‘அப்படியா’ விமர்சனம்-நடு குழுமம்

அண்மையில் மலையகத்தை சேர்ந்த கேசவன் ,பிரதீபன் ,கிஷான், நேத்தாஜி ஆகியோரின் கூட்டுத்தயாரிப்பில் உருவாகிய ‘அப்படியா ‘ குறும்படம் வெளியாகி இருந்தது . இந்தக்குறும்படமானது  மலையகத்தில் இருந்து வந்த ஓர் பரீட்சார்த்த முன்னெடுப்பாகவே இருக்கின்றது. குறைந்தளவு ஆளணி மற்றும் தொழில் நுட்பம் ஆகியவற்றின் ஊடாக வெளியாகிய இந்தக் குறும்படத்தை பார்த்தபொழுது, மலையகம் திரைப்படத்துறையில் முழு வீச்சுடன் முன்னேறுவதாகவே எமக்குப் படுகின்றது . இருந்த போதிலும் இந்தக் குறும்படத்தில் ஒரு சில பிழைகளைச் சுட்டாமல் கடக்க முடியவில்லை.

கதாநாயகன் தொலைபேசியில் கதைக்கும் பொழுது இறுதியில் இரண்டு தரம் ‘வைச்சுட்றேன்’ என்று சொல்வது தேவையற்றது. இது ஓர் அரத்தல் பழசான முறையாகும். குறும்படத்தில் 3:19 ஆவது நிமிடத்தில் வரும் வசனத்தில் எழுத்துப்பிழை இருக்கின்றது .” தாயின் பரிசுகளுக்கும் தாரத்தின் உழைப்பின் வெகுமதிகளை எண்ணி எல்லையற்ற கனவுகளோடு கடந்த அந்த இரவின் விடியளில் என்ற வரியில் இறுதிப்பகுதியான ‘விடியளில்’ என்பது விடியலில் என்று வரவேண்டும். மேலும், இந்தக்குறும்படத்தில் போதனை செய்கின்ற மாதிரி வசனங்களை தவிர்த்திருக்கலாம் என்றே எண்ணத்தோன்றுகின்றது. ஏனெனில் திரைமொழியை உள்வாங்குகின்ற  பார்வையாளன் அதனைப் புரிந்து கொளமுடியாத அளவுக்கு முட்டாள் இல்லை . ஆயினும் இவர்களைப்போல் உள்ள மலையக இளைஞர்கள் இத்துடன் நின்று விடாது புதிய பரிமாணங்களில் திரைப்பட முயற்சிகளைத் தொடரவேண்டும் என்பதே எமது அவா.

நடு லோகோ

நடு குழுமம்

 

(Visited 39 times, 1 visits today)