வாசிக சாலை

01 ஆறிப்போன காயங்களின் வலி – நாவல் -வெற்றிச்செல்வி

தாயகத்தில் மன்னாரில் வாழ்ந்து வரும் முன்னால் பெண்போராளியான  வெற்றிச்செல்வியின் ” ஆறிப்போன காயங்களின் வலி ” வரலாற்று நாவல் ஜூலை மாதத்தில் வெளியாகி உள்ளது. பெண் போராளிகளின் பாம்பை மடு தடுப்பு முகாமைக்  கதைக்களமாகக் கொண்டு நாவல்182 பக்கங்களில் விரிகின்றது .இந்த நாவல் தவமணி வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டு சிவராம் பதிப்பகத்தால் பதிப்பிக்கப்பட்டுள்ளது .இந்த நூலின் விலை 400 இலங்கை ரூபாய்கள் .இந்த நூலை பெற விரும்புவோர் aananthy10@gmail .com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம் .

வாசிக சாலை இதழ் 01

00000000000000000000

02  உயிரணை  நாவல் -சாந்தி நேசக்கரம்

ஜெர்மனியில் வசித்து வரும் சாந்தி நேசக்கரத்தின் “உயிரணை ” நாவல் வெளியாகி உள்ளது. இது ஓர் போரியல் இலக்கியவகையில் வரலாற்று நாவலாக 300 பக்கங்களில் பூவரசி வெளியீடாக வெளிவந்துள்ளது. நூலை வாங்க விரும்புபவோர் Nesakkaram@gmail. Com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம் .

வாசிக சாலை இதழ் 01

00000000000000000000000000

03  நினைவுக்கு குறிப்புகள் – அ ஜேசுராசா

ஈழத்தின் மூத்த இலக்கிய ஆளுமையான கவிஞர் அ யேசுராசாவின் “நினைவுக்குறிப்புகள் ” ஜீவநதி பதிப்பகத்தால் நூல் வடிவம் பெற்று வெளியாகி உள்ளது .ஜீவநதியில் தொடராக வெளியாகிய இந்த ‘நினைவுக்குறிப்புகள்’ ஏறத்தாழ நுலாசிரியரின் நனவிடை தோய்தல் பாணியில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது நூலை வாங்க விரும்புவோர் athanasjesu@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம் .

வாசிக சாலை இதழ் 01

000000000000000000000000000000

04 கொல்வதெழுதல் 90  – தீரன் ஆர் எம் நௌஷாத்

ஈழத்தின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சிறந்த கதை சொல்லியான தீரன் ஆர் எம் நௌஷாத்தின் “கொல்வதெழுதல் 90” காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடாக 184 பக்கத்தில் வெளியாகி உள்ளது. அச்சுப்பதிப்பை மைக்கிறோ பிரிண்டர்  சென்னை ,மற்றும் அட்டை வடிவமைப்பை பிருத்தானியாவை சேர்ந்த ரஷ்மியும் செய்துள்ளார்கள் .ஈழத்தின் தமிழ் எழுத்துப் பொதுவெளியில் எப்பொழுதும் கவனயீர்ப்பு பட்டியல்களில் இருக்கின்ற படைப்புகளில் தீரன் ஆர் எம் நௌஷாத்தின் “கொல்வதெழுதல் 90” அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது .இந்த நூலினை பெறவிரும்புவோர் rmnawshad@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம் .

வாசிக சாலை இதழ் 01

00000000000000000000000000000

05 பஞ்ச பூதம் – சாஜித் அஹ்மத்

தாயகத்தின் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஏ.எம். சாஜித் அஹமட்டின் ” பஞ்ச பூதம் ” குறுநாவல் 40 பக்கங்களில் பெருவெளி பதிப்பகத்தால் வெளியாகி உள்ளது. இந்தக் குறுநாவலானது கதை சொல்லும் வித்தகத்தாலும், அது கொண்ட புனைவு ஆழத்தாலும் வாசகரது கவனத்தை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் .இதன் விலை 300 இலங்கை ரூபாய்கள் ஆகும்.

வாசிக சாலை இதழ் 01

(Visited 117 times, 1 visits today)