புற எழுத்துகள்-நடு குழுமம்

நூல் பற்றிய குறிப்பு :

“கனிந்து செறிந்த மன முதிர்விலிருந்து, வழியிடையே கவித்துவம் பளீரிடும் அனாயாச சொற்தொடுப்புகளில் வந்தடைந்திருக்கின்றன இந்தக் கதைகள். ஒவ்வொன்றும் தன் சகல தனித்துவத்துடனும் நம்பகத்துடனும் உணர்வுகளெல்லாம் நிரந்தரத்தில் துடித்திருக்க, அதனதன் முழுமையில் நம்முள் வாழ்வாகின்றன. இந்தக் கதைகள், என்னுள் சற்றே அசந்திருந்த, எழுத்தின் வலிமையையும் சாத்தியங்களையும் பற்றிய வியப்பையும் மதிப்பையும் மீண்டும் ஒரு முறை உசுப்பி மலர்த்தியிருக்கின்றன. அந்தளவில் தமிழ்நதிக்கு என் நன்றி. இவை, மொழிகளிடையே கூடுபாய்ந்து மனங்களிலெல்லாம் கூடுகட்ட விழைவதாக உணர்கிறேன்.”

-யூமா வாசுகி

நூலின் பெயர் : மாயக்குதிரை

ஆசிரியர் : தமிழ்நதி

பகுப்பு : சிறுகதைகள்

வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ்

விலை : 150.00 IRS

தொடர்பு : டிஸ்கவரி புக் பேலஸ்

00000000000000000000000

நூல் பற்றிய குறிப்பு :

இந்தக் கதைகளை ஊன்றிக் கவனித்தால், இவற்றில் ஒரு வரலாற்று அடையாளத்தைக் காண முடியும். அதேவேளை ஒருகாலகட்டத்தின் முகத்தையும் உணரலாம். சாத்திரி போராளியாகவும் தனித்தும் உலாவிய இடங்களின் தடங்கள் தெரிகின்றன. அதில் ஒளியும் இருளும் உண்டு. இவையெல்லாம் இணைந்து புனைவாகவும் நிஜமாகவும் இணைந்திருக்கின்றன. மறுவளமாகச் சொன்னால் உண்மை மனிதர்களின் கதைகள் இவை என்பதால் வலியும் துயரும் மகிழ்வும் வாசனையும் அழுக்கும் தூய்மையும் விருப்பும் வெறுப்பும் இனிப்பும் கசப்பும் இவற்றில் உண்டு.

நூலின் பெயர் : அவலங்கள்

ஆசிரியர் : சாத்திரி

பகுப்பு : சிறுகதைகள்

வெளியீடு : எதிர் பதிப்பகம்

விலை : 180 IRS

தொடர்பு : எதிர் பதிப்பகம்

00000000000000000000000

நூல் பற்றிய குறிப்பு : 

‘யுத்தத்தின் முதலாம் அதிகாரம்’ யுத்தத்தினது அல்ல, யுத்தம் தோன்றியதின் கதை. காலகாலமாக இலங்கைச் சமூகங்களுக்கிடையேயான முறுகல்நிலை மூண்டுவந்ததின் கதை. ‘கனவுச்சிறை’, ‘கலிங்கு’ ஆகிய நாவல்களின் தொடர்ச்சியை ஒரு தேர்ந்த வாசகனால் இங்கிருந்து காணமுடியும். 1800 – 2015 வரையான நீள்பரப்பில் நிகழும் Trilogy வகையான காலத்தின் ஒற்றை நெடுங்கதையில் 1800-1975 பகுதியின் களத்தை விரிக்கும் முதலாம் பாகம் இது.

நூலின் பெயர் : யுத்தத்தின் முதலாம் அதிகாரம்

ஆசிரியர் : தேவகாந்தன்

பகுப்பு : நாவல்

வெளியீடு : வடலி பதிப்பகம்

விலை : 280 IRS

தொடர்பு : வடலி பதிப்பகம்

00000000000000000000000

நூல் பற்றிய குறிப்பு :

இயக்குனர் வெற்றிமாறனின் அதிர்வு வெளியீடு,ஜியோங் ரோங் எழுதிய சீன நாவலை  “ஓநாய் குலச்சின்னம்” எனும் பெயரில் சி.மோகன் அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டுத் தற்போது வெளியிட்டுள்ளது. உலகமெங்கும் ஒரு கோடி பிரதிகளுக்கு மேல் பல்வேறு மொழிகளில் விற்பனையான 21-ம் நூற்றாண்டின் மகத்தான நூலாக இது கருதப்படுகிறது. இந்நாவல் நம் வாழ்வுக்கான சுடர். ஞான சிருஷ்டி என்று புகழப்படுகிறது.

இந்த நாவலை ஒரு கருத்தாகப் புரிந்து கொள்ள, காந்தியின் வரி ஒன்றே போதுமானது. இயற்கையால் ஒவ்வொருவரின் தேவையையும் பூர்த்தி செய்ய முடியும், ஆனால் ஒற்றை மனிதனின் பேராசையை கூட அதனால் பூர்த்தி செய்ய முடியாது. இங்கே ஒற்றை மனிதன் என்பதை, ஒற்றைப்பார்வை கருத்தியல் (visone dimensional ideology) என்று கூட இட்டு நிரப்பலாம்.

வாசகன் தன் வாழ்வை ஏதோ ஒரு புள்ளியில் படைப்புடன் அடையாளப்படுத்திக் கொள்ள முடிந்தால், அது ஒரு நல்ல இலக்கியம். இந்த நாவல் உங்களை அப்படி உணரச் செய்யும் அளவிற்கு நம்மைச் சுற்றிக் காரணங்கள் நிரம்பி இருக்கின்றன. ஏனெனில், நாம் ஒவ்வொருவரும் ஜென்சென்னைப் போல, இயற்கையைப் புரிந்துகொள்ள நினைத்தோ, சீன விவசாயிகளைப் போல புரிந்து கொள்ள மறுத்தோ/முயலாமலோ அதைச் சுரண்டி, அழிக்கும் வேலையையே செய்கிறோம். நம்மிடையே இயற்கையை உணர்ந்த பில்ஜிகள் குறைவு, அதனால் – டெஞ்ஞருக்கு வேலை அதிகமிருப்பதாகவே தோன்றுகிறது.

நூலின் பெயர் : ஓநாய் குலச்சின்னம்

ஆசிரியர் : ஜியாங் ரோங், தமிழில்: சி.மோகன்

பகுப்பு : மொழிபெயர்ப்பு நாவல்

வெளியீடு : புலம் வெளியீடு

விலை : 500.00 IRS

தொடர்பு : புலம் வெளியீடு

00000000000000000000000

நூல் பற்றிய குறிப்பு :

இந்தச்  சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகளில் ஒவ்வொன்றிலும் நான் தனிப்பட்ட  பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை முயற்சிகளை செய்திருக்கின்றேன்.  எம்மவரிடையே காலங்காலமாகப் பேணப்பட்டுவரும் புனிதப்படுத்தல்களை கேள்விக்குட்படுத்தி உடைத்தெறிந்திருக்கின்றேன்.

கோமகன்

நூலின் பெயர் : முரண்

ஆசிரியர் : கோமகன்

பகுப்பு : சிறுகதைகள்

வெளியீடு : எதிர் பதிப்பகம்

விலை : 120.00 IRS

தொடர்பு : எதிர் பதிப்பகம்

(Visited 185 times, 1 visits today)