பாலியல் விழுமியங்களும் மதிப்பீடுகளும்-What you really really want – நூல் விமர்சனம்-பொ கருணாகரமூர்த்தி

பொ கருணாகரமூர்த்தி நான் முன்பே  Jaclyn Friedman  எழுதிய:  பெண்களுக்கு ஒரு கௌரவமான, கவர்ச்சியான,  கண்ணியமான, அங்கதமாக / ரொமாண்டிக்காக பேசத்தெரிந்த ஆண்களை மட்டுந்தான் பிடிக்கும் என்றில்லை. நன்றாக Lasagne போடத்தெரிந்தவர்களையும் பிடிக்கும். என்ற துணுக்கைப்பற்றி முன்னொரு பதிவிலும் குறிப்பிட்டிருந்தேன். பாலியல் ஆய்வாளரும் பெண்ணிய ஆய்வறிஞரும், செயற்பாட்டாளருமாகிய அவர்  தனது நூலை வாசிப்பதற்கு நீங்கள் தகுதியான வாசகர்தானா என்பதை நாமே பரீட்சித்துக்கொள்ளும் வகையில்  அதன் நூன்முகத்திலேயே  எம்மிடம்  திடுக்கிடுத்தும் 8 வினாக்கள்கொண்ட வினாக்கொத்தொன்றை வைப்பதன் மூலம் பரீட்சையொன்றை எம்முன் வைக்கின்றார். அதில் நீங்கள் சித்தியெய்தினால் துணிச்சலாக நூலைத்தொடரலாம். அன்றிலும் தொடரலாம் / அல்லது விட்டுவிடலாம்.

நான் வழிகாட்டி நூலென்று என்று இலகுவாகச்சொல்லிவிட்டேன், அது ஒரு கட்டுரைத்தொகுப்பா, இன்னொரு  காமசூத்ரவா என்பதை அவர் வைக்கும் மாதிரிப் பரீட்சையே எதிர்வுகூறும். என் மொழிபெயர்ப்பில் போதாமைகள் இருப்பின் பொறுத்தாற்றுக.  சரி……….இனி இந்நூல் எனக்கானதுதானா என்று அறிய நீங்கள் தனியாக வினாக்களைப்படித்துப் புள்ளிகளையும் அள்ளிக்கொள்ளுங்கள்.

  1. நீங்கள் ஒரு விருந்துக்குப்போகின்றீர்கள், அங்கே வருபவர்களைக் கவரவேண்டிய அவசியம் உங்களுக்குள்ளது. நீங்கள் செய்வதாது
  2. எப்படி உடுத்தவேண்டும் என்பதை நான் அறிவேன்.
  3. கவர்ச்சியாக/செக்ஸியாக உடை உடுத்திக்கொண்டு செல்வேன்
  4. கவர்ச்சியாக என்பதன் அளவுகோலை நான் அறிவேன்.
  5. செக்ஸியாக அணிந்தேனாகில் அதையிட்டு வெட்கப்படுவேன். அதை முட்டாள்த்தனமாக உணர்வேன்.
  6. ஒருபோதும் மாட்டேன், எவரும் என்னைத் தவறாகக் கணிப்பிட இடம்தரமாட்டேன்.
  7. உங்களுக்குத் தெரிந்த / அயல்வீட்டிலுள்ள ஒரு அலரகவைப்பெண்ணோ/ உங்கள் (மருமகள்/ சிநேகிதி/ வேறுஉறவினள் ) திடீரென ஒருநாள் உங்களிடம் தனக்குப் பாலுறவின் மீதுள்ள ஆர்வத்தை வெளிப்படுத்துகிறாள். அதைக்கேட்டதும் நீங்கள் செய்யக்கூடியது:
  8. மருண்டு பதறுவேன்.
  9. அவளை இருத்திவைத்து நீண்ட (ஒழுக்க) உபதேசம் செய்வேன்.
  10. அவள் ஆசையை அனுமதித்து அவள் கருத்தரிக்காதிருக்கும் வழிமுறைகளைச் சொல்லித்தருவேன்
  11. அவளது ஆசையைத்தைத் துடைத்துவிட முயல்வேன்.
  12. பாலியலுறவின்போது நீங்கள் நடந்துகொள்ளும்விதம் அப்போதைக்குச் சரியாக இருந்தாலும். பின்னர் நினைத்துப்பார்க்கையில் தப்பாகத்தோன்றும்.
  13. அடிக்கடி
  14. ஒருபோதும் அப்படிநேர்வதில்லை
  15. மிக அருமையாகவே அப்படி.
  16. நான் மது அருந்தியவேளைகளில் மட்டும் அப்படி நேர்வதுண்டு.
  17. அது எல்லோருக்கும் அப்படித்தானே….. புதிசா என்ன கேள்வி?
  18. சில பெண்கள் (Sluts) ஒழுக்கமற்ற (லேசில் கிடைத்துவிடக்கூடிய பெண்களென) மற்றவர்களுக்கு நினைப்பையேற்படுத்தும் வண்ணம் உடுத்துகிறார்கள், நடக்கிறார்களே?
  19. அது என்னையும் கவலைப்படுத்துகிறது, அவர்கள் அப்படி உடுப்பது நடப்பதால் மற்றவர்களைக் கவரமுடியாது என்பதை அறியாமலிருக்கிறார்கள்.
  20. அது என்னைக் கோபப்படுத்துகிறது. அவர்கள் நடத்தை ஆண்களுக்கும் பெண்களை மலினப்படுத்துவதற்கான தைரியத்தைத் தருகிறது.
  21. ஒருவர் உடுப்பதை / நடப்பதைவைத்து அவரை உயர்ந்தவர் என்றோ இழிந்தவர் என்றோ கணித்துவிடமுடியாது.
  22. நாம் பெண்ணியவாதிகள் என்பதனால் இதர பெண்களின் பாலியல் நடத்தைகளை (Sexuality) எல்லாம் நிராகரிக்க வேண்டியதில்லை.
  23. என்னுடைய பல நல்ல நண்பிகள் அப்படித்தான் இருக்கிறார்கள். அதனாலென்ன?
  24. ஆண்கள் இயற்கையில் பாலுணர்வையடைந்தான் அதன் உந்தலைக் கட்டுப்படுத்த முடியாதவர்களாக இருப்பதற்கு அவர்களது உடலியல் அமைப்பே (Anotomy) காரணம்.
  25. நல்ல லூஸுக்கதை.
  26. அது ஒரு உயிரியல் உண்மை.
  27. ஆண்களின் உணர்வுகளைப்பற்றி பெண்களால் எதுவும் சொல்லமுடியாது.
  28. ஆண்கள் பாலுணர்வைத்தணிக்க முடியாதவர்கள், வாய்த்தால் வல்லுறவும் செய்வார்கள் என்று சொல்லி எம் பிள்ளைகளை முட்டாள்களாக வளர்த்துவிட்டோம்.
  29. அது ஒரு உயிரியல் உண்மையே ஆயினும் சமூகத்தின் ஒழுக்கம், பண்பாட்டை மனதில்கொண்டு அவர்கள் தம் பால்-உந்துதலை தணித்தேயாக வேண்டும்.
  30. உங்களுக்கான பாலுறவு எப்படி இருக்கவேண்டும்?
  31. Hot / தணிவின்றிச்சூடாக
  32. Scary / துணிவுடன் ஒரு பிரச்சனையை வெல்வதுபோல்.
  33. Without Buzzkill / அடையக்கூடிய சந்தோஷத்துக்குத்தடையின்றி
  34. என் இஷ்டத்துக்கு எல்லாம் பண்ண முடிவதாக
  35. எனக்கு விருப்பமான முறையில் அந்த இரவு முடிவதாக அமையணும்.
  36. உங்களின் பாலியல் / பாலியல்நடத்தைகள்மீதான மதிப்பீடுகளை உங்கள் குடும்பத்தவர்களோ, நண்பர்களோ, உங்களிடமிருந்து பகிர்ந்துகொள்வார்களா?
  37. ஆமாம்.
  38. என் நண்பர்கள் பகிஎர்வதுண்டு, குடும்பத்தினருக்கு அவை புரிவதேயில்லை.
  39. தெரியவில்லை, அவைபற்றி எவரும் என்னுடன் பேசியதில்லை, நானும் வலிந்துபோய் அவர்களிடம் என்பாலியல்மதிப்பீடுகள் பற்றிப் பேசுவதில்லை.
  40. ஓ……. அவர்கள் என்னையொரு அவிசாரி (Slut) என்றோ, கோரிணியென்றோ ( Freak) ,முன்மதியுள்ளவள் (Prude) என்றோ எண்ணியிருக்கலாம்.
  41. இன்னும் இல்லை, அதுபற்றி நான் கொஞ்சம் உழைக்கவேண்டியிருக்கலாம்.
  42. உங்கள் சொந்த பாலியல் வாழ்க்கையைப்பற்றிச் சொல்வதானால்
  43. அப்படி ஒன்றெனக்கு வாய்க்கவேயில்லை.
  44. எனக்கு எது எப்படி வேண்டியிருந்ததோ அவ்வாறு கிடைத்துள்ளது.
  45. சிலவிஷயங்களில் மாற்றத்தை விரும்பினேன், ஆனால் எனது பாலியல் துணையிடம் அதுபற்றிப்பேசி எனது தேவையைப் புரியவைக்க முடிவதில்லை.
  46. என் தேவையைப் புரியவைக்க முயன்றபோதெல்லாம் அவரிடமிருந்து சரியான எதிர்வினை கிடைப்பதில்லை.
  47. கிடைப்பதில் திருப்திதான், எனக்கு என்ன மாற்றம் தேவையென்றோ, எப்படி மாற்றியமைப்பதென்றோ தெரியவில்லை.

பொ கருணாகரமூர்த்தி பொ கருணாகரமூர்த்தி

இனி உங்கள் எல்லா விடைகளுக்குமான   Jaclyn Friedman இன் பதில்:

இங்கு வழங்கப்பட்டுள்ள பதில்கள் எதுவுமே அசட்டுத்தனமானவை, அல்லது பொருத்தமற்றவை. இவை எதையுமே நீங்கள் சரியென்று கொள்ள வேண்டியதில்லை. மதங்களே காமம் எனும் எல்லையற்ற இன்பத்தை மனிதகுலம் முழுவதுமாகத் துய்ப்பதற்கு முதல்த் தடையாக இருப்பவை எனும் இவர் Unscrewed  எனும் இன்னொரு நூலையும் எழுதியுள்ளார். அது What you    really really want  ஐவிடவும்  திடுக்கிடுத்துவதாக இருக்குமென நம்பலாம்.

Publication: Seal Press

Pages: 342

Price : 25.00 €

பொ கருணாகரமூர்த்தி-ஜெர்மனி

பொ.கருணாகரமூர்த்தி

 

(Visited 79 times, 1 visits today)