ஒரு புலம்பெயரியின் அனுபவக் குறிப்பில் இருந்து- மொழிபெயர்புக் கட்டுரை-தேசிகன் ராஜகோபாலன்

A writer undergoes a transformation while overcoming a series of obstacles as she works to reunite her mother with her mother’s siblings in the Philippines.

2016ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிந்தைய நாட்களில் விடுதலை உணர்வுடன் மீட்கப்பட்ட ஒரு கப்பலில் எனக்கு நானே அறிமுகமில்லாதவளாக உணர்ந்தேன். மற்றவர்களைப் போலவே நானும் என்ன செய்வதென்று அறியாமல் பின்விளைவுகள் பற்றி எதுவும் அறியாமல் எதுவித தயாரிப்புமின்றி ஏனோதானோ என்று இருந்தேன். அந்த புதன்கிழழை ட்ரம்பின் வெற்றியைத் தொடர்ந்து இரவு பகல் கண்விழித்து பல நாட்களாக பார்த்திருந்த பல்வேறு பெறுபேறுகள் வெளிவந்த நிலையில் நான் உறுதியளித்தபடி ஒரு வாரகாலத்திற்கு வெர்மோன்ட் கலைக்கூடத்தில் தங்கியிருக்க வேண்டும் என்பதற்காக எனது பயணப் பொதியைத் தயார் செய்துகொண்டிருந்தேன்.

எனது சொந்த ஊரான அம்ஹெர்ஸ்ட்டிலிருந்து வடக்குப் புறமாக டேசில் உள்ள மாஸாகுசெட்டை நோக்கி  மூன்றுமணி நேரம் வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருக்கையில் தேசியப் பூங்காவின் வானொலியில் காதுகொடுத்துக் கேட்கையில், முதலாவதாக, புரோட்டஸ்தாந்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் தவறான செயல்களுக்கு மத்தியிலும் ட்ரம்ப் எவ்வாறு ஜனாதிபதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டார் என்று தான் செய்தவைகளுக்காகத் தான் மகிழ்ச்சியடையாதவர்போல் பேசினார்.

அவரைத் தொடர்ந்து உரையாற்றிய குலோரியா ஸ்டெயினம் (Gloria Steinem) வெள்ளைக்காரர்களுக்குக் கிடைக்கவுள்ள சலுகைகள் குறித்து பேசினார். அவைகள் குறைந்த அளவு நம்பிக்கையையே ஏற்படுத்தியிருந்தாலும் அந்த உரைகள் அனைத்தும் அறிவுபூர்வமாக இருந்தன. பின்னர் அன்றைய இரவு, பெனிங்டன் கல்லூரியில் முதலாம் ஆண்டில் கல்விகற்கும் எனது மகன் நிக்குடன் நானும் வரிந்து கட்டிக்கொண்டு பேசுவதற்காகச் சென்றேன். ஆனால் திறமைசாலியான அவர் ஒரு மூளைச்சலவை செய்யப்பட்ட சிறுவர். தனது திறமையை மட்டும் பறைசாற்றும் அவரால் வேறு ஆக்கபூர்வமான செயற்றிட்டம் குறித்து எதுவும் பேசமுடியாது என்பதை ஏற்றுக்கொண்டு ஒன்றும் பேசாமல் இருந்துவிட்டேன்.

அவர் தனது சௌகரியத்திற்காக தனது தாயை நோக்கித் திரும்பினார் அது எனக்கு பல்வேறு தெரிவுகளைக் கொண்டிருந்த போதிலும் எத்தகைய உத்தரவாதத்தையும் கொடுக்க முடியாத, நடப்பவைகளை உயிருடன் பார்க்கும் படிச் செய்த பெண்ணான எனது தாயைப் பற்றி சிந்திக்க வைத்தது. தேர்தல் முடிவுகள் பிலிப்பினாவைச் சேர்ந்தவரான அவரை, அதாவது வெள்ளையரல்லாதவர்களுக்கு எதிராக வலுவூட்டப்பட்ட இனவெறியினால் “அழிவடையும் நிலையில் உள்ள குடிமக்கள் குழுமத்தைச் சேர்ந்த” குடிபெயர்ந்த ஒரு பெண்ணாக அவரை உருவாக்கியுள்ளது.

இனவெறியால் மனச்சஞ்சலத்திற்கு உள்ளாக்கப்பட்ட மக்களுள் நானும் ஒருத்தி. பிலிப்பினோ பாரம்பரியத்தனால் அறிவு ரீதியிலும் கலாசார ரீதியிலும் பெரிதும் செல்வாக்குச் செலுத்தப்பட்டவர்களில் நானும் ஒருத்தி. ஆனால் வீதியில் போகின்றவர்கள் என்னை ஒரு இத்தாலியராகவோ, பிரான்சைச் சேர்ந்தவராகவோ அல்லது ஸ்பியெனைச் சேர்ந்தவராகவோ நினைக்கக்கூடும். ஸ்பெயினின் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினின் சுவர்களை அலங்கரித்திற்கும் ஸ்பெயின் மொழி அல்ல. எனது தந்தை அனைத்து வெள்ளையர்களின் ஏனைய விடயங்களையும் உள்ளடக்கிய, பெருமளவில் அயர்லாந்து அமெரிக்கர். இருப்பினும், அது மற்றவர்களாக அடையாளம் காணப்படுவதையும், அதன் விளைவாக தாக்கப்படுவதையும் நான் நன்கு அறிவேன். இது நான் எனது குழந்தைப்பருவத்தில் பெற்றுக்கொண்ட ஒரு தகவல்.

குழப்படைமடைந்திருந்த காலப்பகுதியில் ஆரம்ப நாட்களை நான் அவுஸ்திரேலியாவின் மேற்குப் பிரதேசத்தின் பெர்த்தில் கழித்திருந்தேன். அது 1970களில் ஏற்பட்ட வியட்நாம் போரின் காரணமாக ஏராளமான வியட்நாமிய அகதிகள் எமது நகரில் தங்கியிருந்த காலம். இதற்கான பிரதிபலிப்பானது மோதலாக இருந்தது. நான் சிறுகுழந்தையாக இருந்ததினால், என்னால் வரலாற்றின் பெருமளவிலான நகர்வுகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை. இருப்பினும் வேலிகளால் சூழப்பட்ட ஒரு இடத்தில் பெருமளவிலான அகதிகள் தங்கவைக்கப்பட்டிருந்தமை எனக்கு நன்கு நினைவில் உள்ளது. எப்போதாவது முகாம் பக்கமாக வாகனத்தில் பயணத்தது எனக்கு நன்கு நினைவிருக்கிறது. அது நான் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் இருக்கவில்லை. ஒருசமயம், நானும் எனது தந்தையும் ரக்பி விளையாட்டைப் பார்ப்பதற்காக சென்று கொண்டிருந்தபோது, எமது கார் வாகனநெரிசல் காரணமாக நகரமுடியாமல் நின்றிருந்தது. அப்பொழுது எனது வயதையொத்த சிறுவன் ஒருவனின் கைவிரல்கள் இறுக்கமின்றி கம்பியால் பிணைக்கப்பட்டு அவன் கைது செய்யப்பட்டிருப்பதை என்னால்கண்கூடாகக் காணக்கூடியதாக இருந்தது. அதன் பரிமாற்றம் ஓசையின்றி இருந்தது ஆனால் அர்த்தம் நிறைந்ததாக இருந்தது.

எனது பார்வை “நீ என்ன செய்தாய்?” என்ற எனது கேள்வியை சந்தேகத்திற்கு இடமின்றி அவர் புரிந்திருக்க வேண்டும். அவரது பார்வையானது,

“நீங்கள் ஏதோ ஒரு இடத்திற்குப் போகிறீர்கள் நான் அப்படியல்ல” என்று பதில் கூறியது. அல்லது அந்தச் சிறுவன் ஒரு வியட்நாமியராக இல்லாமல் திமோர்சே (Timorese) முன்னைய கிழக்கு திமோரைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். ஏனெனில் அந்த ஆண்டுகளில் சண்டையிலிருந்து தப்பியோடிய “படகில் வந்தவர்கள்” என்ற பெயரை நாமும் பெற்றிருந்தோம்.

பலர் அவர்களின் அவலநிலைக்கு அனுதாபம் காட்டினர் என்பதில் சந்தேகமில்லை – அவர்களுக்கு புகலிடக் கோரிக்கையாளர் அந்தஸ்த்தும் வழங்கப்பட்டன – ஆனால் மக்கள் அகதிகளைப் பற்றி பேசுவதைக் கேட்க, வாழ்க்கையில் பிடிப்பற்ற இத்தகைய குடும்பங்கள் வெட்டுக்கிளிகளின்; தாக்கத்தினால் ஏற்பட்ட நோயினால் பாதிக்கப்பட்ட பயிரின் நிலை வந்துவிட்டதே (plague of locusts) என்று ஒருவர் நினைக்கக்கூடும்.

ஒரு சமயம் நான் எனது தாயுடன் பேரூந்திற்காகக் காத்திருக்கையில், ஒருவர் எம்மிடம் வந்து, “வீட்டிற்குப் போங்கள்” என்று கூச்சலிட்டார். அவர் எதற்காக அப்படிச் சொல்கிறார் என்று நான் எனது தாயிடம் கேட்டதற்கு நாம் கைகளில் கனமான ஷாப்பிங் பைகளை வைத்திருக்கிறோமல்லவா அது நாம் எங்கு தங்கியிருக்கிறோம் என்பதை அவருக்கு எடுத்துக் காட்டுகிறது என்று கூறினார். எனது தாய் வார்த்தைகளில் தேனைத் தடவாமல், “அவர் வியட்நாமியர்களைச்” சொல்கிறார் என்றார். எனக்கு அவரிடம் ஏன் நாம் அங்கு போகவேண்டும் என்று கேட்கவேண்டும் போல் இருந்தது, ஆனால் அவரது முகத்தில் வெளிப்பட்ட அறுவெறுப்பைப் புரிந்துகொண்டதால், நான் அந்த அறுவெறுக்கத்தக்க விடயத்தைத் தொடர விரும்பவில்லை.

இவை தவிர வேறு சம்பவங்களும் நிகழ்ந்தன. தெருவோரத்தில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் உனது தாய் படகில் வந்தவர்தானே என்று என்னைக் கேலி செய்தனர். எனது தாய் அதியுச்ச மதிப்பைப் பெற்றிருந்ததுடன் ஏராளமான நண்பர்களையும் பெற்றிருந்தார். ஆனால் பல்வேறுபட்ட கடைமுதலாளிகளுடனும் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களுடனுமான அவரது ஊடாட்டம் அவரிடம் வேறு ஏதோ ஒன்று அவரிடம் இருப்பதை உணர்த்தியதுடன் அந்த “வேறொன்று” என்பது அவரது தனித்துவமான தோற்றத்தினால் கவரப்பட்டதாக இல்லாமல், வேறு ஒன்றினால் – அவர் வெளிநாட்டவர் என்பதால் ஏற்பட்டிருந்த கவர்ச்சி அது எனக்குள் ஒரு எச்சரிக்கையை ஏற்படுத்தியிருந்தது.

எனது தாயார் ஒருபோதும் வாகனம் ஓட்டுவதற்குக் கற்க முயற்சிக்கவில்லை. இதன் பயனாக பயணத்திற்கு எமது கால்களையோ அல்லது பேரூந்து நிறுத்தத்தில் காத்திருந்ததால் மற்றவர்களுக்கு எளிதில் இரையாக நேரிட்டது. ஒரு சமயம் என் அம்மா அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட புனல் வடிவிலான கவர்ச்சிமிக்க மலரான பெட்டூனியா கன்றுகளை நடைபாதையின் முகப்பில் நட்டுக்கொண்டிருந்தபோது அவ்வழியாகச் சென்ற ஒரு பொறுக்கி, “இந்தியப் பெண், தோண்டு-தோண்டு-தோண்டு” என்று கூறிய சம்பவத்தை நினைவுகூர்ந்து தான் எப்படியெல்லாம் அவமானப்பட்டேன் என்று சொன்னார். அவர் இதனை வேடிக்கையாகவே எண்ணினார். எமது குடும்பத்தின் கெட்டகாலத்திலும் அம்மாவின் ஓய்வு ஒழிச்சலற்ற உழைப்பின் காரணமாக தன்னைச் சுற்றியுள்ள ஏராளமானவர்கள் மத்தியில், தனது நம்பிக்கையின் மூலமாக மேற்கத்தியர்கள் கலாசார ரீதியிலும், சமூக ரீதியிலும், அழகியல் ரீதியிலும் கிழக்கத்தியவர்களை விடக் குறைவானர்கள் என்ற உணர்வை ஏற்படுத்தியிருந்தார்.

அந்த மூர்க்கத்தனம் என்னிடம் தொற்றிக்கொள்ளவில்லை ஆனாலும் எம்மைச் சுற்றியிருந்த பலரும் நாம் நோய்வாய்ப்பட வேண்டும் என்று விரும்பியதிலும் உண்மையில்லை. எனது குடும்பம் 1980களில் பிலிப்பைன்ஸக்கு நகர்ந்தபொழுது, நிலைமை குறிப்பிடத்தக்க அளவு மாறியிருந்தது. எனது தாயின் குடும்பம்  பெரிய வீடுகளில் ஏராளமான பணியாட்களுடன் வசித்து வந்தனர். இது எனது அன்னையின் நாடு. அவள் அந்தக் கட்டமைப்பிற்குள் தன்னைப் பொருத்திக்கொண்டாள். அவளிடம் கார் இல்லாதபோதும்கூட அவள் ஒருபோதும் நடந்தோ அல்லது பேரூந்து நிலையத்தில் பேரூந்திற்காகக் காத்திருந்ததோ இல்லை. இப்பொழுதும்கூட அவள் கார் ஓட்டுவதில்லை ஆனால் அந்தப் பணியை வேறொருவர் செய்தார். அவள் பலவீனமாவள்ளான  போதிலும், எதிர்பாராத திருப்பத்தின் காரணமாக ஏற்பட்ட நிகழ்வுகளினால், அது அவளது மகள்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. மிருதுவான தோல், உயரம் மற்றும் அழகு ஆகியவை காரணமாக நான் பலரது வாயிலும் விழுந்து புறப்படுவேன் என்பது எனக்கே தெரிந்திருந்தது.

ஆண்கள் என்னை பேங்கஸ் (bangus) என்று அழைப்பர், அது பால்மீன்( milk fish) என்றே மொழிபெயர்க்கப்பட்டது. அந்த வாசகம் புகழ்வதுபோல் தோன்றினாலும் உண்மையில் அது பெருமைபட்டுக்கொள்ளக்கூடிய குணத்தைக் கொண்டதல்ல. என்னை எனது அப்பாவித்தனத்தினாலும் ஏழ்மைத்தனத்தினாலும் காப்பாற்றிய ஏனைய நையாண்டித்தனமான சொற்பிரயோகங்களும் இருந்தன. அவைகளின் பொருளையும் எனது உடலில் வலிமையின்மையையும் என்னால் உணரக்கூடியதாக இருந்தது மேலும் அத்தகைய தருணங்களில் உடல்ரீதியாக எனக்கு ஆபத்து நேராதபோதிலும் இயற்கையாகவும் செயற்கையாகவும் எனது உடலில் தீவிர அதிர்வுகளை ஏற்படுத்தியதை நான் உணர்ந்தேன்.

பிலிப்பைன்சின் காலனித்துவ வரலாறானது இத்தகைய மீள்வருகையாளர்களிடம் மன உறுதியுடன் பொறுமை காக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. ஆனால் வெளிப்படும் கருத்துக்கள் இனவாதத்தைக் கக்குவதாகவும், அருவருப்பாகவும், அடிப்படைவாதமாகவும் இருக்கின்றன. நான் பிலிப்பைன்சையும், எனது குடும்பத்தையும், கலாசாரத்தையும் போக்குவரத்து மிகையின் காரணமாக அச்சுறுத்தும் மாசு நிறைந்த மணிலாவாக இருந்தாலும் அவைகளை நேசிக்கின்ற போதிலும், நான் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்தபோது எனக்கு ஆறுதலளித்தது.

அமெரிக்க வீதியில் நடந்து செல்கின்ற வேளையில், நான் அதியுச்ச பாதுகாப்புடன் இருப்பதாக உணரச் செய்தது. 2000ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில், எனது குடும்பத்தினரின் மற்றொரு கவர்ந்திழுக்கின்ற நகர்வுகளின்போது, எனது பெற்றோர்கள் தெற்கு சுதந்திர துறைமுகமான மேயினில் வசிப்பதற்காக வந்திருந்தனர். எனது தாயால் அந்த இடத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, ஆயினும் பலவழிகளிலும் தனித்துவம் மிக்கவராக இருந்த அவரது திறமை வயதினால் மேலும் அதிகரித்தது அவரது அதீத புத்திசாலித்தனம் வார்த்தைகளால் விபரிக்க முடியாத அளவிற்கு சிறந்த சுட்டியாக இருந்தது.

எதிலும் பங்கெடுத்துக்கொள்ள அவளுக்கு விருப்பமில்லாமலிருந்தது. தனது வீட்டின் வரவு-செலவுக் கணக்களைப் பார்த்துக்கொண்டு அவ்வப்போது பல்பொருள் அங்காடிகளுக்கும் தேவாலயத்திற்கும் சென்றுவருதில் பொழுதைக் கழித்தாள். எனது சகோதரி மற்றும் அவளது புதல்வனுடன் இணைந்து ஒரு வீட்டு உபயோகப்பொருள் கடையையும் நடத்திவந்தாள். அவள் ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்தாள். பின்னர் எலும்புருக்கி நோயினால் பீடிக்கப்பட்டு படுக்கையில் வீழ்ந்ததுடன் அவரால் முன்னரைப்போல் சுறுசுறுப்பாக இயங்க முடியாமல் போனது.

நோய் தீவிரமடைந்ததன் காரணமாக பிலிப்பைன்சுக்கான பயணம் முடிவடையும் நிலையில் இருந்தது. நான் அவர் தனது வாழ்நாளின் இறுதிப்பகுதியில் தனது உடன் பிறப்புக்களுடன் மீண்டும் இணையட்டுமே என்று அந்தத் திட்டத்தை அமுல்படுத்தத் தொடங்கினேன். எனது தாயாரின் காலாவதியான ஆவணத்தைப் பார்த்தேன். அதில் எனது தாயின் நிழற்படத்தில் மூன்று துளைகள் இடப்பட்டிருந்தன. அது 7/2002 உடன் காலாவதியாகிவிட்டதை உணர்த்தியது. நாம் எப்படி அடுத்தநாள் மாலை 5மணிக்குள் அவளது கிரீன்கார்ட் கடவுச்சீட்டைப் புதிப்பிக்கோகிறோம் என்று ஆச்சரியமாக இருந்தது. ஒரு பிலிப்பானியராக இருப்பதில் திருப்தியடையும் எனது தாய், தனது குடியுரிமையை ஒரு அமெரிக்கரின் மனைவியாக, அமெரிக்காவில் குழந்தைகளைப் பெற்றவராக, அமெரிக்க வாழ்க்கையை ஏற்றுக்கொள்பவராக இருந்தபோதிலும் மாற்றிக்கொள்ளவில்லை.

அவள் இப்பொழுதும் தனது பிலிப்பைன்ஸ் கடவுச்சீட்டை வைத்திருந்தார். நான் அவளுக்கான விமான பயணச்சீட்டை முன்பதிவு செய்துவிட்டு உறவினர்களுக்கும் தெரிவித்துவிட்டேன். எல்லா ஏற்பாடுகளும் முடிந்துவிட்டது என்று நான் நினைத்துக்கொண்டிருக்கையில், அவளது கடவுச்சீட்டு கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கு முன்னரே காலாவதியாகிவிட்டதைக் கண்டுபிடித்தேன். விரைவில் நியூயர்க்கில் உள்ள பிலிப்பைன்ஸ் தூதரகத்துடன் சந்திப்பிற்கான ஏற்பாட்டைச் மேற்கொள்வதொன்றே இதற்குப் பரிகாரம் என்ற வருத்தமான உண்மையை சில ஆய்வுகள் தெரிவித்தன. எனது அம்மா நேரில் பிரசன்னமாவதற்கு – நகரும் நிலையில் இல்லை. அது அவ்வளவு எளிதானல்ல ஏனெனில், எனது அன்னையின் பொதுவான நடுக்கம் மற்றும் பலவீனம் என்பதற்கும் மேலாக, புறந்தள்ளி விடமுடியாத அளவிற்கு நினைவாற்றல் குன்றியவராகவும் இருந்தார். ஆனாலும் நான் உறுதியாக இருந்தேன். எனவே எனது சகோதரி அனைத்து படிவங்களையும் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை ஒழுங்குபடுத்தினாள். எனது தந்தை வாகனத்தை முதலாவதாக தெற்குப்புறமாக உள்ள அம்ஹெர்ஸ்ட்க்குச் (Amherst) செலுத்தினார்.

அடுத்தநாள் மாலை நியூயார்க்கை அடைந்து அன்றைய இரவுப்பொழுதை ஒரு விடுதியில் கழித்துவிட்டு, அடுத்தநாள் காலையில் முதல் வேளையாக தூதரகத்தை அடைந்து வேலைகளை முடித்துவிட்டு மதியம் மாஸாசூசெட்ஸ்க்குத் (Massachusetts) திரும்புவதே எனது திட்டம். அந்தப் பயணத்தில், எனது தாயார் நல்ல உற்சாகத்துடன் இருந்தார். குறிப்பிட்ட இடைவெளியில், நாம் எங்கே போகிறோம் எதற்காகப் போகிறோம் என்று என்னிடம் வினவியபடி இருந்தார். ஏற்கனவே நியூயார்க் செல்வதற்கான விடயத்தை அவருக்குத் தெரிவிட்டோம் மீண்டும் அவருக்குத் தெரிவித்தேன். வானொலியில் ஒரு பாடல் ஒலித்தது “அம்மா, கேளுங்கள் இது புருனோ மார்ஸின் குரல் தானே? அவர் ஒரு பிலிப்பைன்ஸ்காரர்” என்றேன். அதற்கு அவள், “அவர்களுக்கு அவரை விருப்பமா?” என்று கேட்டாள். “அவர் மிகவும் பிரபலமானவர்.” என்று அங்கலாய்த்தார். மேலும் அவள், “மார்ஸ் என்பது பிலிப்பைன்ஸ் காரர்கள் வைக்கும் பெயரல்லவே” என்றார். நான், “அப்ப புருனோ?” என்றேன். அவள் “ஆம்” என்று பதிலளித்தாள். நியூயார்க்கென்றால் அங்கு கோழிவருவல் (fried chicken) கிடைக்குமே என்று கேட்டாள்.

நான் ஏதோ ஒரு உந்துதலில் அந்த இரவு பத்துமணியளவில் அவளது கடவுச் சீட்டைப் போலவே அவளது கிரீன் கார்டும் காலாவதியாகிவிட்டதைக் கண்டுபிடிக்காமல் விட்டிருந்தால், அனைவரும் எப்பொழுதும் போல இயல்பாக இருந்திருப்பார்கள். நான் புதிய கிரீன்கார்ட் எங்காவது ஒளிந்திருக்கும் என்ற நம்பிக்கையில் திரும்பத் திரும்ப அந்த கோப்பை பலமுறை மீளளித்தேன். ஆனால் அதிர்ஸ்ட்டம் எமக்கக் கைகொடுக்கவில்லை. எனது சகோதரியுடன் தொடர்பு கொண்டபோது அந்த ஒரு கிரீன்கார்ட் மட்டுமே அவர்களிடம் உள்ளதென்றும், இருப்பினும் சமீபத்தில் வழங்கப்பட்ட ஒன்று எனது தாயாரின் அறையில் குவிந்துகிடக்கும் காகிதக் குவியலில் ஒளிந்திருக்கக்கூடும். இருப்பினும் அதனைக் கண்டுபிடிக்கும் நிலையில் அவள் இல்லை.

இந்த விடயத்தில் வார்த்தைகளில் விபரிக்க முடியாத அளவுக்கு பாண்டித்தியம் பெற்ற ஆங்கிலேயரான பைசண்டைன் என்பவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவரது பதிலும் உற்சாகமளிப்பதாக இல்லை. ஆனாலும் அடுத்தநாள் காலையில், முஃபினை உண்டு பழரசத்தைக் குடித்துவிட்டு, எனது அம்மாவிற்கு ஆடைமாற்றி, அதிக குளிராக இருந்தமையால் எனது நீண்ட கம்பளி ஆடையில் கிடத்தி ஒரு வாடகைக்காரை அமர்த்திக்கொண்டு லோயர் மன்ஹாட்டனில் அமைந்துள்ள குடியகல்வு மையத்தை அடைந்தோம். நாங்கள் அந்த இடத்தை அடைந்த போது பத்துமணியாகியிருந்தது வரிசை அந்த கட்டடத்தின் எல்லையை எட்டியிருந்தது. குடியுரிமை பெற்றிராத ஒருவருக்கு அது எவ்வளவு கடுமையானதாக இருக்கப்போகிறது என்பதை நான் புரிந்துகொள்ள ஆரம்பித்தேன். இருப்பினும் அந்த நீண்ட வரிசையின் சூழலில் – ரஷ்யர்களும், நைஜீரியர்களும் சீனர்களும் மேலும் சால்வடோர் நாட்டவர்களும் இடம்பெற்றிருந்தமை வினோதமான திருவிழாவாக இருந்தது.

ஏனையவர்கள் காத்திருந்த இடத்தில் நானும் காத்திருந்தேன் ஒருவரும் முறைப்பாடு செய்யவில்லை. ஐஎன்எஸ்சில் எனது அனுபவமானது வித்தியாசமாக இருந்தபோதிலும் அதுவே உண்மை – அன்பு நிறைந்ததாகவும் இருந்தது. முதலாவதாக வியட்னாமிய அமெரிக்க இளைஞரான அவர் மிகவிரைவாக சந்திப்பதற்கான ஏற்பாட்டைச் செய்துகொடுத்தார் (வழக்கமாக இதற்கு ஆறு வாரங்கள் எடுக்கும்) அதன் பின்னர் தென்கரோலினியாவைச் சேர்ந்த ஆபிரிக்க அமெரிக்க அதிகாரி ஒருவர் தற்காலிக கீரீன் கார்ட் ஒன்றை எமக்காகத் தயார் செய்து கொடுத்தார். அதனைப் பெற்றுக்கொண்டு எனது தாயின் வேண்டுகோளை நிறைவேற்றுமுகமாக, “எங்கே கோழிவருவல் கிடைக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டேன். அதற்கு அவர் பெரிய சிரிப்பு சிரித்துவிட்டு சேஃவ்வே சாலையில் உள்ள ஃபுட்கோர்டில் கிடைக்கும் என்று ஆலோசனை வழங்கினார்.

என்னிடம் அரும்பிய சிறிய நம்பிக்கையையும், அது தவழ்ந்து செல்வதையும் என்னால் உணரக்கூடியதாக இருந்தது. அது இந்த நாடு மோதலினால் கட்டியெழுப்பப்பட்டாலும் அனைவரும் சமம் என்னும் சுதந்திரப் பிரகடனமானது வெறும் அலங்காரச் சொல் அல்ல என்பதும் அது இந்த நாட்டின் ஆன்மா என்பதையும் எனக்கு உணர்த்தியது.

இந்தக் கதையை நான் சொல்வதற்கான காரணம், உள்ளே நுழைந்தபோது எனக்கு இருந்த மனோநிலையிலிருந்து விடுபட்டு முற்றிலும் மாறுபட்ட மனிதனைக் கட்டியெழுப்பும் மனோநிலைக்கு மாற்றம் பெற்றிருப்பதைக் கண்டு அதிசயித்தேன். உங்களுக்கும் எனக்கும் அளிக்கப்பட்டுள்ள அனுகூல வதிவிடங்கள் ஒரு மத்தியதர வகுப்பு வாழ்க்கையை வாழ்வதற்கு போதுமானதாகவும், தேவையானவற்றைக் கற்பதற்கும் நூல்களை எழுதுவதற்கும், ஐக்கிய அமெரிக்க ராச்சியத்தில் எனக்கான இடத்தை உறுதி செய்வது எனது பிறப்புரிமையாகும் அது எனக்கு தங்குமிடத்தை வழங்கியிருக்கிறது. அமெரிக்காவில் வாழ்வதே தமது வாழ்க்கையை வெற்றிகரமாகத் திகழச் செய்யும் என்ற அவர்களது முடிவிற்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் குறைந்தபட்சம் அத்தகைய சலுகைகளில் மூன்றாவதைக் கூட பெற்றுக்கொள்ள முடியாத மக்களுடன் நான் குறைந்த அளவு நேரத்தையே செலவிட்டுள்ளேன்.

அதன் எல்லையற்ற முகத்தோற்றத்தில் வளைந்து செல்லும் கோடானது எனது தாய் மற்றும் என்னைப் போன்றே ஒவ்வொருவருக்கும் வெற்றிகரமாக அமையும் என்று நான் நம்பினேன். இளைஞர்கள் பணிபுரிகின்ற இடத்தில் கவலை தோய்ந்த ஒரு பெண்ணின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக, தனது தாய் இறுதியாக தனது சகோதரர்களைக் காண்பதற்கான வாய்ப்பிற்காக அழைத்து வந்த வேளையில், அங்கிருந்த ஒரு மனிதன் தற்காலிகமாக வேனும் தனது இனவெறியை புறந்தள்ளி பிலிப்பைன்ஸைச் சேர்ந்த ஒரு வயதான பெண்ணின் மகிழ்விற்காக செயற்படுகின்ற தன்மையை நோக்கும்பொழுது அவர்கள் இந்த மகத்தான நாட்டில் அனைவரையும் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் வாழவைப்பார்கள் என்ற நம்பிக்கையை எனக்கு ஏற்படுத்தியது.

தேர்தலுக்குப் பின்னான நாட்களில், நான் கவலையற்றிருந்தேன். நான் எப்படி நிலைமையைச் சமாளிப்பது என்று தெரியாமல் இருந்தேன். ஆனால் அதேவேளை தட்டிக்கழிக்க முடியாத பொறுப்பிருப்பதையும் உணர்ந்தேன். கடந்த எட்டு ஆண்டுகளை நான் நம்பிக்கை என்ற போதையுடன் கழித்ததைப் போன்று உணர்ந்தேன். அந்த நம்பிக்கையானது அனைத்து உண்மையான வளைவுகளைப் போன்றே என்னையும் ஒரு குற்றவுணர்வுடன் தவிக்கவிட்டிருந்தது – அன்று காலை விழித்தெழும்போது நான் ஏதோ பிழைசெய்து கொண்டிருக்கின்றேனோ என்ற சந்தேக மேலீட்டின் காரணமாக அச்சமடைந்திருப்பதை உணர்ந்தேன்.

எனது பதற்றம் அவசியமற்றது என்பதையும் இதிலிருந்து நான் விரைவில் விடுபடவேண்டும் என்பதையும் நானறிவேன். நான் செய்ததைப் போன்றே பெரும்பாலான குடிமக்கள்  உணர்ந்த போதிலும் நான் எனது நம்பிக்கைகளை இனி ஒருபோதும் பிரதிநிதித்துவப்படாத ஒரு நாட்டில் வாழ்ந்துகொண்டிருந்தேன். விரைவில் நாங்கள் போராடுவதற்காக மீண்டும் போகப்போகிறோம், மீண்டும் சரிசெய்யப் போகிறோம், புதிதாகச் சிந்திக்கப்போகிறோம். நான் எனக்குள் “நாளை,அடுத்தநாள் மீண்டும் “நாளை” என்று சொல்லிக்கொண்டேன், ஆனால் என்னைச் சுற்றி இருந்தவர்கள் தமது குரலை ஒலிக்கத் தொடங்கிவிட்டனர். இந்த ஏற்றத்தாழ்வான உலகில், அந்த சிறிய, அழகான, அச்சுறுத்தும் முனகல் – தனக்கென ஒரு இடத்தைக் கண்டுகொண்டது.

000000000000000000

ஆசிரியர் குறிப்பு:

Maia-Cruz-Palileo

 

 

 

 

 

 

 

 

மேயிய குரூஸ் பாலிலீயோ (Maia Cruz Palileo) என்பவர் ப்ரூக்ளினைச் சேர்ந்த கலைஞர். அவளது குடும்பத்தின் வாய்மூல கதைகள் அவள்மீது செல்வாக்கு செலுத்தின. மேயிய ஜெரோம் ஃபவுன்டேஷனின் பயணம் மற்றும் கல்வி நிகழ்ச்சித் திட்டத்தின் உதவியையும், றெமா ஹோர்ட் பவுன்டேஷனின் வளர்ந்துவரும் கலைஞருக்கான உதவித் தொகையையும், NYFA யின் பெயின்டிங்கிற்கான உதவித்தொகையையும் ஜோன் மிட்செல் ஃபவுன்டேஷனின் ஆகுயு விருதையும் மற்றும்  ஆஸ்ட்ரேயா (Astraea) விஷவல் ஆர்ட்ஸ் நிதியத்தின் ஓவியக் கலைஞருக்கான விருதையும் பெற்றவர்.

000000000000000000

சபினா முர்றே (Sabina Murray) :

Sabina-Murray

 

 

 

 

 

 

அவரது சமீபத்திய புதினமான Valiant Gentlemen உட்பட ஆறு புதினங்களையும் மற்றும்  The Caprices சிறுகதைத் தொகுதியையும் எழுதியவர், அது 2002ஆம் ஆண்டிற்கான  PEN/Faulkner Award விருதினை வென்றது. இந்த அம்மையாருக்கு fellowships from the NEA, Guggenheim Foundation, and Radcliffe Institute உடனும் இணைந்து பணியாற்றுவதற்கும் வாய்ப்புகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. இவர் Mass Amherst-இல் எழுத்துக்கலையை போதித்து வருகிறார்.

00000000000000000000000000000000000000000000

தமிழில் : தேசிகன் ராஜகோபாலன்-இலங்கை

தேசிகன் ராஜகோபால்

(Visited 97 times, 1 visits today)