நிலங்களின் எழுத்துகள்-நடு குழுமம்

வணக்கம் வாசகர்களே!

நடு லோகோ“நிலங்களின் எழுத்துகள்” என்ற புதிய பகுதியின் ஊடாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். இந்தப்பகுதியின் முக்கிய நோக்கம், வேறுபாடுகளைக் கடந்து ஈழத்தில் இருந்து வெளியாகிய நூல்களை எமது சக்திக்கு உட்பட்டு ஆவணப்படுத்தலாகும். எமது தேடல் ஒருபுறம் இருக்க இந்தப்பகுதியை செழிப்பாக வைத்திருப்பது எழுத்தாளர்களினதும் வாசகர்களினதும் கைகளிலேயே இருக்கின்றது. இந்தப்பகுதி: நூலின் பெயரையும், ஆசிரியரின் பெயரையும், பதிப்பகத்தின் பெயரையும், தொடர்பு முகவரியையும், முடிந்தால் விலையையும் எடுத்துச்சொல்லி ஆவணப்படுத்தும். இதில் போதும் போதாமைகள் இருக்கலாம். அதனை சுட்டிக்காட்டுங்கள் எம்மை நாம் திருத்திக்கொள்கின்றோம். இப்பகுதி ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்தையும் ஆலோசனைகளையும் வழங்கிய கவிதாயினி தீபிகாவுக்கும், எமக்கு வேண்டிய ஆதரவினைத் தந்த வசீகரன் குலசிங்கம், பரணீதரன், மைக்கல் கொலின்ஸ் மற்றும் பதிப்பகங்கள் ஆகியனவற்றுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டுள்ளோம். எந்த ஒரு இலக்கியப்பிரதியையும் தேர்ந்த வாசகரும் விமர்சகருமே வளப்படுத்துகின்றார்கள். அந்தவகையில் இந்தப் பகுப்பை அண்மையில் மறந்த குமாரசாமி குமாரதேவனுக்கு காணிக்கையாக்கின்றோம்.

நடு குழுமம்

0000000000000000000

மாசி  மாதத்து நிகழ்வுகள்

0000000000000000

நூலக நிறுவனத்தின் ஏற்பாட்டில், தமிழர் வரலாற்று எழுத்தியலும், விடுபட்ட பக்கங்களும் ஈழத்து மரபுரிமை – உரையாடல் வெளி (மாசி 2020) பேராசிரியர் சி. மௌனகுரு அவர்கள் நிகழ்த்தவுள்ள

”தமிழர் வரலாற்று எழுத்தியலும், விடுபட்ட பக்கங்களும்”
உரையும் உரையாடலும்…

ஈழத்தில் வரலாற்று எழுத்தியல் பேசமறந்த பக்கங்களை தேட, பார்க்க, அறிய, கேட்க, பேச ஆர்வமுள்ள அனைவரையும் அழைக்கின்றோம்

நூலக நிறுவனம்,
முதலாம் மாடி, அரசடி பொதுநுாலகம் மட்டக்களப்பில்….
வரும்
மாசி 08 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.00 க்கு
வாருங்கள் உரையாடுவோம்…

000000000000000000000000000000000000

000000000000000000

இலங்கைத் தமிழ் இலக்கிய நிறுவகம் இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகம் அனுசரணையில் கொடகே கையெழுத்துப் போட்டியில் விருது பெற மக்கள் எழுத்தாளர் மல்லிகை சி.குமார் அவர்களின் வேடத்தனம் சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழாவும் நினைவேந்தல் நிகழ்வும் 15.02.2020 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு, கொழும்புத் தமிழ்ச் சங்க விநோதன் மண்டபத்தில் பேராசிரியர் சோ.சந்திரசேகரம் அவர்களின் தலைமையில் நடைபெறும்.

கௌரவ அதிதிகளாக : தேசபந்து சிரிசுமன கொடகே, திருமதி நந்தா கொடகே ஆகியோர் கலந்து கொள்வார்கள்,

நூலின் முதற்பிரதியை பெறுநர்: இலக்கியப் புரவலர் ஹாஸிம் ஒமர் பெற்றுகொள்வார்.

மக்கள் எழுத்தாளர் மல்லிகை சி.குமார் அவர்களுக்கான அஞ்சலி உரைகளைப் பேராசிரியர் செ.யோகராஜா, திரு.வவுனியர் இரா உதயணன், திரு.பி.பி.தேவராஜ், திரு.அந்தனி ஜீவா, டாக்டர்
தி.ஞானசேகரன், திரு.தம்பு சிவசுப்பிரமணியம், திரு.தெளிவத்தை ஜோசப், திரு.அல்அசூமத், திருமதி.பிரமீளா பிரதீபன், டாக்டர் ஜின்னாஹ் சரீப்புத்தீன், திரு.மு.சிவலிங்கம், திரு.கே.பொன்னுத்துரை, திரு.ஆ.செல்வேந்திரன் திரு.எம்.வாமதேவன் திரு.மேமன்கவி ஆகியோர் நிகழ்த்துவார்கள், ரூபா 650.00 பெறுதியான நூல் விழாவில் ரூபா 500.00 வழங்கப்படும். நன்றியுரையை மல்லிகை சி. குமார் அவர்களின் குடும்ப அங்கத்தினர் வழங்குவார்கள்.

தொடர்பு : மேமன் கவி

00000000000000000000000000

0000000000000000000000000

00000000000000000000000000000000

0000000000000000000

0000000000000000000

நிலங்களின் எழுத்துகள்

 

 

(Visited 261 times, 1 visits today)
 

One thought on “நிலங்களின் எழுத்துகள்-நடு குழுமம்”

Comments are closed.