ஆயிரம் ரூபாய் சம்பளமும் அய்யாயிரம் ரூபாய் கிடாயும்-கவிதை-ப.கனகேஸ்வரன்

ஆயிரம் ரூபாய் சம்பளமும் அய்யாயிரம் ரூபாய் கிடாயும்

ப.கனகேஸ்வரன்

ஆயிரம் ரூபா
சம்பள உயர்வு கிடச்சதுன்னா
ரோதமுனிக்கு வெட்டி பூச வைக்கிறதா
ஊர் மக்கா ஒன்னு கூடி நேர்ந்துகிட்ட
முதல் வருஷம் கிடாயும்
மறு வருஷம் கிடேரியும்
வருஷம் இப்போ ரெண்டு தாண்டி
ரெண்டும் பெருத்துரிச்சி
கட்சிகாரங்க ஒன்னு சேரவே முடியாத
பேச்சுவார்த்தையில்
முதலாளித்துவத்திடம் யார் பேசுவது
பேரம்
ஓட்டு போட்ட சனம் ஒன்னா நிக்க
ஓட்டு வாங்கின தொழிற்சங்கம் ஏ
இன்னு தனித் தனியா நிக்கிது
ஆயிரம் ரூபாய் சம்பளம்
கிடச்ச பாடில்லை
ஆடு ரெண்டும் ஒன்னு
சேர்ந்து அஞ்சாறு குட்டி பெத்து
இப்போ அதுகளும் அதே ரோதமுனிக்கு
மூனாந்தடவையா நேர்ந்து விட்டிருக்கம்
ஹ்ம்….
ஆடுகளின் வேண்டுதலா
இல்ல
அசைவ பிரியனாகிட்டானா ரோத முனி
எது எப்படியோ
ஐநூறு ரூவாய்க்கு வாங்கி
ரோத முனிக்கு நேர்ந்துவிட்ட ஆடுகள்
இப்போ வித்தாலும்
அய்யாயிரத்துக்கு வாங்க்கிக்கிற
ஆளிருக்கு

ப.கனகேஸ்வரன்-அவுஸ்திரேலியா

ப.கனகேஸ்வரன்

 

(Visited 72 times, 1 visits today)
 

ரொய்லெட்-சிறுகதை-ப.கனகேஸ்வரன்(கே ஜி)

அது ஒரு சாயம் வெளுத்த பழைய பிளாஸ்டிக் நாற்காலி.  ஒத்த கால் ஒடஞ்சி அதுக்கு பின்னால ஒரு சவுக்கு கட்டை வச்சி நைலோன் கயிற்றால இறுகக் கட்டி இருந்த அந்த […]

 

One thought on “ஆயிரம் ரூபாய் சம்பளமும் அய்யாயிரம் ரூபாய் கிடாயும்-கவிதை-ப.கனகேஸ்வரன்”

Comments are closed.