கடவுளின் பரிசு நமக்கு கிடைக்கும் என நீ சொன்னபோது-கவிதை-வே.நி. சூர்யா

 

வே.நி. சூர்யா

கடவுளின் பரிசு நமக்கு கிடைக்கும் என்ற வாக்கியத்திலிருக்க கடவுளுக்கு பிடிக்காமல் போனபோது
கடவுள் என்ற
சொல்லில்லிருந்தபடி யோசிக்கத் தொடங்கினார்
பின்பு மிகவும் கஷ்டப்பட்டு
சதுரவடிவ சொல்லான
பரிசின் மீதேறி
அங்கிருந்து
நமக்கு என்ற சொல்லில் தெரியும் நம்மையும்
நம் வாழ்வின் துயரங்களையும்
விழிவிரிய பார்த்தார்
சுவாரசியமற்ற நம்மையும்
அவருக்கு பிடிக்காமல் போக மதில்ச்சுவர் போக நிற்கும் கிடைக்கும் என்ற சொல்லை
எம்பித் தாண்டி வாக்கியத்தை விட்டு
வெளியேறினார்
அதன்பிறகு தாண்டி
நம் புத்தி கெட்ட கடவுளுக்கு
நம் வாழ்வின் ஆசனவாயில்
தீமூட்டுவதொரு தொழிலாய்ப் போனது

0000000000000000000000000000

சாத்தானிய காதல் குறிப்புகள்
1
காதலென்றால் காமம் தாண்டி
மாற்றங்களுக்கு அனுமதி இல்லை
ஆமாம் மாற்றங்களுக்கு அனுமதி இல்லை
பாழடைந்த காதல் வீட்டினை கொண்டு காமத்தின் துருப்பிடித்த இரும்பு கதவுகளை பூட்டினேன்
இப்போது முரட்டு நாயென இருளின் பிரார்த்தனை சொற்கள் காற்றில் திரிகின்றன
அன்பே அது பூரண சுதந்திரத்தோடு இருக்கிறது
மேலும் அது பசியில் இருக்கிறது
அவற்றிற்கு ஒரு எலும்புத்துண்டென என்ற முலைகளை தின்னக் கொடுக்கக் கூடாதா நீ
பதிலுக்கு நீயும் நானும் சாத்தானின் நெஞ்சுக்கறியை சமைத்து சாப்பிடுவோம்
2
முன்பு நமது சந்திப்புக்கள் அந்தியின் பூங்காவில் நிகழ்ந்தன
அப்போதெல்லாம் ஊஞ்சல்களில் திவ்யசொரூபிகள் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர்
கூட்டம் மனிதர்கள் மகிழ்ச்சியோடிருந்தனர்
சந்தோஷத்தின் இருக்கைகளில் உட்கார்ந்து சிரித்து பேசிக்கொண்டிருந்தோம்
இப்போது நமது சந்திப்புக்கள் நரகத்தின் பூங்காவில் நிகழ்கின்றன
அப்போதெல்லாம் ஊஞ்சல்களில் மரணம் அமர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறது
கூட்டம் எலும்புக்கூடுகள் மகிழ்ச்சியோடு பேசிக்கொண்டிருக்கின்றன
இருளின் குகை போன்ற மறைவிடங்களில் நின்றுகொண்டு உதட்டுச்சதை பிய்யும் அவருக்கு ஒருவரையொருவர் முத்தமிட்டுக் கொள்கிறோம்
3
எனக்கு தெரியும் நீ நரகத்தின் தாண்டி இருக்கிறாய்
அங்கேயே ஒரு
மேலும் காத்திரு
அது பனியிரவைப் போக நம் வலியின் மிகவும் சூடிய முனகல்கள் காற்றில் ஒன்றாய் நடந்து செல்லவாவது முடிந்தமட்டும் குற்றங்களை செய்துவிட்டு,
அறத்தின் குரல்வளையில் குருதி குடித்துவிட்டு நானும் வருவேன் நரகத்திற்கு
அன்பே ஒருபோதும் மறந்துவிடாதே
நம் என்பது ஒரு படுக்கையறை தாண்டி

வே.நி. சூர்யா – இந்தியா

வே.நி. சூர்யா

(Visited 109 times, 1 visits today)