“சுதந்திர தேசத்தை நோக்கிய பயணம்”-“அமிரி பராக்கா-தமிழில் தேசிகன் ராஜகோபாலன்

“கல்வியும் அந்தக் கல்வியை அடிப்படையாகக் கொண்ட தொழிலுமே மக்களுக்குத் தேவைப்படுகின்ற இரண்டு விடயங்கள்”

இசைக்கும் கவிதைக்கும் என்ன தொடர்பு?

தேசிகன் ராஜகோபாலன்கவிதை என்பது இசையின் ஒரு வடிவம், அது வார்த்தை…. அந்த வார்த்தை இசையாக உருவாக்கப்படுகிறது, அது இசையின் மொழி. அது அப்படித்தான். என்னைப் பொறுத்தவரை நீங்கள் எந்தளவுக்கு இசையுடன் நெருங்கி வருகிறீர்களோ கவிதை வரிகளும் இசையுடன் நெருங்கிவரும், ஒரு சந்தத்தைக் கொண்டிருக்கும் அதன் பின்னர் நீங்கள் எனக்காக ஒரு வலுவான கவிதையைப் படைப்பீர்கள்.

உங்கள் வாழ்வின் எத்தகைய அனுபவங்கள் உங்களை ஒரு சிறந்த கவிஞராக உருவாக்கியது?

அனுபவத்தை அறிந்து கொள்வதும் இறுதியில் அதனை உணர்ந்து அந்த அனுபவத்தை ஈர்த்துக்கொள்ளும் திறனுமே என்னை ஒரு கவிஞனாக்கியது என்று நான் நினைக்கிறேன். அந்த அனுபவத்தை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள் என்ற நினைப்புடன் அடிக்கடி நீங்கள் அந்த அனுபவத்தை உள்வாங்கிக் கொள்ளவேண்டும். இரண்டாவதாக அந்த அனுபவத்தை அப்படியே புரிந்துகொள்ள வேண்டும். மூன்றாவதாக அந்த அனுபவத்தை ஏதோவொரு வகையில் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்த முயல வேண்டும். இதனை வேறு விதமாகச் சொன்னால், அந்த அனுபவம் உங்களுக்கும் கிடைத்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதுடன், அந்த அனுபவம் உங்களை அறியாமலேயே உங்களுக்குக் கிடைத்திருக்கிறது என்பதைப் போன்று அந்த அனுபவத்தை எத்தகைய வியாக்கியானமும் இன்றி அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு ஒரு அனுபவம் கிட்டியிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம், அந்த அனுபவத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதையே நான் சொல்ல விழைகிறேன். மூன்றாவதாக, நீங்கள் அந்த அனுபவத்தை எப்படிப் பயன்படுத்தப் போகிறீர்கள்? வீணடிக்கப் போகிறீர்களா அல்லது அதனை அப்படியே ஒருவிதத்தில் ஆக்கபூர்வமான வழியில் பயன்படுத்தப்போகிறீர்களா? வேறுவகையான சிந்தனையில் அந்த அனுபவத்தை எப்படிப் பயன்படுத்தப் போகிறீர்கள்? மக்கள் அனுபவங்களைப் பெற்றிருக்கின்ற போதிலும் ஏராளமான மக்கள் அவைகளைப் புரிந்துகொள்வதில்லை. அவ்வாறு அவர்கள் புரிந்துகொண்டிருந்தாலும், அதை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று அவர்களுக்குத் தெரிவதில்லை. அவைகளை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று அறிந்தவர்கள் அதனை வைத்துக்கொண்டு ஒரு சில விடயங்களை உருவாக்க வேண்டும். நீங்கள் உணர்ச்சிவசப்படக் கூடியவராக இருந்தால் அது அவ்வாறே உருவாக்கப்படவேண்டும்.

ப்ளுஸ் மற்றும் ஜாஸ் இசைகள் இதயத்திலிருந்தோ மூலையிலிருந்தோ அல்லது ஆன்மாவிலிருந்தோ உருவானவை என்று நினைக்கிறீர்களா?

அது ஒரு கலவை, அதேதான். உணர்வு மாற்றமடையவேண்டும். அவற்றிலிருந்து நீங்கள் உணர்வீர்கள். ஒரு நடனத்தை எடுத்துக்கொள்வோம், அது உணர்வை உள்ளடக்கிய முழுக்கேள்வியைப் போன்றது… அந்த உணர்வு எப்படி வெளிவருகிறது? நீங்கள் அதனைப் பற்றி ஒருவரிடம் சொல்ல விரும்புகிறீர்கள், நீங்கள் அதைப் பற்றிச் சொல்ல விரும்பினால், அது எப்படி இருந்தது, அதனை எப்படி செய்கிறீர்கள்? என்று சொல்வீர்கள் அல்லவா? அப்படிப்பட்டதுதான் ப்ளுஸ-ம். ப்ளுஸ் என்பது சுருங்கக்கூறின் அனுபவங்களை  மீட்டிப்பார்ப்பது, அதில் ஏராளமான எதிர்மறை விடயங்கள் பொதிந்திருக்கின்றபோதிலும் அதில் உள்ள சில நேரம்சக் கருத்துகளை நீங்கள் அறிந்திருந்தாலும் அது உண்மையில் என்ன என்பதை மக்களுக்குச் சொல்கிறது. ஆகவே, ப்ளு கதைசொல்லலின் ஒரு வடிவமாகும். அது ஒருவகையான கதைப்பாடல். நீங்கள் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்றோ எப்படி இருக்கக்கூடாது என்றோ எதிர்பார்க்கின்ற இரண்டில் ஒன்று. அமீர் பராக்காவில் உள்ள ஏழு பாடல்களில் இரண்டாவதைப் போன்றது… அது ஒரு மனிதனின் வாழ்க்கையைப் பற்றிச் சொல்கின்ற ஒருவகையான கதைப்பாடல். அதனால்தான் நீங்கள் ப்ளுவைப் படிக்கிறீர்கள். நான் கல்லூரியில் இருக்கும் வேளையில், ஸ்டெர்லிங் பிரௌன் என்ற பெயருடைய ஒரு பேராசிரியர் என்னிடம் நீங்கள் சங்கீதம் படித்தீர்கள் என்றால், அதிலும் குறிப்பாக ப்ளுவைப் படித்தீர்கள் என்றால் மக்கள் எப்பொழுதும் தங்களது வாழ்க்கையைப் பற்றியும் அவர்களது அனுபவங்களைப் பற்றியும் சொல்வதைப் பார்க்க முடியும் என்று கூறினார். உண்மையில் ப்ளுவைப் படிப்பது என்பது ஒரு வரலாற்றைப் படிப்பதாகும்.

எதனை நீங்கள் எமது நாகரீகத்தின் திருப்புமுனை என்று நம்புகிறீர்கள்?

“நாகரீகம் என்றால் என்ன? நாம் எதை நாகரீகமாகக் கருதுகிறோம் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டாமா? நாகரீகத்தின் முக்கிய அம்சம் அல்லது எது எம்மை நாகரீகத்தை நோக்கி வழிநடத்துகிறது என்று கேட்கிறீர்களா? சில ஆண்டுகளுக்கு முன்னர் நாகரீகம் என்பது இதுதான் என்று வரையறைத்திருந்ததை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். குறைந்தபட்சம் அது சமூகத்தின் தேவைகளுடன் தொடர்புபடவில்லை என்பதையாவது நாம் அறிந்துகொள்ள வேணடும். அமெரிக்கா நாகரீகத்தில் சிறந்து விளங்கியதாக நீங்கள் நினைத்திருக்கலாம், அதன் நவீனத்துவம் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தியிருப்பதைத் தவிர, அது மக்களின் நாகரீக வாழ்க்கையுடன் தொடர்புபட்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை உணர்த்தியிருக்கிறது. நீங்கள் மிகவும் நவீனமான ஒரு சூழ்நிலையில் வாழலாம் அது உண்மையில் நாகரீகம் அடைந்ததாக இருக்காது, அது பின்னோக்கி நகர்வதைப் போன்றது. இதுதான் கேள்வி என்று நான் நினைக்கிறேன், நாகரீகத்தின் தேவைகளை நவீனத்துவத்துடன் மட்டுப்படுத்தாமல் உண்மையான நாகரீகத்தை நோக்கி எப்படி நகர்த்துவது? என்பதுதான் இப்பொழுது எழுந்திருக்கும் கேள்வி என்று நான் நினைக்கிறேன். நீங்கள் பொத்தான்களை அமுக்குகிறீர்கள் அவை கணினியிலும் அதைப்போன்ற உபகரணங்களிலும் உள்ளவை போன்றே இருக்கின்றன இதைத்தான் அவர்கள் நாகரீகம் என்று நினைக்கிறார்கள் ஆனால் அவை நவீனமயமாக்கலும் நவீனத்துவமுமாகும். ஆனால் நாகரீகமாக நாம் வெளிப்படுத்த விரும்புவதையும், வாழ்க்கையை உண்மையில் மானுடம் சார்ந்து ஆக்கபூர்வமாகவும் அர்த்தமுள்ளதாகவும் அமைப்பதைப் பொறுத்தவரையில் சில நேரங்களில் வார்த்தைகள் எப்போதும் ஒன்றாக இணைக்கப்படுவதில்லை. எது ஒரு சமூகத்தை நவீனமயப்படுத்துகிறதோ அது அந்த சமூகத்தை நாகரீகமாக்க வேண்டும் எனற அவசியமில்லை. அனேகமான சந்தர்ப்பங்களில் தொழில்நுட்பம் மக்களை அவர்களது பணிகளிலிருந்து துரத்திவிடுவதுடன் தொழில்நுட்பம் அதிகளவில் முன்னோக்கி வளர்கிறது, இதன் காரணமாக அத்தகைய தொழிலில் பரிச்சயமான ஏராளமான மக்கள் பணியிழக்கின்றனர். நாகரீகத்தைப் பொறுத்தவரை, அத்தகைய வளர்ச்சியானது நாகரீத்தை அழிப்பதற்கான ஒரு காரணியாகிறது. நீங்கள் உங்களைச் சுற்றி ஏராளமானவர்கள் வேலையின்றி இருப்பதையும் இருக்க வீடற்று இருப்பதையும் கண்டு அதிசயித்திருப்பீர்கள், அத்தகைய போக்கு நிச்சயமாக நாகரீகமாகாது. இது நாகரீகம் தொடர்பிலான உங்களது வரையறைக்கும் அதன் மூலம் நீங்கள் அடையக்கூடியவற்றிற்கும் இடையிலான முரண்பாடாகும். அது நாகரீகத்தின் அவசியத்தை வாழ்வாதாரத்தின் விருப்பத்தை நோக்கி வழிநடத்துகிறது. இப்பொழுது உலகிற்குத் தேவை சிறிதளவு அமைதியே. அவர்கள் அடக்குமுறை மற்றும் கடந்தகால நாகரீகம், அரசியல் ஒடுக்குமுறை, பொருளாதார சுரண்டல் ஆகியவற்றை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று விரும்புகின்றனர். அவைகள் நிறுத்தப்படவேண்டும் என்பதுடன் அவை நடைபெறும்வரை நாகரீகம் குறித்துப் பேசுவது மிகவும் கடினமானதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். முதலாவதாக நாம் நாள்தோறும் யுத்தங்களை எதிர்கொள்கிறோம், ஆளில்லா விமானங்கள், கார்குண்டுகள், ஆகியவற்றின் காரணமாக மக்கள் தமக்கிடையே வேலிகளை அமைத்துக்கொள்கின்றனர் இவை அனைத்தும் என்னைப் பொறுத்தவரையில் நாகரீகமாகக் கருதமுடியாது.

உங்களது வாழ்க்கையில் மிகவும் சுவாரஸ்யமான காலம் எது? ஏன்?

மிகவும் சுவாரஸ்யமான காலமாக நான் கருதுவது…. உண்மையில் நான் இன்னமும் பந்துவீசிக்கொண்டிருக்கிறேன், நான் நினைக்கிறேன் அது ஆரம்பமானது… உங்களது வாழ்க்கை மாறியிருப்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் எதைச் செய்ய முயற்சிக்கிறீர்களோ அதை நோக்கித் திரும்பியிருக்கிறீர்கள். ஒட்டுமொத்த கறுப்பின விடுதலை இயக்கத்தின் காலத்தில் அமிரி பராக்கா 3:7 ஐ முழுமையாக கேள்விக்குட்படுத்திய மால்கம் எக்ஸ் மற்றும் மார்ட்டின் லூதர் கிங், பேரூந்துப் பயணத்தைப் புறக்கணித்த மோன்ட்கோமேரி, புரட்சியின் பேரால் நடைபெற்ற படுகொலை, ஐக்கிய அமெரிக்காவில் நடைபெற்ற கருப்பின மக்களின் விடுதலை இயக்கம் ஆகியவை சுவாரஸ்யமான காலங்கள். நாம் கடந்த காலங்களில் அடைந்த துன்பங்களிலிருந்து விடுபடுவதற்குக் கடைப்பிடித்த அதே கொள்கைகளையே ஒரு குறிப்பிட்ட அளவிற்கு இன்னமும் நாம் நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிக்கிறோம் என்று நான் நினைக்கிறேன். “போராடியவர்களுக்கான வெற்றி” என்பது ( Sekou Toure )வாக்கியம், அதுதான் நான் கற்றுக்கொண்ட விடயம் என்று நான் நினைக்கிறேன் அதாவது, வெற்றி வேண்டுமானால் நீங்கள் போராட வேண்டும், அதுவே அந்த போராட்டத்தை நீங்கள் விரும்பும் விடயங்களுக்குப் பொருத்தமானதாக அமைக்கும் அதுதான் பணி. சாந்தப்படுத்தலிலும் கருப்பின மக்களின் விடுதலை இயக்கத்திலும் அது ஆற்றிய பங்களிப்பைப் போலவே இன்று நடைபெறும் விடயங்களுக்கும் அது தனது பங்களிப்பை முழுவதும் தூய்மையாக ஆற்றிவருகிறது. இரண்டாண்டுகளுக்கு முன்னர் எமது இரண்டாவது மகன் நகரத்தின் கவுன்சிலராக பதவியேற்றார் அவரும் நியூயார்க்கில் அமைந்துள்ள புதிய உயர்நிலைப்பள்ளியின் கொள்கையைப் பின்பற்றுபவர், இதனால் என்னைப்பொறுத்தவரை நாம் இதற்கு முன்னர் என்ன செய்துகொண்டிருந்தோமோ அதன் வியத்தகு நீட்சியின் ஒருவகையாகவே என்னால் இதனைப் பார்க்க முடிகிறது. ஒருபுறம் ஒரு கறுப்பினத்தவன் நகர கவுன்சிலராக வந்தது குற்றம் என்றும் அதனை ஏற்க முடியாது என்றும் போராடுகிறீர்கள். மற்றொரு சந்தர்ப்பத்தில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் கல்லூரியின் அதிபராக வருவதை நினைத்துப் பார்ப்பதே நடக்காத காரியம் என்று கூறுகிறீர்கள். ஆனால் அந்த இரண்டு விடயங்களும் மாறிவிட்டன, அவர்கள் இன்னமும் போராடி வருகின்றனர் மேலும்; இவ்வாறுதான் விடயங்கள் இடைவிடாமல் தொடர்ந்தும் முன்னோக்கி நகர்ந்து இந்த காலத்தை சுவாரஸ்யமிக்கதாக ஆக்குகின்றன.

பொதுவாக ஆப்பிரிக்க அமெரிக்கர் கலாசாரத்தில் புளு மற்றும் ஜாஸ் ஆகியவற்றின் கொள்கையில் எத்தகைய குணவியல்புகள் அடங்கியுள்ளன?

தத்துவம் என்பது…. அப்படீன்னா என்ன?… அது யதார்த்தத்தில் மீண்டும் விவிலியத்தை நோக்கியே திரும்பும். அவர்கள் அதனைத்தான் வழக்கமாகச் சொல்கிறார்கள். மார்ட்டின் லூதர்கிங் பயன்படுத்திய (“Ain’t gonna let nobody turn me around, ain’t gonna let nobody turn me around, keep on walking, keep on talking, walk on to freedom land” it’s the question of overcoming these obstacles doesn’t put in your life from slavery to segregation, all those obstacles to civilization, blues and jazz, that philosophy is always the reason we will overcome. Well that is part of it, no matter what it is, we are going to struggle with it and eliminate it. That is always part of it, that  “keep on walking, keep on talking, walk on to the freedom land, Ain’t gonna let nobody turn me around, ain’t gonna let nobody turn me around”. ) யாரும் என்னைத் திரும்பிப்பார்க்காமல் தொடர்ந்து முன்னேறுங்கள், பேசுவதை நிறுத்திவிடாதீர்கள், சுதந்திர தேசத்தை நோக்கி பீடுநடைபோடுங்கள் ஆகிய பாடல்கள் மக்களையும் பாடவைப்பதாக இருந்தபோதிலும்,; இந்த தடைகளை நாம் எப்படித் தாண்டப்போகிறோம் என்பதுதான் கேள்வி. இததகைய தடைகள் உங்களது வாழ்வில் தடைகளை ஏற்படுத்தாமல் அவற்றை வெற்றிகொண்டு அடிமைத்தனத்திலிருந்து பிரித்தல் வரை, நாகரிகத்தை நோக்கி நகர்வதற்கு ப்ளுஸ் மற்றும் ஜாஸ் ஆகியவற்றின் தத்துவமே எப்போதும் நாம் தடைகளைத் தாண்டி வெற்றிபெறுவதற்கான காரணம். நல்லது அது அதன் ஒரு பகுதி, அது எப்படிப்பட்டது என்பது ஒரு பொருட்டல்ல, நாம் அதனுடன் இணைந்தே அதனை அகற்றுவதற்காகப் போராடப்போகிறோம். அது எப்பொழுதும் அதன் ஒரு பகுதியாகவே இருக்கிறது, “தொடர்ந்து பயணியுங்கள், தொடர்ந்து குரல்கொடுங்கள், சுதந்திர தேசத்திற்காக பயணியுங்கள், அப்படி முடியாவிட்டால் என்னை யாரும் திரும்பிப்பார்க்க வேண்டாம், என்னை யாரும் திரும்பிப்பார்க்க வைக்கவேண்டாம். அத்தகைய விடயங்களுக்கு காலவரையறையில்லை, அதனால்தான் அவை பைபிளிலிருந்தும் தேவாலயத்திலிருந்தும் வெளிவந்திருந்தாலும் அவற்றைப் பயன்படுத்துகின்றன, அதனால்தான் அவை இந்த இயக்கத்தில்கூட இத்தகைய தீமைகள் இருந்தன, ஏனெனில் அதுதான் தத்துவம். தீமையை வெல்வதற்கான பழைய தேவாலய தத்துவம், தீமையை வெல்வதற்கும் நீங்கள் விரும்பும் வழியில் உங்கள் வாழ்க்கையை வெற்றிபெறச் செய்வதற்கும் அடிப்படையாகும்.

உங்கள் மனத்தின் அடிஆழத்தில் புதைந்துள்ள கனவு என்ன? உலகைக்குறித்து நீங்கள் எதைக்கண்டு அஞ்சுகிறீர்கள்?

நான் ஒரு (சோசலிசவாதி) சமத்துவவாதி, ஏகாதிபத்தியமும் ஏகபோக முதலாளித்துவமும் உலகில் இல்லாமல் செய்ய வேண்டும் என்பது எனது குறைந்தபட்ச கனவு, அது குறைந்தபட்சம். அடுத்ததாக அதற்குப் பிந்தைய சமூகம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்று அமிர் பராக்கா 4:7இல் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணக்கருவை விவாதிப்பது. ஆனால் நாம் இப்பொழுது உலகம் முழுவதிலும் அத்தகையவற்றை இல்லாமல் செய்வதற்காக மக்கள் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கான அமைப்புகள் குறித்து பேசி வருகிறோம்… உலகம் முழுவதிலும் அடிமைத்தனத்தை ஏற்றுக்கொண்ட ஒரு காலம் இருந்தது, மக்களும் அடிமைத்தனம் எப்பொழுதும் எம்முடன் இருக்கப்போகிறது என்று நினைத்திருக்கக்கூடும் அவர்கள் எப்பொழுதும் அடிமைகளைப் பெற்றிருந்தார்கள், அப்டியில்லையெனில், மக்கள் அதனை இல்லாதொழிப்பதற்கு தாமாகவே அணிதிரண்டிருப்பார்கள். அது இன்றும் சில இடங்களில் தொடரக்கூடும் ஆனால் அது இனி ஒருபோதும் உலக நடைமுறையாக இருக்கப்போவதில்லை. அவர்கள் ஒத்துழைக்கிறார்கள், கூட்டுறவு விதிகளையும் ஏகபோக முதலாளித்துவத்தையும், ஏகாதிபத்தியத்தையும்  கட்டுப்படுத்துகிறார்கள் என்ற அடிப்படைத் தோற்றத்தைக் கொண்டுள்ள போதிலும் அடிப்படையில் இவைகளும் ஒருவகையில் மனிதனைச் சுரண்டுபவையே. எனது குறைந்தபட்ச நம்பிக்கையானது அத்தகையவைகள் அழித்தொழிக்கப்படும், அவைகள் அழிக்கப்பட்டிருந்தால் அதற்குப் பின்னர் மக்கள் இப்புவியில் நாகரிகத்துடன் வாழ்வதற்கேற்ற வழிவகைகளை அதிகளவில் வகுத்துச் செயற்படுவார்கள். நீங்கள் எப்படி பழமைவாதத்தை மீண்டும் பற்றிப்பிடிக்காமல் இருக்கிறீர்களோ அப்படித்தான். மக்கள் அனைத்தையும் கட்டுப்படுத்த விரும்புகின்றனர், உங்களுடைய வாழ்க்கையையும் அவர்களது வாழ்க்கையையும்கூட, பிற்போக்குத்தனமாக வாழ்வது சோகமானது என்று அவர்கள் நினைக்கின்றனர்.

புதிய தலைமுறைக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?

எனது அறிவுரையானது… இவ்வுலகில் வாழ்வதற்கு அனைத்து விடயங்களையும்விட முதலாவதும் முக்கியமானதுமான விடயம் கல்வி. இவ்வுலகிற்கு கல்வியறிவே மிக முக்கியமான விடயம். மக்களுக்கு தேவைப்படும் இரண்டு முக்கிய விடயங்களில் கல்வியும் அந்த கல்வியை அடிப்படையாகக் கொண்ட தொழில்வாய்ப்பும் அடக்கம். சமகாலத்தில் அமெரிக்க ஐக்கிய நாடுகள் தொழிற்சாலைகளை நாட்டுக்கு வெளியே அனுப்பிவிட்டது, வேலைவாய்ப்பும் நாட்டிற்கு வெளியே சென்றுவிட்டது, மக்களை அறிவூட்டுவதற்கான எத்தகைய செய்தியும் அவர்களிடமில்லை. அவர்கள் இந்த உலகில் கல்வி கற்கவேண்டும் என்ற அவாகூட இல்லாதவர்களாக இருக்கின்றனர். இந்த நாட்டு மக்களின் குறிக்கோள் பணம், பணம் சம்பாதிப்பது மற்றும் உண்மையில் மக்களுக்கு கல்வி அறிவூட்டுவது குறித்து சிந்திப்பது மிகவும் புனிதமான கரிசனையாகும்… அதாவது, இந்த கிரகத்தில் வாழும் மக்களை கற்பனை செய்து பாருங்கள், அவர்களுக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாது, இலக்கின்றி சுற்றித் திரிகிறார்கள், தடுமாறுகிறார்கள், தம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. நவீன உலகத்தில் வாழ்கின்ற மக்கள் அப்படித்தான் இருக்கின்றனர், மக்களிடம் அதிகாரம் இருக்கிறது என்பதைத் தவிர அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதே தெரியாது, அவர்கள் எதையும் புரிந்துகொள்வதில்லை. ஆகையால்தான் நான் உலகளாவிய கல்வியைக் காணவிரும்புகிறேன். அதுதான் முக்கியமான விடயம் என்று நான் கருதுகிறேன், உங்களால் எப்படி மக்கள் எப்பொழுதும் அதிகளவில் கல்வியைப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்த முடியும் என்றும் ஒரு சிலருக்கு மட்டுமன்றி அனைத்து மக்களும் கல்வியைப் பெறுவதை உறுதிசெய்வது குறித்தும் சிந்திக்கின்றேன். இந்தப் பூமியில் வாழ்கின்ற அனைத்து மக்களுக்கும் முனைவர் பட்டம் தேவை. ஒரு கோள் முழுவதும் முனைவர் பட்டம் பெற்றவர்களைக் கொண்டிருப்பதைக் கற்பனை செய்து பாருங்கள். உங்களால் இதை நம்ப முடிந்தால், உங்களால் இதற்காக உழைக்க முடியும், அதைத்தான் பழமைவாதிகளால் செய்ய முடியும், அவர்களுக்கு தம்மை எப்படி சரிசெய்துகொள்வது என்பது தெரியும், அவர்களுக்கு பல்வேறு நிவாரணங்களைப் பயன்படுத்த முடியும், அவர்களால் அறிகுறிகளைக் கண்டறிய முடியும்… நல்லது, உலகம் மாறியிருக்கிறது அதற்கான வடிவத்தை நாம்தான் உருவாக்கினோம் அதை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு எம்மால் முடியும்.

எத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவர்களை நீங்கள் சந்திக்க விரும்புகிறீர்கள்?

அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஏராளம்… நான் ஃப்ரெடெரிக் டக்ளஸ், று.நு.டீ டு போயிஸ், ஆகியோரை சந்திக்க விரும்புவதுடன், ஒருமுறை காஸ்ட்ரோவை சந்தித்துள்ளேன் ஆனால் அது மிகக் குறுகிய கால சந்திப்பாக இருந்தது. அமிரி பராக்கா 5:7 ஆகிய நான் மால்கம் எக்ஸை சந்தித்துள்ளேன். அதுவும் ஓரிரு மணித்தியாலங்களுடன் முடிவுற்றது. இவர்களைத் தவிர டாக்டர் கிங் போன்ற  ஏராளமானவர்களை நான் சந்தித்துள்ளேன் டாக்டர் கிங் எனது வீட்டிற்கு வந்திருக்கிறார், ஆனால் அவர் 15-20 நிமிடங்கள் வரையே என்வீட்டில் தங்கினார். ஆகவே அது ஒரு சினேகபூர்வமானதாக மனம்விட்டுப் பேசக்கூடியதாக அமையவில்லை அந்த சந்திப்பின் தரம் நான் என்னை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை உணர்;த்தியது. நான் லெனினைச் சந்திக்க விரும்பினேன் ஆங்… உண்மையில் நான் முஷ்கி டாமையும் சந்திக்க விரும்பினேன் ஒருநாள் அவர்களை சந்திக்கக்கூடும்.

டோடெம் பதிப்பகத்திலிருந்தும் யூகென் சஞ்சிகையிலிருந்தும் வெளியேறிய பின் நீங்கள் எதனை அதிகம் இழந்தீர்கள்?

ஏராளமான பதிப்பகங்கள் இருந்தன என்ற உண்மையை அறிந்துகொள்வதை இழந்தேன். இந்த நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி என்பது நிறுவனங்களில் அதிகரித்துக் காணப்படும் கண்டிப்புகளின் பயனாக சஞ்சிகைகள் உட்பட பதிப்பகங்கள் மற்றும் ஒலிப்பதிவு நிறுவனங்களை விற்பது, அவற்றை மூடிவிடுவதாகவே உள்ளது. இவற்றின் மூலம் எமக்கிருக்கும் கருத்து வெளிப்பாட்டிற்கான பல்வேறு தளங்களை நாம் இழப்பதே நாம் பெற்றுள்ள பெரும் இழப்பு என்று நான் நினைக்கிறேன்.

நீங்கள் கின்ஸ்பெர்க், கெரௌவக், பிலிப் உஹாலென் மற்றும் கிரெகொரி கோர்சோ ஆகியோருடன் பழகிய உங்களது மேன்மையான நினைவுகளை எமக்குச் சொல்வீர்களா?

ஹ_ம், என்னைப் பொறுத்தவரை அது ஒரு இரணம்… கின்ஸ்பெர்க் இறந்தநாள். அவர் என்னை தொலைபேசியில் அழைத்து நான் மரணிக்கப்போகிறேன் என்று கூறினார், நான் என்னை ஏன் அழைத்தீர்கள் என்று கேட்டேன், அதற்கு அவர் உனக்கு சிறிது பணம் தேவையா என்று கேட்டார். நான் அதற்கு இல்லை என்று பதிலளித்தேன் உடனே அவர் என் வாழ்நாளிலேயே இதுதான் நான் கேட்ட மோசமான பதில் என்று சொன்னதுடன், சரி என்னை வந்து சந்தித்துவிட்டுப் போ, என்னைப் பார்… என்று கூறினார் இந்த அழைப்பு வெள்ளிக்கிழமை அன்று மேற்கொள்ளப்பட்டது. தன்னை திங்கட்கிழமையன்று வந்து சந்திக்குமாறு கூறியிருந்தார், நானும் சரியென்று சொல்லிவிட்டு தொலைபேசி இணைப்பைத் துண்டித்தேன்… அடுத்தநாள் அவர் இறந்துவிட்டார். அவர் எப்படி இறந்தார் என்பதை அவரது நெருங்கிய கூட்டாளியான பீட்டர் ஆர்லோவ்ஸ்கி, அவர் மருத்துவமனையில் இருந்து திரும்பி வந்து, தரையில் அமர்ந்து பாதுகாப்பாக என்னைப் பிடித்துக்கொண்டு கைகளைக் கசக்கினார்… அவர்கள் கேட்டிருக்க வேண்டும், அவர் கொஞ்சம் சூப் தயாரித்தார், அப்பொழுது நிலைதடுமாறி விழுந்து இறந்தார் என்று என்னிடம் கூறினார். நாங்கள் நண்பர்களாக இருந்தோம், நெருங்கிய நண்பர்கள், நீங்கள் நீண்டகாலமாகப் பார்க்கிறீர்கள் நாங்கள் இலக்கிய விடயத்தில் மட்டுமே ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொண்டோம். அவர் மிகவும் ஆர்வமாக இருந்தார் நான் அவருடன் சண்டைபோட விரும்பினேன். மற்றபடி நாங்கள் நெருங்கிய நண்பர்கள் மால்கம் மறைவிற்குப் பின்னர் நான் வேறொரு இடத்திற்குக் குடிபெயர்ந்துவிட்டதால் என்னால் அவரைப் பார்க்க முடியவில்லை இருப்பினும் நாங்கள் தொடர்பிலேயே இருந்தோம். இலக்கியத்தில் ஆங்கிலம் அல்லது பிரத்தானிய கவிஞர்களைக் காட்டிலும் அமெரிக்கர்களின் மொழிநடையை பிரதிபலிக்கச் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து எமக்கிடையே உடன்பாடு இருந்தது. அது அடிப்படையில்… நீங்கள் குறிப்பிட்டுள்ள மற்றவர்கள்… நான் அவர்களுக்கு அவ்வளவு நெருக்கமானவன் அல்ல, ஆனால் எனக்கு அவர்களைத் தெரியும். நான் இப்பொழுதும் லாங் தீவில் வசிப்பதால் அவர்களில் ஒருவரையும் நான் சந்தித்ததில்லை.

உங்களால் கடந்தகாலத்தை மீட்டிப்பார்க்க முடிந்தால், நீங்கள் எதனைச் சரியாகச் செய்ய வேண்டும் என்பதையும் நீங்கள் எதனை மீண்டும் செய்யக்கூடாது என்பதையும் புரிந்துகொள்வீர்கள்.

அமிரி பராக்கா 6:7 அரசியல் நிறுவனத்துடன் சமகாலத்தில் உருவாக்கப்பட்ட கலையின் அமைப்பைக் கற்றுக்கொள்வதில் நான் அதிக நேரம் செலவிடுவேன், ஏனென்றால் கலை அமைப்பு இல்லாமல் நாங்கள் அரசியல் அமைப்பை உருவாக்கினோம் இதனால் நீங்கள் உங்களுக்குள்ளேயே பேசிக்கொள்ள நேர்ந்தது இதுதான் பிரச்சினை என்று நான் நினைக்கிறேன். நாம் ஒரு வகையான விநியோகத்தை உருவாக்கும் திறன் படைத்தவர்களாக இருக்க வேண்டும்… எனவே நீங்கள் கலை அமைப்பை உருவாக்க வேண்டும் என்றால் நீங்கள் அரசியல் நிறுவனத்தை உருவாக்க வேண்டும். நீங்கள் அரசியலை முன்னெடுத்துச் செல்வதற்கு ஒரு அரசியல் நிறுவனத்தை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்படுகின்ற போதிலும் அதனுடன் ஒரு கலைப்பிரிவையும் உருவாக்க வேண்டும். அவை இரண்டையும் ஒரே நேரத்தில் கட்டியெழுப்ப நீங்கள் முயற்சிக்க வேண்டும். இதில் ஒன்றை விடுத்து உங்களால் எதுவும் செய்ய முடியாது. ஆனால் ஒரு கலாச்சார புரட்சியை ஏற்படுத்துவதற்கோ அல்லது அதில் ஈடுபடுமாறு வலியுறுத்துவதற்கோகூட அந்த அலகு என்பது இயங்கியலில் முக்கியமானது. நீங்கள் ஆயுத பலத்தைப் பெற்றிருந்தாலும்கூட, ஒரு கலாசார புரட்சியை மேற்கொள்ள விம்பினால் அவை அதனை மீள எடுத்துக்கொள்ளும். புரட்சி குறித்து எவ்வாறு தெரியப்படுத்தப்பட்டுள்ளதோ அந்த நிலையில் மக்கள் மாறாமல் இருக்க வேண்டும். ஏன்? என்ன? உங்கள் எதிரி யார்? உங்கள் நண்பன் யார்? என்ற கேள்விகளுக்கு மக்களிடம் தெளிவு இருக்க வேண்டும். இதனால்தான் அது முக்கியத்துவம் வாய்ந்த. அவ்வாறில்லையெனில் அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள நீங்கள் முயற்சிக்கையில் நீங்களே உங்களைச் சுற்றிலும் எதிரிகள் சூழ்ந்திருப்பதை உணர்வீர்கள்.

அமிரி பராக்காவைப் பற்றிய சிறுகுறிப்பு:

தேசிகன் ராஜகோபாலன்பீட்ஸ் இசைப்பாடலுக்கு முன்பு ஜாஸ் இசைப்பாடல் இருந்தது. கவிஞர் செயற்பாட்டாளரான அமிரி பராக்கா பாலினம் என்ற சொல்லாடலின் உருவாக்கத்தில் பிரதான நபராகத் திகழ்ந்தார், அவர் அரசியல், கலை நிகழ்ச்சி மற்றும் கலாசார மாற்றங்களில் சர்வதேச மட்டத்தில் செல்வாக்கு செலுத்தினார். நியூயார்க்கின் நியூ ஜெர்சியில் உள்ள லீறோய் ஜோன்ஸில் 1934ஆம் ஆண்டு அமிரி பராக்கா பிறந்தார். கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள் ஆகியவற்றுடன் இசையின் வரலாறு மற்றும் விமர்சனங்கள் என 40 நூல்களை எழுதியுள்ளார். கவிஞர்கள் மத்தியில் தனக்கென ஒரு குறியீட்டையும் புரட்சிகர அரசியலில் ஒரு செயற்பாட்டாளராகவும் செயற்பட்டிருப்பதுடன் கவிதையை வாசிப்பதிலும் கலாசாரம் மற்றும் அரசியல் பிரச்சினைகள் குறித்து பிரசங்கம் செய்வதிலும் அமெரிக்கா, ஆபிரிக்கா, கரீபியன் தீவுகள் மற்றும் ஐரோப்பாவில் தனித்துவமிக்கவராகத் திகழ்ந்தார்.

ஹொவர்ட் பல்கலைக்கழகம் மற்றும் விமானப்படையிலிருந்து வெளியேறியதன் பின்னர், 1957ஆம் ஆண்டு அவர் மன்ஹாட்டனில் உள்ள லோயர் ஈஸ்ட் சைடிற்குக் குடிபெயர்ந்ததுடன் அவன்ட்கார்ட் (முற்போக்கு) இலக்கிய சஞ்சிகையான யுஜெனில் இணையாசிரியாகப் பணியாற்றினார். பின்னர் ஜின்ஸ்பெர்க், ஜேக் கெரௌயக் ஆகியோரின் படைப்புகளை முதன் முதலாக வெளியிட்டதுடன் ஏனையோரின் படைப்புகளையும் வெளியிட்ட டோட்டெம் அச்சுக்கூடத்தைக் கண்டடைந்தார்.

டட்ச்மேன் அட் தி செர்ரி லேன் என்னும் நாடக ஆக்கம் தியேட்டர் இன் நியூ யார்க்கில் மார்ச் மாதம் 24ஆம் திகதி 1964ஆம் ஆண்டு வெளியானதும் அவருக்கு நாடக ஆசிரியருக்கான அங்கீகாரம் கிடைக்கப்பெற்றது. சர்ச்சையைக் கிளப்பிய அந்த நாடகம் பின்னர் ஓபி (for “Best off-Broadway play”) விருதை வென்றது.

பின்னர் அது திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது. 1965இல், ஜோன்ஸ் ஹார்லெமுக்குக் குடிபெயர்ந்தார், அங்கு அவர் கறுப்பினத்தவர்களால் நடத்தப்பட்ட பிளாக் ஆர்ட்ஸ் றிபெர்டொரி என்னும் கருப்பர்களின் நாடக ஆற்றுகைக் கலைக்கூடம் ஃ பயிற்சிப்பட்டறையைக்

கண்டுகொண்டார். பார்ட்ஸ் கலைக்கூடம் ஓராண்டுகாலமே உயிருடன் இருந்தபோதிலும் ஆப்ரோ அமெரிக்க கலைவப்பயணத்தில் நீடித்த செல்வாக்கைப் பெற்றிருந்தது. அவரும் அவருடைய துணைவியாரான அமினா பராக்காவும் இணைந்து தொகுத்து (Meditations of Jazz & Blues (Morrow) இசையை உறுதி செய்தனர். அமிரி பராக்கா என்னும் ஆபிரிக்கரின் 7:7 தொகுப்பான அமெரிக்கன் உமன் அமெரிக்க புத்தகத்திற்கான விருதை கொலம்பஸ் அறக்கட்டளை நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொண்டது. லிறோய் ஜோன்ஸ்ஃஅமிரி பராக்கா ஆகியோரின் சுயசரிதை 1984இல் வெளியிடப்பட்டது.

அமிரி பராகா கறுப்பர்களின் கலை இயக்கத்தின் தந்தையாகவும் 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் வளமான மற்றும் செல்வாக்குமிக்க ஆப்பிரிக்க-அமெரிக்க எழுத்தாளர்களில் ஒருவராகவும் பரவலாக கொண்டாடப்படுகிறார், பராக்கா பரந்த அளவில் கவிதைகளை பதிப்பித்த கவிஞர், நாடக ஆசிரியர், கட்டுரையாளர், புதினப்படைபாளி அத்துடன் ஊடகவியலாளரும்கூட. இசையை விமர்சித்து அவர் எழுதிய ப்ளுஸ் பீப்பிள் (Blues People) என்னும் நூல் இசைத்துறையில் ஒரு மைல்கல் என்று பலராலும் பாராட்டப்பட்டது.

ஸ்டோனி ப்ரூக்கில் உள்ள ஸ்டேட் யுனிவர்சிட்டி ஓவ் நியூயார்க்கில் ஆபிரிக்க கற்கைநெறித் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி 1994இல் ஓய்வு பெற்றார். அமெரிக்கன் அகெடமி ஓவ் ஆர்ட்ஸ் அன்ட் லெட்டர்ஸ் என்னும் நிறுவனம் அவரை 1995இல் கவர்ந்திழுத்துக்கொண்டது. 2002 ஆம் ஆண்டில், பராகா அவரது படைப்புகளுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக நியூ ஜெர்சி மற்றும் நியுயார்க் பொதுப் பள்ளிகளில்; கவிஞர் பரிசு பெற்றவர் என்று அழைக்கப்பட்டார். கவியுலகின் ஜாம்பவானான அமிரி பராகா, ஜாஸ் கவிஞரென்றும் ப்ளூஸ், ஜாஸ், கவிதை மற்றும் புதிய தலைமுறையின்மீது பெரும் செல்வாக்கு செலுத்துபவர் என்றும் பீட் தலைமுறை போற்றிப் புகழ்கிறது.

மைக்கல் லிம்னியோஸ் ( Michael Limnios)

தேசிகன் ராஜகோபாலன்

தமிழில் : தேசிகன் ராஜகோபாலன் – இலங்கை

தேசிகன் ராஜகோபாலன்

(Visited 106 times, 1 visits today)