புல்லாங்குழலின் ராகம்-கவிதை-மிஸ்ரா ஜப்பார்

புல்லாங்குழலின் ராகம்

மிஸ்ரா ஜப்பார்

புல்லாங்குழலின் ராகம்
குளவிக் கூட்டத்தின் ரீங்காரமாய்
மகா காலத்தின் மறு கரையை
கொளுத்திக் கொண்டிருக்கின்றன

சூபியின் புல்லாங்குழல் மெல்லிசையாய்
உயிர் கொடுக்கும் அமிர்தம்
அவன் சப்த நரப்புகளை
மீட்டிக்கொண்டிருக்கின்றன.

படைப்பின் தூய லகிரியின் ஆழ்ந்த
நிலையில்
மனிதனின் தன்னிச்சைகள்
சாம்பலாய் கரைகின்றன

அவன் தலையில் புகைந்து கொண்டிருக்கும்
பித்தேறிய வதங்களை
தீப்பிழம்புக் காடுகள் பூரித்துக் கொண்டிருக்கின்றன….

0000000000000000000000000000000000

சிறையில் அவனை சந்திக்கிறேன்

மனித வாடை அண்டாத
மதில் சிறை
சுண்ணாம்பு ரணங்கள்
சிதைந்து போன சுவர்
நாற்றம் படிந்த
புடைவையாய்
ஒளிந்து கொண்டிருக்கிறான்

பிரபஞ்சத்தில்
நொடி நேரம் மட்டுமே
வாழ்கின்ற
ஜீவியின் தனிமை அவன்
நிலையில்லை எனும்
பிரங்ஞை வழிகிறது
அதிலிருந்து சோக கானங்களை
மட்டுமே கேட்க முடிகிறது

திரையும் நுரையும்
சூரிய பிரவாகத்தில் ஒளிர்ந்து
கொந்தளித்துக் குமுறும்
முகடாய்
கோழைப் பொய்யில் அழுங்கி
சாத்தியத்திலிருந்து
அசாத்தியத்திற்கு
பயணிக்கிறான்.

மிஸ்ரா ஜப்பார்-இலங்கை

(Visited 162 times, 1 visits today)