மொழிபெயர்ப்பு நேர்காணல்-கீதா ஹரிகரன்-தேசிகன் ராஜகோபாலன்

‘பேச்சு சுதந்திரம் என்பது எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களுடன் மட்டும் அக்கறை செலுத்துகின்ற விடயமல்ல’ கீதா ஹரிகரன்

ஒரு எழுத்தாளராகவும் கட்டுரையாளராகவும் திகழும் அதே நேரம் ஒரு ஆசிரியராகவும் செயற்பாட்டாளராகவும் விளங்குகிறீர்கள். (நீங்கள் இந்த சொல்லாடலை பாவிப்பதில்லை) இது ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்ததாகவும் ஒன்றில் ஒன்று தங்கி இருப்பதாகவும் உள்ளதால் இங்கிருந்தே ஒரு பொதுவான கேள்வியினூடாக நமது உரையாடலைத் தொடங்கலாம் என்று நினைத்தேன். பேச்சுச் சுதந்திரத்துடன் தொடர்புபட்ட விடயங்களின்மீது நீங்கள் கரிசனை கொண்டு உங்களது அரசியல் ஈடுபாட்டை ஆரம்பித்த தினத்தை நினைவு கூருங்களேன்.

எழுத்தாளரோ அல்லது வாசகரோ அல்லது சமூகரீதியிலும் அரசியல்ரீதியிலும் ஈடுபட்டுள்ளவர்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் இழையை இங்கிருந்துதான் தொடங்கினோம் என்றோ அல்லது இங்கு நிறைவு செய்தோம் என்றோ தனித்து அடையாளப்படுத்துவது கடினம். இத்தகைய குணாதிசயங்களைக் கொண்ட ஒவ்வொருவரின் கரிசனைகளும் தகவலை மற்றவர்களுக்கு கசிய விடுகின்றன, அதன் வழிகளில் நான் சுயஉணர்வுடன் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. “என்னுடைய அரசியல் ஈடுபாடானது”, யுவதிப் பருவத்தின் ஆரம்ப காலத்தில் எல்லா பெண்களுக்கும் இருக்கும் ஒரு பொதுவான கேள்வியான ஆண்களும் பெண்களும் சமமில்லையா என்பதுடன் நெருக்கமானதாகவே தொடங்கியது. நான் உலகைப் பற்றி குறிப்பாக நான் வாழ்கின்ற நாட்டைப் பற்றி, அதிகம் அறிந்துகொண்டதனால் ஒரு தொகுதியினரின் சமத்துவம் என்பது ஏனைய தொகுதிகளுடனும் தொடர்புடையது என்பதைப் புரிந்துகொண்டேன். ஆகவே பெண்கள் இயக்கமானது இயல்பாகவே (அல்லது கட்டாயமாக) சாதி இயக்கங்களுடனும் அல்லது மதவாத எதிர்ப்பு இயக்கங்களுடனும் கட்டியெழுப்பப்படுகிறது. பேச்சுச் சுதந்திரத்தைப் பொறுத்தவரை: காற்று மற்றும் நீரைப் போன்று அது அவற்றின் அடிப்படையிலான ஒன்று, உங்களது சிந்தனையின் ஒருபகுதி. அது உங்களிடமிருந்தோ அல்லது உங்களைச் சூழ உள்ள மக்களிடமிருந்தோ பறித்தெடுக்கப்படும்போது மட்டுமே, நீங்கள் அது குறித்து கேள்விகளை எழுப்பத் தொடங்குகிறீர்கள். உங்களுக்குக் குறைந்தபட்சம் பேச்சுச் சுதந்திரம் இல்லாவிட்டாலோ, நீங்கள் அதனை நோக்கி தொடர்ந்தும் கவனம் செலுத்தவில்லை என்றால் நீங்கள் எத்தகைய மனிதராகவும், எதையும் செய்யக்கூடியவராகவும் இருப்பீர்கள்.

ஆனால் “பேச்சு சுதந்திரம்” என்ற சொற்றொடரானது “சுதந்திரம்” என்பதுடனும் சிறிதளவு தொடர்புபடுகிறது என்பதைச் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். எம்மால் இந்த உரிமை குறித்து விளக்கமளிக்க முடியும்; நாம் விளக்க வேண்டும். ஏனெனில், அதுவே நாம் என்ன நினைக்கிறோம் என்பதைப் பேசுவதற்கும் நமக்குள்ளும் ஏனையவர்களுடனுமான விவாதத்திலும் கலந்துரையாடல்களிலும் ஈடுபடுவதற்குமான தேவையையும் கட்டியெழுப்புகிறது. இது தத்துவார்த்த அடிப்படையில் அவசியமானது. நாம் மீண்டும் மீண்டும் இந்த திறமையைக் கட்டியெழுப்பாமல் விடுவதால் மனிதர்களின் சிந்தனையானது எப்பொழுதும் ஏனையோரால் அது குறித்த பேச்சையோ, எழுத்தையோ, ஓவியத்தையோ அல்லது பாடலையோ அல்லது வெறுமனே ஒரு குறிப்பிட்ட வழிமுறையில் வாழ்வதற்கான தெரிவையே ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்ற சிந்தனைகளை தோற்றுவிக்கிறது. கட்டமைக்கப்பட்ட மற்றும் பல குரல்களைக் கொண்ட ஒரு குறிப்பிட்ட அரசியல் மற்றும் சட்டக் கட்டமைப்புடனான அதிகாரக் கட்டமைப்புத் தொகுப்பில் இத்தகைய பிம்பங்கள் யதார்த்த வாழ்க்கையில் எத்தகைய பங்கை வகிக்கின்றன என்பது மற்றொரு குணாதிசயமாகும். “பேச்சு சுதந்திரம்” என்பது எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களுடன் மட்டும் அக்கறை செலுத்துகின்ற விடயமல்ல என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.

இந்தியா டுடே பத்திரிகையின் எழுத்தாளராகத் திகழும் நீங்கள் அது இருந்தாலும்- ஒரு குறியீடாக இருப்பதாகவே நீங்கள் திரும்பத் திரும்ப கூறிவருகிறீர்கள். நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள் என்பதை விளக்க முடியுமா? மேலும் நீங்களும் ஏனைய இந்தியவில் இன்று வசிக்கின்ற ஏனைய எழுத்தாளர்களும் கலாசாரம், கல்வி மற்றும் அரசியல் சூழ்நிலையை எப்படி பார்க்கிறீர்கள் என்பதைக் கூறமுடியுமா?

இருட்டடிப்பு என்பது அதிகரித்த அளவில் குறியீடாக இருந்தன என்று சொல்ல விரும்புகிறேன். யதார்த்தத்தில், குறியீடு என்பது அதிர்ச்சியளிக்கத்தக்க விதத்தில் உண்மை- அல்லது பொதிந்திருக்கும் உண்மை- எம்முன் உள்ள விடயம் ஒரு மதில்சுவர் போல் உள்ளது. மேலும் உலகின் அதிகளவிலான இடங்களில் இருப்பதுபோல் இல்லை என்பது உண்மை. இந்த குறியீடு இந்தியாவில் எப்படி பார்க்கப்பகிறது? என்னால் கலாசாரத்தையும் அரசியலையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை. இந்தியாவின் நிறுவனக் கட்டமைப்பானது கலாசாரம் மென்மையான, “பெண்ணியம்” என்ற ஒன்று அதிசயிக்கத்தக்க வகையில் பலரும் பார்த்து வியக்கும் வகையில் விதவிதமான ஆபரணங்களுடனும் வண்ண ஆடைகளுடனும் திருவிழாக்களுக்குச் செல்வதைப் போன்று அந்நியர்களை மகிழ்விப்பது என்பதாக அவர்களால் கட்டுப்பத்தக்கூடிய வகையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கலாசாரம் என்பது வெறுமனே அனுசரணை வழங்கப்பட்ட காட்சிபடுத்தும் கலாசார பழக்கவழக்கமில்லை என்பதையும் அது “உயர்ந்த கலாசாரம்” இல்லை என்பதையும் ஆனால் ஒரு முன்னோக்கிச் செல்கின்ற விதத்திலான பரிமாற்றம் என்பதையும், திட்டமிட்ட வாழ்க்கைமுறையுடன் பின்னிப்பிணைந்தது என்பதையும் நாம் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. அத்தகைய பார்வையானது எமக்கு பல மொழிகளை இணைத்துக்கொள்வதற்கும், பல்வேறு இடங்களில் வசிப்பதற்கும், மதத்தை தேர்ந்தெடுப்பதற்கு அல்லது மதச்சார்பற்றவராக இருப்பதற்கும் இடமளிக்கிறது. நாம் எதை உண்ண வேண்டும், எப்படி உடை அணிய வேண்டும், வரலாற்று முக்கியத்துவமானவர்களைப் புகழ்வதற்கோ அல்லது விமர்சிப்பதற்கோ- போன்ற அனைத்துமே நாம் வசிக்கின்ற இடத்தின் கலாசாரமாகவோ அல்லது உபகலாசாரமாகவோ அல்லது அதன் ஒருபகுதியளவினதாகவோ இருக்கிறது. புரிந்துகொள்ளக்கூடிய விடயங்களை நான் மீண்டும் மீண்டும் சொல்வதாகத் தோன்றலாம். இருப்பினும் இதனை நாம் செய்தாகவேண்டியுள்ளது. ஏனெனில், ஒரு பன்மைத்துவ நாட்டின் நிலைமைகளில் பேச்சு சுதந்திரத்திற்கான சாத்தியகூறுகளின் மீதான கேள்விகளை முன்னெடுத்துச் செல்லாமல் நாம் இன்று இந்தியாவில் பேச்சு சுதந்திரம் குறித்து விவாதிக்க முடியாது. இதன் காரணமாகவே புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள் போன்ற பிரிவகுளில் பேச்சு சுதந்திரம் என்பது வரையறுக்கப்பட்டுள்ளது. உண்மையில் இது இன்னும் அதிகம்.

தற்போதைய நிலையில் இந்தியாவின் கலாசார சூழமைவானது: ஒரு சோகமான செய்தி. அதன் பட்டியல் மிகவும் நீளமானது, தெரிவை நாம் அழித்து விட்டோம், அதனாலேயே என்னால் ஒருசில விடயங்களை மட்டும் கோடிட்டுக் காட்ட முடிகிறது. வன்முறை என்பது முதன்மையானதும் அதிகளவிலான உண்மையானதுமான “கலாசாரம்” ஆக மாறிவருகிறது. உரையாடுவதற்கென்று ஒரு மொழி இருக்கிறது – தாக்குதல் அச்சுறுத்தல் அல்லது கூட்டு பாலியல் வன்புணர்வு அல்லது உங்களுடன் முரண்படுபவர்களை கொல்லுதல். ஒருவர் மாட்டிறைச்சியை உண்டுவிட்டார் அல்லது யாரோ ஒருவர் பசுமாட்டைக் கடத்துகின்றார் என்று நீங்கள் சந்தேகப்படும் ஒருவரைக் கொலை செய்தல். (மிகச் சமீபத்தில் ஜூனைத் என்ற சிறுவன் தொடருந்தில் பயணித்துக்கொண்டிருகையில் கொல்லப்பட்டான். மேற்சொன்ன எந்த காரணத்துடனும் அவனுக்கு தொடர்பு இல்லை.) அது தலித்துக்கு எதிரான வன்முறை. ஏனெனில் அவர்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் பாரபட்சத்திற்கு எதிராகக் குரல்கொடுத்துவருகின்றனர். மேலும் அவர்கள் மனித கழிவகற்றல் போன்ற மனிதகுலத்தை அவமதிக்கும் செயல்களைச் செய்வதற்கு கட்டாயப்படுத்தப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்துச் செல்கின்றது – அது ஒரு தொடர்கதையாகத் தொடர்கின்றது, ஒரு குறிப்பிட்ட சாதியையும் சமூகத்தையும் குறிவைத்து நடத்தப்படுகின்றது- ஆனால் தற்போது ஒப்பீட்டளவில் வரப்பிரசாதம் வழங்கப்பட்ட இணையமும் இவற்றை பரப்புகின்றன. மேலும், ஒட்டுமொத்த பிராந்தியங்கள், மக்கள், உச்சபச்ச இராணுவமயப்படுத்தப்பட்ட இடங்களான காஷ்மீர், வடகிழக்கு மற்றும் சட்டீஸ்கர் போன்ற இடங்களிலும் வன்முறை தலைவிரித்தாடுகிறது. மேலும் இத்தகைய வன்முறையானது ஆயுதந்தாங்கிய படையினர் சட்ட-ஒழுங்கை கடைப்பிடித்து அமைதியை ஏற்படுத்தும் செயற்பாடுகளாக தோற்றம் பெறுகின்றன.

உண்மையில் கலாச்சார ஆளுகைப் பிரதேசமாகப் பார்க்கப்படாதவற்றை நான் பட்டியலிடுகிறேன். ஏனெனில் அவை அவ்வாறே உள்ளன. இதுவே ஒரு எழுத்தாளருக்குப் பயந்து, ஒரு புத்தகத்தையோ, ஒரு திரைப்படத்தையோ ஒரு ஓவியத்தையோ உருவாக்குவதற்கான சித்தாந்தத்தைக் கடைப்பிடிப்பதற்கான சூழலை வழங்குகிறது. அது வெறுமனே “சகிப்புத்தன்மையின்மையினால்” உருவானதல்ல, அது ஒரு வகையான சிவில் யுத்தமாகும். வலதுசாரிகளைப் பொறுத்தவரை “கலாசார” அமைப்பு என்பது ராஷ்டிரிய சுயம் சேவக் சங் (ஆர்எஸ்எஸ்) மற்றும் அதன் பல்வேறுபட்ட வேர், பன்மைத்துவம் என்பவையே பிரச்சினையாகும். நீங்கள் இந்தியாவைப் போன்ற ஒரு இடத்தை சீர்படுத்த விரும்பினால், கலாச்சார பரப்பிலன்றி வேறு எங்கிருந்து உங்களது சிவில் யுத்தத்தை ஆரம்பிக்க முடியும்? ஆகவே இயல்பு வாழ்க்கையில் அரசாங்க உறுப்புகளையும், அரை தன்னாட்சி அமைப்புகளையும், இராணுவம் மற்றும் காவல்துறையையும், ஊடகத்தையும் மேலும் பல்வேறு “இராணுவத்தினரையும்” ரௌடிகளையும் பிரித்தெடுங்கள். உதாரணத்திற்கு நாம் எழுத்துத்துறை என்னும் ஒரு உறுப்பைத் தெரிவு செய்வோம். எழுத்தாளர்கள் அவர்களது கருத்துக்களுக்காகக் கொல்லப்படுகின்றனர் (நரேந்திர தாபோல்கர் மற்றும் கோவிந்த் பனாசரே) ஆகியோர் தாம் எழுப்பிய கேள்விகளுக்காகக் (எம்.எம். குல்பர்கி) கொல்லப்பட்டனர். எழுத்தாளர்கள் அவர்களது கற்பனைத்திறனுக்காகவும் (பெருமாள் முருகன்), அவர்களது மொழிநடைக்காகவும் (உருது எழுத்தாளர்கள்) அல்லது அரசின் மீதான அவர்களது விமர்சனத்திற்காகவும் (அருந்ததிராய்) வலதுசாரி தகரிகளினால் விரட்டியடிக்கப்பட்டனர். கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் அவர்கள் கண்டிப்பாகப் பங்கேற்க வேண்டிய  சிந்தனைத் தளங்கள், கல்வி, வாசித்தல் மற்றும் எழுத்து, கலாசாரம் ஆகியவை நிகழவேண்டிய இடத்தில் இத்தகைய இடைவெளிகளைப் பயன்படுத்த முடியாதவாறு நன்கு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. நான் எனக்குத் தெளிவாகத் தெரிந்த உதாரணங்களையே குறிப்பிட்டுள்ளேன். எம்மில் அநேகமானவர்கள் ஏனைய விடயங்கள் தொடர்பில் எழுதியும் பேசியும் வருகிறோம். இருப்பினும் எமக்குத் தெரியாத எண்ணிலடங்கா விடயங்களும் உள்ளன.

ஓவியம், திரைப்படங்கள் தயாரிப்பு அல்லது இசை ஆகியவற்றைப் பொறுத்தவரை தணிக்கை முறையானது உத்தியோகபூர்வமானது முதல் உத்தியோக பற்றற்றதுவரை ஒருசில தகரிகளினால் தலையீடு செய்யப்படுகின்ற போக்கு பரந்து விரிந்து செல்கிறது. அது ஒரு நூலை தடைசெய்வது, எழுத்தாளரை அச்சுறுத்துவது முதல் சில உண்மையான அபூர்வமான முறைகள்வரை விரிந்து செல்கிறது. ஜெய்ப்பூரில் இடம்பெற்ற ஓவியக் கண்காட்சியில் ஒரு ஓவியர் பசுக்கள் பிளாஸ்டிக்கை உண்பதுபோல் தனது ஓவியத்தில் குறிப்பிட்டிருந்ததற்காக சிக்கலில் மாட்டிக்கொண்டார். அவரது பசு கண்ணாடி இழைநார்களால் உருவாக்கப்பட்டிருந்தது. நான் காற்றில் பறப்பதாக உணர்கிறேன். திரைப்படத் தணிக்கைக்குழுவின் தலைவர் “காளைகள்” என்ற சொல்லை “பூனைகள்” என்று மாற்றுமாறு வலியுறுத்தியதுடன் ஜேம்ஸ்பான்ட் திரைப்படக் காட்சி ஒன்றில் முத்தக்காட்சி நீண்டிருப்பதாகவும் அதைக் குறைக்கும்படியும் வலியுறுத்தினார். பணமதிப்பிழப்பு மக்களின் வாழ்க்கையை எவ்வாறு பாதித்துள்ளது என்பதை விளக்குவதாக அமைந்த திரைப்படம் பிரச்சினைக்குள் சிக்கியது. திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவர் நோபல்பரிசு பெற்ற அமிர்த்தியாசென் பற்றித் தயாரித்த ஒரு திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த “பசு”, “குஜராத்”, மற்றும் “ஹிந்துத்துவா” போன்ற சொற்களை உச்சரிப்பின்றிச் செய்யும்படி வலியுறுத்தப்பட்டது சமீபத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம். உத்தியோகபூர்வமான நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படுகின்ற இத்தகைய தணிக்கைக்கும் மேலாக, வீதிகளில், கலைக்கூடத்தில், கல்விக்கூடங்களில் அல்லது திரைப்பட அரங்குகளில் திரைப்படம் தயாரிப்பதற்கு முன்பாகவும்கூட தணிக்கைகள் இடம்பெறுவது அதிகரித்துச் செல்கின்றது. யாராவது ஒருவர் அல்லது ஒரு குழ அல்லது ஏனையோர் “உணர்வுகளை துண்புறுத்துகிறது” என்று குரலெழுப்புகின்றனர். அழுத்தம், வன்முறை ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன; மேலும் தற்போதைய நிறுவனம் அவற்றிற்கு ஒன்றில் ஆதரவளிக்கிறது அல்லது கண்டும் காணாததுபோல் இருக்கிறது.

இந்து சிறுபான்மை மற்றும் பாதுகாவலர் சட்டம் (1)ஐ அது பெண்களுக்கு எதிராக பாரபட்சமுடையது என்று (கீதா ஹரிகரன் மற்றும் மற்றொருவர் எதிர் இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் ஏனையவர்) ஒரு வழக்கில் 1995-ஆம் ஆண்டு நீங்கள் சவாலுக்குட்படுத்தியிருந்தீர்கள். அது உச்சநீதிமன்றம் வரை சென்று பாதுகாவலர் தொடர்பில் 1999-இல் தீர்ப்பு வழங்குவதற்கு வழிகோலியது. ஆகவே நீங்கள் நீதிமன்றத்திற்குச் செல்வதில் மட்டுமல்ல நீதிமன்றத்தில் வெற்றிவாகை சூடியவர் என்ற அனுபவத்தையும் பெற்றுள்ளீர்கள். தற்போது, இந்தியாவின் நீதித்துறை, பேச்சு சுதந்திரம் மற்றும் கலை இலக்கியம் ஆகியவை தொடர்பில் அவ்வப்போது நழுவல் போக்கைக் கடைப்பிடிப்பதுடன் ஒரு எழுத்தாளரை, கலைஞரை, கல்வியியலாளரை இன்னபிறரைப் பாதுகாப்பதற்குப் பதிலாக  அவர்களின் குரல்வளையை நெறிக்கும் தணிக்கைக் குழுவின் கூட்டாளியாகச் செயற்படுகிறது, அந்த ஆரம்பப் போராட்டத்தைப் பற்றி நீங்கள் பேச விரும்புவீர்களா எனபதை அறிய ஆவலாக உள்ளது. 90 களின் பிற்பகுதியில் சட்டத்தை கையாளும் உங்கள் அனுபவம் என்னவென்பது உங்களுக்குத் தெரியுமா மற்றும் இலவச அச்சுப்பிரச்சாரத்திற்கு எதிரான இந்த அச்சுறுத்தல்களை எதிர்த்து நிற்க இன்று எந்த விதத்திலும் உங்களுக்கு உதவுகிறதா?அந்த ஆரம்ப கட்டப் போராட்டத்தைப் பற்றி நீங்கள் எம்முடன் பகிர்ந்துகொள்வீர்களா என்ற ஆச்சரியம்? 90 களின் பிற்பகுதியில் சட்டத்தை கையாளும் உங்கள் அனுபவம் உங்களுக்கு எத்தகைய பாட்தைப் புகட்டியது என்றும் இன்று பேச்சுச் சுதந்திரத்திற்கான அச்சுறுத்தல்களைத் தடுத்து நிறுத்துவதற்கு அது உங்களுக்குத் துணை புரிந்தது என்பதையும் தெரியப்படுத்துவீர்களா?

பாதுகாவலர் தொடர்பான எனது வழக்கானது ஒரு சிறிய படிநிலைக்கும் மேலானதாக அமைந்தது. எனது சார்பில் நீதிமன்றில் செயற்பட்ட எனது சட்டத்தரணிகளுக்கு நான் உளமார்ந்த நன்றிக்களைத் தெரிவிக்கின்றபோதிலும் எடுத்த எடுப்பிலேயே அது எனக்கு கிடைத்த வெற்றி என்று நான் உரிமைகோர விரும்பவில்லை. நீதிமன்றச் செயற்பாடு என்பது ஒரு நல்ல போராட்டத்திற்கான ஒரு முக்கிய கருவி. ஆனால் அது ஒரு கருவி மட்டுமே, யதார்த்தத்தில் அது ஒரு குறிப்பிட்ட வர்க்கத்திற்கு மட்டுமே கிடைக்கக்கூடியது என்பதுடன் நடைமுறைப்படுத்துவது கடினமானதாகவும் இருக்கும். பேச்சு சுதந்திரம் குறித்த அனைத்து விடயங்களையும் நீதிமன்றங்கள் மூலம் தீர்த்துக்கொள்ள முடியும் என்று நீங்கள் எதிர்பார்த்தால் என்ன நடக்கும் என்பது குறித்து ஒரு நல்ல விடயத்தை நீங்கள் நல்ல விடயத்தைக் குறிப்பிட்டுள்ளீர்கள். உண்மையில் நல்ல தீர்ப்புக்கள் முக்கியமானவைதான். எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு அவரது கற்பனைக்கு ஏற்ப எழுதுவதற்கு உரிமை இருக்கிறது என்று நீதிமன்றம் வலியுறுத்தியிருப்பதும் அவரது எழுத்துக்கள் யாரையாவது “காயப்படுத்தியிருந்தால்” அவர்கள் அதனைப் படிக்க வேண்டாம் என்று அறிவித்திருப்பதும் எமக்கு மகிழ்ச்சியளித்தது. பயங்கரமான வடிவங்கள் மீண்டும் எமது வாழ்க்கையில் குறுக்கிடாமல் அகற்றுவதற்கு நீதித்துறை செயல்முறை தேவை. வெளிப்படையாக காலாவதியான அல்லது பயன்படுத்தப்படாத சட்டங்கள் உள்ளன, அவை எந்த நேரத்திலும் தணிக்கைகள் என்ற பெயரில் தலைதூக்கக்கூடும். உதாரணமாக, மகாராஷ்டிராவில் ஒரு நாடகம் பொதுமக்கள்முன் அரங்கேற்றப்படுவதற்கு முன்னர் சோதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டும். தியேட்டரில் ஒரு நண்பர் என்னிடம் கூறுகிறார், “இத்தகைய கட்டுப்பாடுகள் பெரும்பாலும் எல்லா நேரங்களிலும் போடப்படலாம். இருப்பினும் அது திடீரென்று மேற்கொள்ளப்பட மாட்டாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை”, ஏனென்றால் அதிகாரிகள் ஒரு நாடகம் அல்லது ஒரு திரைப்படம் அல்லது ஒரு பாடலை தணிக்கை செய்யவே விரும்புகின்றனர். அல்லது 377ஐ எடுத்துக் கொள்ளுங்கள், இது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நிகழும் குதத்தினூடான உடலுறவை சித்திரிக்கிறது. இத்தகைய உடலுறவு ‘இயற்கைக்கு மாறான பாலுறவு” என்ற வகையில் குற்றமாகக் கருதப்படுகிறது. இவை எப்போதாவதுதான் பயன்படுத்தப்படுகின்றன என்று நீங்கள் கூறலாம். நிச்சயமாக, இதனை ஒருவர் கண்டுபிடிப்பதும் ஆதாரங்களை முன்வைப்பதும் மிகவும் அரிது. இருப்பினும் அத்தகைய விதிவிலக்குகள் எப்போதும் உள்ளன. தனிநபர்களை மிரட்டுவதற்கென்றே இரவில் சுற்றித்திரியும் குழுக்கள் உள்ளன. உண்மையில் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் ஒரு பேராசிரியர் இருந்தார், அவர் அதேவிதத்தில் ஒரு காணொளி ஒளிப்பதிவின் ஊடாக பாதிக்கப்பட்டார், இந்த மனிதனின் வாழ்க்கையே பாழானது.

ஆனால் நீதிமன்றத்துடன் இணைந்து செயலாற்ற ஒரு கூட்டணி தேவைப்பட்டாலும் நீதிமன்றத்தில் போராடுவதென்பதே போராட்டக்களத்தைக் குறைப்பதற்காகத்தான் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். முழுவலிமையான போராட்டமானது – பேச்சு சுதந்திரம், எதிர்க்கருத்தை முன்வைத்தல், மற்றும் குடிமக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தல் – நீதிமன்றங்கள், வகுப்பறைகள், ஊடகங்கள், பல்வேறுவகையான கலாசார நடைமுறைகள் மற்றும் சாதி, வகுப்புவாத எதிர்ப்பு அல்லது பெண்களின் போராட்டங்கள் போன்ற பல்வேறு இயக்கங்களின் ஊடாக ஒவ்வொரு சாத்தியமான சூழ்நிலையிலும் நடத்தப்பட வேண்டும். அச்சுறுத்தல்,தணிக்கை,பயமுறுத்தல்,தனிமைப்படுத்தல் போன்ற அனுபவத்தினால் மனஅழுத்தத்திற்குள்ளாகி வாழ்வதற்குப் போராடுகின்ற தனிநபர்கள் அல்லது குழுக்களை ஆதரிப்பதற்கான வழிகளைக் கண்டறிதல் போராட்டத்தின் மற்றொரு அம்சமாகும்.

முன்னைய கேள்வியின் பின்னூட்டலாக, முடிவெடுப்பவர்கள் சட்டத்தை மாற்றுவதற்காக நீங்கள் எத்தகைய அழுத்தத்தைப் பிரயோகிக்கிறீர்கள் என்பதைக் கேட்கவிரும்புகிறேன். பிப்ரவரி 2014 இல், பென்குயின் இந்தியா பதிப்பகத்தினர் வின்டி டோனிகரின் புத்தகங்களை திரும்பப்பெற்றுக்கொள்வதாகத் தெரிவித்து ஒரு அறிக்கையை வெளியிட்டனர். ”இந்திய குற்றவியல் சட்டம் 295யு பிரிவில் எந்தவொரு இந்திய வெளியீட்டாளரும் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் வேண்டுமென்றே சட்டத்திற்குப் புறம்பாக தனியாக வைக்காமல் சர்வதேச தரங்களை நிலைநிறுத்த வேண்டும்.” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே காலப்பகுதியில் ஏராளமான இந்திய மற்றும் இந்தியரல்லாத கல்வியியலாளர்கள் கையெழுத்திட்டு இந்திய குற்றவியல் சட்டம் 153(யு) மற்றும் 295(யு) ஆகிய பிரிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று கோரியிருந்தனர். இது வெற்றியளிக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அவ்வாறெனில் அது எத்தகைய வித்தியாசத்தை ஏற்படுத்தும்?

நான் ஒரு சட்டத்தரணி அல்ல. இருப்பினும் பதிப்பகத்தார், குறிப்பாக பெரிய பதிப்பகத்தினருக்கு சட்டரீதியாகப் போராமுடியும். அவர்கள் எளிதில் வளைந்துகொடுத்துவிடக்கூடாது என்பதே எனது கருத்து. எழுத்தாளர்களும் வாசகர்களும் இருப்பதால் அவர்கள் பேச்சுச் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எங்கள் சட்ட நண்பர்கள் சட்டத்தின் அம்சங்களை கையில் எடுத்துக்கொள்வதை அனுமதிக்கையில், எமது “சிவில் சமூக அழுத்தம்” அவர்களுக்கு ஆதரவளிக்கும் போது, இந்த புத்தகங்களை வேறு வழிகளிலும் கிடைக்கின்றன என்பதை உறுதிப்படுத்தும் வழிகளைக் காணலாம். அருவெறுக்கத்தக்க மற்றும் விஷம் கலந்த உரையாடல்கள் இடம்பெற்றாலும் பேச்சுச் சுதந்திரத்தில் நம்பிக்கை கொண்டவர்களின் உற்ற நண்பராக இணையதளம் திகழ்கிறது. சட்டத்துறையுடன் நேரடிப் பங்குதாரராக இல்லாத எம்போன்றவர்களுக்கு இத்தகைய விடயங்களை பொதுவெளியில் எடுத்துச் செல்வதும், விவாதிப்பதும் கலந்துரையாடுவதும் மேலும் பொதுமக்களின் எண்ணத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதும் அவசியமானதாயினும் சவால்மிக்கதாகவே தோன்றுகிறது.

சட்டத்தை மாற்றுவது என்பது பகுதியளவிலான தீர்வு என்று நினைக்கிறீர்களா? இணையதளத்தில் பேசுவதை கிரிமினல் குற்றமாகக் குறிப்பிடும் பிரிவு 66யு வை நீக்குவது தொடர்பிலும் நான் சிந்திக்கிறேன்….

ஆமாம், நிச்சயமாக, நீதித்துறை செயற்றிறனும் ஒரு மூலோபாயமாக இருப்பினும் அதனாலும் உதவ முடியும். ஆனால் “முறைசாரா” தணிக்கை ஒருவிதத்தில் எப்போதும் மிகவும் சிக்கலான மற்றும் நுட்பமான வழியில் செய்யப்படுகிறது என்று எம் அனைவருக்கும் தெரியும். இதற்கு மேலும் அரசிற்கு தணிக்கை செய்ய வேண்டிய அவசியமில்லை. நீங்கள் கராராகப் பேசினால், உங்களால் நீங்கள் விரும்பியபடி சட்டத்தை மாற்றமுடியும் என்று உங்களுக்குத் தெரியும். ஆனால் ஒரு நல்ல சட்டம் செயல்பட அனுமதிக்கும் சுதந்திரம் மற்றும் சுதந்திரம் இல்லாத ஒரு சட்டம் இல்லாதபட்சத்தில் இது எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? சட்டம் சரியில்லை என்று ஒவ்வொரு குடிமகனும் எதிர்க்க வேண்டுமா?

இந்த சுதந்திரத்தின் பண்புகளாக நான் எதைக் குறிப்பிடுகிறேன்? தற்போது நாம், ஒரு பொருத்தமற்ற காலனித்துவ சட்டத்தை மீண்டும் கடைப்பிடிக்கும் ஒரு அரசாங்கத்துடன் வாழ்கிறோம்: கண்டிக்கத்தக்கது. “பாக்கிஸ்தான் நரகம் இல்லை” (ஆனால் விவேகமான கருத்து) என்று போகிற போக்கில் மாணவர்களிடமிருந்து எழுத்தாளருக்கோ அல்லது வேறு எவரிடமோ ஒரு விமர்சனத்தை இன்று யாராவது தூண்டிவிடலாம், அது அதையும் தாண்டி விரிந்து செல்கிறது. அருவெறுக்கத்தக்க பிரச்சினைகள் தொடர்பான சட்டங்களில் தேவையான மாற்றங்களை மேற்கொள்வதற்கும் அத்தகைய சட்டங்களை மீளப்பெறச் செய்வதற்கும் பல்லின குடிமக்களின் உரிமைகள் மற்றும் நலன்களுக்கு எதிரான சட்டங்களை துடைத்தெறிவதற்கும் மதச்சார்பற்ற ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கும் போராட்டத்தின் பல்வேறு படிநிலைகளில் ஒரு பிரிவாக இருக்கும் வழக்கறிஞர்களால் போராட்டத்தைத் தொடர முடியும் அவர்கள் தொடரவேண்டும், ஆனால் சட்டத்தை மாற்றுவதால் மட்டும் ஒரு கும்பலின் செயற்பாடுகள் நிறுத்தப்படப்போவதில்லை. இன்னொரு விடயம் என்னவென்றால், என்ன செய்வது என்று ஒரு தாதியர் நம்மிடம் சொல்வதுபோல், ஒரு ஜனநாயகம் முற்றிலும் நீதிமன்றத்தில் தங்கியிருப்பதால் ஏற்படும் ஆபத்தாகும். எனது பாதுகாவலர் தொடர்பான வழக்கில் நான் இதனை எதார்த்தத்தில் உணர்ந்தேன். சரி, குழந்தையின் தாயேகூட சிலவேளைகளில் அதன் பாதுகாவலராக இருக்க முடியும் என்று வாய்கூசாமல் சொன்னார்! இப்பொழுது சொல்லுங்கள் நான் உச்சநீதிமன்றத்தை அணுகி என்னுடைய குழந்தைகளுக்கு நான்தான் உண்மையான பாதுகாவலர் என்று சொல்ல வேண்டிய அவசியம் உள்ளதா?

இருப்பினும் உண்மையில் உங்களுக்குப் பின்னர்; ஏனையோர் அந்த சட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளவும்  கைப்பற்றிக்கொள்ளவும் முடியுமே…

ஆம். இதனால்தான் நான் முழுமையான செயற்பாட்டில் ஈடுபட்டேன். இந்தத் தீர்ப்பைப் உதாரணமாகப் பயன்படுத்துவதாக இப்பொழுது எனக்கு ஏராளமான பெண்கள் கடிதம் எழுதுகின்றனர். சட்டத்தைப் பொறுத்தவரையிலும் மொழியைப் பொறுத்தவரையிலும்கூட நாம் இன்னும் நீண்டதூரம் முற்போக்கான பாதையில் பயணிக்க வேண்டியுள்ளது. உதாரணமாக 2015ஆம் ஆண்டில், ‘திருமணமாகாத தாய்’ உரித்துடைய இயல்பான பாதுகாவலராக முடியும் என்று உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பினை வழங்கியது.

அவை அனைத்தும் பக்கசார்பாக இருப்பதே நிலைமையை சிக்கலாக்குகிறது. புத்துயிர்ப்பு பெறக்கூடிய இந்தச் சட்டங்களின் பக்கசார்பான தன்மையானது, பாரபட்ச சட்டங்களின் காரணமாக ஒருவரோ அல்லது ஒருகுழுவோ பாதிக்கப்படுகிறது. நான் இப்பொழுது நீங்கள் முன்னர் கேட்ட கேள்விக்கு வருகிறேன். அதாவது ஒவ்வொருவரும் இன்று அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே வாழ்கிறோம்…..

ஆம், மேலும் உண்மையான விடயம் யாதெனில், அத்தகைய சூழ்நிலைகளில் நீங்கள் அரசிடம் முறையிட வேண்டும். அரசு தலையிடுவதற்கு உங்களிடம் இரண்டு சூழ்நிலைகள் இருக்க வேண்டும். ஒன்று வாயிலிருந்து வெளிப்படும் ‘அறுவெறுக்கத்தக்க வார்த்தை’ அது வன்முறையாகப் பார்க்கப்படும். அறுவெறுக்கத்தக்க பேச்சை வரையறை செய்தல் என்பதில் கஷ்டங்கள் உள்ளது என்பது எனக்குத் தெரியும். ஆனால் கணக்கிடுவதற்கு அதுவும் அவசியம். மற்றது அரசின் பொறுப்பை வலியுறுத்துவதற்கு அதற்கு எதிர்வினையாற்றல். இதில் முரண்நகை யாதெனில், ஒரு அரசாங்கம் கொள்கைரீதியில் வெறுக்கத்தக்க வார்த்தைகளைப் பேசுகின்ற ஏராளமானவர்கள் இருக்கின்ற ஒரே முகாமில் இருக்கையில் இந்த நடவடிக்கையை நிறைவேற்றும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? என்பதே. இன்று இந்தியாவில் ஏராளமான வெறுக்கத்தக்க பேச்சுக்களை அனைத்து முகாம்களிலிருந்தும் நீங்கள் உதாரணம் காட்டமுடியும். உண்மையில், ஒரு தரப்பில் இருந்து வருகின்ற அருவெறுக்கத்தக்க வார்த்தைகள் மறுதரப்பில் விருத்தியடைவதற்குத் துணைபுரிகின்றது. அதிகாரமிக்க பதவிகளில் இருக்கின்ற அதிகாரிகளின் அல்லது அத்தகைய கொள்கைகளுடன் நெருங்கிய தொடர்புடைய அதிகாரிகளின் அறுவெறுக்கத்தக்க பேச்சுக்களை நான் தனிமைப்படுத்த விரும்புகிறேன். தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டிருக்கையில் இத்தகைய அருவெறுக்கத்தக்க சொல்லாடல்கள் இடம்பெறுவது வழமையாகிவிட்டது. தேர்தல் தொகுதி துருவமயப்படுத்தப்படுகிறது. சிறுபான்மையினரை அல்லது குறிப்பிட்ட சாதிகளை அச்சுறுத்துவதாக உள்ளது. அவ்வப்போது இத்தகைய அச்சுறுத்தல் உண்மையான வன்முறையுடன் தொடர்புபடுத்தப்படுவதுடன் பகுத்தறிவு உடைய எவரும் இத்தகைய அச்சுறுத்தலுக்கும் வெறுப்புத்தூண்டலுக்கும் இடையிலான தொடர்பையும் நன்கு புரிந்துகொள்ள முடியும். குஜராத் நமக்கு ஏராளமான உதாரணங்களை வழங்குகிறது. அவ்வாறே இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசமும் வழங்குகிறது. வன்முறையைத் தூண்டும் பேச்சு – இன்று இந்தியாவில் வெறுப்புணர்வைத் தூண்டும் உரையாடல்கள் பலம்பெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. உத்தரப் பிரதேச மாநிலத்தின் தற்போதைய முதல்வரின் கூற்றுக்கள் இதற்கு உதாரணம். தன்னைத்தானே ‘பெண்கடவுள்’ என்று மகுடம்சூட்டிக் கொண்ட பெண் தனது ளுருஏ கோமேயத்தினால் ஆசீர்வதிக்கப்பட்டது என்று அண்மையில் கோவாவில் பிரச்சாரம் செய்ததுடன், ‘மாட்டுக்கறி உண்பவர்களைக் கொலை செய்ய வேண்டும்’ என்றும் கூறியிருக்கிறார். ஒரு மாதத்தின் பின்னர் அதே காரணத்தை முன்வைத்து பொதுமக்கள் கொலைசெய்யப்பட்டனர்.

இந்தியாவில் கலாசாரத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கு அதியுச்ச அழிவை ஏற்படுத்திய கொடூரமான நினைவுகளை மீட்டிப்பார்க்கக்கூடியதாக 2015ஆம் ஆண்டு ஒரு திருப்புமுனையாக இருந்தது. இதற்கு எழுத்தாளர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களான நரேந்திர தபோல்கர், கோவிந் பன்சாரே மற்றும் எம்.எம். குல்பர்கி ஆகிய மூவரின் மரணங்கள்தான் உங்களையும் ஏனையோரையும் இந்திய எழுத்தாளர்கள் சங்கம் என்னும் அமைப்பைத் தோற்றுவிப்பதற்கு வித்திட்டதா? அந்த முயற்சியைக் குறித்தும் அந்த சங்கத்தின் வரலாறு, உங்களுக்குத் தூண்டுகோலாக அமைந்த விடயம் மற்றும் அதன் கொள்கைகள் குறித்தும் சற்று விரிவாகக் கூறுங்களேன்.

நாங்கள் ஏனைய திருப்புமுனைகளையும் உணர்ந்தோம். இருப்பினும் 2015ஆம் ஆண்டு குறிப்பிடத்தக்க அளவு கூர்மையாக இருந்தது. ஏனெனில் அது ஒரு பரந்த வளர்ச்சிக்காக, குரல்களின் பொதுவான அடக்குமுறையிலிருந்து, பல நிறுவனங்களில் உள்ள மாணவர்கள் குறித்தும், குறிப்பிட்ட சம்பவங்கள் குறித்தும், வலதுசாரிகள் எப்படி இருந்தார்கள் என்பது குறித்தும் நயன்தாரா சாகல் இந்தியா “உற்பத்திசெய்யாத” என்ற தன் எழுத்தின் மூலம் எவ்வாறு குறியீடாக பயன்படுத்த வேண்டும் என்பதற்கான அடையாளமாக வேகமாகப்பரவியது. எழுத்தாளர்கள் மற்றும் பிற கலாச்சார நிபுணர்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வதற்கு கடினமாக உழைக்கும் கலாசாரக் குழுக்கள் எப்பொழுதும் இருந்து வருகின்றன, மேலும் அவை எமது வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டவர்களுடனும் தொடர்பில் உள்ளன. காலப்போக்கில் சில இடங்களில், இணைப்பை மீளவும் உருவாக்க வேண்டியுள்ளது அல்லது புதிய வலையமைப்பை ஏற்படுத்த வேண்டியுள்ளது இதன் மூலம் எழுத்தாளர் அல்லது கலைஞர் தனிமைப்படுத்தப்பட்டதாகவோ அச்சுறுத்தலுக்குள்ளானதாகவோ அல்லது சுய தணிக்கைக்கு உட்பட்டதாகவோ உணர மாட்டார்கள். 2014 இல், எம்மில் சிலர்கூடி எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், கலைஞர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை எவ்வாறு “மீளிணைவு” செய்யலாம் என்பதைப் பற்றி கலந்துரையாடினோம். தபோல்கர்; கொலைகளுக்கும் மேலதிகமாக, அடக்குமுறைக்கு எதிராக யார் போராடுகிறார்கள் என்று பார்த்தபோது பன்சாரே ஒடுக்குமுறைக்கு எதிராகவும், சாதிப்பாகுபாட்டிற்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அறிஞர் எம்.எம்.கல்பர்கி என்பவர் மொகமட் அக்லாக் “மாட்டிறைச்சி உண்டதற்காக” மோசமாக தண்டிக்கப்பட்டதற்கு எதிராகக் களமிறங்கியிருந்தார்.

நாம் எழுத்தாளர்கள் சங்கத்தை ஆரம்பித்தோம். எமக்கு எழுத்தாளர்களிடமிருந்தும் கல்விமான்களிடமிருந்தும் மட்டுமன்றி கலைஞர்கள், திரைப்படத்தயாரிப்பாளர்கள், இசைக்கலைஞர்கள் ஆகியோரிடமிருந்தும் ஆதரவு பெருகியதால் நாம் வளர்ச்சியடைந்தோம். அனைவரும் எளிதில் தொடர்புகொள்வதற்காக மிகவும் நெகிழ்வுத் தன்மைவாய்ந்த கலாசாரப் பிணைப்பைக் கொண்ட ஒரு தளத்தை உருவாக்கியுள்ளோம். அதில் ஏற்கனவே களத்தில் பணியாற்றுகின்ற தனிநபர்களும் குழுக்களும், புதிய குழுக்களும் கலந்துரையாடலாம், விவாதிக்கலாம். எமது கலாசார வெளிகளுக்கு ஏற்பட்டுள்ள இடையூறுகளுக்கு எதிராக எத்தகைய எதிர்ப்பைத் தெரிவிப்பது என்பது குறித்தும் எத்தகைய போராட்டங்களை நடத்துவது என்பது குறித்தும் ஒருபுரிந்துணர்விற்கு வரலாம். நான் இங்கே கலாசார இடைவெளிகள் என்ற சொல்லை பரந்த அர்த்தத்தில்; பயன்படுத்துகிறேன், கல்வி, பல்வேறுவகையான மக்கள் அன்றாடம் கடைப்பிடிக்கும் கலாசாரங்கள், அதேபோல் கலாசார கலைப்பொருட்கள் ஆகியவற்றை அது உள்ளடக்குகிறது. நாம் எமது சங்கத்தில் அனைவரையும் இணைத்துக்கொள்ள முடிவுசெய்துள்ளோம். தம்முடன் உடன்படாதவரை கொல்லக்கூடிய அல்லது அச்சுறுத்தக்கூடியவரையும், நீங்கள் என்ன சாப்பிட வேண்டும், எப்படி உடுத்த வேண்டும், ஒரு குறிப்பிட்ட சாதியினர் அல்லது சமூகத்தினர் அல்லது பழங்குடியினர் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எதை நினைக்க வேண்டும், உதை உணரவேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களையும் தவிர, அனைவரையும் வரவேற்கிறோம். உண்மையில், முடிந்தவரை காந்தியவாதிகள் தொடங்கி இடதுசாரிகளின் பல்வேறு நிழல்வரை உள்ளடக்கிய பரந்த ஒரு முன்னணியை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் ஒட்டுமொத்த குறிக்கோள். இதன் மூலமே நாம் சுதந்திரமான பேச்சு மற்றும் இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய குறைந்த பட்ச உரிமைகளை வலியுறுத்தமுடியும். இந்த முனையில், நாம் முற்போக்கு சிந்தனையுடைய இந்திய மொழிகளில் பதிப்பிக்கின்ற சிறிய பதிப்பகத்தார் முதல், அரங்கக்குழுக்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியினர்வரை பல்வேறு குழுக்களுடனும் பணியாற்றுகிறோம். நாம் இந்திய கலாசார கழகம் மற்றும் குஃதுகு என்னும் எமது இரண்டு இணையதளங்களை தோற்றுவித்த ஒரு வாரத்தின் பின்னர், சமீபத்திய இந்திய கலாசார வரலாற்றில் அபரிமிதமான எழுச்சி ஏற்படுள்ளது. கல்விமான்கள், கலைஞர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் அறிவியலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் எழுத்தாளர்களின் ஒருவித உணர்வினால் “வழிநடத்தப்படுகின்றனர்” அவர்கள் தமது தேசிய விருதுகளை குடிமக்கள் இதனைத்தான் உண்ண வேண்டும் என்றும் அவ்வாறில்லாவிடில் கொலைசெய்யப்படுவதற்கு எதிராகவும் செயற்பாட்டாளர்கள் மற்றும் கல்விமானுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட மூர்க்கத்தனமான தணிக்கைக்கும் தமது எதிர்ப்பைத் தெரிவிக்குமுகமாக திருப்பிக்கொடுத்துள்ளனர். நிர்வாகம் தனது பெரிய துப்பாக்கிகளைக் கொண்டுவந்தது: அவை எதிர்ப்புத் தெரிவிக்கும் எழுத்தாளர்கள் தமது விருதுகளைத் திரும்ப ஒப்படைப்பதற்கு ஊதியம் வழங்கப்படுவதாக குற்றம் சுமத்தியது அல்லது அவர்கள் அதை “உற்பத்திசெய்யப்பட்ட எதிர்ப்பு” என்று அழைத்தனர். இரண்டாண்டுகளின் பின்னர், அந்த போராட்டம் மூர்க்கமாக முன்னெடுக்கப்படுகிறது. 2015ஆம் ஆண்டின் தருணமானது எங்கோ ஒரு மூலையில் தனிமையில் அமர்ந்திருக்கின்ற மக்கள் நலன் சார்ந்து எழுத்து அல்லது ஓவியம் எவ்வாறு பகுதியளவில் அக்கறை செலுத்தக்கூடிய அல்லது விவாதிக்கக்கூடிய அல்லது எதிர்த்துப் போராடக்கூடிய வகையில் நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை போதிப்பதற்கான நினைவாக அமைகிறது.

 

2015 ஆம் ஆண்டு தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன் பலவாங்கள் துன்புறுத்தப்பட்டதன் பின்னர் “இலக்கியரீதியில் தான் மரணித்துவிட்டதாக” அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நான் ஐ.சி.எஃப் இல் உங்களது நேர்காணலை எவ்வளவு தூரம் நான் அனுபவித்தேன் என்று உங்களிடம் கூறினேன். அங்கு நீங்கள் ஒரு வழக்கை ‘காலத்தைப் பற்றி நீதிக்கதையாக” கூறியிருந்தீர்கள். http://indianculturalforum.in/2016/07/10/ perumal-murugan-a-parable-of-our-times/  எழுத்தாளர் பெருமாள் முருகன் மற்றும் பெருமாள் முருகன் என்னும் தனிநபர் ஆகியோருக்கு இடையில் நிலவிய பிளவு அல்லது விலகல் துல்லியமாகத் தெரிந்ததால் அந்த வழக்கு என்னையும் பாதித்தது. “இந்த பி.முருகன் பெருமாள் முருகன் என்றழைக்கப்படுபவருக்காக எழுதுகிறேன். எழுத்தாளர் பெருமாள் முருகன் மரணித்துவிட்டார்” என்று அவர் தனது முகநூலிலும்கூட அந்த இரண்டு வெவ்வேறான அடையாளங்களைக் குறிப்பிட்டிருந்தார். எழுத்தாளர் கீழ்மட்டத்திலுள்ள ஆசிரியர் பி.முருகன் உயிருடன் இருக்க வேண்டுமானால் எழுத்தாளர் பெருமாள் முருகன் கொல்லப்படவேண்டும். எனவே எழுத்தாளர் கொல்லப்பட்டார், ஆனால் அதன் பின்னர், நீங்கள் குறிப்பிட்டதுபோலவே, 2016ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம் அவர் சட்டத்தின் மூலம் புத்துயிர் பெற்றார் அல்லவா?

உயர்நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் பெருமாள் முருகன் மீண்டும் எழுத முடியும் என்று உணர்ந்தால் நாம் நன்றியுடையவர்களாயிருப்போம். உண்மையில், அவர் அதை முற்றிலும் புதிய வழியில் கூறுகிறார். அதாவது அந்த சூழ்நிலை தனக்குள் ஒரு கவிஞன் உயிரோடு இருந்தது தனக்கே தெரியாதிருந்ததாகவும் அவர் வெளிவந்திருப்பதாகவும் கூறுகிறார். இந்த நெகிழ்வுத்தன்மையின் மூலம் எமக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு எழுத்தாளரும் இருண்ட காலங்களில் தேடுதலில்; ஈடுபட வேண்டும். முருகனின் நாவலை வாசித்தவர்கள் வாசிக்காதவர்கள் என்ற பாகுபாடின்றி அல்லது அவரது நாவலைப் புகழ்ந்தவர் அல்லது புகழாதவரென்ற வேறுபாடின்றி எழுத்தாளர்களும் வாசகர்களும் முருகனுக்கு அளப்பரிய ஆதரவை வெளிப்படுத்தினர். அது அப்படித்தான் இருக்க வேண்டும்: ஒரு எழுத்தாளரையோ அல்லது அவரது படைப்பையோ நீங்கள் விரும்பவில்லை என்ற ஒரே காரணத்திற்காக தணிக்கை செய்து தண்டிக்க முடியாது! உயர்நீதிமன்றம் நேர்த்தியாக பின்வரும் வொல்டேரின் புகழ்மிக்க மேற்கோளைப் பயன்படுத்தியது: “நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம், ஆனால் நீங்கள் சொல்வதற்கான உங்களது உரிமையை இறக்காமல் பாதுகாக்க முடியும்”. ஆகவே, நான் முன்னர் குறிப்பிட்டதுபோல், நீதிமன்றமானது பிடிவாதமானவர்களுக்கு ஒரு தளமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு நல்ல தீர்ப்பிற்கும் தெளிவற்ற அல்லது மோசமான தீர்ப்புகள் இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ஒரு எழுத்தாளர் கற்பனை செய்வதற்கும், கற்பனையில் உதித்ததை எழுதுவதற்குமான உரிமையை வென்றெடுக்க நீதிமன்றத்தில் தங்கியிருக்க வேண்டியுள்ளது என்ற உண்மையையும் நான் வலியுறுத்த விரும்புகிறேன், இது சூழ்நிலையின் நோயைக் குறிப்பிடும் அறிகுறியாக உள்ளது.

இந்திய கலாசார கழகம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னணியையும் எழுத்தாளர்கள் தமது சாகித்திய அகதமி விருதுகளை ஒருவர்பின் ஒருவராகத் திரும்ப ஒப்படைத்த இயக்கத்தையும் மீட்டிப் பார்க்கிறேன். சாகித்திய அகாதெமி போன்ற நிறுவனங்களின் வெற்றிடத்தை நிரப்புவதற்காகவும் இந்திய எழுத்தாளர்கள் மன்றம் உருவாக்கப்பட்டதா? நீங்கள் இந்த நிறுவனங்கள் உங்களைப் பாதுகாக்கவோ உங்களை பிரதிநிதித்துவம் செய்யவோ அல்லது உங்கள் உரிமைகளைப் பாதுகாக்கவோ முடியாது என்றும் ஆகவே நீங்கள் இத்தகைய நிறுவனங்களை நம்பக்கூடாது என்றும் கருதுகிறேன். குஃத்துகுவில் நீங்களே எழுத்தாளர்களைப் போல உங்களுக்கு நீங்கள்தான் போராடவேண்டியுள்ளது என்று எழுதியிருக்கிறீர்கள்….

பல்வேறுபட்ட விடயங்களுக்கு பதில்நடவடிக்கையாகவோ விருதுகள் திரும்ப ஒப்படைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. ஆனால் கல்பர்கியின் படுகொலை சிலவேளைகளில் இதனை முடுக்கிவிட்டிருக்கலாம். சாகித்திய அகாதெமியின் உறுப்பினராகவும் அந்த அகாதெமியின் விருதுபெற்ற கல்விமானாகவும் மொழிபெயர்ப்பாளராகவும் இருந்த ஒருவர் கொலை செய்யப்பட்டார். ஆனால் சாகித்திய அகாதெமி அதனை வர்த்தகத் தகராறு காரணமாக நடைபெற்ற வழக்கமான கொலை என்று நடித்தது. இலக்கியத்திற்கான இந்த தன்னாட்சி சபைகள், கலை, வரலாறு அல்லது சமூக அறிவியல் ஆகியவற்றிற்கு ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக உருவாக்கப்பட்டன. அவை ஒரு சுதந்திர நாட்டின் இலக்கின் ஒரு பகுதியாக இருந்தன. அவற்றை நேருவின் தரிசனம் என்று அழைக்கலாம். நிறுவனங்கள் கட்டியெழுப்பப்பட வேண்டும், செழித்து வளர வேண்டும், அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கலாசாரம் மற்றும் அதன் ஒரு பகுதியாக அவை உயிர்ப்புடன் இருக்க வேண்டும் என்பதாக அதன் இலக்கு உணரப்பட்டது. அவைகள் அரசாங்கத்தின் நிதியுதவியில் இயங்க வேண்டும். (ஏனெனில் அரசைத் தவிர வேறு யாருக்குப் புதிய சுதந்திர நாட்டை நேசிக்கும் அறிவு இருக்க முடியும்?), ஆனால் இதனை அவர்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுபவர்களாலேயே  உண்மையில் நடத்தப்பட வேண்டும். இத்தகைய அனைத்து தசாப்தங்களுக்கும் பின்னரும் இந்த நிறுவனங்கள் தத்தளித்துக்கொண்டிருக்கின்றன. குல்பர்கி கொலைச்சம்பவம் குறித்து 2015ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமியிடம் வினவியபோது, அவர்கள், “நாம் ஒருபோதும் அரசியல் நிலைப்பாட்டை எடுப்பதில்லை!” என்று கூறினர். அகாதெமி அதற்கு வழங்கப்பட்ட பணியை செய்யத்தவறியதற்காக அதன்மீது கோபம் எழுந்தது. இதைப்போன்று எத்தனையோ நிறுவனங்கள் உருவாகியுள்ளன. இருப்பினும் அவற்றின் அதிகாரத்துவ திறமையின்மை அல்லது, சாத்தியக்கூறு, ஊழல் மற்றும் அவர்கள் நடைமுறையில் கையாளும் கருத்தியல் என்ற காரணங்களால் நாம் இவற்றைக் கண்டுகொள்வதில்லை என்னும் நிலைக்கு வந்துள்ளோம். ஆனால், இந்த நிறுவனங்கள் உருவாக்கப்பட்டதற்கான நோக்கம் இன்னமும் செல்லுபடியானதாகவும், இன்னும் பொருத்தமானதாகவும் இருப்பதால், நாம் சொல்வதைப் போன்று “நடையைக்கட்டு” என்ற கேள்வியெழவில்லை. இத்தகைய நிறுவனங்கள் எமது வரிசெலுத்துபவர்களின் பணத்தில் இயங்குகின்றன. அவை இந்நாட்டு குடிமக்களுக்குச் சொந்தமானவை, நாம் அவற்றைக் கைவிடமுடியாது. ஆனால் அதேசமயம், நாமும் அவற்றை விமர்சிக்க வேண்டும். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், தற்போதைய அரசாங்கம் அவற்றை என்ன செய்யப்போகிறது என்று எனக்குத் தெரியவில்லை, ஏனெனில் அது எமது ஒட்டுமொத்த சபைகளினதும் அகாதெமிகளின் கலாசார, கல்வி மற்றும் அறிவியல் பண்பையும் பல்வேறு வழிகளில் மாற்றிவருகிறது. இந்தமாற்றமானது அவர்கள் வலதுசாரிப் போக்குடையவர்கள் என்ற ஒரே தகுதியின் அடிப்படையில் தகுதியானவர்களாகக் கருதப்பட்டு ஆட்களை பதிலீடு செய்வதையும் உள்ளடக்குகிறது.

எனவே, நீங்கள் சொல்வது என்னவென்றால், சாகித்திய அகாடமி போன்ற வினைதிறனற்ற நிறுவனங்கள் எழுத்தாளர்கள் விடயத்தில் முற்றிலும் தோல்வியடைந்த நிலையில், ஒருபோதும் ஆக்கிரமிக்கப்படாத அந்த இடத்தை ஆக்கிரமிக்க வேண்டும் என்று நீங்கள் சொல்ல வருகிறீர்கள்….

நான் வினைதிறனற்றதை விட மேலும் சொல்லலாம். நாம் சாகித்திய அகாதெமியை பதிலீடு செய்ய விரும்பவில்லை, ஏனென்றால் நாம் அந்த நிறுவனம் தேவையில்லை என்று கருதவில்லை. ஆனால் காலத்திற்கேற்ப அதன் ஆளுமையும் இற்றைசெய்யப்படவேண்டும், கற்பனைத்திறனுடனான வகையில் நடைமுறைப்படுத்தவேண்டும், ஒவ்வொரு அரசாங்கத்தைக் கண்டோ அல்லது நடைமுறையில் இருக்கும் கொள்கையைக் கண்டோ அஞ்சக்கூடாது. அது சாகித்திய அகாதெமிக்கு மட்டுமில்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஐ.சி.ஹெச்.ஆர் (இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில்) ஐ.ஜி.என்.சி.ஏ (இந்திரா காந்தி நேஷனல் சென்டர் ஃபார் த ஆர்ட்ஸ்) வரை, சபைகள் முழுவதும் சுவாச நோயால் பீடித்திருப்பதைக் காணலாம். சமீபத்தில் ஐ.சி.எஸ்.எஸ்.ஆர் (இந்திய சமூக விஞ்ஞான ஆய்வுக் கவுன்சில்) நிறுவனம் ஒரு புதிய இயக்குனரைப் பெற்றது. அந்த இயக்குனர் வரும்போதே “செயற்பாட்டாளர்களை உருவாக்குவதால்” பாடநூல்கள் “திருத்தியமைக்கப்பட வேண்டும்” சாதி மற்றும் வகுப்புவாத மோதல்கள் போன்றவை குறித்த பாடங்கள் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கக்கூடாது மற்றும் “அன்னிய சக்திகளின் படையெடுப்புகள்” காரணமாகவே சாதி நிலைத்துநிற்கிறது என்று ஊடகங்களில் பல்வேறு முத்துக்களை உதிர்த்துள்ளார். பேச்சு சுதந்திரத்திற்கான எமது எண்ணக்கருவே அறிவதற்கான உரிமையைத் தொடர்ந்தும் நீட்டிப்பதாகும். எழுத்தாளர்கள் மற்றும் கலாசாரத்தைக்  கடைப்பிடிக்கும் ஏனையவர்களின் சுதந்திரத்தை ஒடுக்குவதும் பிரச்சினையின் மற்றொரு வடிவம். மற்றது மக்களின் அறிந்துகொள்ளும் உரிமை. தவறான தகவலை வழங்குவது, “நாட்டுப்பற்று” அல்லது “தேசியவாதி” என்ற பெயரில் அர்த்தமற்ற அணிவகுப்புக்கான எண்ணக்கரு, மற்றும்  பாடசாலை அல்லது பல்கலைக்கழகம், அல்லது ஆராய்ச்சி மற்றும் எழுத்து போன்ற அறிவிற்கான பாரம்பரிய இடைவெளியில் இலக்கியம் மற்றும் வரலாறு அறிவியல் சார்ந்த ஆய்வில் வாழ்ந்த அனுபவங்களின் எந்தவொரு அம்சத்தையும் ஆராய்வதற்கான சுதந்திரத்தை இணைத்துக்கொள்வது: இத்தகைய இணைவை அனைத்து புத்திஜீவி அமைப்பும் எதிர்த்துப் போராட வேண்டும்.

 

தொடர்புடைய ஒரு கேள்வி…. இந்திய எழுத்தாளர்களின் பல்வேறு அறிக்கைகள், “இந்தியாவை செய்யவிடாதவை” என்பதை எதிர்க்கும் வகையில், http://indianculturalforum.in/ 2017/06/28/ writers-protest-the-unmaking-of-india/ வெளிவந்ததையிட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். அதனைத் தொடர்ந்து அண்மையில் ஜூனைட் என்னும் இஸ்லாமிய பதின்மவயதுப் பெண்ணுக்கு ஏற்பட்ட பயங்கரமான மயக்கத்தைக் குறித்து இந்திய கலாசாரக் கருத்துக்களத்தில் எழுதப்பட்டு வந்தது. உதாரணமாக “கலாசார சகோதரத்துவம்”ன் பொறுப்புகளாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. “சகோதரத்துவம்” மற்றும் ஒரு ஐக்கியப்பட்ட சமுதாயத்தை கட்டியெழுப்புவது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது?

எங்கள் குறிக்கோள்கள் சகோதரத்துவம் மற்றும் ஒருங்கிணைந்த சமூகம் பற்றி பேசுகின்றன. அவை யதார்த்தமானதும் சிறந்ததுமாகும். ஆனால் அதனைப் பின்பற்றி வாழ்வது எவ்வளவு சிக்கலானது என்பதைப் பற்றி நாம் நன்கு அறிந்திருக்கிறோம். உதாரணமாக, இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில், அத்தகைய அதிருப்தி நிறைந்த நாட்டில், எம்மில் பல எழுத்தாளர்களுக்கு பாதிக்கப்பட்ட ஒருவருக்காக ஒருவருக்கொருவர் பேசுவதே கடினம். அண்மையில் செயற்பாட்டாளர் ஒருவர் பொறுப்பேற்றிருந்த மே மாதத் திருவிழா என்று அழைக்கப்படும் இலக்கிய மாநாட்டைத் தொடங்கி வைப்பதற்காக நான் தர்வாட்டில் இருந்தேன். நான் மேடையேறியதும் என்னால் கன்னடத்தில் பேச முடியுமா என்று கேட்டனர். அது ஒருவிதமான அரைவேக்காட்டு மகாநாடு என்பதையும் “கன்னட தப்பித்தல்” வாதம் என்பதும் எனக்குத் தெரியும். ‘தேசியவாதி’ அல்லது ‘பாசிஸ்ட்’ என்ற வார்த்தைகளை கன்னடத்தில் எப்படிச் சொல்ல வேண்டும் என்பதுகூட எனக்குத் தெரியாதபோதிலும், இரண்டு சொற்பதங்கள் குறித்தும் நான் உரையாற்ற வேண்டியிருந்தது. கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளையும் கலந்து ஒருமாதிரி கஷ்டப்பட்டு உரையாற்றினேன், மேலும் பார்வையாளர்களாக அமர்ந்திருந்த மக்கள் தயாளசிந்தனையுடையவர்களாக இருந்தனர். அவர்கள் எனக்கு பெரிதும் உதவினர். ஆனால் விடயம் இதுதான். ஒருவருக்கொருவர் முகம்பார்த்துப் பேசுவதாக இருந்தாலும் நாம் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது கடினமானது. குறிப்பாக நுணுக்கமான விடயங்கள் அல்லது கலந்துரையாடப்பட வேண்டிய விடயங்கள் குறித்து பேசுவது கடினமாக இருக்கலாம். ஆமாம், நாம் ஆரம்பத்தில் இருந்தே எவ்வாறு மொழிகளை ஓரணியில் கொண்டுவரப்போகிறோம் என்பது தொடர்பில் பேசிக்கொண்டிருக்கிறோம்.

ஆனால் அது மொழியோடு மட்டும் நில்லாமல், மொழிகளையும், அவர்களைச் சுற்றி வளர்கின்ற குறிப்பிட்ட கலாசாரங்களையும் உள்ளடக்கியது. சாதியின் பெரிய மற்றும் தவறான கோடு உள்ளது. மேலும் அது மிகவும் சிக்கலானது. ஏனெனில் சாதி வர்க்கம் மற்றும் பாலினம் என்பவற்றால் பிளவுண்டுள்ளது. மேலும், ஒரு கூட்டு வரலாறும் ஒரு தனிநபர் வரலாறும் உள்ளது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். அதன்மூலம் நாம் பெரும்பாலும் நாளாந்த அடிப்படையில் எமது கடந்தகால விடயங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். எம்மில் பலர் உயர் ஜாதி அல்லது உயர் வர்க்கம் அல்லது இந்து குடும்பங்களில் பிறந்தவர்கள், அல்லது பொதுவாக பலர் ஆண்களாக உள்ளவர்கள், வயது வந்தபின்னர் பகுத்தறிவைத் தெரிவு செய்து சமத்துவத்திற்காகக் குரல்கொடுப்பவர்கள். ஆனால் அவர்கள் இன்னும் சிறுவயதில் கொண்டிருந்த தப்பெண்ணத்தின் மிச்சசொச்சங்களை எச்சரிக்கையுடன் அடையாளம் காண வேண்டும். இது பிறப்பின் காரணமாக சில சிறப்பு வரப்பிரசாதங்களைப் பெற்றுள்ள அனைவரும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டிய விடயமாகும். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தில் பிறந்த காரணத்தினால், பாகுபாடு மற்றும் ஏதோவொரு வடிவத்திலான வன்முறை அல்லது வேறு விதமாக வாழ்பவர்கள், முதலில் அவர்கள் தங்கள் அடையாளத்தை கண்ணியமிக்க வகையில் உறுதிப்படுத்திக்கொள்வதற்கான ஒரு வழிமுறையாக பாவிக்க வேண்டும். ஆனால் அதனை எப்படியாவது அடுத்த கட்டத்திற்கு விரிவாக்க வேண்டும், குறுகிய அடையாள அரசியலை ஒரு கூட்டு இயக்கமாக வரிவாக்கம் செய்ய வேண்டும், அது மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அதிக சக்தியைக் கொண்டிருக்கும்.

குறிப்பாக காலனித்துவ ஆட்சியின் பின்னரான சூழ்நிலையில் மொழியும் அரசியலாகியுள்ளது. எம்மில் பலர் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதுடன் குறிப்பிடத்தக்க சில மொழிகள் அதிகாரமிக்கதாகப் பார்க்கப்படுவதினாலும் ‘உங்களுக்காக நான் குரல் கொடுக்கிறேன் என்பதிலிருந்து வேறுபட்டு அது உண்மையில் உங்களின் குரல்’ என்பதாக ஒலிக்க வேண்டும். இருப்பினும், நிச்சயமாக நீங்கள் மற்றவர்களுக்காக பேச வேண்டும். எனவே, எழுத்தாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் ஆகிய இருவரும் இதுவும் எமது நாளாந்த செயற்பாடு என்பதைப் புரிந்து சமபங்களிக்க வேண்டும். இந்த களம் எமது குரலைக் கேட்க முடியாத சில முகாம்களில் உள்ளவர்களின் செவிகளையும் எட்டுவதை உறுதி செய்யக்கூடியதாக இருக்க வேண்டும், இதனை பெரும்பாலும் முயற்சி மற்றும் தவறுகளிலிருந்தே நாம் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் நாம் ஒருவகையான புரவலராகவோ அல்லது பலம்மிக்க பேச்சாளராகவோ இல்லாமல் அதனைச் செய்வதற்கும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இது எழுத்தாளர்களாகவும், துறைசார் கல்விமான்களாகவும் அல்லது செயற்பாட்டாளர்களாகவும் பணியாற்றுகின்ற எமக்கு ஒரு பிரச்சினையாகவே உள்ளது.

நம்பிக்கை குறித்து ஆழமான ஒரு கேள்வியை அது எழுப்புகிறது. “இந்திய கலாசார கழகத்தின்” முதல் பக்கத்தில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது: “இந்திய எழுத்தாளர்கள் கழக அறக்கட்டளையானது பொதுக்கூட்டங்கள், செயலமர்வுகள், முகநூல் பதிவுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான தளங்களை அனுமதிப்பதற்காக இந்திய கலாசார கழகத்திற்கான தளத்தையும் எழுத்தாளர்கள், அறிவூட்டுபவர்கள், கலாசாரத்தைப் பின்பற்றுபவர்கள் மற்றும் கலாசார சமூகத்தில் பயணிக்கும் தனிநபர் மற்றும் கல்வியியல் சமூகத்தினருக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக மற்றும் குஃதுகு என்னும் பெயரில் மின்-கலாசார சஞ்சிகையையும் உருவாக்கியுள்ளோம்.” அந்த அறக்கட்டளை எப்படிச் செயற்படுகிறது என்பதையும் அது எவ்வாறு தோற்றம் பெற்றது என்பதையும் அறிவதற்கும் இந்த இரண்டு வௌ;வேறான பணியையும் எவ்வாறு ஒன்றிணைத்துச் செயற்படுகிறீர்கள் என்பது குறித்தும் மேலும் அது தனது ஆதரவினை எத்தகைய காத்திரமான வழிகளில் வழங்குகிறது என்பது பற்றியும் அறிவதற்கு நான் ஆவலாய் இருக்கிறேன்.

ஒரு பெரிய திட்டத்தில், இது இன்னும் ஒரு மிக எளிமையான முயற்சி என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். இப்பொழுது இருப்பதைவிடவும் அது பெரியது என்று நடிக்கக்கூடாது என்பது மிக முக்கியம். மறுபுறம், நாம் என்ன செய்துகொண்டிருக்கின்றோம் என்பதை எடுத்துக்கூறும் வகையில் ஒவ்வொருநாளும் கிடைக்கின்ற புதிய சான்று எம்மை பிரமிப்படையச் செய்கின்றது. ஆகவே நீங்கள் இதனைத் தொடர்ந்தும் வலிமையுடன் முன்னெடுத்துச் செல்வதற்கான ஒரு குறிப்பிடத்தக்க பொறுப்புணர்ச்சியை உணர்கின்றீர்கள். நாம் தி ஒயர், ஸ்க்ரோல்.இன், நியூஸ்கிளிக், சிட்டிசன் இன்னபிற போன்ற ஊடகத்தையும் பெற்றுள்ளோம். அவை அனைத்தும் சிறப்பான பணிகளைச் செய்கின்றன; நாம் சபரங் மற்றும் ரவுண்ட் டேபிள் இந்தியா போன்ற மேலும் பல செயற்பாட்டு ஊடகங்களையும் பெற்றுள்ளோம் அவைகளும் சிறப்பான செயற்பாட்டுப் பணிகளையும் ஏனைய பணிகளையும் மேற்கொள்கின்றன. இருப்பினும் எமது கலாசாரத்தில் உள்ள அரசியலையும், கலைப்படைப்பையும் பார்க்கையில், எழுத்தறிவு மற்றும் கலாசாரத்தைப் பின்பற்றுவதற்கு செயற்பாட்டுரீதியான தலையீடுகளைச் செய்வதற்கென்று பிரத்தியேக தேவை உள்ளது. அதன் சிக்கல் நிறைந்த சுற்றுவட்டப் பாதையில் பொதுவெளியில் நாம் எத்தகைய நேரடித் தலையீடுகளை மேற்கொள்கிறோம் என்பதற்கு ஒப்பான கேள்விகளை முன்வைக்கிறது.

கற்றல் வளைவில் நாம் பயணிக்க வேண்டியதூரம் அதிகம் உள்ளது என்றே நான் கூறவேண்டும். எம்மிடம் உள்ள வளங்கள் மிகவும் குறைவாக இருப்பதால் அவை அவ்வாறு இருக்க வாய்ப்பு உள்ளது. நாம் வேறு எங்கிருந்தும் நிதியுதவியைப் பெற்றுக்கொள்ளப்போவதில்லை. தவிர்க்க முடியாத பட்சத்தில் ஓரிரு இடங்களிலிருந்து மாத்திரம் அத்தகைய உதவியைப் பெற்றுக்கொள்வோம். மற்றபடி அவை பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படுகின்ற சிறிய நன்கொடைகளாக மட்டுமே இருக்கும். இது எம்மால் என்ன செய்ய முடியும் என்பதை வரையறுக்கிறது. இருப்பினும், எமது நண்பர்களின் மூலம் உதாரணமாக, “நான் உங்களது இணையதளத்திற்காக சிறிது நேரத்தை செலவழித்து உதவுகிறேன்” அல்லது “நான் நீங்கள் பணியாற்றுவதற்கான இடவசதியைக் கொடுத்து உதவுகிறேன்” என்ற உதவிகளும் கிடைக்கின்றன.

பரந்த அளவில் ஏனைய குழுக்களுடன் இணைந்து பணியாற்றியமைக்கான சில உதாரணங்களைக் கேட்டிருந்தீர்கள். உங்களுக்கு சமீபத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். மே மாதத்தில் நான் என்னும் இணைந்து பணியாற்றும் இந்திய கலாசார கழகத்தைச் சர்ந்த இளைஞர்களுடன் தார்வாடுக்குச் சென்றிருந்தேன். அங்கு வந்திருந்த ஒவ்வொருவரும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த குழுவினராகவும் முற்போக்கு கீதங்களை இசைக்கும் இளைஞர் குழுக்கள் முதல் தலித்திய எழுத்தாளர்களாகவும் மற்றும் விமர்சகர்களாகவும் இருந்தனர். அது ஒரு பிரமாண்டமான அணிதிரள்வாக இருந்தது. மேலும் தார்வாட் உண்மையில் மிகவும் விரும்பத்தக்க ஒரு இடம். கல்பர்கி அங்குதான் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார் என்பதற்கும் அப்பால், அது ஒரு எல்லைப் பிரதேசம், ஏனைய எல்லைப் பிராந்தியங்களைப் போன்றே தீவிர கலாசார பாரம்பரியத்தைக் கொண்டிருந்தது. அந்த இடம் சாந்தன் சாந்தா குழுவின் வளர்ச்சியைக் குறிப்பிடக்கூடிய இடமாகவும் தபோல்கர் மற்றும் பன்சாரே ஆகியோரின் மரணத்துடன் தொடர்புபடுத்தப்பட்ட இடமாகவும் இருந்தது.

தார்வாடில் நாங்கள் ஒரு பெருமளவான மக்கள் மத்தியில் உரையாற்றுகின்ற வாய்ப்பும் வருகைதந்திருந்த பல்வேறுவகையான மக்களிடமிருந்து எமக்கு ஆர்வமான விடயங்களில் கருத்துக்களைக் கேட்பதற்கான வாய்ப்பும் எமக்கு கிடைத்தது. நாம் புரிந்துகொள்வதற்கு முயற்சிக்கின்றோம். உதாரணமாக கல்வித்துறையில் என்ன நடக்கிறது என்பதைக் குறிப்பிடலாம். நீங்கள் எமது பல்கலைக்கழகங்களில் என்ன நடக்கிறது என்பதை அறியாமல் மாற்றத்தைக் குறித்தோ, கருத்துச் சுதந்திரத்தைக் குறித்தோ, அல்லது மரியாதையுடன் வாழ்வதற்கான சுதந்திரம் குறித்தோ பேசமுடியாது. எனவே நாம் கல்வித்துறையில் என்ன நடக்கிறது என்பது பற்றியும் அங்கு பல்வேறு மட்டங்களில் மேற்கொள்ளப்படுகின்ற தணிக்கைகள் குறித்தும் எமது பார்வையைச் செலுத்த வேண்டியுள்ளது. உதாரணத்திற்கு குஜராத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை எடுத்துக்கொள்வோம். முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்ள வருபவர்களிடம் அவர்கள் இந்தத் தலைப்பைத்தான் தெரிவு செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். எமது சக கூட்டாளியும் சமூகவியலில் பிரசித்திபெற்றவருமான கன்சியாம் ஷாவுக்கு குஜராத்திலுள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் குஜராத்தில் நிலவும் சாதியமுறைபற்றிய செயலமர்வை நடத்துவதற்கு அனுமதி கிடைக்கவில்லை. இது மிகவும் மோசமான செயல். இதன் மூலம் – நீங்கள் இந்தியாவில் ஒரு கருத்தரங்கைக்கூட நடத்த முடியாது என்று சொல்கிறீர்கள்!

தார்வார்ட் மக்களுடன் சந்தித்து உரையாடியபோதும் அவர்கள் எதைச் சொல்லவேண்டும் என்பதைச் செவிமடுத்தபோதும், நாம் அவர்கள் என்ன செய்கிறார்கள் நாம் என்ன செய்கிறோம் என்பதற்கு இடையிலான தொடர்ச்சியான இணைப்புக்களை எப்படி பேணவேண்டும் என்ற நல்ல எண்ணக்கரு எமக்குக் கிடைத்தது. என்னுடன் இணைந்து பணியாற்றும் ஒருவர் தனது நோட்டுப் புத்தகம், வீடியோ கேமரா சகிதம் அங்கு வந்திருந்த எழுத்தாளர்கள், இளம் ஆர்வலர்கள், மாணவர்கள், பெண்கள் இயக்கங்கள் அல்லது பிற குழுக்களைச் சேர்ந்தவர்கள் ஆகியோரின் நாளாந்த செயற்பாடுகள் குறித்தும் அவர்கள் எத்தகைய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர் என்பது குறித்தும், உள்ளுரில் கொழுந்துவிட்டு எரியும் பிரச்சினைகள் என்பது குறித்தும் கேட்டறிந்துகொண்டார். நாம் ஊடகங்களின் வாயிலாக படித்திராத அல்லது கேள்விப்படாத பல விடயங்கள் அல்லது முன்னேற்றங்கள் உள்ளன. ஊடகம் “பிராந்திய” செய்திகள் மற்றும் “தேசிய” செய்திகள் என்று இறுக்கமான பிரிவை ஏற்படுத்த முனைகின்றது. ஆகவே நாம் பல்வேறு இடங்களுக்குச் சென்று உரையாடலைத் தொடங்குகின்றபோது நாம் பொருத்தமான தகவலைப் பெற்றுக்கொள்கிறோம் மேலும் தகவலைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு வலையமைப்பையும், பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளையும் உபாயங்களையும் கட்டியெழுப்ப முடிகிறது. அதுவே ஒரு பரந்த முன்னணியைக் கட்டியெழுப்புவதற்காக கட்டம் கட்டமாக நாம் மேற்கொள்ளும் சிறிய முயற்சி.

 

மீண்டும் ஜுனெய்னிற்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை மற்றும் அதற்கு எதிரான தேசிய அளவிலான எதிர்ப்பு மற்றும் பிரச்சார நடவடிக்கைகள் விடயத்தில்; “என் பெயரில் இல்லை” அது முடுக்கிவிடப்பட்டது … என்ற விடயத்திற்கு வருவோம்….

ஆம் நேற்றுமாலை டெல்லி மற்றும் இந்தியாவின் ஏனைய நகரங்களில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அது மிகவும் தெளிவாக எனது பெயரைப் பயன்படுத்தி கொலை செய்யாதீர்கள் என்று உரத்துக் கூறியது. http://indianculturalforum.in/2017/06/29/it-was-loud-and-clear-dont-kill-in-my-name/  அது எமக்கு நல்ல பாடமாக அமைந்தது. “பழமைவாதிகள்” அந்த இயக்கங்களின் பங்குதாரராக இருந்தனர். இது மக்களை அணிதிரட்டுவதற்கான மற்றொரு வழியாக அமைந்தது. ட்விட்டர், முகநூல் போன்ற பல வழிகளைப் பயன்படுத்தி வயதெல்லையைப் பொறுத்தவரை அனைவரும் கலந்த ஒரு கலவையாகவும் அரசியல் அல்லது மூர்க்கத்தனமான அரசியல் விசுவாசமின்றி மக்களாக, குடிமக்களாக இந்த பிள்ளை ஜூனைனும் அவரது சகோதரர்களும் இஸ்லாமியர்கள் என்று அடையாளம் காணக்கூடியவகையில் அவர்கள் அணிந்திருந்த தொப்பி மற்றும் அல்லது வேறு எதற்காகவோ தொடருந்தில் தாக்கப்பட்ட உண்மைச் சம்பவத்தைக் கண்டித்து கிளர்ந்தெழுந்தனர். இதை விட கொடூரமானது எதுவும் இருக்க முடியாது, மேலும் அதைவிட தொடருந்தில் பயணித்த ஒருவரும் தலையிட்டு தடுக்க முற்படாததைவிடவும் வேறு எதுவும் மிகவும் கொடூரமானதாக இருக்க முடியாது.

இத்தருணத்தில், வாஜ்பாய் தலைமையின்கீழான பாரதீய ஜனதா கட்சியின் முதலாவது ஆட்சிக்காலத்திலேயே அவர்களது சித்தாந்தம் எவ்வளவு ஆபத்தானது என்பது எமக்குத் தெரியும். அது இப்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கலாசார சமூகத்தின் பொறுப்புக்களை அவதானிக்கும்போது நாம் வெறுமனே எழுத்தாளர்களின் உரிமைகள் அல்லது வாசகர்களின் உரிமைகள் பற்றி மட்டும் பேசவில்லை மாறாக கீழ்த்தரமான கலாசார யுத்தமாக மாறியுள்ள இந்திய குடிமக்கள் மத்தியில் ஒரு இந்தியக் குடிமகனாக வாழ்வதற்கான உரிமையின் அடிப்படையில் அடிமட்டத்தில் வாழ்கின்ற மக்களை வாழவைப்பது குறித்தும் பேசுகின்றோம்.

என் முந்தைய கேள்விகளுக்கான உங்களது பதில்களில் சிலவற்றைப் படிக்கும்போது உண்மையில் பேச்சுச் சுதந்திரம், எழுதுவதற்கான உரிமை, எழுத்தாளர்களின்மீது திணிக்கப்பட்டுள்ள வன்முறை ஆகிய பிரச்சினைகளை அதேசூழலிலும் அவர்களின் கண்ணோட்டத்திலும் முன்வைத்துள்ளீர்கள். எழுத்தாளர்களின் போராட்டத்தை ஏனைய போராட்டங்களிலிருந்து பிரிக்கமுடியாது என்பதை நீங்கள் வலியுறுத்துகிறீர்கள். நாம் வெறுமனே எழுத்தாளர்களின் பேச்சுரிமை அல்லது வெளியீட்டுரிமை பற்றி மட்டும் பேசாமல் பெண்கள் தனியாக நடந்து செல்வதற்கான உரிமை அல்லது அவர்கள் இரவில் வெளியில் செல்வதற்கான உரிமை, கௌரவமிக்க வாழ்க்கையை மேற்கொள்வதற்கான தலித்துகளின் உரிமை, இஸ்லாமியர்கள் தாங்கள் விரும்பிய உணவை உண்பதற்கான உரிமை உள்ளிட்ட ஏனையவை குறித்தும் நாம் பேசுகிறோம். அவை இந்திய காலாசா கழகத்தில் எழுப்பப்படுவதன் மூலம் எப்படி வேறுபடுகிறது என்பதை எடுத்துக்காட்டுகின்றது.

பிரச்சினைகள் வேறுபட்டவையாகத் தோன்றுகின்றன, இருப்பினும் அரசியலமைப்பைப் பயன்படுத்தியோ அல்லது இயங்கிக்கொண்டிருக்கும் ஜனநாயகக் கோட்பாடுகளைப் பயன்படுத்தியோ, மதச்சார்பின்மைக்கான வழிகாட்டுதல்களைப் பயன்படுத்தியோ நீங்கள் அனைத்தையும் இணைக்கமுடியும். அனைத்திற்கும் மேலாக, ஒவ்வொரு வேறுபாடான அமைப்பிலும் கடைப்பிடிக்க வேண்டிய சமத்துவம் மற்றும் ஜனநாயகத்தினூடாக நீங்கள் அதனை இணைக்க முடியும்.

இறுதியாக ஒரு கேள்வி. எமது கருத்திட்டம் எழுத்தாளர்களுக்கான அமைப்புக்களை மையப்படுத்தியது என்பதை நீங்கள் அறிவீர்கள். பெருமளவில் குறிப்பிடக்கூடியதாக இருந்தாலும் இன்டர்நேஷனல் பென்னை மற்றும் அதன் தேசிய கிளைகளைவிடவும் தனித்துவமில்லாததாகவும் இருப்பதும் உங்களுக்குத் தெரியும். தற்போது, இந்தியாவில், PEN மையம் உண்மையில் பேச்சுசுதந்திரப் பிரச்சினையை முன்னெடுப்பதில் முன்னணியில் இல்லை, ஆனால் நீங்கள் PEN All-India PEN அல்லது சமீபத்தில் அமைக்கப்பட்ட தில்லி மையத்துடன் உங்களுக்கு தொடர்பு உள்ளதா? அல்லது உங்களுக்கும் ஐஊகு க்கும் தற்போது பெங்களூரில் நிறுவப்படவுள்ள அமைப்பிற்கும் இடையில் ஏதோஒரு வழியில் தொடர்புள்ளதா? மேலும் PEN  உங்களுக்காக எதை பிரதிநிதித்துவப்படுத்துகிறது?

நான் மிகவும் இளைஞராக இருந்தபோது பென்னைப் பற்றி நான் முதலாவதாக அறிந்தேன், மேலும் கவிஞர் நிசாம் எசெக்கியெல் பென் நிறுவனத்தின் ஒரு பகுதியாகத் திகழ்ந்தார் அது பின்னர் மும்பைக்குச் சென்றது. ஐசிஎப்ற்கு பென்னுடன் எத்தகைய தொடர்பும் கிடையாது. இந்தியாவிலும் சர்வதேச மட்டத்திலும் உள்ள தனிநபர்கள் பென்னில் பங்குவகித்தாலும் அவர்கள் ஐசிஎப்க்கும் ஆதரளிக்கின்றனர். 2015ம் ஆண்டில், இந்தியாவில் உள்ள எழுத்தாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பென் வெளியிட்ட சிறந்த அறிக்கைகள் எம்மிடம் உள்ளன. உதாரணமாக நாம் ஐசிஎவ்வில் பதிப்பித்திருந்த பென் இன்டர்நேஷனல் நிறுவனத்திடமிருந்து ஆதரவு தெரிவித்து விடுக்கப்பட்ட அறிக்கையைக் குறிப்பிடலாம். அந்த கடிதம் நரேந்திர மோடியின் விஜயத்திற்கு முன்னர் பிரித்தானிய பிரதமருக்கு எழுதப்பட்டது. அநத்தகைய ஆதரவானது எழுத்தாளர்களின் போராட்டங்களுக்கு மிகப் பெரிய உந்துசக்தியாக அமைந்தது என்று நான் நினைக்கிறேன். ஏராளமான எழுத்தாளர்கள் தமது பணி வாழ்க்கையை ஒப்பீட்டளவில் தனிமையிலேயே கழிக்கின்றனர். ஒவ்வொரு துளி ஆதரவும் அவர்கள் பொதுவெளியில் நுழைவதற்கும் குரல்கொடுப்பதற்கும் முடிவெடுக்க உதவும்.

தமிழில் : தேசிகன் ராஜகோபாலன்-இலங்கை 

தேசிகன் ராஜகோபாலன்

0000000000000000000000000000000

கீதா ஹரிகரன் பற்றிய சிறுகுறிப்பு :                                                    

தேசிகன் ராஜகோபால்கீதா ஹரிகரன் எழுத்தாளர், ஆசிரியர் மற்றும் செயற்பாட்டாளர். தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையில் பிறந்து, இந்தியாவின் மான்செஸ்டர் மும்பையிலும் பின்னர் மனிலாவில் வசித்து தற்பொழுது புதுடெல்லியில் தங்கி பணியாற்றி வருகின்றார். அவரது முதலாவது நாவலான தி தௌஸன்ட் ஃபேசஸ் ஓவ் நைட் (இரவின் ஆயிரம் முகங்கள் – (The Thousand Faces of Night) 1993ஆம் ஆண்டு பொதுநலவாய எழுத்தாளர்களுக்களின் சிறந்த முதலாவது புத்தகம் என்னும் பரிசை வென்றது. 1994ஆம் ஆண்டு வெளிவந்த வாசுமாஸ்டரின் பேய்கள் (The Ghosts of Vasu Master), 1999ஆம் ஆண்டு வெளிவந்த கனவுகள் பயணிக்கையில் (When Dreams Travel), 2003ஆம் ஆண்டின் இருட்டடிப்புக் காலங்கள் (In Times of Siege), மற்றும் 2009ஆம் ஆண்டின் தப்பித்தல் கதைகள் (Fugitive Stories) என்பன அவரது ஏனைய நாவல்களாகும். பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக 2014ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து பாலஸ்தீனம் வரை என்னும் கட்டுரைத் தொகுப்பையும் எழுதியுள்ளார். இத்துடன் தனது தாயகத்தை மையப்படுத்தி நகரங்களும் ஏனைய இடங்களும் என்னும் தலைப்பில் ஒரு கட்டுரைத் தொகுப்பையும் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார்.

கவிஞர் கே. சச்சிதானந்தன், வரலாற்றாசிரியர் றொமிலா தாப்பர் மற்றும் இந்திய உச்சநீதிமன்ற வழக்கறிஞரான இந்திரா ஜெய்சிங் ஆகியோருடன் இணைந்து ‘கலாசார அரசியலுக்கான தளம்’ என்று தன்னை அழைத்துக்கொள்கின்ற இந்திய எழுத்தாளர்கள் கழகம் என்னும் அமைப்பை தோற்றுவித்தார். இத்தகைய பெருமைக்குரியவரான கீதா ஹரிகரனுடனான நேர்காணலைத்தான் நீங்கள் இனி வாசிக்கப்போகிறீர்கள். இந்த நேர்காணலானது  மின்னஞ்சல் மூலமாகவும் ஸ்கைப் உரையாடலூடாகவும் 2017ஆம் ஆண்டு ஜூன்மாதம் மேற்கொள்ளப்பட்டது.

லெட்ரீசியா செச்சினி

தேசிகன் ராஜகோபாலன்

(Visited 77 times, 1 visits today)