் கலாச்சாரத்தில் மூழ்கி வளர்ந்தார். பாபுலர் யுனிட்டி கட்சியின் ஆட்சியின்போது அவர் புரட்சிகர மாணவர் முன்னணியில் FER (Frente de Estudiantes Revolucionarios)  ஒரு இளம் ஆயுதப் போராளியாகச் செயற்பட்டவர். 1973ஆம் ஆண்டு இடம்பெற்ற வலதுசாரி இராணுவப் புரட்சி அவரது குடும்பத்தைப் பிரித்து அவர்களை வெனிசுலாவிலும்  அர்ஜென்டினாவிலும் ஸ்பெயினிலும் ஏதிலிகளாக வாழவைத்தது. அவர் மீண்டும் 1980களின் ஆரம்பத்தில் சிலிக்குத் திரும்பியதன் பின்னர் அவர் ஒரு ஊடகவியலாளராகவும் நாடக ஆசிரியராகவும் பணியாற்றியதுடன் அரசுக்கெதிரான இரகசிய ஊடக வலையமைப்பிலும் தன்னை இணைத்துக்கொண்டார்.

இலத்தீன் அமெரிக்க சமூகங்கள் ஏதோவொரு வகையில் மூர்க்கத்தனமாகச் செயற்பட்டு சிதைந்து போயுள்ளன. அவற்றை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. அனர்த்தம் ஏற்படுத்திய வடுக்கள் அதன்மீது பார்வையைச் செலுத்த வைத்துள்ளது. அதற்கான தேடுதலிலேயே பரவலாகப் பேசப்படுகின்ற உணர்வுகளைக் கண்டறியவேண்டியுள்ளது. அந்த உணர்வுகளே எதிர்காலத்தில் எம்மைக் கட்டியெழுப்ப உதவும் என்று நான் நினைக்கிறேன்.

சமீப தசாப்தங்களில் அவர் நன்கு அறியப்பட்ட புதின மற்றும் திரைக்கதை எழுத்தாளராக அவதாரமெடுத்துள்ளார். அவரது படைப்புகள் பெரும்பாலும் சிலியின் கடந்தகால சர்வாதிகார ஆட்சியுடன் தொடர்புபட்டவையாக உள்ளன. இவற்றில் 1999ஆம் ஆண்டு வெளிவந்த எல் பியோர் டி லாஸ் ஹீரோஸ் [El peor de los héroes (1999; The worst of the heroes)1999] கதாநாயகர்களின் மோசமான பக்கத்தைக் காட்டியது. 2001இல் வெளிவந்த அல்டிமோஸ்டியாஸ் டி லா ஹிஸ்டோரியா [ (Últimosdías de la historia, (2001; The last days of history]  வரலாற்றின் இறுதி நாட்கள், 2004இல் வெளிவந்த எல் ஆர்டே டி காலர், மௌனமாக இருப்பது ஒரு கலை (El arte de callar ( The art of being silent),  2007ஆம் ஆண்டில் வெளிவந்த போஸ்க்யு குயுமெடோ (எரிந்துபோன காடு Bosque quemado (Burnt forest) போன்றவை சமூகச்செயற்பாடு, கல்வி, மனித உரிமைகள், புலம் பெயர்தல், தாயகம் திரும்பலில் அனுபவித்த துன்பங்கள் மற்றும் நினைவலைகள் ஆகியவற்றை வெளிக்கொணர்வதை மையமாகக் கொண்ட படைப்புகளும் உள்ளடக்கம். மேலும் 2004ஆம் ஆண்டு ஆன்டர்ஸ் உட்டுடன் இணைந்து இவர் மச்சுகா என்னும் திரைப்படத்திற்காக எழுதிய திரைக்கதை மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இந்தத் திரைப்படம் 1973ஆம் ஆண்டு இராணுவ ஆட்சிமாற்றத்திற்கு வழிவகுத்த நிகழ்வுகளை நுணுக்கமாகப் படம்பிடித்து இளம் பருவத்தினரின் பார்வைக்கு வழங்குகிறது. அவரது மிகச் சமீபத்திய நாவலான போஸ்க்யு குயுமெடோ (Bosque quemado (2007; Burnt forest)  எரிந்துபோன காடு அண்மையில் ஸ்பெயின் நாட்டின் புகழ்பெற்றதும் கௌரவமிக்கதுமான பிரிமியோ ஜேயென் டி நோவெலா என்னும் நாவலுக்கான விருதைப் பெற்றது. ஒரு கம்யூனிஸ்ட் இதய சிகிச்சை வல்லுனரான மோயிசெஸ் என்பவரைக் கதாநாயகனாகக் கொண்டு இராணுவ ஆட்சியைத் தொடர்ந்து ஒரு அரசியல் ஏதிலியாக இராணுவத்தினரின் கெடுபிடிகளுக்குள் சிக்குண்டு அவர் அனுபவித்த துன்பங்களுடன் அவர் ஆற்றிய மருத்துவ சேவையின் நினைவலைகளை மீட்டுவதை மையமாகக் கொண்டு இந்த நாவல் சுற்றிச்சுழல்கிறது.

ப்ராட்ஸ்கி தற்போது 1980 களில் பினோச்செட் ஆட்சியின் கீழ் சிலி நாட்டின் கலாச்சாரம் உற்பத்தி செய்தவற்றை மையமாகக் கொண்ட ஒரு புதிய நாவலையும் ஆவணப்படத்திற்கான திரைக்கதை எழுதுவதிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த உரையாடல்களில் பெரும்பகுதி பட்ராட்ஸ்கியின் நினைவலை, வரலாறு ஆகியவற்றின் மீதான பார்வையைச்செலுத்துவதுடன் சமகால இலத்தீன் அமெரிக்காவில் அதன் பிரதிநிதித்துவம் ஆகியவை பற்றியும் அத்துடன் வெகு விரைவில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவுள்ள அல்டிமோஸ்டியாஸ் என்னும் நாவலைக் பற்றியும் அதன் ஆசிரியரான றோபெர்டோ பொலாநோ என்னும் எழுத்தாளருடனான அவரது நட்பு குறித்தும் அமைந்திருக்கிறது. இந்த நேர்காணலானது 2011ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி இயுஜெனியில் ஓரிகான் என்னுமிடத்தில் அவர் ஓரிகான் பல்கலைக்கழக மாணவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த வேளையிலும் பின்னர் அவர் மி விடா கோன் கார்லோஸ் ( My life with Carlos ) டனான எனது வாழ்க்கை) என்ற ஆவணப்படத்தை சினிலிட் இன்டர்நேஷனல் கான்ஃபெரன்ஸ் ஆன் ஹிஸ்பானிக் ஃபிலிம் அண்ட் ஃபிக்ஷன் இன் போர்ட்லான்டில் திரையிட்டு உரையாடிக்கொண்டிருந்த நேரத்திலும் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆவணத் திரைப்படத்திற்கான திரைக்கதையினை ப்ராட்ஸ்கி; ஜேர்மன் பெர்கர்-ஹெர்ட்ஸ் என்பருடன் இணைந்து எழுதியிருந்தார். தற்சமயம் றோபெர்ட்டோ ப்ராட்ஸ்கி வாஷிங்டனில் டி.சியில் வசித்துவருவதுடன் ஜியோர்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் வருகைதரும் அறிஞராக கற்பித்து வருகிறார்.

0000000000000000000000000000000000

மொழிபெயர்ப்பாளர்கள் பற்றிய குறிப்பு :

Lisa DiGiovanni லிசியா டிகியோவன்னி அம்மையார் இந்தியான மாகாண பல்கலைக்கழகத்தில் ஸ்பெயின் மொழி உதவிப் பேராசிரியராகக் கடமையாற்றுகிறார். வரலாறு, இலக்கியம், நினைவகம், ஏக்கம் மற்றும் பாலினம் ஆகியவற்றுக்கு வலுசேர்க்கும் வகையில் ஸ்பானிய குடாநாட்டவரையும் இலத்தீன் அமெரிக்க இலக்கியம் மற்றும் திரைப்படத்தையும் நிலைமாற்ற கண்ணோட்டதிலிருந்து பார்ப்பது அதாவது இருபதாம் நூற்றாண்டினூடாக பத்தொன்பதாம் நூற்றாண்டின்மீது பார்வையைச் செலுத்துதல் உள்ளிட்ட பல கூறுகளில் இவர் நிபுணத்துவம் பெற்றவர்.

Pedro García-Caro  பெட்ரோ கார்சியா-கெரோ ஓரிகான் பல்கலைக்கழகத்தில் ஸ்பெயின் மொழித்துறை உதவிப் பேராசிரியர். இவரது ஆய்வு தேசியவாதம் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்தும் அதன் நவீனம் குறித்து இலத்தீன் அமெரிக்க, அமெரிக்க மற்றும் ஸ்பெயின் எழுத்தாளர்களும் புத்திஜீவிகளும் எத்தகைய பார்வையைக் கொண்டுள்ளனர் என்பதின்மீதும் கவனத்தைச் செலத்துகிறது.

 

 

(Visited 99 times, 1 visits today)