வாசிகசாலை-நடு குழுமம்

01 பார்த்தீனியம்

கனடாவைச் சேர்ந்த தமிழ்நதியின் பார்த்தீனியம் நாவல் வெளியாகி உள்ளது . இந்த நாவலானது காதல் கதையிநூடே இந்திய அமைதிப்படை தமிழர் விடுதலைப்போராடடத்தில் அது ஏற்படுத்திய பேரழிவுகளையும் மானிட விழுமியங்களையும் கதைக்களமாக முன்வைக்கப்பட்டு நற்றிணை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது .இதன் விலை 490 இந்திய ரூபாய்களாகும் . டிஸ்கவரி புத்தக நிலையத்தில் இந்த நாவலை வாசகர்கள் பெற்றுக்கொள்ளலாம் .

இதழ் 02 ஆடி ஆவணி புரட்டாசி 2016 - வாசிக சாலை

0000000000000000000000000

02 கந்தசாமியும் கலக்சியும்

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஜே கே படலையின் இரண்டாவது படைப்பாக “கந்தசாமியும் கலக்சியும் ” என்ற அரசியல் வெடிகள் கலந்த அறிவியல் விஞ்ஞான புனைவு நாவல் வடிவில் மகிழ் பதிப்பகத்தால் வெளியாகியுள்ளது .ஈழத்து படைப்புலகில் அறிவியல் அறிவியல் விஞ்ஞான புனைவு மிகவும் அருந்தலான நிலையில் ஜே கே யின் கந்தசாமியும் கலக்சியும் புதிய கதை சொல்லும் உத்தியுடன் புதிய நம்பிக்கையைத் தருகின்றது . மிகத்தரமான வடிவமைப்பையும் அச்சுப்பதிப்பையும் மகிழ் பதிப்பகம் தாயகத்திலேயே பாதிப்புத்துறையில் புதிய நம்பிக்கையை படைப்பாளிகளுக்கு உருவாக்கி தந்துள்ளது . இந்த நாவலானது 208பக்கங்களில் 350 இலங்கை ரூபாய்களுக்கு இலங்கையில் கிடைக்கின்றது.சர்வதேச வாசகர்கள் 20 அமெரிக்க டொலர்கள் செலுத்தி www.padalay.com இல் ஒன் லைனில் பெற்றுக்கொள்ளலாம்.

இதழ் 02 ஆடி ஆவணி புரட்டாசி 2016 - வாசிக சாலை

000000000000000000000000000

03 முகிலினி

தமிழகத்தில் வசித்துவரும் இரா முருகவேளின் ” முகிலினி ” புதினம் பொன்னுலகம் பதிப்பகத்தால் வெளியாகியுள்ளது. இந்தப் புனைவானது ஆறுகள் மீதான மனிதனின் வன்முறையையும் மானிட வரலாறுகளின் மீதும், சமகால அரசியல் பிறள்வுகள் மீதும் கதைக்களமாகக் கொண்டு நடைபோடும் புதினம்தான் ‘முகிலினி’. பவானி சாகரம் அணைக்கட்டு கட்டப்படும் காலகட்டத்தில் தொடங்கும் இந்த நாவலானது கோயம்புத்தூரின் வரலாற்றுடனும் , 1949ஆம் ஆண்டு தொடங்கி சுமார் 60 ஆண்டு காலத் தமிழக, இந்திய வரலாற்றை இந்த புதினம் பதிவுசெய்கிறது.பொன்னுலகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இந்த புதினத்தின் விலை 375 இந்திய ரூபாய்களாகும். இந்த புதினத்தைப் பெற்றுக்கொள்ள பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் .

இரா .முருகவேள்
விலை: ரூ. 375
வெளியீடு: பொன்னுலகம் பதிப்பகம்,
திருப்பூர் 641 603.
கைபேசி: 94866 41586,
மின்னஞ்சல்: ponnulagampathippagam@gmail.com
பொன்னுலகம் பதிப்பகம் 2016

இதழ் 02 ஆடி ஆவணி புரட்டாசி 2016 - வாசிக சாலை

0000000000000000000000000000

04 இரண்டாம் லெப்ரினன்ட்

அகரமுதல்வனின் புதிய படைப்பான “இரண்டாம் லெப்ரினன்ட்” சிறுகதைத்தொகுதி ,தோழமை பதிப்பகத்தின் மூலம் ,120 பக்கங்களில் கடந்த ஏப்பிரல் மாதம் வெளியாகி உள்ளது. முள்ளிப்பேரவலத்தின் நிகழ் காலத்தையும் அதன் பிற்பாடு சிறப்பு முகாம் மற்றும் புனர்வாழ்வு மையம் போன்றவற்றில் இலங்கை ராணுவம் போர்கைதிகளை எவ்வாறு சித்திரவதைகள் செய்து மநோயாளர்களாக்கி நடைபிணங்களாக வெளியே விடடார்கள் என்பதை இரண்டாம் லெப்ரினன்ட் சிறுகதைகள் விபரிக்கின்றன .இதன் விலை 100 இந்திய ரூபாய்கள் ஆகும் தமிழகத்தின் அனைத்து முக்கிய புத்தகக்கடைகளில் வாசகர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

இதழ் 02 ஆடி ஆவணி புரட்டாசி 2016 - வாசிக சாலை

000000000000000000000000000000

05 இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு

பெரிய பிரித்தானியாவில் வசிக்கும் பாலன் தோழரின் இரண்டாவது படைப்பான “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” வரலாற்று ஆவணம் கடந்த ஜூன் மாதத்தில் தோழர் பதிப்பகத்தின் ஊடாக 58 பக்கங்களில் வெளியாகி உள்ளது. இலங்கை சுதந்திரமடைந்த நாளில் இருந்து இற்றைவரை இலங்கையில் இந்தியாவின் ஆதிக்கத்தை நூல் விலாவரியாக எடுத்துச்சொல்கின்றது .தமிழர் வாழ்வியலில் வரலாற்று நூல்கள் ஆவணப்படுத்தப்படுகின்றமை அருந்தலாகக் காணப்படுகின்ற வேளையில் இந்த நூலானது தமிழர் வரலாற்றில் புதிய நம்பிக்கையை தருகின்றது .வாசகர்கள் நூலினைப் பெற்றுக்கொள்ள 00447753465573 என்ற தொலைபேசி இலக்கத்திலோ அல்லது tholar2003@hotmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம் . சர்வதேச மட்டத்தில் இந்த நூல் கிடைக்கும் இடங்கள் :
லண்டனில் பௌசர் புத்தக கடையில் பெற்றுக் கொள்ளலாம்.
முகவரி:
317 First Floor,
High Street North,
Eastham,
London,
E12 6SL,
கைத் தொலைபேசி- 07817262980

•கனடாவில் முருகன் புத்தக நிலையத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
முகவரி:
Murugan Book Stores,
5215 Finch Ave,
E #123 Toronto,
ON,
M1S 0C2
தொலைபேசி : 416 3210285
இலங்கை, இந்தியா மற்றும் பிரான்ஸ்; நாடுகளில் நூல் கிடைக்குமிட விபரங்கள் விரைவில் அறிய தரப்படும்.

இதழ் 02 ஆடி ஆவணி புரட்டாசி 2016 - வாசிக சாலை

00000000000000000000000000000

06 வல்லிசை

அழகிய பெரியவனின் “வல்லிசை ” நாவல் நற்றிணை பதிப்பகத்தின் மூலம் 320 பக்கங்களில் வெளியாகியுள்ளது .இந்த நாவலின் கதைக்களமானது தமிழக ஆந்திர எல்லைப்பகுதிகளிலும் ,தமிழக கர்நாடக எல்லையோரப்பகுதிகளிலும் வாழ்ந்து வந்த தீண்டத்தகாத சனங்களின் வாழ்வினையும் அவர்களது இழிநிலை வாழ்வை எவ்வாறு அரசில் கட்சிகள் தங்களது வாக்கு வங்கிகளுக்காக பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதனையும் கேள்விகளுக்குட்படுத்தி விரிந்து செல்கின்றது . இந்த நாவலானது சாதாரண வாசகர்களுக்கு எளிதில் புரிந்து கொள்ள முடியாத கடினமான சொல்லாடல்களை அது கொண்டிருந்தபோதிலும் இது ஓர் வரலாற்று ஆவணம் என்ற பிரமையையே ஏற்படுத்துகின்றது.இதன் விலை 240 இந்திய ரூபாய்களாகும். இதனை அனைத்து தமிழக புத்தக கடைகளிலும் பெற்றுக்கொள்ளலாம் .

இதழ் 02 ஆடி ஆவணி புரட்டாசி 2016 - வாசிக சாலை

000000000000000000000000000000

07 கந்தில் பாவை – கதா காலம்

தேவகாந்தனின் புதினமான “கந்தில் பாவை” காலச்சுவடு பதிப்பகத்தின் மூலம் அண்மையில் வெளியாகி உள்ளது . யாழ்ப்பாணத்தின் புராதன தலைநகராகக் கருதப்படும் கந்தரோடையையும் அதைச் சூழ்ந்த பிரதேசத்தையும் கதைக் களமாகக் கொண்டு தன் புனைவுப் பயணத்தை செய்திருக்கிறது கந்தில்பாவை. இவரது இன்னொரு நூலான ” கதா காலம் ” நற்றிணை பதிப்பகம் மூலம் வெளியாகி உள்ளது.இதனது உள்ளடக்கம் மகாபாரதத்தின் மறுவாசிப்பினைக் களமாகக் கொண்டது .இரண்டு நூல்களையும் காலச்சுவடு மற்றும் நற்றிணை பதிப்பகத்தில் பெற்றுக் கொள்ளலாம் .

இதழ் 02 ஆடி ஆவணி புரட்டாசி 2016 - வாசிக சாலை

00000000000000000000000000000

08 பொழிவு

ஈழத்தின் மூத்த இலக்கிய ஆளுமையான சட்டநாதனின் “பொழிவு ” சிறுகதை தொகுதி அண்மையில் ஜீவநதி பிரசுரத்தின் ஊடாக வெளியாகியுள்ளது. சிறுகதையின் உள்ளடக்கமான பன்னிரண்டு கதைகளும் பெண்கள் ,குழந்தைகள் ,காதல் ,அன்பு ,பருவ வயதினர் படும்பாடு ,சாதி ,பாலியல் தொடர்பிலான பகுப்பாய்வுகளுடன் சமூகஅக்கறையுடன் கூடிய பொறுப்புணர்வுடன் சிறுகதைகளுக்கான அழகியல் பார்வையுடன் பேசி நிற்கின்றன .இந்த நூலினை தாயகத்தின் அனைத்து புத்தக கடைகளிலும் ஜீவநதி பதிப்பகத்திலும் பெற்றுக்கொள்ளலாம் .

இதழ் 02 ஆடி ஆவணி புரட்டாசி 2016 - வாசிக சாலை

000000000000000000000000000

09 “மிச்சம் இருக்கும் ஒன்பது விரல்கள்” , “கடவுளுக்கு முன்பே உலகம் இருக்கிறது”, “நீங்கள் சுங்கச்சாவடியில் நின்று கொண்டு இருக்கின்றீர்கள்” , “மீசை என்பது வெறும் மயிர்”

ஆதவன் தீட்சண்யாவின் “மிச்சம் இருக்கும் ஒன்பது விரல்கள்” , “கடவுளுக்கு முன்பே உலகம் இருக்கிறது”, “நீங்கள் சுங்கச்சாவடியில் நின்று கொண்டு இருக்கின்றீர்கள்” , “மீசை என்பது வெறும் மயிர்” ஆகிய நான்கு நூல்களும் அண்மையில் வெளியாகி உள்ளன .

நூல்களின் விபரங்கள் :

1. மிச்சமிருக்கும் ஒன்பது விரல்கள்- கவிதைத்தொகுப்பு- ரூ 50/= பக்கங்கள் : 56 .
2. நீங்கள் சுங்கச்சாவடியில் நின்றுகொண்டிருக்கிறீர்கள்- சிறுகதைத்தொகுப்பு – ரூ.105/= பக்கங்கள்: 112.
3. மீசை என்பது வெறும் மயிர் – நாவல் ரூ.130/= பக்கங்கள்: 176

 

இதழ் 02 ஆடி ஆவணி புரட்டாசி 2016 - வாசிக சாலை இதழ் 02 ஆடி ஆவணி புரட்டாசி 2016 - வாசிக சாலை இதழ் 02 ஆடி ஆவணி புரட்டாசி 2016 - வாசிக சாலை இவை மூன்றும் பின்வரும் முகவரியில் பெற்றுக்கொள்ளலாம் :
சந்தியா பதிப்பகம்,
பதிவு எண்: 77,
53வது தெரு,
9வது அவென்யூ,
அசோக் நகர்,
சென்னை- 600083 .
தொலைபேசி: 044 24896979 .
sandhyapathippagam@gmail.com

4. கடவுளுக்கும் முன்பிருந்தே உலகம் இருக்கிறது – கட்டுரைத்தொகுப்பு – ரூ.80, பக்கங்கள் : 112 .

இந்த நூலினை பிவரும் முகவரியில் பெற்றுக்கொள்ளலாம் :
நூல் வனம் வெளியீடு,
எம்.22, 6வது அவன்யூ,
அழகாபுரி நகர்,
ராமாபுரம்,
சென்னை- 600089.
தொடர்புக்கு: 9176549991
“noolvanam@gmail.com

    இதழ் 02 ஆடி ஆவணி புரட்டாசி 2016 - வாசிக சாலை

000000000000000000000000000000

10.வட்டுக்கோட்டையில் இருந்து முள்ளி வாய்க்கால் வரை

லண்டனில் வசித்து வரும் த ஜெயபாலனின் ” வட்டுக்கோட்டையில் இருந்து முள்ளி வாய்க்கால் வரை ” தேசம் வெளியீடாக வெளிவந்துள்ளது . லண்டனில் வாழும் ரஷ்மி இதன் அட்டை படத்தை வடிவமைப்பு செய்திருக்கின்றார் . அனைத்து புத்தக கடைகளிலும் வாங்கி கொள்ளலாம்.

இதழ் 02 ஆடி ஆவணி புரட்டாசி 2016 - வாசிக சாலை

000000000000000000000000000

11.சொர்க்கபுரிச் சங்கதி

ஆசிரியர் : எம் எம் நௌஷாத்
வகை: சிறுகதைகள்.
பக்கங்கள்: 440 (33 வர்ணப் படங்கள் உள்ளடங்கலாக), 33 சிறுகதைகள்.
பதிப்பகம்: கலை இலக்கிய தேனகம் சம்மாந்துறை, இலங்கை.
விலை: 750 ரூபா.
நூலை வாங்க விரும்புவோர் பின்வரும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும் +94 0773090877.

சொர்க்கபுரிச் சங்கதி

00000000000000000000000000
12.அன்று சிந்திய ரத்தம்

வகை : வரலாற்றுக்கு குறிப்புகளின் தொகுப்பு.
ஆசிரியர்: சாத்திரி பிரான்ஸ்.
வெளியீடு: புதிய தலைமுறை.
விலை: 130 இந்திய ரூபாய்கள்.
நூலைப் பெற்றுக்கொள்ள : புதிய தலைமுறை.

குறிப்பு:
ஏப்பிரல் 2000 ஆனையிறவின் வெற்றிச்சமரில் இருந்து முள்ளிவாய்க்கால் பேரவலம் வரையிலான வரலாற்றுக்குறிப்புகள் காய்த்தல் உவத்தல் இன்றி தொகுக்கப்பட்டுள்ளது.தமிழர் தேசிய விடுதலைப்போராட்டத்துக்கும், அதனைப் பற்றிய சரியான புரிதலுக்கும்,இந்த நூல் குறிப்படத்தக்க தகவல்களை பதிவு செய்திருக்கின்றது.

இதழ் 02 ஆடி ஆவணி புரட்டாசி 2016 - வாசிக சாலை

(Visited 183 times, 1 visits today)