நடு இணைய சிற்றிதழை ஏன் விரும்புகின்றீர்கள்?-ஆசிரியர் குறிப்பு

வணக்கம் நடு வாசகர்களே,

நடு லோகோஇதுவரையில் 28 இதழ்களைத் தொடர்ச்சியாக வாசகர்களுக்காக வழங்கியிருக்கின்றோம். புலம்பெயர் நாட்டில் சமகாலத்தில் எமெக்கென்று தொடர்ச்சியாக இயங்குகின்ற மற்றும் இலக்கியத்தைத் தொடர்ச்சியாகப் பேசுகின்ற ஒரேயொரு இணைய சிற்றிதழ் என்று எம்மை நாம் வரையறை செய்து கொண்டாலும், எமது செயற்பாடுகள் பற்றிய கருத்துக்களை வாசகர்களாகிய உங்கள் மூலமே அறிய விழைகின்றோம் . நீங்கள் எமக்குச் சொல்கின்ற கருத்துக்களே எம்மை வருங்காலத்தில் வழிநடாத்த வல்லன என்பதை நாம் அறிவோம். ஆகவே எம்மை மீளாய்வு செய்வதற்காக இந்தக்கேள்வியை உங்கள் மீது வைக்கின்றோம். கீழே இருக்கின்ற இணைய சுட்டியினைத் திறந்து அங்கே கொடுக்கப்பட்டிருக்கும் தெரிவுகளுக்கு நீங்கள் அனைவரும் வாக்களிப்பதன் மூலம் உங்கள் நடு இணைய சிற்றிதழை வருங்காலத்தில் மேலும் புதிய வீச்சுடன் கொண்டு செல்லலாம் என எண்ணுகின்றோம்.

நடு குழுமம்

 

000000000000000000000

நடு இணைய சிற்றிதழை ஏன் விரும்புகின்றீர்கள் ?

01 வடிவமைப்பு மற்றும் நவீன தொழில் நுட்பம்

02 சுய ஆக்கங்களுக்காக வெளியாகும் ஓவியங்கள்

03 ஆக்கங்களின் தரம்

04 எழுத்தாளர்களுக்குப் பாரபட்சமில்லாது களம் அமைத்துக் கொடுத்தல்

05 குறிப்பிட்ட வட்டத்திற்குள் நில்லாத பன்முகத்தன்மை

06 குறித்த நேரத்திலும் காலத்திலும் தொடர்ச்சியான வருகை

07 வேறுவகையான கருத்துக்கள் /ஆலோசனைகள்

உங்கள் கருத்துக்களை வாக்களிப்பு மூலம் சொல்வதற்கு :

https://docs.google.com/forms/d/19cCdwokNtT_XXz3mrYWs3_JjnxM2Alyj_5RigH2Rj2o/edit

 

(Visited 872 times, 1 visits today)